என்னுள் சங்கீதமாய் நீ 33

Advertisement

Saroja

Well-Known Member
பாவம் அந்த பெண் எத்தனை
மனபோராட்டம்
அருமையான பதிவு
 

yazhini5

Member
என்னுள் சங்கீதமாய் நீ 33



“மாப்பிள்ளை... ஹர்ஷினி ரெண்டு நாளா ஏதோபோலவே இருக்கா..? யார்கிட்டேயும் பேசல.. அடிக்கடி தனியாவே வெளியே போயிட்டு வரா.. எனக்கு என்னமோ எதோ செய்ய போறாளோன்னு சந்தேகமா இருக்கு”.. என்று சந்திரன் போன் செய்து ஜெயிடம் கவலையாக சொல்ல,

அவனுக்குமே… அவன் போன் செய்து அவளிடம் பேசியபோது அவள் பேச்சில் தெரிந்த விலகல் தன்மையில் கொஞ்சம் யோசனைதான்..

“சரி மாமா.. என்ன ஆச்சின்னு நான் பாக்கிறேன்..” என்று அவன் போன் வைத்த, அடுத்த நொடி ஆச்சார்யாவிடம் இருந்து போன் வரவே., உடனடியாக அட்டென்ட் செய்தவன்,

“சொல்லுங்க தாத்தா…” என,

“ஜெய்.. நீ இப்போ எங்க இருக்க.?” என்று கேட்ட அவரின் பதட்ட குரலில்,

“சென்னையில தான் தாத்தா.. என்ன ஆச்சு..? ஏன் இவ்வளவு பதட்டமா பேசுறீங்க..?” என்று யோசனையாக கேட்க,

“ஜெய்.. அது ஹர்ஷினி எங்கயோ போறா போல..?” என்று அவசரமாக சொல்லவும்,

“புரியலை தாத்தா.. எங்க போறா..?”

“அதுதான் எனக்கும் தெரியல.. ஆனா எங்கேயோ போறா.. அதுமட்டும் உறுதியா தெரியும்,.”

“தாத்தா.. பதட்ட படாம பொறுமையா சொல்லுங்க.. ஹர்ஷினி எங்க போறா..? அது உங்களுக்கு எப்படி தெரியும்..?” என்று அவனுக்கு சில சந்தேகம் இருந்ததால் பொறுமையாக கேட்டான்,

“அது.. நான் இன்னிக்கு ஹோட்டேல்க்கு போனப்போ அவ அவகிட்ட இருக்கிற எல்லா பொறுப்பை பத்தியும் கார்த்திக்கு சொல்லி கொடுத்துட்டு இருந்தா.. கேட்டதுக்கு அவனும் எல்லாத்தையும் கத்துக்கணும் தானே.. அப்போதான் அவனால தனியா ஹோட்டலை ரன் பண்ண முடியும்ன்னு சொன்னா..”

“அதுக்கு இப்போ என்ன அவசியம் வந்ததுன்னு” நான் கேட்டதுக்கு, “அது நாளைக்கு உங்களுக்கே தெரிஞ்சிடும்”ன்னு சொன்னாப்பா, அதுமட்டுமில்லை.. “அவ முகத்துல மருந்துக்கு கூட சிரிப்பில்லை.. ரொம்ப இறுக்கமா தான் தெரியறா.. என்ன ஆச்சின்னு தான் தெரியல..” என்று ஆச்சார்யாவும் கவலையாக சொல்ல,

“என்னதான் செய்றா இவ.. எல்லாரையும் டென்க்ஷன் பண்ணிக்கிட்டு இருக்கா, இவளை..” என்று மனதுள் ஹர்ஷினியை கடிந்து கொண்டவன்,

“தாத்தா.. ஒன்னும் கவலை பட்டுக்காதீங்க.. ஏதா இருந்தாலும் பாத்துக்கலாம்” என்று ஆறுதலாக சொல்ல,

“இல்ல ஜெய்.. எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு.. நீ பேசாம இங்க கிளம்பி வாயேன்..” என்று அவனை அழைக்க, ஜெயுமே முன்னமே ஊருக்கு சென்று வருவது என்று முடிவு எடுத்து இருந்ததால்,

