என்றென்றும் அன்புடன் அழகி - 1

Advertisement

Dharanika

Active Member
ம்மா.. ம்மா.. என மதியழகி தன் அன்னை சாந்தியின் பின்னாடி சுற்றிக் கொண்டிருந்தாள்.

"இப்போ என்ன தான் வேணும் மதி?" என தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு தன் மகளிடம் கேட்க, "அம்மா.. இந்த கல்யாணம் வேண்டாம்மா.. நீங்களாவது அப்பத்தாகிட்ட சொல்லுங்க மா...”

என்னால் முடிஞ்ச வரைக்கும் சொல்லிட்டேன் மதி. உங்க அப்பத்தா ரொம்ப பிடிவாதமா இருக்காங்க. மனோகருக்கு என்ன குறை? நம்ம கண்ணு முன்னாடி வளர்ந்த புள்ள. சொந்தம் வேற.. நமக்கு அப்புறம் நம்ம அழகியை நல்லா பார்த்துப்பான் அப்படிங்கறாங்க. எனக்கும் அவங்க சொல்றது சரின்னு தான் தோணுது. மனோவை கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கும் உன்னை பத்தி கவலை இல்லை.

"அம்மா என்னோட படிப்பு முடிஞ்ச அப்புறம் கல்யாணத்த வச்சுக்கலாம்"

"கல்யாணத்துக்கு அப்புறம் படின்னு உங்க அத்தையே சொல்லிட்டாங்க. கண்டதையும் நினைச்சு குழம்பாம போய் தூங்கு" என அடுப்படியை ஒதுங்க வைக்க ஆரம்பித்தார் சாந்தி.

"ஏண்டி மதி இன்னுமா தூங்கலை? அடுத்த வாரம் கல்யாணத்த வச்சுக்கிட்டு அடுப்பங்கரையில என்ன வேலை?" என கேட்டபடியே வந்தார் அழகம்மை.

"இதோ போறேன் அப்பத்தா" என்றபடி நகர்ந்தாள் மதியழகி.

"ஏத்தா சாந்தி, உங்க பெரியப்பா வீட்டுக்கு பத்திரிக்கை வச்சாச்சா?"

போன வாரமே போன் போட்டு பத்திரிக்கை வைக்க வரேன்னு சொன்னேன் அத்த. அத்தாச்சி (அண்ணி) தான் நேர்ல வந்து அலைய வேண்டாம்னு சொல்லிட்டாங்க".

"அட என்ன ஆத்தா நீ? ஒரு வகைல அவுகளும் மதிக்கு மாமா முறை தானே? நேர்ல போய் பத்திரிக்கை வைக்கறது தான் முறை. நீ நாளைக்கே நம்ம பெருமாள் கூட போய் வச்சிட்டு வந்திடு" என கூறிவிட்டு உறங்க சென்றார்.

அழகம்மை-பரசிவம் தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள். திருச்சி அருகிலுள்ள நாச்சியாபுரம் தான் சொந்த ஊர். மகன் ரத்தினத்திற்கு திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் கழித்து பிறந்தவள் மதியழகி.

மகள் ஜோதிக்கு உள்ளூரிலேயே கல்யாணம் முடித்திருக்க அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் மணிவண்ணன். திருமணம் முடித்து மனைவியுடன் கோயம்பத்தூரில் வசிக்கிறான். இளையவன் மனோகரன். சென்னையில் புகழ்பெற்ற கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறான்.

மதியழகியின் பன்னிரண்டு வயதில் ரத்தினம் பாம்பு கடித்து இறந்துவிட, பரசிவம் தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டார். மதியழகி இப்பொழுது பொறியியல் இரண்டாம் வருடம் படித்து கொண்டிருக்க, பரமசிவம் பக்கவாதத்தில் படுத்த படுக்கையாகி விட்டார். நாளுக்கு நாள் அவர் உடல்நிலை மோசமடைவதால் தான் உயிருடன் இருக்கும் போதே மதியழகிக்கு திருமணம் செய்துவிட எண்ணி தன் மகள் ஜோதியிடம் கேட்க அவரும் மனோவிடம் கேட்காமல் சம்மதம் கூறினார். திருமணத்தை விரைவாக முடித்துவிட நினைத்து அடுத்த முகூர்த்தத்தில் நாள் குறித்தனர்.

