என்னுள் சங்கீதமாய் நீ 29

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 29



அண்ணா.. அண்ணா.. என்று கூப்பிட்டபடி தாரணி கதவை தட்டவும், அதுவரை ஹர்ஷினி சொல்லிய "நாம ரெண்டு பேறும் மீட் பண்ணிருக்கவே வேண்டாம்.." என்றதில் உள்ளம் கொதித்து சீரும் புலியாய் ரூமினுள் நடந்தபடியே தங்களின் கடந்த காலத்தை நினைத்து பார்த்து கொண்டிருந்த ஜெய்,

தாரணி கூப்பிடவும், முயன்று தன் உள்ள கொதிப்பை தன்னுள் மறைத்தவன், சென்று கதவை திறக்கவும், “அண்ணா.. அப்பா உங்ககிட்ட எதோ முக்கியமா பேசணுமா..? இப்போதான் அம்மா போன் பண்ணிருந்தாங்க.. உடனே உங்களை அப்பாக்கு கூப்பிட்டு பேச சொன்னாங்க..” என்று சொல்லவும்,

“ம்ம்.. நான் பேசறேன்..” என்றவன், மறுபடியும் ரூமினுள் வந்து போன் செய்தது என்னமோ ஆச்சார்யாவுக்கு தான், அவர் எடுத்ததும், “நான் நாளைக்கே எங்க வீட்ல இருந்து எல்லாரையும் அழைச்சிட்டு வரேன்.. நாளைக்கே உறுதி பண்ணிரலாம்..” என்று சொல்ல,

“இவ்வளவு அவசரமா எதுக்கு..? பொறுமையா நல்லா கிராண்டா பண்ணலாம்.. என் பேத்தியோட கல்யாண பங்க்ஷன் எல்லாத்தையும் ரொம்ப கிராண்டா செய்யணும்..” என்று மறுத்தவரை,

பேசியே சமாதானம் செய்த ஜெய், “மறுநாள் உறுதி செய்வதை நிர்ணயித்த பிறகே”, அவனுடைய வீட்டிற்கு அழைத்தான், முதலில் அம்மாவிற்கு அழைத்தவன், “அவர் எடுக்கவில்லை” என்றபின்னும் அவர் எடுக்கும் வரை விடாது தொடர்ந்து அழைக்கவும், எடுத்த விஜயா..

“எதுக்குடா இத்தனை டைம் கூப்பிடுற.. நான் தான் உன் மேல கோவத்துல இருக்கேன்னு தெரியாதா உனக்கு..?” என்று பொறியவும்,

“ம்மா.. முதல்ல நான் சொல்றதை கேளுங்க..” என்று அதட்ட,

“என்னடா என்னையே அதட்டுற..? நான் உன் அம்மாடா.. உனக்கே இவ்வளவு இருக்கும் போது எனக்கு இவ்வளவு இருக்கும்..” என்று சண்டைக்கு கிளம்ப,

“ம்மா.. ஏற்கனவே எனக்கு மூட் சரியில்ல.. நீங்களும் எதாவது பேசி என்னை இன்னும் டென்சன் பண்ணாதீங்க..”

“ஆனா.. உனக்கு இவ்வளவு ஏத்தம் இருக்க கூடாதுடா ஜெய்.. எவ்வளவு பெரிய விஷயத்தை இத்தனை வருஷமா என்கிட்ட மறைச்சதும் இல்லாமல், இப்போ என்மேல கோவம் வேற பட்றியா நீ..தப்பு செஞ்சது நீ.. நான் இல்லை.. சோ உனக்கு என்கிட்ட கோவப்பட எந்த உரிமையும் இல்லை..” என்று

“யார் கோவப்படுவது..” என்று போர்க்கொடி தூக்க, கடுப்பான ஜெய், “நான் கோவப்பட்டது தப்புதான் தாயே.. நீங்களே கோவபட்டுக்கோங்க.. வேணும்ன்னா உங்களை நேர்ல பாக்கும் போது உங்க கால்லே விழறேன் போதுமா..?” என்று பல்லை கடித்து கொண்டு பேசியவன்,

“இப்போவது நான் சொல்றதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க.. நாளை விடிய காலைக்கு உங்களுக்கும் அப்பாக்கும் பிளைட்ல டிக்கெட் போடறேன்.. ரெண்டு பேறும் சென்னை வாங்க..”

