என்னுள் சங்கீதமாய் நீ 30

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 30



“ஆச்சார்யாவின் முகத்தில் தெரிந்த வேதனை.. ஹர்ஷினிக்கு ஒன்றும் சந்தோஷத்தை கொடுத்து விடவில்லை.. மாறாக வேதனையை தான் கொடுத்தது”.. என்றாலும் அவர் “ஜெய்க்கு செய்ய நினைப்பது மிக பெரிய அநியாயமாயிற்றே..”

அவளுக்கு இருவருமே மிகவும் முக்கியமானவர்கள் தான் ஆனாலும்.. “ஜெய் அவளின் உயிர் அல்லவா..?” அவனுக்கு அவர் செய்ய நினைப்பது எக்காலத்திலும் அவளால் ஏற்று கொள்ளவே முடியாத ஓன்று,

ஒரு பேத்தியாக அவருக்கு நான் என் கனவை, லட்சியத்தை விட்டு கொடுத்தேன்.. ஆனால் ஜெய் ஏன் அவருக்காக விட்டு கொடுக்க வேண்டும்..? அதைவிட “இவர் அதற்காக பயன்படுத்துவது தங்களின் காதல் என்பதை விட.. தன் மேல் ஜெய் வைத்திருக்கும் காதலை அல்லவா..?”

அதை எப்படி தன்னால் பார்த்து கொண்டிருக்க முடியும்,..? என்று நினைத்தபடியே ஆச்சார்யாவை பார்த்து கொண்டிருந்தவளை, ஜெய் மிகவும் கோவத்தோடு மட்டுமல்லாமல், அதிருப்தியாகவும் பார்த்தான்,

அதை உணராத ஹர்ஷினி “மஹாதேவன் கேட்டதுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்..?” என்று ஆச்சார்யாவை தான் சவாலாக பார்த்து கொண்டிருந்தாள்..

இதில் மிகவும் அதிர்ந்தது விஜயா தான்.. “என்ன ஜெயயை டான்ஸை விட சொல்றாங்களா..? முதல்ல என் மகனை டான்ஸை விட சொல்ல இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு..? இவங்க பொண்ணை காதலிச்சிட்டா இவங்க என்ன வேணா கண்டிஷன் போடுவாங்களா..?” என்று கொதித்தவர், அதை வெளியே கொட்டவும் செய்தார்..

“என் மகன் அதுக்காக இத்தனை வருஷம் எவ்வளவு கஷ்டப்பட்டு இப்போதான் அதுக்குடைய பலனை அனுபவிக்கிறான்.. இப்போ போய் அவனை டான்ஸை விட சொல்லி நீங்க எப்படி சொல்ல முடியும்..?” என்று ஆத்திரமாக கேட்க, ஆச்சார்யாவின் முகம் வேதனையில் மிகவும் கசங்கியது..

அதை பார்த்த குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் வருத்தமே.. அவரிடம் இதுபோல் பேசும் மஹாதேவனையும், விஜயாவையும் பார்த்த வீட்டினருக்கு அவர்கள் மேல் மெலிதான கோவம் வந்தாலும்,

“அவர்களின் பக்கம் இருக்கும் நியாமான காரணத்தாலே” அமைதியாக இருந்தனர், அதோடு ஆச்சார்யாவிற்குமே இந்த சூழ்நிலையில் தாங்கள் பேசுவது பிடிக்காதது மட்டுமல்ல, “இதில் சம்பந்தப்பட்டது அவர்களின் செல்ல மகள் ஹர்ஷினியின் வாழ்கையாற்றே..”

“எப்படியும் ஜெய் தான் அவர்களின் மாப்பிள்ளை..” என்பது உறுதியாக தெரிந்த விஷயம்.. இதில் அவரின் பெற்றோர்களை எதிர்த்து பேசுவதோ, சண்டை போடுவதோ பிற்காலத்தில் ஹர்ஷினியின் வாழ்க்கையை தானே பாதிக்கும்...

“எல்லாவற்றையும் விட.. இதே போல் ஒரு சந்தர்ப்பத்தில் தானே சந்திரனின் நிதானமில்லா முன் கோவத்தால் சுபத்ராவிற்கு அமைய இருந்த வாழ்க்கை கைநழுவியதோடு இதுவரை அவர் தனியாகவே நின்றுவிட வைத்தது”,

“இன்றும் அதேபோல் ஒரு சூழ்நிலை தான்.. ஆனால் விதி ஏற்கனவே இவர்களுக்கு மிகப்பெரிய அனுபவப்பாடம் கற்று தந்து இருந்ததால், அனைவரும் பொறுமையாகவே இருந்தனர் ஆச்சார்யா உட்பட..”