“ஓகே தாத்தா.. நான் இப்பவே கிளம்பி வரேன்..” என்று சொன்னவன், சொன்னபடி உடனடியாக கிளம்பியும் விட்டான்,

மறுநாள் காலையிலே ஹர்ஷினி இரண்டு ட்ராலி சூட்கேஸை இழுத்து கொண்டு வர, பதறி போன ரேணுகா, “ஹர்ஷினி என்ன இது..?” என்று கேட்க,

“ம்மா.. கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கே எல்லாம் தெரிஞ்சிடும்..” என்றவள்,

“கார்த்திக்… தாத்தா கிட்ட நான் பேசணும்ன்னு சொல்லு” என்று நிதானமாக எந்த வித உணர்வும் இல்லாமல் எதோ போல் பேசியவளை, கண்ட எல்லோருக்கும் “அடுத்து என்ன பூதம் கிளம்பப்போகிறது” என்ற பயம் தான் வந்தது,

கார்த்திக் சென்று தாத்தாவிடம் கேட்க, அவர் உடனடியாக தன் ரூமிலிருந்து ஹாலுக்கு வேகமாக வந்தவர், ட்ராலி சூட்கேஸையும், ஹர்ஷினியையும் பார்த்துவிட்டு,

“என்ன ஹர்ஷி இது..? எதுக்கு இந்த பேக் எல்லாம்..? எங்க போற..?” என்று பதட்டத்துடன் கேட்டார்.

“தாத்தா… நான் உங்ககிட்டயேயும், இவர்கிட்டேயும் பேசணும்” என்று சந்திரனை கை காட்டி சொல்ல, “எல்லோரும் இப்போ என்ன பிரச்சனையோ..?” என்று சந்திரனையும், ஹர்ஷினியையும் மாறி மாறி பார்த்தனர்.

“உங்க மாப்பிள்ளை இங்க எப்போ வருவார்..?” என்று ஜெயயை பற்றி சந்திரனிடம் நேரடியாக கேட்க, அவரின் முகத்தில் தெரிந்த மெலிதான பதட்டத்திலே. “இவர் எதோ செய்திருக்கிறார்..?” என்று அங்கிருந்த எல்லோருக்குமே புரிந்துவிட்டது.

“அது.. அது.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்” என்று சொல்ல, ஆச்சார்யா அதிர்ச்சியுடன் பெரிய மகனை பார்த்தவர்,

“பெரியவனே.. என்னடா செஞ்ச..? ஜெய் வரார்னு உனக்கு எப்படி தெரியும்.?” என்று வேகமாக கேட்க,

“அப்பா.. அது.. அது.. நான் தான்.. நான் தான்” என்று திக்கும் போதே வேகமாக அங்கு வந்த ஜெய், ஹர்ஷினியின் இறுகிய முகத்தையும், பேக்கையும் பார்த்தவன், வேகமாக அவளை நெருங்கி,

“எங்கடி கிளம்பிட்ட..?” என்று கோவத்துடன் கேட்டான். அவனை பார்த்தவுடன் இன்னும் இறுகிய ஹர்ஷினி, அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல்,

“இவர் உங்ககிட்ட வந்து எப்போ பேசினார்..?” என்று சந்திரனை கை காட்டி அழுத்தத்துடன் கேட்டாள், அவள் கேட்டவுடன் ஒரு நொடி அதிர்ந்த ஜெய், மறுநொடி தன் பேண்ட் பாக்கெட்டில் இரு கைகைளை விட்டபடி எப்போதும் போல் திமிருடன் நிமிர்ந்து நின்றவன்,

“முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..? எங்க கிளம்பிட்ட..?” என்று அவனும் அவளுக்கு குறையாத அழுத்தத்துடன் கேட்டான், அவனிடம் இதை முன்னமே எதிர்பார்த்திருந்த ஹர்ஷினி, அவனிடம் இருந்து தன் பார்வையை திருப்பி கொண்டு சந்திரனை வெறித்தவள்,

