என்னுள் சங்கீதமாய் நீ 34 { PRE FINAL}

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 34 { PRE FINAL}



மேம்.. “இந்த இடத்துல நீங்க சொன்ன மாதிரியே கார்டன் வைக்க ஏற்பாடு பண்ணியாச்சு.. கார்டன் வைக்க தேவையான செடி எல்லாம் இன்னிக்கே வந்துரும்”.. என்று ஹர்ஷினியின் PA ரூபா சொல்ல,

“குட் ரூபா.. செடி எல்லாம் வந்தவுடன் இன்னிக்கே வேலையை ஸ்டார்ட் செஞ்சிட சொல்லி அந்த கான்ட்ராக்ட்டர் கிட்ட நான் சொன்னதா உடனே இன்பார்ம் பண்ணிடுங்க”, என்று ஹர்ஷினி முடிக்க,

ரூபா அவள் சொன்னதை செய்ய செல்லவும், ஹர்ஷினி வழக்கம் போல் வேலை நடக்கும் இடத்தில் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருக்கும் போதே அங்கு வேகமாக வந்த ரூபா,

“மேம்.. MD வந்துட்டு இருக்காராம்”.. என்று அவசரமாக சொல்ல,

“யாரு..? தாத்தாவா..?” என்று சந்தேகமாக கேட்க,

“தெரியல மேம்.. இப்போதான் ஆஃபீசிக்கு பேக்ஸ் வந்தது, இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துருவாராம், சைட் ஒர்க் ரிப்போர்ட் ரெடியா இருக்கனும்ன்னு சொல்லியிருக்கு..” , என்று சொல்லிய படி தன் கையில் இருக்கும் பேக்ஸை நீட்ட..

“என்ன ரிப்போர்ட்டா..? ஏன்..?” என்று புரியாமல் குழம்பிய ஹர்ஷினி, அதை வாங்கி படித்து பார்க்க, அதிலும்.. ரூபா சொன்ன தகவல் மட்டுமே இருக்க,

“சரி.. ரூபா என் டேபிள்ல இருக்கிற டீடைல்ஸ் வச்சி உடனே ரிப்போர்ட் ரெடி பண்ணுங்க..” என்று சொல்ல, ரூபாவும் அவள் சொன்னதை செய்ய அங்கிருக்கும் ஆஃபீஸ் ரூமிற்குள் செல்ல, ஹர்ஷினி மனதுள் குமுறி கொண்டிருந்தாள்.

“என்னடா ஒருத்தி மனசு கஷ்டத்தோடு வீட்டை விட்டு வந்தாலே, அவ என்ன ஆனா..? எப்படி இருக்கான்னு கொஞ்சம் கூட கவலைப்படாம, சைட் விசிட்டிங் செய்ய வராரா.. வரட்டும்..” என்று ஆச்சார்யா தான் வருகிறார் என்று நினைத்து பொருமி கொண்டிருந்தவள்,

ஒரு கருப்பு நிற பென்ஸ் புழுதி பறக்க வேகமாக வந்து நிற்க, ஆச்சார்யா தான் என்று நினைத்து வரவேற்க கார் நிற்குமிடம் சென்ற ஹர்ஷினி, முன் கதவை திறந்து கொண்டு இறங்கிய மோகனை பார்த்து வியந்தவள்,

“இது ஜேயோட PA ஆச்சே, இவர் இங்க எப்படி..?” என்று யோசனையாக பார்த்து கொண்டிருக்கும் போதே, மோகன் சென்று பின் கதவை திறக்க, அதிலிருந்து “ஸ்டைலாக இறங்கிய ஜெயயை” கண்டு முதலில் அதிர்ந்தவள், பின் அவனுடைய தோற்றத்தை பார்த்து போறுமவே செய்தாள்,

