என்னை தீண்டிவிட்டாய் 19

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
என்னவென்று
சொல்வேன்...
உனக்காய்
என் இதயம்
குருதி வடிப்பதை....

இதோ ஷாகரரும் ஆதிராவும் சூப்பர் மார்க்கட் ஆரம்பித்து இரண்டு மாதங்களாகிவிட்டது.. நினைத்ததற்கு மாறாகவே விற்பனை தராளமாக நடந்தது.. அதற்கு முக்கிய காரணம் அவர்களது சூப்பர் மார்க்கெட்டில் அவர்கள் விற்பனை செய்த பொருளும் அவற்றின் தரமும் நிர்ணய விலையுமே வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தியிருந்தது.. ஷாகரும் ஆதிராவும் பொருட்களை விநியோகிக்கும் தரகர்கறை மிகுந்த கவனத்துடனேயே தெரிவு செய்தனர்..அவர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் பொருட்களின் தரத்தை உறுதிபடுத்தவும் அவர்கள் தவறவில்லை....
சூப்பர் மார்க்கெட்டுக்களில் உள்ள வழமை போல் புகழ்பெற்ற அடையாளப்படுத்தப்பட்ட பெயரைக்கொண்ட பொருள் விநியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை அதிகம் கவரும் இடங்களை தமக்கென பதிவு செய்திருக்க மற்றைய பொருட்கள் அவற்றுக்கு தகுந்தாற் போல் இடங்களில் அடுக்கப்பட்டிருந்தது..
அதோடு சூப்பர் மார்க்கெட்டின் அமைப்பையும் வாடிக்கையாளரை கவரும் விதத்தில் மாற்றியிருந்தான் ஷாகர்..
ஆதிராவின் ஆலோசனைபடி சிறுவர்களுக்கென அங்கொரு ப்ளே ஏரியாவும் அமைக்க அந்த இடம் இரண்டு மாடிகள் கொண்ட சிறிய மால் போல் காட்சியளித்தது.. அதோடு வீட்டிற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் ஏனைய இதரபொருட்களும் அங்கு விற்பனைக்கு இருக்க, அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தேடி வரத்தொடங்கினர்...
மேலும் வாடிக்கையாளர்களுக்கு உரிய முறையில் சேவை வழங்க மோகனாவின் ஆலோசனைப்படி ஐந்து பணியாளர்களை அமரத்தியிருந்தாள் ஆதிரா.. அவர்களது உடை முதற்கொண்டு அனைத்தும் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவேண்டுமென்று அவர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்தாள்.. அதோடு சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை உரிய முறையில் தட்டிக்கொடுத்து அவர்கள் மேலும் சிறப்பாய் செயற்பட வழி செய்தாள்..
ஆதிரா சூப்பர் மார்க்கெட்டின் செயற்பாட்டுக்கான உள்வேலைகளை கவனிக்க ஷாகர் வெளிவேலைகளை கவனித்துக்கொண்டான்..
பொருள் விநியோகஸ்தர்களை தேடுதல், அவர்களின் தரம், விலை என்பவற்றை ஆராய்தல், ஒப்பந்தம் தொடர்பான வேலைகளில் ஈடுபடல், தொழில் விஸ்தரிப்புக்கான வேலைகள் என்று வெளி வேலைகளை கவனித்துக்கொள்ள இருவரின் அதீத ஈடுபாட்டால் வாடிக்கையாளர்களின் வரவு நாளுக்கு நாள் அதிகரிக்கத்தொடங்க வேலைப்பலுவும் அதிகரித்தது...
வேலை வேலையென்று ஓடியவர்கள் தம் வாழ்க்கை பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தனர்....
தினமும் காலை ஏழு மணிக்கு கிளம்புபவர்கள் சூப்பர் மார்க்கட்டிற்கு சென்று வரவேண்டிய பொருட்களை சரிபார்த்து அதற்கான வரவு செலவுகளை பார்த்து முடிக்க மணி ஒன்பதாகிவிடும்..