“ம்மா.. எதுவும் தெரியாமல் எதுக்கு இப்படி பேசறீங்க..? அவர் என்கிட்ட இதுவரை அப்படி ஒரு வார்த்தையை சொல்லவே இல்லை..” என்று ஜெய் ஆச்சார்யாவின் வேதனையை உணர்ந்து கொஞ்சம் கோவமாக “உண்மையைத்தான் சொன்னான்”,

“அப்போ நீ ஏன் டான்ஸை விடப்போற..?” என்று மஹாதேவன் கூர்மையாக கேட்க,

“அது அது.. எனக்கு அதுல சாதிச்சது போதும்ன்னு தோணிச்சி.. அதான்..” என்று சொன்னவனின் பேச்சை நம்பாமல் தலையாட்டிய மஹாதேவன்,

“ஜெய்.. இவங்களுக்காக உன்னை பெத்தவங்ககிட்டேயே நீ பொய் சொல்வன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல..” என்று ஆற்றாமையாக சொன்னார்,

ஆச்சார்யாவிற்காக சப்போர்ட் செய்யும் ஜெயயை, கோவமாக பார்த்த ஹர்ஷினியை, தானும் முறைப்பாக பார்த்த ஜெய் கண்களில் தெரிந்த “அதிருப்தியில்” துணுக்குற்ற ஹர்ஷினி அவனை கேள்வியாக பார்க்க, அவனோ முகத்தை திருப்பி கொண்டான்.

“சார்.. ஏதா இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா பேசலாம்..” என்று மேனகாவின் கணவர் தான் ஆச்சார்யாவின் மேல் பெருமதிப்பு கொண்டவரலால் அவரின் நிலையை சகிக்க முடியாமல், மஹாதேவனிடம் பொறுமையாக சொல்ல,

“சார்.. நீங்க எங்க நிலைமையிருந்தால் நீங்களும் இப்படி தான் பேசுவீங்க..” என்று மஹாதேவன் சொல்ல,

“இருக்கலாம்.. நான் அதை மறுக்கல.. ஆனா நமக்கு எதிர்ல உள்ள மனுஷனை பத்தியும் நாம கொஞ்சம் யோசிக்கணும் இல்லையா..?” என்று சொல்ல,

“என்ன யோசிக்கணும்ன்னு சொல்றீங்க.. அவர் முதல்ல எங்களை பத்தி யோசிச்சாரா..?”

“இவங்களோட காதல் விஷயம் இவருக்கு தெரிஞ்சப்போ.. அவனோட பெத்தவங்க நாங்க.. இவர் எங்ககிட்ட ஒருவார்த்தை உங்க மகன் இப்படின்னாவது சொன்னாரா..?”

அதுகூட பரவாயில்லை.. “இப்போ அவர் பேத்தியை என் மகன் காதலிக்கிற ஒரே காரணத்துக்காக என் பையன் கஷ்டப்பட்டு வாங்குன அங்கீகாரத்தை விட சொல்றாரே..? இதெல்லம் ஒரு பெரிய மனுஷன் செய்யற வேலையா..?” என்று ஆத்திரத்தில் கேட்டுவிட,

சார்.. அப்பா.. என்று மொத்த குரலும் கோவமாக ஒரே நேரத்தில் எதிரொலித்தது, ஹர்ஷினியும் அவரது எதிர்பாரா கேள்வியில் எல்லையில்லா வேதனையை அடைந்தாள்.