“தலைக்கு ஜெல் போட்டு, க்ளீன் ஷேவ் செய்து, முகம் மினு மினுக்க, மீசையை முறுக்கியவாறே திருகி விட்டுருந்தவனின் உடை இன்னும் ஹர்ஷினியை கடுப்பாக்கியது.. ப்ளூ கலர் பாண்ட், வெள்ளை கலர் ஷர்ட், அதற்கு மேல் ப்ளூ கலரில் கோட், அந்த கோட்டிற்கு பட்டன் போடாமல் திறந்தே விட்டுருந்தவன் இடது கையில் இருக்கும் காப்பை ஸ்டைலாக மேலேற்றியவாறே வேகமாக ஆஃபீஸ் அறைக்குள் செல்ல”,

தன்னை ஏனென்று கூட கண்டுகொள்ளாமல் செல்லும் அவனின் திமிரில் ஹர்ஷினி கோவத்தில் மேல் மூச்சி கீழ் மூச்சு வாங்க நின்றிருந்தாள்,

“மேம்.. என்ன இங்கேயே நின்னுட்டிங்க, MD உங்களை கூப்பிடறாரு. சீக்கிரம் வாங்க” என்று ரூபா வேகமாக வந்து அவளை கையோடு அழைத்து செல்ல, கோவத்தில் சிவந்த முகத்துடனே உள்ளே சென்றவள்,

அங்கு MD சீட்டில் ஸ்டைலாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து ரிப்போர்ட்டை பார்த்து கொண்டிருந்த ஜெயயை கண்டு மேலும் கொதித்தவள், அவனை தீயாக முறைத்தவாறே நிற்க, அவனோ அவளின் கோவத்தை பற்றி கொஞ்சமும் கண்டு கொள்ளாமல், அவளிடமே ரிப்போர்ட்டில் சந்தேகம் கேட்க, பக்கத்தில் ரூபாவும், மோகனும் இருந்ததால், தன் கோவத்தை வெளிப்படையாக காட்ட முடியாமல், பல்லை கடித்தவாறே அவனுக்கு விளக்கம் சொன்னவளின் எண்ணம் முழுவதும்,

“இவர் எப்படி MD..?” ஒருவேளை தாத்தா தான் இந்த பதவியை இவருக்கு கொடுத்திருப்பாரோ.. ஆனா இதை பத்தி யாரும் என்கிட்ட சொல்லவே இல்லையே.

அதுமட்டுமா.. “நான் வீட்டை விட்டு வந்து இரண்டு வாரம் ஆகியும் என்னை யாரும் கண்டுக்க கூட இல்லை.. இருக்கட்டும், அவங்களை கூட விட்டுரலாம்,, ஆனா இவர் இத்தனை நாளாகியும் எனக்கு ஒரு போனும் பன்ணலை. என்னை தேடியும் வரலை,

ஆனா இப்போ MD யா வந்து உட்காந்துக்கிட்டு ரொம்ப ஓவரா தான் பண்ணிட்டிருக்கார். அதுவும் முன்னைக்கு ரொம்ப அழகா வேற இருக்கார், முகத்துல அப்படியே சந்தோஷ கலை வேற ஓவரா மின்னுது,

நான் இங்க காய்ஞ்சி கருவாடா போய்ட்டுஇருக்கேன்.. ஆனா இவர் என்னடான்னா என்னை பத்தி கொஞ்சம் கூட கவலை படாம ரொம்ப நிம்மதியா தான் இருக்கார், என்று அவனை பார்த்து பார்த்து வெந்து மனதுள் அர்ச்சித்து கொண்டிருந்தவளை உணர்ந்த ஜெய்க்கு, சிரிப்பு வந்தாலும்,

“நான் கோவமா இருக்கேன்னு தெரிஞ்சும், என்னை விட்டு வந்த இல்லை, உன்னை இன்னும் கடுப்பேத்தறேன் பாரு..” என்று சங்கல்பம் எடுத்து கொண்டவன், மேலும்.. மேலும் விடாமல் தொடர்ச்சியாக கேள்விகள் கேட்டு அவளை வெறுப்பேத்தியவன்,

அடுத்து கன்ஸ்ட்ரக்ஷன் நடக்கும் இடத்திற்கு சென்று பார்வையிட்டவன், “இன்னும் ஏன் பாதி வேலை கூட முடியல..? என்ன செஞ்சிட்டு இருக்கீங்க..? இது தான் நீங்க வேலை பார்க்கும் லட்சணமா..? இப்படி ஸ்லோவா வேலை செஞ்சா என்னைக்கு ஹோட்டல் திறக்க..?” என்று விடாமல் வேண்டுமென்றே எகிறியவன்,