இருவரும் வேலை முடித்துவிட்டு வீடு திரும்ப எப்படியும் மணி பதினொன்றை தொட்டுவிடும்.. வீட்டிற்கு செல்லும் வழியிலேயே உணவை முடித்துக்கொள்வர் இருவரும்... பின் வீட்டிற்கு சென்று தத்தமது படுக்கையில் விழுபவர்களுக்கு வேறு எந்த சிந்தனையும் இருக்காது...
இப்படியே மூன்று மாதங்கள் ஓடிவிட என்றும் போல் அன்றும் சூப்பர் மார்க்கெட்டினை சுற்றி பார்வையிட்டுக்கொண்டிருந்தாள் ஆதிரா...
அப்போது அங்கு வந்தார் வசுமதி. அவரை கண்ட ஆதிரா அவரருகே சென்று
“ அத்தை..”
“ஆதிரா நல்லா இருக்கியா?? ஷாகர் எங்கமா??”
“அவ வெளிய போயிருக்காரு அத்தை... இப்போ வந்திருவாரு.. மாமா நல்லா இருக்காரா அத்தை??”
“நல்லா இருக்காருமா.. வியாபாரம் ல எப்படி போகுதுமா??”
“நினைச்சதை விட நல்லா போகுது அத்தை... அடுத்த பிரான்ச் ஓபன் பண்ணலாம்னு யோசிச்சிருக்கோம் அத்தை... பார்ப்போம்...”
“நல்லதுமா... உங்க இரண்டு பேருக்கும் எல்லாமே நல்லதா தான் நடக்கும்.. நீ எதுக்கும் கவலைப்படாத..”
“ம்ம்.. ஷாப்பிங் வந்தீங்க அத்தை...”
“ஷாப்பிங்கா..ஹாஹா.. உங்க மாமா கிட்ட சொன்னா கடையையே வீட்டுக்கு கொண்டு வந்திடுவாருமா.... நான் எதுக்கா வந்தேன்னா... இந்தா இதை பிடி..”
“என்ன அத்தை இது..???”
“கேரட் அல்வா செய்தேன்.. ஷாகருக்கு நான் செய்த கேரட் அல்வானா ரொம்ப பிடிக்கும்.. அதான் உனக்கும் அவனுக்கும் எடுத்துட்டு வந்தேன்.”
“சரி அத்தை வாங்க.. ஆபிஸ் ரூம் போகலாம்..”
“இல்லை... ஆதிரா.. நீ வேலையை கவனி.. நான் இங்க பக்கத்துல உள்ள கோவிலுக்கு வந்தேன்.. சரி கேரட் அல்வாவை கொடுத்துட்டு உங்க இரண்டு பேரையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்... நீ வேலையை கவனி.. நான் இன்னொரு நாள் வர்றேன்..”
“சரி அத்தை..”
“சரிமா.. நான் வர்றேன்.. ஷாகர் வந்தா சொல்லு..” என்று வசுமதி கிளம்ப அவரை வழியனுப்ப வெளியே சென்றாள் ஆதிரா...
அவரை காரில் ஏற்றிவிட்டு திரும்பியவளது காலை கல்லொன்று இடறிவிட கீழே விழந்தவள் அம்மா என்றலற கடைக்குள் இருந்தவர்கள் அவள் சத்தத்தில் வெளியே வர வசுமதியும் அவள் சத்தம் கேட்டு டிரைவரிடம் காரை நிறுத்த சொன்னார்..
கீழ விழுந்த ஆதிராவிற்கு அடிவயிற்றில் வலியெடுக்க வயிற்றை பிடித்தபடி வலியில் அலறியவள் மயக்கமடைந்தாள்...
காரிலிருந்து கீழிறங்கிய வசுமதி ஆதிராவின் அலறலில் பயந்து அவளை எழுப்ப முயல அவளோ மயக்கத்தில் இருந்தாள்...
தாமதியாது டிரைவரின் உதவியுடன் ஆதிராவை காரில் ஏற்றிய வசுமதியை ஆஸ்பிடலுக்கு கிளம்பினார்..
செல்லும் வழியில் ஷாகருக்கு அழைக்க அவனுக்கு அழைப்பு கிடைக்கவில்லை....