“சார்.. இதுவரைக்கும் உங்க பக்கம் இருந்த நியாயம் இருந்ததாலதான் நீங்க எங்க அப்பாவை பத்தி பேசினத்துக்கு எல்லாம் நாங்க இதுவரை அமைதியா இருந்தோம்.. ஆனா இப்போ நீங்க பேசினது ரொம்ப பெரிய தப்பு..” என்று கோவமாக இந்திரன் சொல்ல,

“அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன் நான்..?” என்று மஹாதேவன் கோவமாக கேட்க,

“ஆமா.. நீங்க தப்பாதான் பேசுனீங்க” என்ற ஜெயின் குரலில் அவனை அதிர்ச்சியாக பார்த்தவர்,

“ஓஹ்.. நான் பேசுனது தப்புன்னு சொல்ற அளவுக்கு பெரிய ஆயிட்டியா நீ..?” என்று அவனிடமும் மஹாதேவன் எகிற,

“உங்க மகன் ஒரு பொண்ணை லவ் பண்ணா.. நீங்க அவன்கிட்ட தான் அதை பத்தி கேட்கணுமே தவிர.. இன்னொருத்தர்கிட்ட இல்ல..” என்று நிதானமாக கோவத்தில் அடக்கபட்ட குரலில் பேசியவன்,

“அவர் பேசினத்துக்காக நான் மன்னிப்பு கேட்டுகிறேன்..” என்று ஆச்சார்யாவை பார்த்து கை குவித்து மன்னிப்பு கேட்க, அது மகாதேவனை இன்னும் தான் ஆங்காரம் கொள்ள வைத்தது.

“மத்தவங்களுக்காக நீ என்னையே தப்பு சொல்ற இல்ல..” என்று அவனிடம் சீற,

“அவங்க ஒன்னும் மத்தவங்க இல்ல.. இனி நாம எல்லாரும் ஒரே குடும்பம் தான்..” என்று உறுதியாக சொன்னவன்,

“நாம கிளம்பலாம்.. இனியும் இங்கிருந்து பிரச்சனையை பெருசா செய்ய வேண்டாம்..” என்று முடித்து விட்டவன்,

ஆச்சார்யாவின் அருகில் சென்று.. அவரின் கையை பிடித்து தரையில் முட்டிபோட்டு அமர்ந்தவன், “எங்க அப்பா பேசினது ரொம்ப பெரிய தப்பு.. எனக்காக.. உங்க பேரனுக்காக அவரை மன்னிச்சிடுங்க.. நீங்க இதை எல்லாம் நினைச்சி உங்க மனசை போட்டு ரொம்ப அலட்டிக்காதீங்க.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. என்னைக்கு இருந்தாலும் உங்க பேத்தி தான் என் பொண்டாட்டி..” என்று ஹர்ஷினி, மஹாதேவன், விஜயாவை பார்த்து உறுதியாக சொன்னவன்..

“இப்போ நாங்க கிளம்புறோம்..” என்று முடித்தவன், அவனின் குடும்பத்தை அழைத்து கொண்டு வெளியே சென்றவன், ஹர்ஷினியை தன்னோடு வரும்படி சைகை செய்துவிட்டு தங்கள் குடும்பத்தாரை காரில் ஏற்றி உட்காரவைத்தவன், ஹர்ஷினி வரவும்,

“நீ நான் லவ் பண்ற ஹர்ஷினிதானான்னே எனக்கு சந்தேகமா இருக்கு..” எடுத்தவுடன் கோவத்தோடு பொரிந்தவனை அதிர்ச்சியாக பார்த்த ஹர்ஷினியை இன்னும் வார்த்தைகளால் விளாச ஆரம்பித்தான்..

“ஒரு வயசானவரை இப்படி வருத்தப்படவைக்க உனக்கு எப்படி மனசு வருது.. அவர் இதுவரை உன்னை எப்படி பாத்துகிறார்ன்னு எல்லாரையும் விட உனக்கு நல்லாவே தெரியும்.. நீ அவரை இவ்வளவு கஷ்டபடுத்துற அப்பவும் அவர் உன்னை ஒரு ராணி மாதிரி தான் பாத்துக்கிறாரு..”

“நீ இவ்வளவு செஞ்சாலும் ஒருநாளாவது உன்மேல கோவப்பட்டிருப்பாரா,,? இல்லை உன் வீட்டில் உள்ளவங்களை தான் உன்கிட்ட கோவப்பட விட்டுருப்பாரா..? அப்படி இருந்தும் நீ ஒரு டான்ஸ்க்காக அவர்கிட்ட இப்படி நடத்துகிறது கொஞ்சம் கூட சரியில்ல..” என்று தொடர்ந்து கடுமையாக பேசி கொண்டிருந்தவனை ஆத்திரமாக இடைவெட்டிய ஹர்ஷினி,