மோகன்.. இங்க கொஞ்சம் என்னன்னு பாருங்க.. ரூபா அவருக்கு ஹெல்ப் பண்ணுங்க என்று சொன்னவன், ஹர்ஷினியை தன் பின்னால் வருமாறு ஒற்றை விரல் கொண்டு திமிராக சைகை செய்துவிட்டு முன்னால் நடக்க, அவனை தீயாக முறைத்த ஹர்ஷினி..

“எவ்வளவு திமிரு.. ஏன் வான்னு வாயால சொல்ல மாட்டாரோ.. சைகை தான் செய்வாரோ.. என்கிட்ட மட்டும் மாட்டட்டும் அப்பறம் இருக்கு, அந்த சைகை காட்டின விரலை உடைச்சிடுறேன்..” என்று திட்டி கொன்டே ஜெயின் பின்னால் ஆபிஸ் அறைக்குள் சென்றவள்,

அவன் MD சீட்டில் கம்பீரமாக சென்று அமரவும், அவ்வளவு கோவத்திலும் அவனின் கம்பீரத்தை கண்ணில் காதலுடன் ரசித்தவளை கண்டு கொண்ட ஜெய், கண்ணில் குறும்போடு,

“என்ன..? என்னை சைட் அடிக்கி றியா..? நீ என்னை சைட் அடிக்கிறது மட்டும் என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சிது.. அப்பறம் உன் சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை பாத்துக்கோ..” என்று அவளை சீண்டியவன், அவளின் முறைப்பை கண்டுகொள்ளாமல் மேலும்,

“வரவர பசங்களை விட இந்த பொண்ணுங்க தான் ரொம்ப சைட் அடிக்கிறாங்க.. என்னை மாதிரி ஹாண்ட்ஸம்மான பசங்க எல்லாம் வெளியவே வரமுடியாது போல..” என்று மேலும் குறும்புடன் கிண்டலாக சொல்ல,

“பொறுத்தது போதும்” என்று பொங்கியெழுந்த ஹர்ஷினி, “ஆமா.. இவர் பெரிய ஆணழகன், இவரை பாக்கத்தான் நான் ஏங்கி போய் நிக்கிறேன் பாரு..” என்று வெடுவெடுக்க,

“நான் என்னை பாக்க நீ ஏங்கி போனதா சொல்லவே இல்லையே.. சைட் அடிக்கிறதா தான் சொன்னேன், ஒருவேளை நீயே ஒத்துக்கிட்ட மாதிரி என்னை பாக்க ஏங்கி தான் போயிருந்தியோ என்னமோ..?” என்று நக்கலாக இழுக்க,

“நான் ஏங்கி போனதை நீங்க பாத்தீங்களா..?” என்று ஆத்திரமாக வெடிக்க,

நானா அப்படி சொன்னேன்..? நீ தான் சொன்ன..

நான் ஒன்னும் அந்த அர்த்தத்தில சொல்லலை..” என்று ஹர்ஷினி மழுப்ப பார்க்க,

“அது எனக்கு எப்படி தெரியும்..? நீ சொன்னதை தான் நான் சொன்னேன்.. யாரு கண்டா ஒருவேளை நான் வருவேன்னு என்னை ரொம்ப எதிர்பாத்து இருந்தியோ என்னமோ..? என்று திமிருடன் கேட்க,

அவனின் திமிரான கேள்வியில் கடுப்பான ஹர்ஷினி, அவனை முறைக்க, “பாத்து கண்ணாலே என்னை எரிச்சிட போற, எனக்கு வேற இதுக்கு அப்பறம் தான் கல்யாணமே ஆகணும், அப்பறம் வாழ்க்கையில் எதையுமே நான் அனுபவிக்க முடியாமா போய் சேந்த பாவம் உன்னை தான் சேரும்..” என்று நக்கலாக அவளை சீண்டியவன்,