திருமணம் செய்து கொள்ளப்போகும் இருவரிடமும் சம்மதம் கேட்காமலே திருமணத்தை முடிவு செய்தனர்.

இங்கே மதியழகி தன் தாயிடம் திருமணத்தை நிறுத்த சொல்லி கேட்க அதே நிலையில் தான் மனோவும் இருந்தான்.

"என்ன மா.. என்னை கேட்காமலே கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிட்டு வந்திருக்கீங்க?"

"நம்ம தாத்தாவுக்கு உடம்பு முடியலைன்னு தெரியும்ல.. அவரோட ஆசை டா.. நம்ம மதிக்கு என்ன குறை? ரெண்டு பேரும் சின்னதுல இருந்தே தெரியும் தானே?"

"அம்மா.. தாத்தா விருப்பத்துக்கெல்லாம் என்னால் கல்யாணம் பண்ண முடியாது"

"மனோ.. நான் தாத்தாவுக்கு வாக்கு கொடுத்துட்டேன்.. என்னால மீறமுடியாது"

அப்போ நல்லா கேட்டுக்கோங்க.. என்னாலையும் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்க முடியாது.

"இந்த கல்யாணம் நடக்கலைனா நீ உன்னோட அம்மாவ பார்க்க முடியாது" என்றார் ஜோதி உறுதியாக.

திருமணத்திற்கு இன்னும் ஒருவாரமே இருக்க அதை எப்படி நிறுத்துவது என்று யோசனையுடன் இருந்தான் மனோகர்.

இரவு வெகு நேரம் யோசித்ததில் பலனாய் மறுநாள் காலை மதிக்கு கைபேசியில் அழைத்தான். மனோவின் எண்ணை பார்த்து எடுப்பதா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருக்க கைபேசி இரண்டு முறை அடித்து ஓய்ந்து மூன்றாவது முறையாக அடித்து கொண்டிருந்தது. கைபேசியை உயிர்ப்பித்து காதில் வைத்தவள் "ஹலோ "மதி.. உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல.. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. நா..நான் வேற ஒரு பொண்ண காதலிக்கிறேன்" . மதி எப்படி எடுத்து கொள்வாளோ என தட்டுத்தடுமாறி சொல்லி முடித்தான்.

"ஐயோ மாமா.. எனக்கு இப்போ கல்யாணத்துல விருப்பம் இல்ல.. அதுவும் உங்களை.."

ம்ம்.. புரியுது மதி.. நானும் அம்மா கிட்ட இந்த கல்யாணத்த நிறுத்த சொல்லி கேட்டுட்டேன். அவங்க தாத்தாவுக்கு வாக்கு கொடுத்துட்டேன்.. இந்த கல்யாணம் நடக்கலைனா உயிரை விட்ருவேன்னு மிரட்டுறாங்க.

நீங்க காதலிக்கிற விஷயத்தை அத்தைக்கு சொல்லிட்டீங்களா?

இன்னும் இல்லை. அதை சொன்னா என்ன ஆட்டம் ஆடுவாங்கனே தெரியலை..

மாமா எப்படியும் உங்க காதலுக்கு நம்ம வீட்ல சம்மதிக்க மாட்டங்க. பேசாம நீங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்குங்க.

அதுக்கு ஜனனி ஒதுக்க மாட்டா.

" ஜனனியா? யாரு?"

"நான் லவ் பண்ற பொண்ணு. என் கூட தான் வேலை பாக்குறா. அவளுக்கு அப்பா, அம்மா இல்ல. அதனால எங்க கல்யாணம் எங்க அப்பா, அம்மா முன்னாடி தான் நடக்கனும்னு சொல்லிட்டா."

சரி மாமா.. இப்போ எதுவும் சொல்ல வேண்டாம். கல்யாண ஏற்பாடு அது பாட்டுக்கு நடக்கட்டும். நீங்க இப்போ சொன்னிங்கன்னா ஏதாவது சொல்லி எப்படியும் இந்த கல்யாணத்த நடத்திடுவாங்க. அதனால நீங்க கல்யாணத்துக்கு வர மாதிரி வாங்க. முஹூர்த்தத்துக்கு முன்னாடி ஜனனி அக்காவை வரச்சொல்லுங்க. மத்ததை நம்ம பெரிய வீட்டு தாத்தா பார்த்துப்பாரு.