“எதுக்கு..? நாங்க எதுக்கு சென்னை வரணும்..?” என்று விஜயா வேகமாக இடையிட்டு கேட்க,

“ம்ம்மா.. அடுத்து நானே அதை தான் சொல்லப்போறேன்.. அதுக்குள்ள சென்டர்ல வந்து கேள்வி கேட்காதா.. நான் பேசி முடிக்கிறவரைக்கும் பொறுமையா இரு..” என்று அடக்கப்பட்ட குரலில் கோவமாக பேசியவன்,

“நாம நாளைக்கே அவ வீட்டுக்கு போய் கல்யாணத்தை உறுதி பண்ணிரலாம்” என்று முடிக்க, பொங்கியெழுந்த விஜயா.,

“ஏண்டா.. நான் இன்னும் உங்க கல்யாணத்துக்கு ஓகேவே சொல்லல.. அதுக்குள்ள உறுதி பண்றதை பத்தி பேசுற.. அட்லீஸ்ட் அதாவது எங்ககிட்ட கேட்டியா..? அதுவும் இல்லை.. எல்லாத்தையும் நீயே முடிவு எடுத்துட்டு எங்களுக்கு ஜஸ்ட் இன்பார்ம் மட்டும் பண்ற..” என்று ஆற்றாமையில் வெடித்தவர், அழுகவும்,

“ம்மா.. நீ என்னை அடிக்க கூட செஞ்சிடு.. ஆனா தயவு செஞ்சு அழுக மட்டும் செய்யாதா..?”

“ஏன் இந்த வீட்ல எனக்கு அழுகை கூட உரிமை இல்லையா..?” என்று அழுதுகொண்டே சண்டையிட்டவரிடம், பலவாறாக பேசி சமாதானம் செய்ய முயற்சித்தவன், பலிக்காமல் போக,

“ம்மா.. அப்போ நீ இத்தனை வருஷமா எனக்கு கல்யாணம் செய்யணும்ன்னு பொண்ணு பாத்தது எல்லாம் சும்மாவா..?”

“என்னடா சொல்ற..? நான் சும்மா பொண்ணு பாத்தேனா..? சொல்லுவடா சொல்லுவ.. இதையும் சொல்லுவ.. இதுக்கும் மேலயும் சொல்லுவா.. உனக்கு தான் இப்போ அம்மான்னு கிள்ளு கீரையா போய்ட்டேனே..” என்று மூக்கை உறிஞ்சிக்கொண்டே சண்டையிட்டவரிடம்,

“பின்ன என்னம்மா..? நானே கல்யாணத்துக்கு ஓகே சொல்லி, பொண்ணும் பாத்துவச்சிருக்கேன் சொல்றேன்.. நீ சந்தோஷமா வந்து கல்யாணம் செஞ்சி வைக்காம.. ஓஓஓன்னு அழுதுட்டு இருக்க..” என்று சீண்டியவன்,

“நாளைக்கு எத்தனை மணிக்கு பிளைட், டிக்கெட் எல்லாம் தாரணிகிட்ட விசாரிச்சிக்கோ..” என்று முடிக்க பார்க்க,

“நான் இன்னும் ஓகே சொல்லல” என்று முறுக்கியவரிடம்,

“நான் கண்டிப்பா அவளை தவிர வேற யாரையும் கல்யாணம் செஞ்சுக்க போறதில்லை, அவளை விட்டா வேற யாரும் வந்து உன் வீட்ல மருமகளா விளக்கேத்த போறதில்ல, சோ உனக்கு உன் ஒத்தை பையனுக்கு கல்யாணம் பண்ணும்ங்கிற ஆசை இருந்தா வாம்மா.. இதுக்குமேல நான் என்ன சொல்ல..?” என்று பாவம் போல் பேசியவன் வைக்கவும், “அவன் பேச்சில் என்ன செய்ய..?” என்று விஜயா தான் குழம்பிப்போனார்.

அடுத்து தன் தந்தைக்கு அழைத்தவன், “அம்மாகிட்ட பேசியிருக்கேன்.. நீங்க அம்மாகிட்ட கேட்டுக்கோங்க” என்று முடித்தவனிடம்,

“என்ன கேட்கணும் அம்மாகிட்ட..?” என்று தந்தையாய் கேள்வி கேட்பவரிடம், அம்மாவிடம் சொன்னது போல் சொல்ல முடியாமல் திணறியவன்,

“நீங்க அம்மாகிட்டே பேசிக்கோங்க,”, என்றவனிடம்,

“சரி நான் பேசிக்கிறேன்.. ஆனா.. நான் உன்கிட்ட இப்போ ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசணும்” எனவும்,

“சொல்லுங்கப்பா..” என்று யோசித்தபடியே கேட்டான் ஜெய்.