அவள் மேலும் முறைக்கவும், “இப்போத்தானே சொன்னேன்.. அதுக்குள்ளே மறுபடியும் கண்ணிலே தீப்பந்தத்தை கொளுத்துனா என்ன அர்த்தம்..? என்னை நம்பியிருக்கிற பொண்ணுக்கு நீயா பதில் சொல்லுவ.. அவளே ஒரு ராட்சஸி” என்று மேலும் சீண்டவும்,

“யாரு.. நான் உங்களுக்கு ராட்சஸியா..? எவ்வளவு தைரியம் இருந்தா என்னை ராட்சஸின்னு என்கிட்டேயே சொல்லுவீங்க” என்று கோவமாக கத்த,

“இப்போ எதுக்கு இப்படி கத்தறவ..? நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன், நீ என் உயிரை குடிக்கிற ராட்சஸி தானே.. அப்பறம் என்ன..?”

“யாரு..? நானு..? நான் உங்க உயிரை குடிக்கிறேனா.. நீங்க எப்படி..?ரொம்ப நல்லவரோ..?”

“ஆமாம்.. கண்டிப்பாவே நான் நல்லவன்தான்.. இல்லாட்டி கோவமா போன உன்னை.. போனா போயிட்டு போறான்னு விடாம உன்னை தேடி வருவேனா..?”

“என்னமோ..? என்னை உடனே தேடி வந்த மாதிரி ரொம்பத்தான் பீத்திக்கிறீங்க.. ரெண்டு வாரம் கழிச்சி வந்துட்டு ரொம்பத்தான்..” என்று நொடிக்க,

பாத்தியா நீயே ஒத்துக்கிட்ட..

நான் என்ன ஒத்துக்கிட்டேன்..?

“ஆமா.. ரெண்டு வாரம் கழிச்சுத்தான் உன்னை தேடி வந்திருக்கேன்னு இப்போ நீயேதானே கோவமா சொன்ன.. அப்போ நான் உன்பின்னாடியே வருவேன்னு இத்தனை நாளா வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன்னு சொல்லு..” என்று வேகமாக அவளை மடக்க,

ஸ்ஸ்.. என்று மெலிதாக உதட்டை கடித்தவள், “ச்சே.. கடைசியில என் வாயாலே உண்மையை சொல்ல வச்சிட்டான் ராஸ்கல்..” என்று மனதுள் நொந்தவள், வெளியே ஜெயயை திமிராக பார்த்தபடி,

“இப்போ இதை பத்தி பேசத்தான் MDங்கிற பந்தோவோட என்னை தேடிவந்தீங்களா..?” என்று சிடுசிடுக்க,

“ஆமா.. இதுக்கு தான் வந்தேன்.. வேற எதுக்கு வந்தேன்ன்னு நினைக்கிற..?”

“இவரு மட்டும் அடங்கவே மாட்டாரு..” என்று கடுப்படித்தவள், ஆத்திரத்துடன் வெளியே செல்ல போனவள், தன்னை தடுக்காமல் மேலும் வசதியாக அமர்ந்த ஜெயயை பார்த்து கொதித்தெழுந்து,

“நான் இங்க கோவமா போய்கிட்டு இருக்கேன், என்னை கண்டுக்காம நல்லா வசதியா சாய்ஞ்சி உட்காறீங்களா.. உங்களை என்ன பண்றேன் பாருங்க”, என்று கத்திகொண்டே அவனின் தலை முடியை பிடித்து வேகமாக ஆட்டவும்,

“ஏய்.. ஏய் விட்றி.. வலிக்குது.. விடுடி ராட்சஸி..” என்று சிரித்தவாறே அவளின் கையை பிடித்து தடுத்தவன், உட்கார்ந்த நிலையிலே அவளை இழுத்து தன் மடிமேல் அமரவைத்தவன், அவள் கோவத்தில் திமிர,

“ச்சு.. கொஞ்ச நேரம் அமைதியா இருடி..” என்று அதட்டியவாறே அவளை தன்னோடு சேர்த்து இறுக்கமாக அணைத்து பிடித்தவன், அவளின் கழுத்து வளைவில் முகம் புதைக்கவும், அதுவரை கோவத்தில் இருந்த ஹர்ஷினியும் அவனின் அருகாமையில் எல்லையில்லா காதலோடு அவனை தோளோடு சேர்த்து தானும் கட்டிபிடிக்கவும்,

