என்னுள் சங்கீதமாய் நீ 28 2

Advertisement

Nithi Kanna

Well-Known Member
“இவளை யாரு இவ்வளவு அழகா இருக்க சொன்னா.. இப்போ பாரு என்னாலதான் என்னையே கண்ட்ரோல் முடியல..” என்று அவளை காதலாக முறைத்தவனை,

அவனின் முறைப்பில் “என்னவென்று..” பார்வையால் கேட்டவாறே அருகில் வந்தவளை.. கையை பிடித்து இழுத்து தனக்கு மிகஅருகில் அமர செய்யும் பொழுது,

காபி எடுத்துக்கொண்டு பொன்னம்மா வர.. வேகமாக அவனை விட்டு தள்ளி அமர்ந்து கண்ணால் மிரட்டவும், “போடி..” என்று இவனும் கண்ணாலே மிரட்டினான்,

“அய்யா.. நீங்க வரச்சொன்னதா ரெண்டு பேர் வந்திருக்காங்க..” என்றபடி கையில் காய்கறி பையோடு உள்ளே வந்த கந்தன், ஹர்ஷினியை பார்த்துவிட்டு

“வணக்கம்ங்கம்மா..” , என்று சொல்லவும்,

“ம்ப்ச்.. சொல்ல மறந்துட்டேன்.. ஹர்ஷினி இது கந்தன்.. இது அவங்க ஒய்ப் பொன்னம்மா, இவங்க தான் இதை ரொம்ப வருஷமா பாத்துகிறவங்க..” என்றவன்,

“அவங்களை நான் தான் வரச்சொன்னேன்.. உள்ளே கூட்டிட்டு வாங்க கந்தன்” எனவும்.., அவர் சென்று அந்த இருவரை அழைத்து வந்தார். அவர்களுக்கும் பொன்னம்மா காபி தர அதை குடித்து முடிக்கவும்,

“சார்.. சைன் பண்ணிடலாமா..?” என்றபடி பத்திரத்தை வெளியே எடுக்கவும், “ஓகே.. கொடுங்க” என்று அவர்களிடம் இருந்து வாங்கியவன், ஹர்ஷினியிடம் கொடுத்து சைன் பண்ண சொல்ல, புரியாமல் கேள்வியாக பார்த்தவளை,

“இந்த வீட்டை உன்பேருக்கு ரெஜிஸ்டர் பண்ணப்போறோம்… அதுக்கு தான் சைன் பண்ணு..”

“இல்லை உங்க பேருக்கு.. என் பேருக்கு.. ஏன் வேண்டாம்..? என்று உறுதியாக மறுத்து திருப்பி அவனிடமே கொடுக்க பார்க்க, அதை வாங்காமல் அவளை கடுமையாக முறைத்து பார்த்தவன், அடிக்குரலில்,

“சைன் பண்ணுடி..” என்று அதட்ட,

“இல்ல வேண்டாமே..” என்று அவனின் கடுமையில் லேசாக பயந்தாலும், சொல்ல.

“முதல்ல சைன் பண்ணு.. ஏதா இருந்தாலும் அப்பறம் பேசலாம்..” என்று எச்சரித்து பென்னை கையில் திணிக்கவும், மற்றவர்கள் முன்னால், மேலும் மறுக்க முடியாமல்… “அப்பறம் பேசி என்னாகிற போகுது..?” என்று மனதுள் அவனை திட்டியவாறே சொல்லிய இடத்தில எல்லாம் கையெழுத்து போடவும்,

“ஜெயும், கந்தனுமே சாட்சி கையெழுத்து போட்டனர்”, “ஓகே சார்.. நாங்க ரெஜிஸ்டர் பண்ணிடறோம்” என்றபடி வந்தவர்கள் கிளம்பிவிட, மிகவும் கோவமாக தன்னை முறைத்தவளை, சிரித்தவாறே கையோடு கை கோர்க்கவும்..,

கோவமாக அவனின் கையை விலக்க பார்க்க, அதற்கு இடம் கொடுக்காமல் மேலும் தன் கையோடு இறுக்கி பிடித்தவன்,

“அத்தானோட பர்த்டே கிப்ட் எப்படி..?” என்று காலரை தூக்கிவிட்டவாறே கண்னடித்து பெருமையாக கேட்க,

“உங்க பர்த்டேக்கு நான் தான் உங்களுக்கு கிப்ட் தரணும்.. நீங்க இல்ல..” என்று சிடுசிடுத்தவள்.. “ஏன் என்கிட்ட இதை பத்தி நீங்க முதலே சொல்லலை..”