“அது xxx டைரக்ட்டர் போன் பண்ணிருந்தார்.. அவரோட படத்துக்கு டான்ஸ் மாஸ்டரா போட உன்னை கேட்டதுக்கு.. நீ இனி எந்த புது படத்துக்கும் ஒதுக்கறதில்லைன்னு சொன்னியாமே..? ஏன்ன்னு கேட்டார்..?” என்று கேட்டவரின் குரலிலும் அதே கேள்வி இருப்பதை புரிந்து கொண்ட ஜெய்,

“அப்பா.. நாம இதை பத்தி நாளைக்கு நேர்லே பேசலாம்”,

“நேர்லயா..? ஏன் நீ நாளைக்கு இங்க வர போறயா..?”

“இல்லை நீங்களும்.. அம்மாவும் தான் சென்னை வரப்போறீங்க..”

“ஏன்..? நானும் அம்மாவும் ஏன் சென்னை வரணும்..?”

“அதை பத்திதான் நான் அம்மாகிட்ட பேசியிருக்கேன்.. நீங்க பேசிக்கோங்க” என்று வைக்க போனவன், “அப்பா.. அம்மா சொல்றதை கேட்டு நீங்க என்மேல கோவப்படாதீங்கப்பா.. என் சூழ்நிலை அப்படி..” என்று சொல்லிவிட்டு வைக்கவும்,

மஹாதேவன் அடுத்து விஜயாவிடம் பேசியவர், அவர் சொன்னதை கேட்டு கோவம் வந்தாலும் மகன் சொன்ன சூழ்நிலையை கருத்தில் கொண்டு, “எதுக்காக..? ஏன் இவ்வளவு அவசரம்..? என்று யோசித்தவர்., தாராணிக்கு போன் செய்து “எல்லாவற்றையும்... எல்லாவற்றையும்” கேட்டு தெரிந்து கொண்டவர் “சரியாக தப்பாக யோசித்தார்”.

“ஹர்ஷினி… நாளைக்கே உறுதி பண்ணிரலாம்ன்னு மாப்பிள்ளை முடிவா நிக்கிறார்.. அதான் தாத்தாவும் ஓகே சொல்லிட்டார்..” என்று ஹாலிற்கு வரவழைத்து இந்திரன் சொல்லவும்,

அதிர்ந்த ஹர்ஷினி.. பின் வேகமாக திரும்பி ஆச்சார்யாவை முறைப்புடன் சந்தேகமாக பார்க்க, “இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. நான் பொறுமையா கிராண்டா பண்ணலாம்ன்னு தான் சொன்னேன்.. ஆனா ஜெய் தான் கேட்கல” என்று ஆச்சார்யா சொல்லவும்,

“எனக்கு உறுதி பண்றதுல இஷ்டம் இல்லை..” என்று கோவமாக சொல்ல,

“ஏன்..? ஏன்..? உனக்கு இஷ்டம் இல்லை”, என்று ரேணுகா கேட்க,

“அம்மா.. உங்களுக்கு தெரியதுமா..? இவர் அவருக்கு எவ்வளவு பெரிய அநியாயம் செஞ்சிருக்கார் தெரியுமா..?” என்று ஆச்சார்யாவை கைகாட்டி ஆத்திரமாக வெடிக்க,

“ஹர்ஷினி எனக்கு அதெல்லாம் தெரியாது.. நீயும் அந்த தம்பியும் விரும்புறீங்கதானே.. அதுவும் வீட்ல எங்க யாருக்கும் தெரியாம வருஷ கணக்கா விரும்பிட்டு இப்போ வந்து கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்..?” என்று கத்தியவரிடம்,

“ம்மா.. அப்போ உங்களுக்கு இவர் செஞ்சது தப்பாவே தெரியலையா..? நீங்க என்னை பத்தி மட்டும்தான் யோசிக்கிறீங்க..?”