அவளின் கோபவம் குறைந்ததை உணர்ந்த ஜெய் மேலும் அவளை தன்னோடு இறுக்கி கட்டிக்கொள்ள, அவனின் நெருக்கத்தில் இத்தனை நாள் விரக்தியில் இருந்த தன் மனம் எல்லையில்லா நிம்மதியோடு அமைதியடைவதை பரிபூரணமாக உணர்ந்தாள்,

அப்படியே சிறிது நேரம் இருவரின் நெருக்கத்தை இருவருமே மனதார அனுபவித்து கொண்டிருக்கும் போது, வெளியே மோகன் அழைக்கும் சத்தம் கேட்கவும், பிரிய மனமில்லாமல் பிரிந்த இருவரில் ஜெய் “மோகனை உள்ளே வர சொல்லி சொல்ல”,

உள்ளே வந்த மோகன், “சார் பிளைட்டுக்கு டைம் ஆச்சி.. நாம கிளம்பனும்” எனவும், ஹர்ஷினி தன்னை இங்கேயே விட்டு அவன் மட்டும் சென்றுவிடுவானோ..? என்று கண்கள் சுருக்கி, கோவத்தில் மூக்கு விடைக்க ஜெயயை பார்க்க,

அவளின் முகபாவத்தில் சிரித்த ஜெய், “ஏய் உன்னை இங்கேயே விட்டு போறதுக்கா நான் வந்தேன்.. கிளம்பு நீயும் தான் எங்களோடு வர.. சீக்கிரம் போய் கிளம்பி வா” என்று அவளை அனுப்பிவைத்தவன்,

“ரூபாவை கிளம்ப சொல்லிட்டேங்களா மோகன்..”

“ஆமா சார்.. முன்னமே சொல்லிட்டேன், அவங்க ரெடியா இருக்காங்க..” எனவும் அடுத்து அரை மணியில் அனைவரும் அங்கிருந்து கிளம்பி மாலை போல் கோயம்பத்தூர் வந்தடைந்தனர்,

அங்கு அவர்களின் வீட்டின் அதீத அலங்காரத்தில் யோசனையானவள், அதையே கேள்வியாக ஜெயிடம் கேட்க, “உள்ளே போ உனக்கே தெரிஞ்சிடும்.. நான் இதோ வந்திடுறேன்” என்றவன் அவசரமாக கிளம்பி செல்ல,

“இவர் ஏன் இப்படி ஓடுறாரு..?” என்று யோசித்தவாறே வீட்டின் உள்ளே செல்ல, அங்கோ அனைவரும் ஆளுக்கொரு வேலையாக பரபரப்பாக சுற்றி கொண்டிருந்த, யாரும் அவளை நின்று கவனிக்க கூடவில்லை, குழப்பத்தில் இருந்த ஹர்ஷினி யாரும் தன்னை கண்டு கொள்ளாமல் இருக்க காண்டனவள்,

“ம்மா..” என்று உச்சஸ்தாயில் கத்த, அப்பொழுதும் ஒரு நொடி திரும்பி பார்த்தவர்கள், அடுத்த நொடி அலட்சியத்துடன் திரும்பி மறுபடியும் தங்களின் வேலையை தொடர,

“அப்போ போங்க.. நான் மறுபடியும் கேரளாவுக்கே போறேன்” என்று கத்த, வேகமாக அவளிடம் வந்த ரேணுகா, தன்னை பாசத்தோடு அணைப்பார் என்று பார்த்தால், அவரோ வந்த வேகத்தில் நன்றாக வலிக்குமாறு தன் தலையில் கொட்ட,

“ஸ்ஸ்..” என்று வலியில் தலையை தேய்த்து கொண்டே, “ம்மா.. இப்போ எதுக்கு கொட்டின..?” என்று கோவமாக கேட்க,