“நீங்களாவது என் கேள்விக்கு பதில் சொல்வீங்களா..?” என்று “பல வருடம் கழித்து தன் முகம் பார்த்து தன்னிடம் பேசும் மகளிடம் தன்னால் எப்படி சொல்லாமல் இருக்க முடியும்..?” என்பது போல் ஜெயயை பார்த்த சந்திரன்,

“நான்.. நான் அவரை” என்று தொடங்கும் போதே வேகமாக இடையிட்ட ஜெய், “அதெல்லாம் உனக்கு எதுக்கு..? இப்போ அதை பத்தி பேசணும்ன்னு என்ன அவசியம் இருக்கு..?” என்று ஹர்ஷினியிடம் கோவமாக படபடத்தவனை, திரும்பி உணர்வில்லா பார்வையால் வெறித்து பார்த்த ஹர்ஷினியை கண்ட ஜெய்க்கு, எதோ போல் ஆகிவிட..

“ஹர்ஷ்.. இப்போ அதை பத்தியெல்லாம் பேசி என்ன ஆக போகுது..? சொல்லு.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சி அடுத்த மாசம் நம்ம மேரேஜே வரபோது.. எல்லாத்தையும் விட்டுடு ஹர்ஷ்..” என்று பொறுமையாகவே கேட்டான்,

ஆனால் ஹர்ஷினியோ.. அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் “எனக்கு இப்போ தெரிஞ்சேஆகணும்..” என்பது போல் உறுதியாக நிற்க,

“என்ன பெரியவனே..? ஹர்ஷினி என்னென்னமோ கேட்கிறா..? நீ எப்போ மாப்பிள்ளை கிட்ட பேசின..? எதுக்கு பேசுன..?” என்று ஆச்சார்யா கொஞ்சம் கோவத்துடன் சந்தேகமாக கேட்டார், “இனி மறைக்க எதுவும் இல்லை..” என்று புரிந்து கொண்ட சந்திரன்,

“இவங்க லவ் பண்ற விஷயம் தெரிஞ்சவுடனே.. நாம போய் பார்ம் ஹவுஸ்ல பேசிட்டு வந்தோம் இல்ல.. அப்போ மாப்பிள்ளை கூட இனி எனக்கும் ஹர்ஷினிக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.. நான் அவளை விட்டு பிரிஞ்சிட்டேன்ன்னு சொன்னாரு இல்லை..”

“அதுக்கு அப்பறம் அது உண்மையான்னு நாமமும் அவரை தொடர்ந்து பலோவ் பண்ணோம்.. அவரும் அத்தனை நாள் ஆகியும் ஹர்ஷினியை பாக்கல.. பேசல.. ஹர்ஷினியும் அவர் ஒதுக்கத்துல ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தா..” என்று ஹர்ஷினியை அந்த நாட்களில் கவனித்து வைத்திருந்த சந்திரன் சொல்ல,

ஜெய்.. ஹர்ஷினியை வேகமாக பார்க்க, அவளோ தன் கைகளை கட்டியபடி சந்திரன் சொல்வதை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

“ மாப்பிள்ளையும் இறங்கி வராத தெரியல..”

“நாம.. அவர் ஹர்ஷினிக்காக டான்ஸை விட்டு வருவார்ன்னு எதிர்பார்க்க..”

“அவரோ.. ஹர்ஷினிக்காக நாம அவரை டான்ஸோடே ஏத்துப்போம்ன்னு எதிர்பார்க்க..” மாசம் தான் போச்சே தவிர, “நீங்க ரெண்டு பேரும் இறங்கி வரதா தெரியல..” என்று ஆச்சார்யாவையும், ஜெயயையும் பார்த்த படி சொன்னவர்,

“அதான் நானே ஒரு நாள், நம்ம டான்ஸ் அகாடமி பங்க்ஷன் நடக்கிறதுக்கு ஒரு வாரம் முன்னாடி அவரை போய் பார்த்தேன்..” என்று சொன்னவர் ஹர்ஷினியை பார்க்க,

“அவளோ.. எனக்கு நடந்த முழுவதும் தெரிய வேண்டும்” என்பது போல் பார்க்க, பெருமூச்சோடு தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார் சந்திரன்.