"நானே அழகம்மை ஆச்சிகிட்ட சொல்லிடவா?"

"ஓ சொல்லுங்களேன்.. அடுத்த வாரம் நடக்கப்போற கல்யாணம் இன்னும் ரெண்டே நாள்ல நடத்திடும் அப்பத்தா.."

அவள் சொல்வதும் உண்மை தான் என புரிய மனோ அமைதியாக இருந்தான்.

"மாமா இப்போ நீங்க சொன்னாலும் எனக்கு எப்படியும் வேற மாப்பிள்ளை பார்த்து அதே முஹூர்த்தத்துல கல்யாணம் நடக்கும். பிளீஸ் மாமா.. எனக்கு படிக்கணும்.. நீங்க நினைச்சா முடியும்" என அவள் கேட்க அவனுக்கும் வேறு வழி இல்லாததால் "சரி" என்றான்.

மனோ தங்களின் திட்டத்தை ஜனனியிடம் சொல்ல அவளோ முடியவே முடியாது என்றாள்.
"மனோ இப்படி பண்ணா உங்க வீட்ல இருக்கவங்களுக்கு எவ்ளோ வருத்தமா இருக்கும்?"
"ஜனனி, உனக்கு எங்க அப்பத்தாவை பத்தி தெரியல. அவங்க கண்டிப்பா நம்ம காதலை ஒதுக்க மாட்டாங்க" என ஒருவாறாக பேசி அவளை தங்கள் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தான்.

************************************************************************************

"இப்போ நீ எங்ககூட வரியா இல்லையா அன்பு?"

"அம்மா உங்களுக்கு ஏற்கனவே சொல்லிட்டேன்.. நீங்களும் அப்பத்தாவும் போய்ட்டு வாங்கனு"

"டேய், நான் மட்டும்னா டிரெயின்ல போய்ட்டு வந்திடுவேன். அப்பத்தாவும் கூட வராங்க. அவங்களால டிரெயின்ல அவ்ளோ தூரம் வரமுடியாதுடா அன்பு. கார்னா வசதியா போய்ட்டு வரலாம்"

"சரி அப்போ நான் ட்ராவல்ஸ்ல சொல்லி கார் புக் பண்றேன்"

"நீயும் கூட வந்தா நல்லா இருக்கும். உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும்"

"அம்மா என்னால எங்கையும் வரமுடியாது. வேணும்னா நீங்க போய்ட்டு வாங்க"

"மீனாட்சி உன் பையன் என்ன சொல்றான்?"

"அவனால வரமுடியாதாம் அத்தை. நம்மள மட்டும் போய்ட்டு வர சொல்றான். கார் புக் பண்ணி தரனாம்"

"ம்ம்ம்.. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போறானோ? அந்த கடவுள் தான் இவனுக்கு ஒரு வழிய காட்டணும்" என்றபடி நகர்ந்தார் வள்ளியம்மை.

கல்யாணத்திற்கு இரண்டு நாள் இருக்க மனோ நாச்சியாபுரம் வந்து சேர்ந்தான். அனைவரும் கல்யாண வேளையில் இருக்க மதியழகி, ஜனனியின் வருகையை உறுதிப்படுத்திக் கொண்டாள்.
"என்னமா இத்தனை தடவை போன் பண்ணிருக்கீங்க?"

"அன்பு, நீ புக் பண்ண ட்ராவல்ஸ்ல இருந்து இன்னும் கார் வரலடா"

இருங்க மா.. நான் போன் பண்ணி பாக்குறேன் என்றவன் அந்த ட்ராவல்ஸ்க்கு அழைத்தான்.
ஹலோ சார்.. நான் அன்பு பேசுறேன்.. இன்னைக்கு சாயங்காலம் திருச்சிக்கு ஒரு கார் புக் பண்ணி இருந்தேன்.. அஞ்சு மணிக்கு வரேன் சொல்லிருந்தாங்க.. இன்னும் வரலை..

"மன்னிச்சிடுங்க சார்.. அந்த டிரைவர் அவங்க அம்மாவுக்கு முடியலைன்னு அந்த ட்ரிப்க்கு வரமுடியாது சொல்லிட்டாரு.. நாங்க வேற யாரவது இருக்காங்களான்னு பார்த்துட்டு சொல்றோம் சார்.."