“அப்படிதாண்டி கொட்டுவேன்..” என்று அவளை விட அதிகமான கோவத்தில் கத்தியவர், “இன்னொரு முறை அங்க போறேன்.. இங்க போறேன்ன்னு கிளம்பி பாரு, போற காலை உடைச்சி வச்சிடுறேன்” என்று மிரட்டவும்,

“ஆமா.. அக்கா சொல்றதுதான் சரி.. இனி இப்படி கிளம்பி பாரு அப்பறம் இருக்கு உனக்கு” என்று மாலதியும் மிரட்டலாக சொன்னார்,

“நான் அப்பவே உன் காதை பிடிச்சி இழுத்துட்டு வரலாம்ன்னு தான் கிளம்பினேன்.. ஆனா என் மாப்பிள்ளை தான் வேணாம் அத்தை.. அவளோட கோவம் குறைஞ்சதுக்கு அப்பறம் கண்டிப்பா அவளே வீட்டை விட்டு வந்ததுக்காக வருத்தப்படுவா.. நம்மளை தேடவும் செய்வான்னு சொல்லிட்டார், அதான் உன்னை இத்தனை நாள் விட்டேன் ஆனா இது தான் கடைசி இனி இப்படி போன அவ்வளவுதான் பாத்துக்கோ..” என்று கண்கள் கலங்க மிரட்டிய ரேணுகா, அவளை பாசத்தோடு அணைத்து கொள்ள,

"நானும்.. நானும்.." என்று கார்த்திக்கும், ஹாசினியும் ஓடி வந்து அவர்களோடு கட்டி கொள்ள அனைவருக்கும் வெகு நாட்களுக்கு பிறகு மனம் நிம்மதியில் மிகவும் நிறைந்தது,

“ம்மா என்ன பங்க்ஷன்..? ஏன் இவ்வளவு அலங்காரம்..? நீங்களும் ரொம்ப பிசியா இருக்கீங்க..?” என்று ஹர்ஷினி ரேணுகாவிடம் கேட்கும் போதே, அவரின் முகம் அளவுகடந்த மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது,

“அது உனக்கு சர்ப்ரைஸ்.. அந்த ரூமுக்கு போ.. உனக்கே தெரியும்.. கதவை தட்டிட்டு போ” என்று சந்தோஷமாக சொல்ல, வேகமாக அந்த ரூமிற்கு சென்று கதவை தட்டிட்டு திறக்கவும், அங்கு அமர்ந்து இருந்த சுபத்ராவை பார்த்த ஹர்ஷினி, அவரிடம் தெரிந்த வித்தியாசத்தில்.. என்ன என்று யோசித்து கொண்டே அவரை நெருங்கியவள்,

“நீண்ட நெடு வருடங்கள் கழித்து நகை அணிந்து, தலை நிறைய பூ வைத்து, கையில் மருதாணி இட்டு முகம் அழகில் மினுமினுக்க” அமர்ந்து இருந்தவரை கண்டவுடன் ஹர்ஷினியின் கண்களில் தானாகவே கண்ணீர் நிறைந்தது,

“அத்தை..” என்று வேகமாக அவரை கட்டி கொள்ளவும், “ஹர்ஷினி.. பாத்து மருதாணி” என்ற வேறுஒருவரின் குரலில் திகைத்து விலகி சத்தம் வந்த திசையை பார்த்த ஹர்ஷினி, அங்கு இளங்கோவை காணவும் நம்ப முடியாமல் திகைத்தவள் கண்களை கசக்கி விட்டு இன்னும் நன்றாக உறுத்து பார்க்க, அவளின் பாவனையில் சிரித்த இளங்கோ,

“இங்க வா..” என்று கூப்பிட, சுபத்ராவை பார்த்து விட்டு தயக்கமாக அவரிடம் செல்ல, அவர் அவளின் கையை பற்றி கிள்ள, “ஸ்ஸ் என்ன மாமா..? எதுக்கு கிள்ளுனீங்க..?” என்று வலித்த கையை தேய்த்து கொண்டு கேட்க,

“ம்ம்.. நீ என்னை நம்பாம கனவோன்னு கண்ணை கசக்கி பார்த்தியே அதான்..” என்று சிரிக்க, சுபத்ராவும் அவருடன் இணைந்து சிரிக்க, இருவரையும் முறைத்தாலும் மனம் அளவுகடந்த மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க தான் செய்தது,