“அவரோட எத்தனை வருஷ உழைப்பு தெரியுமா..? அதுக்காக அவர் எவ்வளவு கஷ்ப்பட்டிருக்கார்.. உங்க வீட்டு பொண்ணை விரும்புறார்ன்ற ஒரே காரணத்துக்காக அவர்கிட்டே இருந்து அவரோட உழைப்பை, அங்கீகாரத்தை, அவரோட சாதனையை பறிக்க நினைக்கிறாரே..? அதை பத்தி ஏன் யாரும் பேசமாட்டேங்கிறீங்க..?” என்று வெடித்தவளிடம்,

“அவர் செஞ்சது தப்புன்னா.. நீ செஞ்சது மட்டும் என்ன..?” என்று ரேணுகா கூர்மையாக கேட்க,

“நான் என்ன செஞ்சேன்..?” என்று புரியாமல் கேட்டவளிடம்.

“இத்தனை வருஷமா உங்க காதலை எங்க யார்கிட்டேயும் சொல்லாம மறைச்சியே..? அது நீ எங்களுக்கு செஞ்சு தப்பு இல்லையா..?”

“நீ அந்த தம்பிக்காக இத்தனை வருஷமா கல்யாணம் செஞ்சுக்கமா இருந்ததுக்கு.. உன்னோட அம்மாவா நான் எத்தனை நாள் எத்தனை பேர்கிட்ட பேச்சு வாங்கிருக்கேன்.. எத்தனை நாள் அழுதிருப்பேன்..” அது தப்பு இல்லையா..?

“என்னைவிடு இதோ.. இவ உன் தங்கச்சி,, இவளுக்கு முடிவான கல்யாணம் உன்னால இத்தனை நாளா தடைப்பட்டிருக்கே.. அது தப்பு இல்லையா..? அதுக்கு என்ன சொல்ல போற..? என்று ஹாசினியை முன்னால் இழுத்து விட்டு கேட்கவும்,

“ம்மா.. நான்.. நான்..”

இன்னும் நான் முடிக்கல ஹர்ஷினி..

“மருமகளே வேண்டாம் போதும்..” என்று பேத்தியின் தவிப்பில் தாங்க முடியாமல் ஆச்சார்யா சொல்ல,

“இல்ல மாமா.. நான் இன்னிக்கு இவளை கேட்டே ஆகணும்”,

“அந்த தம்பிக்காக எங்க இத்தனை பேரை, உன் சொந்த குடும்பத்தை இத்தனை நாள் கஷ்டப்படுத்தி இருக்க.. இதை பத்தி எல்லாம் இதுவரை யாராவது உன்கிட்ட கேட்டாங்களா..? இல்லையில்லை.. அப்போ அவர்கிட்டேயும் நாங்க யாரும் எதுவும் கேட்கமாட்டோம்”, என்று ஆவேசமாக சொன்னவர்,

“நாளைக்கு கண்டிப்பா உறுதி பண்றோம்.. இப்போ போ உன் ரூமுக்கு” என்று ஒரு அம்மாவாக கட்டளையிட்டவரை,

“ம்மா.. நான் சொல்றதை..”

“இன்னும் என்ன சொல்லணும் உனக்கு.. இத்தனை வருஷமும் அந்த தம்பிக்காக தானே எங்களை கஷ்டப்படுத்தின.. இப்போவும் அந்த தம்பியை பத்தி மட்டும் தான் யோசிக்கிற..?”

“எப்போ ஹர்ஷினி எங்களுக்காக.. எங்களை பத்தியும் யோசிப்ப..?” என்று ஆற்றாமையில் ரேணுகா கேட்க, வேதனையில் ஒரு நிமிடம் கண்மூடி திறந்த ஹர்ஷினி,

“நான் உங்களுக்கு செஞ்சது எல்லாமே தப்புதான்.. உங்க யார் பாசத்துக்கும் நான் நியாயம் செய்யல.. நான் இதை பங்க்ஷன் நடந்த இடத்திலேயும் சொல்லிட்டேன், இப்போவும் சொல்றேன்.. எப்போவும் சொல்றேன்..”என்று குற்ற உணர்ச்சியுடன் சொன்னவள்,

“ஆனால்.. அதே சமயம்.. இவர் செய்யறதும் ரொம்ப பெரிய தப்பு.. அநியாயம்.. அதை செய்ய நான் விடமாட்டேன்..” என்று தீவிரமாக ஆச்சார்யாவை பார்த்தபடி உறுதியாக சொன்னாள்

ஜெய் ஏற்பாடு செய்தது போல் மறுநாள் விடியகாலை பிளைட்டில் சென்னை வந்த மஹாதேவன் தம்பதியினரை, ஜெய், தாரணி குடும்பத்தோடு சென்று ஏர்போர்ட்டில் பிக்கப் செய்தவர்கள்,

“முதல்ல டிபனை முடிச்சிடுவோம்..” என்று பக்கத்தில் உள்ள ஹோட்டல் சென்று டிபனை முடிக்கவும், அடுத்து என்ன..? என்பது போல் எல்லோரும் ஜெயயை பார்க்க, அவனோ..