ஆதிராவை ஆஸ்பிடலில் அட்மிட் செய்த வசுமதி தன் கணவருக்கு அழைத்து அவரை உடனடியாக வரச்சொன்னார்..
வெளியில் சென்றிருந்த ஷாகர் அப்போது தான் உள்ளே வந்தவன் ஏதோ யோசனையில் நேரே ஆபிஸ் ரூமிற்கு செல்ல அவனை பின் தொடர்ந்து வந்த பெண் பணியாளர்
“சார்..”
“சொல்லுங்க...”
“ஆதிரா மேடம்..”
“அவங்க ஆபிஸ் ரூம்ல தானே இருக்காங்க..”
“இல்ல சார்.. மேடத்துக்கு அடிபட்டிருச்சு.. அவங்களை ஆஸ்பிடலை கூட்டிட்டு போயிருக்காங்க..”
“என்ன சொல்லுறீங்க?? ஆதிராவுக்கு என்னாச்சு??”
“சார் உங்க அம்மா வந்திருந்தாங்க.. அவங்களை வழியனுப்ப போனபோ கீழவிழுந்து அவங்களுக்கு அடிபட்டிருச்சு.. மேடம் அப்படியே மயங்கிட்டாங்க... உங்க அம்மா தான் காருல அவங்களை கூட்டிட்டு போனாங்க..”
“அம்மாவா.. சரி நீங்க கடையை பார்த்துக்கோங்க... நான் வர்றேன்...” என்றவன் தன் அன்னையில் மொபைலுக்கு முயற்சித்தபடி கடைக்கு வெளியே வந்தான்...
தன் அன்னையை அழைத்து என்னவென்று விசாரிக்க அவரோ தாமதிக்காது அவனை ஆஸ்பிடலுக்கு வருமாறு பணித்தார்..
உள்ளுக்கும் பயந்தபடி ஆதிராவுக்கு எதுவும் கெட்டதாக நடந்திருக்கக்கூடாது என்று ஆயிரம் முறை வேண்டியபடி ஆஸ்பிடலை அடைந்தான் ஷாகர்.
ரிசப்ஷனில் விசாரித்து எமர்ஜென்சி வார்ட் வாசலிற்கு ஷாகர் வர அங்கு தன் அன்னையும் தந்தையும் நிற்பதை கண்டான் ஷாகர்..
தன் அன்னையிடம் விரைந்தவன் என்னவென்று விசாரிக்க அவரோ அவனை பார்த்தபடி கண்கலங்க ஷாகருக்கோ பயம் தொற்றிக்கொண்டது.. தன்னை கட்டிக்கொண்டு அழுத அன்னையின் செயலில் உள்ளம் பதறியவன் தன் அன்னையிடம்
“அம்மா என்னாச்சுமா... ஏதாவது சொல்லுங்கமா.. ஆதிராவுக்கு ஒன்னுமில்லை தானே..??? சொல்லுங்கமா ப்ளீஸ்... எனக்கு பயமா இருக்கு.”
“கண்ணா..” என்று வசுபதி மீண்டும் அழ ஷாகர் தன் தந்தையை பார்த்து
“அப்பா... நீங்களாவது சொல்லுங்கப்பா... ஆதிராவுக்கு என்னாச்சு.... அம்மா ஏன் அழுறாங்க...சொல்லுங்கப்பா..”
“ஷாகர்....அது....”
“அப்பா ப்ளீஸ் சொல்லுங்கப்பா..”
“ஷாகர்... ஆ..திரா..வுக்கு அபார்ஷன் ஆகிடுச்சு..”
“அப்பா... நீங்க என்ன சொல்லுறீங்க?? அம்மா... அப்பா என்னமா சொல்றாரு...”
“ஆமாபா... அப்பா சொல்றது நிஜம்.. ஆதிரா கர்ப்பமா இருந்திருக்கா.. ஆதிரா கீழ விழுந்து அடிபட்டதுல அவளோட கர்ப்பம்..... க.லை..ஞ்சிருச்சி...னு டாக்டர் சொன்னாங்க..” என்று வசுமதி மீண்டும் அழ ஷாகருக்கோ உலகமே தலைகீழாய் சுற்றுவது போலிருந்தது....