“சுபத்ரா அத்தைக்கு திருமணம் செய்யாமல்.. தான் மட்டும் எப்படி திருமணம் செய்து கொள்வது..?” என்பதே அவளின் மிக பெரிய வருத்தமாக இருந்தது, அதுவே.. அந்த அழுத்தமே அவள் வீட்டை விட்டு செல்ல மிக பெரிய மறைமுக காரணமாக இருந்தது,

அந்த அழுத்தம் நீங்க.. பாசத்தோடு கண்கள் கலங்க சுபத்ராவை நிறைவோடு அணைத்து கொண்டவளை, உள்ளே வந்து காதலாக பார்த்த ஜெய் அவளின் முகத்தில் தெரிந்த அளவுகடந்த மகிழ்ச்சியில், நிம்மதியில் தானும் நிறைவாக உணர்ந்தான்,

“ஏய் அழுமூஞ்சி.. அவங்களை விடு..” என்று தானும் கண்கள் கலங்கி அமர்ந்திருந்த சுபத்ராவை பார்த்து, ஹர்ஷினியை கடிந்து கொள்ள, அவளோ.. “மாட்டேன்” என்று தலையாட்டியபடி விடாமல் மேலும் இறுக்கமாக கட்டி பிடிக்க, தலையை தட்டி கொண்ட ஜெய், அவளின் அருகில் சென்று தலையில் தட்டி,

“அவங்களை விடுடி” என்று அதட்டலாக சொல்லவும்,

“அவளை அடிக்காத விடு ஜெய்” என்று சுபத்ரா, இளங்கோ இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல, சப்போர்ட் கிடைத்த சந்தோஷத்தில் அவரை விட்டு பிரியாத ஹர்ஷினி, ஜெயயை பார்த்து அழகு காண்பிக்க,

“போடி.. ரொம்பத்தான்” என்று ஜெயும் அலட்சியமாக கை அசைத்து பதிலுக்கு அழகு காண்பிக்க, அவர்களின் சிறு பிள்ளை தனமான சண்டையை ரசித்து மனதார சிரித்தனர் இளங்கோவும், சுபத்ராவும்,

“நாளைக்கு கல்யாணத்தை வச்சிக்கிட்டு இங்க கூத்தடிச்சிட்டு இருந்தா ஆகிடுமா..? என்று மிரட்டியபடி ரேணுகா வர,

“நாளைக்கு கல்யாணமா..? யாருக்கு..?” என்று சந்தேகமாக பார்த்த ஹர்ஷினி நொடியில் புரிந்து கொண்டு, இன்னும் சந்தோஷமாக சுபத்ராவை அணைத்து கொள்ள, வேகமாக அவளை நெருங்கிய ரேணுகா,

“சும்மா.. சும்மா.. அவளை கட்டிப்பிடிச்சு கசக்காத.. வா இங்கிட்டு” என்று அவளின் கையை பிடித்து இழுத்தவாறே, “நீங்க இருங்க..” என்று இளங்கோவையும், சுபத்ராவையும் பார்த்து சொன்னவர், கையோடு ஹர்ஷினியை இழுத்து கொண்டு செல்ல, தானும் தலையசைத்து விட்டு அவர்களை பின் தொடர்ந்தான் ஜெய்,

“ஏண்டி.. உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா..? இப்படித்தான் அவங்களை தொந்தரவு செய்வியா..? எதோ கொஞ்ச நேரம் இருந்துட்டு வராம மணிக்கணக்கா அங்கே இருந்து அவங்களை தொந்தரவு பண்றது இல்லாமல். இங்க கல்யாண வேலையும் பாக்காம ஏமாத்திட்டு இருக்க..” என்று ஆரம்பித்து அவளை பிடிப்பிடியென்று பிடிக்க,