“அப்போ அவர் உங்களுக்கு செய்ய நினைக்கிறது தப்பு இல்லைன்னு சொல்றீங்களா..? அவர் உங்ககிட்ட இருந்து உங்க உழைப்பை, அடையாளத்தை மொத்தமா பறிக்க நினைக்கிறது ரொம்ப நல்ல விஷயமோ..?” என்று கோவம்கொண்டு பேசுபவளை,

அதிர்ப்தியாக பார்த்த ஜெய்.. “அப்போ நீ என்னை லவ் பண்ணலை.. டான்ஸ் மாஸ்டர் அப்படிங்கிற என் அடையாளத்தை தான் லவ் பண்றியா..?” என்று கடுமையாக கேட்டான்.

அவனின் கேள்வியில் ஒரு நிமிடம் உறைந்து நின்ற ஹர்ஷினி, மறுநிமிடம் “என்ன பேசறீங்கன்னு யோசிச்சி தான் பேசறீங்களா..?” என்று ஆத்திரமாக வெடிக்க,

“ஏன் நான் கேட்டதில என்ன தப்பு..? நீ நடத்துகிறது அப்படித்தானே இருக்கு..”

“நீ டான்ஸ் மாஸ்டர் ஜெயயை தான் கல்யாணம் செய்ய ஆசைப்படறே.. ஆனா நீ கல்யாணம் செய்ய போறது என்னமோ சாதரண ஜெய் ஆகாஷை தான்.. ரெடியா இரு..” என்று வார்த்தைகளால் அவளை கொன்றவன், வேகமாக காரில் ஏறி கிளம்பியும் விட்டான்.

அவன் ஹர்ஷினியுடம் கோவமாக பேசுவதை ஜெயின் குடும்பம் பார்க்கத்தான் செய்தது, ஆனால் அதில் வருத்தப்பட்டது தாராணியும், அவளின் கணவர் ரமேஷும் தான்..

ஏற்கனவே ஜெயின் பேச்சால் கோவத்தில் இருந்த ஜெயின் பெற்றோர்களுக்கு அதை பெரிதாக கண்டு கொள்ள தோன்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வீட்டிற்கு வந்தவுடன் ஜெய் ரூமிற்குள் செல்ல பார்க்க,

“ஜெய்..” என்று மஹாதேவன் கோவமாக அழைக்க.. “அப்பா.. இப்போ எது பேசினாலும் பிரச்சனை பெருசாத்தான் ஆகும்.. அப்பறமா பேசலாம்..” என்று வரும் பிரச்சனையை தவிர்க்கவே பார்த்தான்.

ஆனால்.. “அவனுக்காக தானே நாங்கள் பேசியது.. அப்படி இருக்கும் போது அவனே தங்களை அவர்களிடத்தில் விட்டு கொடுத்து பேசியதோடு அவர்களுக்காக தங்களிடமே ஏத்து கொண்டும் பேசியதும்” அவர்களை வருத்தப்படவைத்ததோடு கோவமும் கொள்ள வைத்தது. அதையே ஜெயிடமே கேட்க,

“அப்பா.. நீங்க எனக்காக தான் பேசுனீங்க, அதில் எந்த தப்பும் இல்லை.. ஆனா நீங்க பேசினதுல எந்த அளவு உண்மை இருக்குன்னு தெரிஞ்சிக்காம நீங்க அப்படி பேசினது தப்பு” என்று பொறுமையாக சொல்ல,

“ஓஹ்.. அப்போ நீ டான்ஸை விட அவர் காரணமில்லைன்னு சொல்றியா..?”

“நான் எப்போ அப்படி சொன்னேன்..”

"பின்ன.. நீ பேசுனத்துக்கு அதுதானே அர்த்தம்.."

"இல்ல.. நான் சொன்னதுக்கான மீனிங் இது இல்லை.. அவர் இதுவரை என்கிட்ட ஒரு வார்த்தை கூட டான்ஸை விடுன்னு சொல்லவே இல்ல.. இதுதான் உண்மை.."