“ஹர்ஷினி விஷயத்துல என்ன முடிவு எடுத்து இருக்கீங்கன்னு கேட்டேன்..?”

“அதுக்கு அவர்.. உங்க முடிவு என்ன..?ன்னு” கேட்டார்,

“நான் தெளிவா சொல்லிட்டேன்.. டான்ஸை விட்டு வந்தாதான் எங்க வீட்டு பொண்ணை கொடுப்போம்ன்னு..”

“அதுக்கு அவர்.. முடியவே முடியாதுன்னுட்டார்”.

“நான்.. என் பொண்ணை விட டான்ஸ் தான் முக்கியமான்னு” கேட்டதுக்கு,

அவர்.. “ஹர்ஷினிக்காக தான் இந்த டான்ஸே.. அதை விட்டு வந்தா அவளே என்னை ஏத்துக்க மாட்டான்னு” சொல்லிட்டார்.. என்று சொல்ல, அப்பொழுதும் ஹர்ஷினியின் முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லாமல் தான் நின்றாள்,

ஜெய் தான் அவளின் இறுக்கத்தில் உள்ளுக்குள் தவித்து போனான், “சண்டை போட்டாலாவது பரவாயில்லை.. இப்படி எதுவும் பேசாம யாரோ போல நின்னா என்ன செய்ய..?” என்று மாய்ந்து போனான்,

“இந்த ஹர்ஷினி அவனுக்குமே புதிது தான்..” அதனாலே எதுவும் செய்ய முடியாமல், “அடுத்து என்ன செய்வாள்..?” என்று யோசனையாகவே நின்றான்.

“எனக்கு வேற வழி தெரியல.. என் பொண்ணு இத்தனை வயசாகியும் தனியா நிக்கிறது ஒரு அப்பாவா என்னால தாங்க முடியல. ஏற்கனவே.. என் பொண்ணு மாதிரி வளர்த்த என் தங்கச்சி தனியாவே நின்னுட்டா..”

“அதுக்கு நானே காரணமா ஆயிட்டேன்ன்னு.. அந்த குற்ற உணர்ச்சி வேற தினம்.. தினம்.. என்னை கொன்னுட்டு இருக்கு.. எங்க சுபத்ரா மாதிரி ஹர்ஷினியும் தனியாவே நின்னுடுவாளான்னு எனக்கு நிறைய பயம்.. “

“அதான்.. மாப்பிள்ளை கையை பிடிச்சி நல்ல முடிவா எடுங்க.. ஏற்கனவே என் தங்கச்சி என்னாலே தனி மரமா ஆயுட்டான்னு.. எல்லாத்தையும் சொன்னேன்”,

“அம்மா.. அப்பா கல்யாணம் முதல் சுபத்ரா.. இளங்கோ பிரச்சனை... காளிதாஸ் மறுபடியும் ஹர்ஷினி விஷயத்துலயும் தலையிட்டு அதனால அவ டான்ஸை விட்டது வரை..” எல்லாத்தையும் சொன்னேன்,

சொல்லிட்டு.. “அவர் கையை பிடிச்சி கெஞ்சி கேட்டேன்.. நான் கெஞ்சவும் பதறி போன மாப்பிள்ளை”, என்ன நினைச்சாரோ..?, “சரின்னு” சொல்லிட்டார்.. என்று முடிக்க,

அதுவரை குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவு அமைதி நிலவிய வீட்டில், ஆச்சார்யாவின் கோபக்குரல் எதிரொலித்தது..

“அப்போ மாப்பிள்ளையோட அப்பா, நம்மை பார்த்து கேட்ட கேள்வி சரிதான் இல்ல.. என்ன பெரியவனே இதெல்லாம்..” என்று கோவம் கலந்த வேதனையுடன் கேட்க,

“எனக்கு என் பொண்ணு வாழ்க்கைக்கு.. இதை விட்டா வேற வழி தெரியலப்பா..?” என்று எல்லையில்லா வேதனையுடன் சொல்ல, ரேணுகா முகத்தை மூடி கொண்டு அழுகவே செய்தார்.