நொந்து போன ஹர்ஷினி ஜெயயை பார்க்க, அவனோ ரேணுகாவின் அர்ச்சனையை நன்றாக ரசித்து பார்த்து கொண்டிருந்தான், “இந்த அம்மா திட்டுறதை கூட நான் பொருத்துக்குவேன்.. {ஏன்னா உனக்கு அது பழகிருச்சி என்று மனசாட்சி குரல் கொடுக்க, அதை தட்டிய ஹர்ஷினி},

“ஆனா.. இவர் அதை ரசிச்சி சந்தோஷ பட்றதுதான் எனக்கு தாங்கலை” என்று பொறுமியவள், ரேணுகா அர்ச்சனையை முடித்து, "வா.. வந்து வேலையை பாரு.." என்று கையோடு மறுபடியும் இழுத்து கொண்டு செல்ல, ஜெயயை முறைத்தவாறே அவரை பின்தொடர்ந்தவளை போதும்.. போதும்.. என்கிற அளவுக்கு வேலை வாங்கி பிழிந்து தள்ளி விட்டார் ரேணுகா.

நொந்து போய் மேலேறி கொண்டிருந்த ஹர்ஷினியை மறித்த ஜெய், "கொஞ்சம் பேசலாம் வா.." என்று அழைக்க,

"முடியாது போ.." என்று முறுக்கி கொண்டு சென்றவளின் காதில் விழுமாறு சத்தமாக “இப்போ உனக்கு இளங்கோ அப்பாவை பத்தி தெரியுனுமா வேணாமா..?” என,

வேகமாக அவனிடமே திரும்பி வந்தவள், "சொல்லுங்க.." என்று ஆர்வத்துடன் கேட்க, அவளின் தலையில் செல்லமாக தட்டிய ஜெய்,

“இளங்கோ அப்பா இருந்த இடம்.. உங்க அப்பாக்கு தெரியும்” என்று ஆரம்பித்தவன்,

“முதல்ல என்னை பாத்து பேசனப்போவே என்கிட்ட சொல்லிட்டார், அப்பறம் என்ன நானும் அவரும் அவரை மீட் பண்ணோம், மாமா மனசார அவர்கிட்ட மன்னிப்பு கேட்க, கோவமா இருந்த இளங்கோவோட அப்பாவோட அன்னபூரணி அம்மாவும் ஏற்கனவே மகன் வாழ்க்கையை நினைச்சி கவலை பட்டுட்டு இருந்தாங்க போல, உடனே ஒத்துக்கிட்டாங்க.. “

“ஆனா.. இளங்கோ அப்பாதான், பிடிவாதமா இருந்தாரு, அவர் மனசுக்குள்ள நொண்டியான நான் எப்படி சுபத்ராவுக்குன்னு வேதனை இருந்திருக்கும் போல.. நாங்களும் எவ்வளவு சொன்னாலும் கேட்கல..”

“ஆனா நீ வீட்டை விட்டு கோவமா போனதுக்கு அப்பறம் நாங்களே சுபத்ரா அம்மாகிட்ட சொல்ல, அப்பறம் அவங்களே அவரை பார்த்து பேசி சமாதானமாகி இப்போ விடிஞ்சா கல்யாணம்” என்று முடிக்க, ஹர்ஷினி எல்லையில்லா நிம்மதியில் அவன் தோள் சாய்ந்தாள் .

குறித்த சுப முகூர்த்தத்தில் இளங்கோ, சுபத்ராவின் ஆசைப்படி கோவிலில் சிம்பிளாக.. "தாலி கட்டி தன் வாழ் நாள் துணையாக சுபத்ராவை மனதார ஏற்று கொண்டார் இளங்கோ.." அதை பார்த்திருந்த அனைவரின் கண்களிலும் ஆனந்த் கண்ணீர் நிறைந்தது.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
ஜெய் ஆகாஷ்தான் M D யா?
ஆச்சார்யா சூப்பர் வேலை செய்தார்
சுபத்ராம்மா இளங்கோ கல்யாணம் நல்லபடியா நடந்து விட்டது
ஹப்பா இப்போத்தான் நிம்மதியா இருக்கு
தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமும் தானே சந்திரன் செய்து விட்டார்
ஆனால் தாத்தா ஆச்சார்யாவை இந்த விழாவில் காணலையே
எங்கே அவர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top