“ம்மா.. என்ன அமைதியா இருக்க.. அடுத்து என்ன சொல்லு..? என்று கேட்க,

“நீ இன்னும் என் கால்லே விழல..” என்று சீரியஸாகவே சொல்ல,

“ம்மா.. விளையாட இதுவா நேரம்…” என்று பல்லை கடித்தவனிடம்,

“டேய் நான் எங்க விளையாடுறேன்.. நீ தானே நேத்து போன்ல பேசும்போது சொன்ன என் கால்ல விழறேன்னு.. அதைத்தான் கேட்டேன்..” என்று சமயம் பார்த்து மடக்கியவரிடம்,

“ம்ம்மா.. அது சும்மா..”

“என்னது சும்மா சொன்னியா.. அப்போ நாங்க மறுபடியும் ஊருக்கே போறோம்..” என்று எழுந்தவரின், கையை பிடித்து உட்காரவைத்த ஜெய்,

“நான் வீட்டுக்கு போனதும் கண்டிப்பா உன் கால்ல விழறேன்,”

“ஏன் இங்க விழுந்தா என்ன..?”

“ம்ம்மா.. அவங்க எல்லாம் வெய்ட் செய்வாங்க.. டைம் ஆகுது... என்று பல்லை கடித்தவனை,

“சரி பொழைச்சி போ.. நாம நேரா அவங்க வீட்டுக்கே போயிரலாம்.. என்னங்க சொல்றீங்க..? என்று கணவரிடம் கேட்க, “சரி.. போயிரலாம்” என்று அவர் இறுகிய முகத்துடன் சொல்வதை கவனிக்க தவறிய ஜெய், ஆச்சார்யாவிற்கு போன் செய்து சொல்லிவிட்டு, காரை நேராகவே சுபத்ராவின் டான்ஸ் அகாடெமிக்கு பின்னால் உள்ள வீட்டிற்கு விட்டான்,

வாசலிலே காத்திருந்த ஆச்சார்யா, இந்திரன், சந்திரன் மூவரும், இவர்கள் இறங்கவும், மிகுந்த மரியாதையுடன் உள்ளே அழைத்து சென்று, அமரவைத்தனர்.

மாலதி, ரேணுகா இருவரும் காபி, ஸ்னாக்ஸ் கொண்டுவரவும், எடுத்துக்கொள்ளும்படி படி சொன்ன ஆச்சார்யா, “வீட்டில் உள்ள அனைவரையும் ஜெயின் குடும்பத்திற்கு முறையாக அறிமுகப்படுத்தினார்”,

“என்னதான் ஹர்ஷினி மேல் மலையளவு கோவம் இருந்தாலும், அவளை ஜெயின் கண்கள் எதிர்பார்க்கவே செய்தது”. அது புரிந்தது என்னமோ..?

“சுபத்ரா.. ஹர்ஷினியை கூட்டிட்டு வா..” என்று ஆச்சார்யா சொல்ல, சுபத்ராவும் ரூமினுள் அமர்ந்திருந்த ஹர்ஷினியை அழைத்து கொண்டு வெளியே வந்தார்,

முதலில் தயாராகவே மாட்டேன்..? என்று சொன்னவளை, ரேணுகாவின் கோவம் தான் தயாராக வைத்தது, அதுவும் சிம்பிளான ஒரு சாரீ.. காதில் ஜிமிக்கி, கழுத்தில் இரண்டு செயின், தலையில் கொஞ்சமே மல்லிகை பூ, இவ்வளுதான் அவளின் அலங்காரமே.. அதிலே தேவதையாக வந்து நின்றவளை ஜெயின் கண்கள் தன் கோவத்தையும் மறந்து ரசிக்க தான் செய்தது,