அவனால் தன் அன்னைகளின் வார்த்தைகளை நம்பமுடியவில்லை....
அவனுள் பல உணர்வுகள் அலைபாய அவனால் அதன் வீரியத்தை தாங்கமுடியாது அங்கிருந்த இருக்கையில் சென்று தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துகொண்டான் ஷாகர்..
எதிர்பாரா விதமாய் திருமணம்..... பின் எதிர்பாராவிதமாய் ஆதிராவுடன் ஒரு வாழ்க்கை.... மறுபடியும் எதிர்பாரா விதமாய் ஒரு கூடல்.... இப்போது எதிர்பாராவிதமாய் ஒரு குழந்தை உண்டாகி அதை தெரிவதற்கு முன்பே கலைந்துவிட்டது.... எதற்காக இத்தனை எதிர்பாராத சம்பவங்கள் தம் இருவரின் வாழ்வையும் ஆட்டிப்படைக்க வேண்டும்??? எதற்காக விதி இவ்வாறு எம் வாழ்வில் விளையாடுகிறது??? இப்போதா ஆதிராவிற்கு தான் என்ன பதில் சொல்வது??? இந்த விடயத்தை அவள் எவ்வாறு எடுத்துக்கொள்வாள்??? தாம்பத்தியம் தான் இனிக்கவில்லை.... குழந்தையை கூட நிலைக்கவிடவில்லையே அந்த இறைவன்...... என்ன வாழ்க்கையிது...?? புயலில் சிக்கிய இளவம்பஞ்சை போல் இப்படி சுழட்டி அடிக்கின்றதே..... இதிலிருந்து ஆதிராவை எப்படி மீட்பேன்.... எதையுமே கடவுள் அவளுக்கு நிரந்தரமாக்கமாட்டானா???? அவள் வாழ்வு கூட அவள் இஷ்டப்படி அமையவில்லையே....... எதற்காய் அவளை இவ்வாறு சோதிக்கிறான் அந்த இறைவன்?? யாருக்கென்றாலும் குழந்தை என்பது வரம் தானே...அதை தெரியாமல் கொடுத்துவிட்டு எதற்காக தெரிந்தே எடுத்துக்கொண்டான்???? இந்த விடயத்தை ஆதிராவிற்கு எவ்வாறு கூறுவேன்????? அதை அவள் எவ்வாறு எடுத்துக்கொள்வாள்?? கடவுளே எதற்காக இவ்வாறு என்னை சோதிக்கிறாய்???? என்ன செய்வேன் நான்???
இவ்வாறு தன்னுள் உழன்றபடியிருந்தவனது தோள் தொட்டார் வசமதி...
நிமிர்ந்து பார்த்தவனது கண்கள் கலங்கியிருக்க அதை பார்த்த தாயுள்ளம் கதறியது... ஆனாலும் மகனை தேற்றும் பொறுப்பு தனக்குள்ளதை உணர்ந்த வசுமதி
“கண்ணா.. நீயே இப்படி கலங்குனா ஆதிரா என்னபா பண்ணுவா...??? நீ தான் அவளோட தைரியம்... நீ பேசபோற வார்த்தைகள் தான் அவளை திடப்படுத்தும்... அதுக்கு நீ தைரியமா இருக்கனும்பா... ஏதோ கெட்ட நேரம் இப்படி நடந்திருச்சு... அதையே நினைச்சு வருத்தப்படுறதுல எந்தவித பிரயோஜனமும் இல்லைபா.. இது பெரிய இழப்பு தான்.. ஆனா நடந்த எதுவும் இல்லைனு ஆகிடாது... போ கண்ணா.. போயிட்டு ஆதிராகிட்ட பேசு.... நீ தான் அவளுக்கு தைரியம் சொல்லனும்... போபா...”என்று வசுமதி தன் மகனை திடப்படுத்தி ஆதிரா இருந்த அறைக்கு அனுப்பி வைத்தார்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனு சந்திரன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top