அதுவரை இறுக்கி போய் நின்ற ஹர்ஷினி சந்திரன் சொன்னதை கேட்டவுடன் மிகவும் தளர்ந்து போனாள். “முன்னமே.. அவளுக்கு இதுதான் நடந்திருக்கும் என்று யூகம் இருந்த போதும்.. சந்திரன் சொல்லும் போது எல்லையில்லா வேதனையே..”

“என்னதான் ஜெய் அவளுடைய உயிர்.. என்றாலும், தன் தந்தை தனக்காக அவனிடம் கெஞ்சி கேட்டது மிகவும் வலிக்க தான் செய்தது.” அதையே மறுபடியும் மீட்டு கொண்ட உறுதியுடன் சந்திரனிடமும் சொன்னாள்.

“என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரியாம தான் நான் இத்தனை நாளா இருந்துருக்கேன்..” என்று விரக்தியுடன் சொன்னவள,

“ஜெய் தான் எனக்கு எல்லாமே.. ஆனா அவர்கிட்ட கூட என்னோட அப்பாவா நீங்க கெஞ்சியிருக்கிறது கண்டிப்பாவே என்னால எக்காலத்திலும் ஏத்துக்கவும், ஜீரணிக்கவும் முடியல.. உங்களோட கௌரவம் எனக்கு எப்பவுமே ரொம்ப முக்கியம்..” என்று அழுத்தத்துடன் சந்திரனை பார்த்தபடி சொன்னவள்,

“உங்க எல்லார் கிட்டேயும் நான் இன்னைக்கு மனசார பேசணும்ன்னு நினைக்கிறன், சோ.. ப்ளீஸ் இடையில யாரும் எதுவும் பேசமாட்டேங்கன்னு நம்புறேன்..” என்றவள்,


“என்னை இந்த வீட்ல ஒரு ராணியத்தான் வளத்திருக்கீங்க.. அதை என்னால எப்பவும் மறுக்க முடியாது..”

ஆனா.. அதுக்கு இது அர்த்தம் இல்லை.. “என்னோட ஒரு கண்ணை நீங்க ராணி மாறி பாத்துகிட்டு.. இன்னொரு கண்ணை குத்துறது இல்லை..”

“நான்..” அப்படிங்கிறது “என்னோட விருப்பம், கனவு, லட்சியம், காதல், எல்லாம் சேர்ந்தது தான். அதை அப்படியே ஏத்துகிறது தான்.. எனக்கே என்னை ராணி மாதிரி உணரவைக்கும்..”

“இதையெல்லம் பறிச்சிக்கிட்டு.. நீ இப்பவும் ராணி தான்.. அப்படின்னா என்னால் எப்படி அதை ஏத்துக்க முடியும்..? உணர முடியும்..?” என்று மரத்த குரலில் சொல்லவும், எல்லோருக்கும் ஒரு விதத்தில் குற்ற உணர்ச்சியே..

“உங்களோட பயம்.. நீங்க கடந்து வந்த பாதையில் நீங்க அனுபவித்த கஷ்டம் எல்லாம் எனக்கு நல்லாவே புரியுதுதான்.. அதுக்காக காலத்துக்கும் அந்த பயத்தை பிடிச்சிட்டு தொங்கிறது.. நம்ம மிச்சம் மீதி இருக்க வாழ்க்கையை நரகமாத்தான் மாத்தும் தாத்தா..”