சரி நீ சொல்றபடியே பார்த்தாலும் “அவர் பேத்தியை கல்யாணம் செய்ய நீ டான்ஸை விட்டு தான் ஆகணும்ன்னு வலுகட்டாயமா தூண்டினது அவர்தானே.. இதுக்கு நீ மறுப்பே சொல்ல முடியாது ஜெய்” என்று ஆணித்தரமாக பேசியவரை.. வெறித்து பார்த்த ஜெய்,

அப்பா.. “இப்போ நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்பேன்.. நீங்க உண்மையை மட்டும்தான் சொல்லணும்” என்று சொன்னவன்,

“நம்ம தாராணிக்கு சினிமா இண்டஸ்ட்ரில இருந்து மாப்பிள்ளை வந்திருந்தா அவனுக்கு நீங்க மனசார தாராணியை கொடுத்து இருந்துப்பீங்களா..?”என்று நிதானமாக கூர்மையுடன் கேட்க,

“அது.. அது” என்று தடுமாறியபடி இழுக்கவும்,

"ஆனா.. உன்னை தான் அவங்களுக்கு நல்லா தெரியுமே, உன்னை நினைச்சி பயப்பட.. யோசனை செய்ய என்ன இருக்கு..?" என்று விஜயா கேட்க,

“ம்மா.. அந்த வீட்ல ஹர்ஷினிக்கு மட்டும் தான் என்ன நல்லா தெரியும்”,

அதுபோதாதா.. “அவதானே உன்கூட வாழப்போறா..? அவ உன்னை நம்பினா போதுமே” என்று விஜயா சொல்ல,

ம்மா.. "நீங்க தாராணியை உள்ளூருல தான் கொடுத்தீங்க, சுத்தி பாத்தா நமக்கு ஓரளவுக்கு தெரிஞ்சவங்கதான்.. அப்படி இருந்தும் நீங்க இன்னும் நல்லா விசாரிச்சிதானே பொண்ணை கொடுத்தீங்க.. அவங்களை மட்டும் பொண்ணுக்கு தெரிஞ்சா போதாதுன்னா கேட்கிறீங்க..?”

அதையெல்லம் விடு ஜெய்.. "அப்போ அவங்க இத்தனை வருஷம் நீ போராடி வாங்கின அங்கீகாரத்தை விட சொல்றது சரின்னு சொல்ல வரியா..?" என்று மஹாதேவன் கேட்க,

“அவங்க விட சொல்லல.. நான் தான் விடறேன்..”

“அப்படியொன்னும் அந்த பொண்ணுக்காக நீ விடணும்ன்னு எந்த அவசியமும் இல்லை.. அந்த பொண்ணு இல்லன்னா உனக்கு வேறபொண்ணா இல்ல” என்று வார்த்தை விட, கொதித்தெழுந்த ஜெய்,

“அவளுக்காக என் உயிரை கூட விடுவேன்.. அப்படி இருக்கும் போது அவளுக்காக இந்த சாதராண டான்ஸை விட மாட்டேனா..?”

“டான்ஸ் அப்படிங்கிறது என்னோட தொழில் தான்.. ஆனா அவதான் என்னோட வாழ்க்கையே…” என்று தீவிரமாக சொன்னவன்.. சட்டென்று வெளியே சென்றுவிடவும்,

அவன் சொல்லி சென்ற வார்த்தைகளை நம்ப முடியாமல் பார்த்த மஹாதேவன், விஜயா இருவரையும் நெருங்கிய தாரணி,

“ம்மா.. ப்பா நீங்க இன்னிக்கு பேசுனது ரொம்ப தப்பு..” அதுவும் ஹர்ஷினி அண்ணியை {என்று அழுத்தி சொன்னவள்} போய்,

“அவளை விட்டா வேற பொண்ணா இல்லைன்னு பேசுனது ரொம்ப பெரிய தப்பு” என்று சொல்லவும்,

ஓஹ்.. “அப்போ நீயும் நாங்க தான் தப்புன்னு சொல்றியா..?” என்று கோவமாக கேட்ட விஜயாவிடம்,

“ம்மா.. நான் சொல்றதை கேட்டுட்டு அப்பறம்அண்ணியை பத்தி நீங்க பேசுனது தப்பா இல்லையான்னு நீங்களே சொல்லுங்க..” என்று சொன்னவள்,

“நீங்க அண்ணன் டான்ஸ் ஆடப்போறேன்னு சொன்னப்போ சண்டை போட்டது மட்டுமில்லாம.. அண்ணனோட மாச செலவுக்கு கூட காசு தராதப்போ..