ஆனால் ஹர்ஷினியோ அவனின் பக்கம் கூட திரும்பாமல் நின்றவள், விஜயா தன் பக்கத்தில் அமரும்படி சொல்லவும், நிர்மலமான முகத்துடன் சென்று அமர்ந்தவள்,

“நீ கூட இத்தனை நாள் என்கிட்ட சொல்லல பாத்தியா..?” என்று வருத்தத்துடன் விஜயா நேரடியாகவே கேட்டுவிட,

“ம்மா..” என்று பல்லை கடித்து கொண்டு கூப்பிட்ட மகனை, “நான் உன்கிட்ட கேட்கல, என் மருமக கிட்டத்தான் கேட்கிறேன்..” என்று அதட்டியவர்,

“சரி விடு.. என்ன சொல்லலன்னு வருத்தம் தான்.. வேறஒண்ணும் இல்ல.. இனி அதைப்பத்தி பேசி என்ன செய்ய..?” என்று பேசியவர், தாரணி அந்த பூவை கொடு, “உன் அண்ணிக்கு வைக்கலாம்” என்று சொல்ல,

“கொஞ்சம் இரு விஜயா..” என்று நிறுத்திய மஹாதேவன், “நான் இவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” என்று இறுகிய முகத்துடன் சொல்ல, அப்பொழுதுதான் அவரை நன்கு கவனித்த ஜெய் “ஏதோ சரியில்ல” என்று புரிந்து கொண்டு,

“அப்பா..” என்று பேச வர, “ஜெய் நான் உன்கிட்ட எதுவும் பேசல.. இவங்ககிட்ட தான் பேசணும்” என்று உறுதியாக சொன்னவரை,

“என்ன பேசணுமா தாராளமா பேசுங்க..” என்று ஆச்சார்யா சொல்லவும், அவரை கூர்மையாக பார்த்த மஹாதேவன்,

“என் மகனை.. என் மகனை.. இனி டான்ஸ் ஆடக்கூடாதுன்னு நீங்க சொன்னீங்களா..?” என்று

“என் மகனை டான்ஸ் ஆடக்கூடாதுன்னு சொல்ல நீங்க யார்..?” என்ற அர்த்தத்துடன் முகத்தில் அடித்தாற் போல் கேட்க, அதுவரை தலை குனிந்து அமர்ந்திருந்த ஹர்ஷினி அவரின் கேள்வியில் கண்களில் ஒளியோடு ஆச்சார்யாவை பார்த்தாள்.

“அப்பா..” என்று பேச வந்த ஜெயயை, “ஜெய் நான் பேசி முடிக்கிற வரை நீ எதுவும் பேசக்கூடாது” என்று அப்பாவாக கட்டளையாக சொன்னவர், பதிலுக்காக ஆச்சார்யாவை பார்க்க,

“என் மகன்… என்ற சொல்லில் இருந்த உரிமையில், எதுவும் பேசமுடியாமல் இருந்த அவரின் முகத்தில் தெரிந்தது எல்லாம், வேதனை, சங்கடம் தான், கோவத்தில் உள்ள மஹாதேவனை தவிர மற்ற எல்லோருமே ஆச்சார்யாவின் வேதனையை கண்டுகொண்டனர் ஹர்ஷினி உட்பட,

பதில் சொல்லுங்க சார்..? என்ற மஹாதேவன், “உங்க பொண்ணை விரும்பிட்டான்ற ஒரே காரணத்துக்காக நீங்க என் பையனுடைய உழைப்பை, அடையாளத்தை அழிச்சி அவனை கஷ்டப்படுத்துவீங்களா.?” என்று நெத்தியடியாக கேட்க,

“தான் நேற்று கேட்ட அதே கேள்வியை இப்போது மஹாதேவனும் கேட்க, இப்போ பதில் சொல்லுங்க..” என்று சவால் பார்வையை பார்த்த ஹர்ஷினியை கண்ட ஆச்சார்யா மேலும் வேதனைப்பட்டார் என்றால்.. "ஜெய் அவளை சுட்டெரிக்கும் சூரியனாய் தான் பார்த்தான்..."

..............................................................


ஹாய் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன், படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க ப்ரண்ட்ஸ்.. அண்ட் thank you சோ மச் பார் யுவர் சப்போர்ட் ப்ரண்ட்ஸ்..
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு
அவங்க அப்பா சரியா தான் கேள்வி கேட்கிறார்
தாத்தாவின் மனதில் உள்ள பிரச்சனை என்ன
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top