“இதை உங்களுக்கு புரிய வைக்க தான்.. இத்தனை வருஷமா நானும் சுபத்ரா அத்தையும் பாடுபட்டோம்..” ஆனா.. எல்லாமே வீண் தான்.. உங்க பயம் தான் ஜெயிச்சுது.. எங்க நம்பிக்கை, தைரியம்.. எல்லாம் தோத்துடுச்சி.. “ என்று ஆச்சார்யாவை பார்த்தபடி துயரத்துடன் சொன்னவள், ஓர் நொடி கண்மூடி தான் துயரத்தை விழுங்கி கொண்டு சந்திரனை உறுத்து விழித்தவள்,

“உங்களோட முன் கோவத்தால என்ன ஆச்சின்னு உங்களுக்கு தெரியுமா..? இளங்கோ மாமாக்கு ஒரு காலே போச்சி.. இப்போ வரைக்கும் கட்டை கால்ல தான் நடக்கிறாரு..” என்று

“அன்று.. இளங்கோவின் அப்பா தண்டபாணி பொருட்களை எடுத்து செல்லும் போதே, ஆட்கள் மூலம் பின் தொடர்ந்து அவர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்து விட்ட போதும், அவர்களை எவ்விதத்திலும் சமாதான படுத்த முடியாமல் விரக்தியுடன் விலகி நின்றுவிட்ட சுபத்ராவை வேதனையுடன் பார்த்து விட்டு சந்திரனிடம் சொன்னவள்,

“இப்போ அவங்க எங்க இருக்காங்கன்னு கூட எங்களுக்கு தெரியாது..?, அப்பவே எங்களுக்கு தெரியாம மறுபடியும் வீட்டை மாத்திட்டாங்க..

இதனால என்ன ஆச்சி..? இத்தனை வருஷம் வாழ்க்கை துணை இல்லாமல், ஒரு சந்நியாசி போல் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் அத்தை தனியா நின்னது.. உங்களோட மன்னிப்பால் அதை மாத்த முடியுமா..?” என்று சந்திரனை குற்றம் சாட்டும் பார்வையுடன் கேட்க,

“சந்திரனால் இதற்கு என்ன பதில் சொல்லிட முடியும்..?”

“என்னோட கோவத்தில் எனக்கே தெரியாம நிறைய பேரை அதுவும் என்னை மனசார நேசிக்கிறவங்களை கஷ்டப்படுத்தி இருக்கேன், அந்த என்னோட கோவம் சரியா..? தப்பான்னு..? கூட எனக்கே தெரியல..”

“சில நேரம் சரியா தெரியறது.. பல நேரம் எனக்கே உறுத்தலையும், கஷ்டத்தையும் தான் கொடுத்திருக்கு..” என்று கலங்கிய குரலில் ஆச்சார்யா, சந்திரனை பார்த்த படி சொன்னவள்,

“அடுத்து.. என்னோட வைராக்கியாயத்தை எனக்கே தெரியாம உடைக்க நானே காரணமாவும் இருந்திருக்கேன்..” என்று

“ஜெய் டான்ஸை விட.. தனக்கே தெரியாமல் தானே ஒரு விதத்தில் காரணமா இருந்த விரக்தியில் ஜெயயை பார்த்தபடி இயலாமையுடன் சொன்னவள்”,

“இதையெல்லாம் நினைக்கும் போது.. என்னோட வாழ்க்கையில் நான் ரொம்ப மோசமா தோத்துட்டேன்ன்னு தான் தோணுது”

“என்னோட கனவை பறிச்சப்போவும் சரி, இப்போ ஜெய்யோட லட்சியத்தை பறிச்சப்போவும் சரி.. எதுவும் செய்ய முடியாதா ஒரு யூஸ்லஸ்ஸா தான் என்னை நானே பாக்கிறேன்”.

“உங்களுக்கு எல்லாம் என் மனசு பட்ற கஷ்டம் புரியலைன்னுதான் எனக்கு தோணுது..”

“புரிஞ்சிருந்தா.. என்னை இன்னும் கஷ்டபடுத்தி இருக்க மாட்டீங்க..” என்று ஜெயின் டான்ஸை மனதில் வைத்து.. ஜெயயை பார்த்த படி சொன்னவள்,

“கடைசி வரை என் விஷயத்திலும் சரி, இவரோட விஷயத்திலும் சரி.. அவ்வளவு போராடியும், என்னால எதுவும் செய்ய முடியாம தோத்து போய் தான் நிக்கிறேன்..”