“காலேஜ் படிச்சிட்டுருந்த அண்ணி.. அவங்க ஹோட்டல்லே பார்ட் டைம் வேலை பாத்து அண்ணனுக்கு காசு அனுப்பினாங்க..” என்று ஆரம்பித்து முழுவதையும் சொன்னவள், அதுமட்டுமில்லை அண்ணாக்கும் தெரியாத இன்னொரு விஷயமும் இருக்கு..

“என் கல்யாணத்தப்போ அண்ணி தான் எல்லா வேலையும் அண்ணா செய்யறது போல் செஞ்சாங்க.. ஆனா “நீங்க அந்த வேலைக்கெல்லாம் காசு கொடுத்தீங்களா..? இல்லையில்லை.. அண்ணாதான் கொடுக்கிறாருன்னு நீங்க நினைக்க, நீங்க காசு கொடுக்கிறீங்கன்னு அண்ணா நினைக்க, கொடுத்தது யார் தெரியுமா அண்ணிதான்..”

அதுவும் "அவங்க வீட்ல அவங்க பேர்ல போட்டு வச்சிருந்த பிக்சட் டெபாசிட்டை உடைச்சி அண்ணாக்காக.. அவருடைய கௌறுவத்துக்காக செஞ்சாங்க..”

“ஏன் தெரியுமா..? அப்போ அண்ணா அவ்வளவு சம்பாதிக்கவே இல்லை.. அவர்கிட்ட அவ்வளவு காசும் இல்லை.. நீங்க அதை பத்தி கொஞ்சமும் யோசிக்கல.. ஆனா அண்ணி யோசிச்சாங்க.. அண்ணாகிட்ட இப்போ அவ்வளவு காசு இருக்குமான்னு யோசிச்சாங்க” என்று சொல்லவும் அதிர்ந்தது அவர்கள் மட்டுமல்ல.. சாவி எடுக்க மறுபடியும் வீட்டிற்கு வந்த ஜெயும் தான்..

“நீங்க அண்ணாக்காக.. அவங்க தாத்தாகிட்ட சண்டை போடுறதுக்கு முன்னாடியே.. அண்ணி சண்டை போட்டுட்டு இருக்காங்க..” என்று ஹர்ஷினி பங்க்ஷன் நடந்த அன்று சண்டை போட்டதையும் விரிவாக சொன்னவள்..

“அண்ணியோட லவ் கிடைக்க அண்ணா ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.. அவங்க வசதிக்கும், அழகுக்கும் இல்லாத மாப்பிள்ளையா..? சொல்லுங்க.. இருந்தாலும் அவங்க இத்தனை வருஷம் கல்யாணம் செஞ்சிக்கமா இருந்தது உங்க மகனுக்காக தான்..”

“அப்படிப்பட்ட அவங்களுக்காக அண்ணா டான்ஸை விடறதுல என்ன தப்பு இருக்குன்னு நீங்களே சொல்லுங்க..? அவங்களை விட உங்க மகனுக்கு நல்ல பொண்ணு வேற எங்கேயும் கிடைக்க மாட்டாம்மா..” என்று சொல்லவும், விஜயாவும்.. மகாதேவனும் முன் போல் கோவம் கொள்ள முடியாமல் யோசனையுடன் நின்றுஇருந்தனர்.

................................................................

ஹாய் பிரண்ட்ஸ்

அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை மறக்காம ரெண்டு வரியில சொல்லுங்க ப்ரண்ட்ஸ்.. அடுத்து இன்னும் ஒரு மூணு எபில முடிச்சிடும்ப்பா.. thank you பார் த சப்போர்ட் ப்ரண்ட்ஸ்
 
Last edited:

jeevaranjani

Well-Known Member
எமோஷ்னல் எப்பி....
தாத்தா வேதனைப் படுறதுக்கு என்ன காரணம்னு தெரிலையே...எதுக்கு இவ்ளோ வேதனை.தாரணி பகல்ல பக்கம் பாத்து பேசனும்மா....ஜெய் இனி பீல் பன்னுவானே....விஜயாவும் மகாதேவனும் இனா முடியாதுனு சொல்ல வாய்ப்பே இல்லையே...

மகாதேவன் ஜெய் டான்ஸ்காக முன்னாடி அவ்ளோ போராடும்போது திட்டிட்டு இப்ப டான்ஸ விட சொன்னா அவருக்கு கோவம் வேற வருதாக்கும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top