அரைமணி நேரம் கழித்து அந்த ட்ராவெல்ஸில் இருந்து அன்புவிற்கு அழைப்பு வர, "சார்.. மன்னிக்கணும்.. இப்போதைக்கு டிரைவர் யாரும் இல்ல சார்.. உங்களுக்கு காலைல எட்டு மணிக்கு ஓகேவா சார்?"

"நாளைக்கு கல்யாணத்துக்கு போகறதுக்கு தான் கார் புக் பண்ணியிருந்தோம்."

"இல்ல சார்.. இப்போ யாரும் வரமுடியாதுனு சொல்லிட்டாங்க.. உங்க காசை திரும்பி வாங்கிக்கோங்க" என சொல்லி அழைப்பை துண்டித்தனர் அந்த ட்ராவல்ஸ் நிறுவனம்.

அன்புவும் இன்னும் சில ட்ராவெல்ஸிடம் கேட்க கடைசி நிமிடம் என்பதால் யாரும் வரமுடியாதென சொல்லிவிட்டனர். "அம்மா.. நம்ம புக் பண்ணியிருந்த கார் டிரைவர் எமெர்ஜென்சினு வரமுடியாதுனு சொல்லிட்டாராம்"

"இப்போ கிளம்புனா தான் கல்யாணத்துக்கு போக முடியும். இப்போ என்னடா பண்றது?" நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்திடுவேன்.. வந்து பேசிக்கலாம் என அழைப்பை துண்டித்தான் அன்பழகன்.

"மீனாட்சி கிளம்பலாமா?"

"அத்தை நாம சொல்லியிருந்த கார் வரமுடியாது சொல்லிட்டாங்களாம்"

"இப்போ எப்படி கல்யாணத்துக்கு போறது மீனாட்சி?"

"அன்பு கொஞ்ச நேரத்துல வரேன்னு சொன்னான். அவன் வந்ததும் என்னன்னு பார்க்கலாம்"
வீட்டிற்கு வந்த அன்பு, "அம்மா, கார் எதுவும் கிடைக்கல.. நீங்களும், அப்பத்தாவும் பேசாம பிளைட்ல போறீங்களா?"

"என்னது பிளைட்டுலயா? யய்யா அழகா.. அப்பத்தா உன்னோட கல்யாணத்த பார்க்கணும்.. அப்புறம் உன்னோட பசங்கள வளக்கணும்.. அதுக்குள்ளே அப்பத்தாவை கொள்ள பாக்குறியேயா"

"என்ன இந்த அப்பத்தா சம்மந்தமே இல்லாமா பேசுது" என எண்ணியவன் "என்னாச்சு அப்பத்தா? "
"அதுதான் பிளைட்ல போக சொல்றியே. எவ்ளோ விபத்து நடக்குதுன்னு டீவில சொல்றாங்க. இதுவே உன்னோட தாத்தாவும், அப்பாவும் இருந்திருந்தா என்னைய இப்படி விட்ருப்பாங்களா?" என வள்ளியம்மை வராத கண்ணீரை வரவழைக்க, அதை பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சிக்கு அவர் அன்புவை தங்களுடன் வரவைக்க போடும் நாடகத்தை பார்த்து சிரிப்பு வந்தது. மீனாட்சியின் முகத்தை பார்த்தவர் அவரை கண்களால் மிரட்ட, வந்த சிரிப்பையும் அடக்கிக் கொண்டு "அன்பு அப்பத்தாவை பத்தி தான் தெரியும்ல? அவங்களுக்கு பிளைட்ல போறதுனா பயம். பேசாம நீயே நம்ம காரை எடுத்துட்டு வந்திடு"

அம்மா என்னால வரமுடியாது. இருங்க வேறேதாவது பண்ண முடியுமான்னு பார்க்குறேன் என சொல்லிக்கொண்டிருக்க வள்ளியம்மை தன் பையை எடுத்துக் கொண்டு காரில் உட்கார்ந்து கொண்டார். அதை பார்த்த மீனாட்சி அன்புவின் துணிகளை பையில் வைத்து கொண்டு அவனையும் அழைத்து கொண்டு காரில் ஏறினார்.

ஆசை தொடரும்...
 
Saroja

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்
தரணிகா
 
Hema Guru

Nicee start.... மதியை அன்பு வெல்லும்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top