“ம்ப்ச்.. உங்களை சொல்லியும் ஒண்ணுமில்லை.. இவரே டான்ஸை விட்டுட முடிவெடுக்கும் போது நான் மட்டும் தனியா போராடி என்ன செஞ்சிட முடியும்..?” என்று நிரயாசையாக சொன்னவள்..

“ஜெய் சொன்ன மாதிரி.. இதுக்கு மேல் இதை பத்தி எல்லாம் பேசி மட்டும் என்ன ஆகிற போது..? எல்லாம் தான் முடிஞ்சிருச்சே..?” என்று விரக்தியாக முடித்தவள்..

“இப்போ.. உங்க எல்லார்கிட்டயும் எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் வேணும், என்னை கொஞ்சநாளைக்கு தனியா விடுங்க. கண்டிப்பா கல்யாணத்துக்குள்ள நானே வந்திடுவேன், எனக்கு இங்கே.. இப்படியே இருந்தா மண்டை வெடிச்சுடும் போல இருக்கு.. புரிஞ்சிப்பீங்கன்னு நம்புறேன்..” என்று ட்ராலி பேக்கை இழுத்தவள்,

“எங்க போறான்னாவது சொல்லிட்டு போடி..?” என்று ரேணுகா பயத்துடன் கேட்க,

“ம்ம்.. “ என்று மூச்சை இழுத்து விட்டவள், “நாம புதுசா ஹோட்டல் கட்டிட்டிருக்க நம்ம கேரளா சைட்டுக்கு தான் போறேன்ம்மா.. ஆனா ப்ளீஸ் யாரும் என்னை கொஞ்ச நாளைக்கு தொந்தரவு பண்ணாதீங்க..” என்று கண்டிப்புடன் சொன்னவள்,

ஜெயயை பார்க்க, அதுவரை அவளை வெறித்து பார்த்து கொண்டிருந்தவன், அவளிடம் இருந்து பேக்கை வாங்கிக்கொண்டு முன்னாள் நடக்க, எல்லோரிடமும் தலையாட்டி விடைபெற்றவள், ஜெயின் பின்னால் சென்றாள்.

அவனுடைய காரில் பேக்கை வைத்துவிட்டு ட்ரைவிங் சீட்டில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தபடி “எங்க உன்னை விடனும்..?” என்று முன்னாள் அமர்ந்த ஹர்ஷினியிடம் கேட்க,

“ஏர்போர்ட்..” என்று அமைதியாக சொன்னவள், கண்மூடி அமர்ந்து விட, ஜெயும் எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டியவன், ஏர்போர்ட் வந்துவிட, காரை நிறுத்தவும், காரில் இருந்து இறங்கிய ஹர்ஷினி,

ஜெய் இறங்கி சென்று எடுத்து கொடுத்த பேக்கை வாங்கி பக்கத்தில் வைத்து விட்டு, அவனை நெருங்கியவள், “ஒரு முழு நிமிடம் அவனை இறுக்கமாக கட்டி பிடித்தவள்”,

பதிலுக்கு அவன் தன்னை கட்டிபிடிக்காமல் இருப்பதை உணர்ந்தாலும், எதுவும் பேசாமல் விலகியவள், “வரேன்..” என்பது போல் தலையாட்டிவிட்டு, அவன் இறுக்கமாக நிற்பதை உணர்ந்தும் கிளம்பிவிட்டாள்.

...................................................................


வணக்கம் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை மறக்காம ரெண்டு வரியில் சொல்லுங்கப்பா.. ஹர்ஷினியோட உணர்வை உங்களால புரிஞ்சுக்க முடியும்ன்னு நினைக்கிறேன்.. THANK YOU SO MUCH FOR YOUR SUPPORT FRIENDS..
Nice episode...Harshi avolda point of view la ellathayum sollita...jai harshi mela sema kovathula irupan polayae...chandran yarukum theriyama ivalavu periya velai pathirukaru...enna panrathu avaruku harshi life mattum mukiama therinjiruku...ithuku avar acharya kitta pesi samathana paduthirukalam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top