“சொன்னா ஒத்துக்கமாட்டான்ன்னு தெரிஞ்சு தான் சொல்லலை..” என்று கூலாக சொல்லவும்,

“நீங்க செஞ்சது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல, இது உங்க சம்பாத்தியம்..” என்று ஆத்திரமாக சொல்லவும்,

“ம்ஹூம் இது நம்ம ரெண்டு பேருடைய சம்பாத்தியம் தான்..” ஹர்ஷினி நம்பாமல் பார்க்க, “நிஜம் ஹர்ஷ், நீ இப்பவரைக்கும் மாசாமாசம் என் அக்கவுண்ட்ல போடுற காசு உன் சம்பாத்தியம் தானே.. அப்பறம் என்ன..?” என்று சொன்னவன்,

அவளை நெருங்கி தோளோடு அணைக்க பார்க்க, விலகி அதை தடுத்தவள், “எனக்கு இந்த மொத்த ப்ராப்பர்ட்டி வெல்யூ எவ்வளவு இருக்கும்ன்னு தெரியும்.. சோ என்னோட காசு இதுல கால்பங்கு தான் இருக்கும், ஆமா தானே”,

“ச்சு, அதை விடுடி..”

“ம்ஹூம்.. நீங்க மறுபடியும் உங்க பேருக்கே ரெஜிஸ்டர் பண்ணிக்கோங்க..”

“ஹர்ஷ்.. என் பேர்ல இருந்தாலும்.. உன் பேர்ல இருந்தாலும்.. ரெண்டும் ஒண்ணுதான்.., சோ இதுக்கு மேல அதை பத்தி பேசி என்னை கோவப்படுத்தாத..” என்று கடினமாக சொன்னவன்,

“நான் முக்கியமான விஷயத்தை பத்தி பேசணும்.. இப்போ போய் இது ஒரு விஷயமா நினைச்சி ஆர்கிவ் பண்ணிட்டிருக்க..” என்று கடுப்படித்த ஜெய், அவள் முகம் இன்னும் தெளிவாகாமல் இருக்கவும், அவளை தோளோடு அணைத்து பிடித்தவன்,

“ஹர்ஷ்.. அதை விட்டுட்டு வெளிய வா.. நான் நம்ம வீட்ல நம்ம கல்யாணத்தை பத்தி பேசிறலாம்ண்ணு நினைக்கிறேன்..” என்று அவனுக்கே தெரியாமல் முன்னதை விட பிரச்சனையான விஷயத்தை ஆரம்பித்தான்,

“ஏன்..? ஏன் திடீர்ன்னு.?” என்று அதிர்ச்சியாக கேட்டவளை,

“என்னடி இப்படி அதிர்ச்சியாகுற..? ஏன் நாம கல்யாணமே பண்ணிக்காம இப்படியே இருக்க முடியுமா என்ன..? இப்பவே உங்க வீட்லயும், என் வீட்லயும் தொல்லை பன்றாங்க.. அவங்களை சொல்லியும் குத்தமில்ல.. உனக்கு 24 ஆச்சு, எனக்கு 27 ஆச்சு கேட்கமாட்டாங்களா..? அதனால நாமே சொல்லிடுவோம்.. என்ன சொல்ற..?” என்று கேட்டவன்,

அவளின் முகம் எதோ போல் இருக்கவும், “ச்சு.. பயப்படாதடி, முதல்ல கொஞ்சம் கோவப்பட்டாலும் ஒத்துப்பாங்க..” என்று வீட்டை நினைத்து பயப்படுகிறாள் போல் என்று சமாதானம் சொல்லவும்,

“எங்க வீட்ல கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க..” என்று ஹர்ஷினி உறுதியாக சொன்னவள்.., அவன் கையை எடுத்துவிட்டு தள்ளி அமரவும், “ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவன்”

ஏன் ஒத்துக்க மாட்டங்க..? ஸ்டேட்டஸ் பார்ப்பங்களா..?

ம்ப்ச் அதெல்லாம் பாக்கமாட்டாங்க..

அப்புறம் என்ன காஸ்ட் பாத்தாகூட நாம ஒரே காஸ்ட் தான்.. இதை தவிர அவங்க எதிர்க்க காரணமே இல்லையே..? என்று யோசனையாக கேட்டவனிடம், எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும்,

“சொல்லு ஹர்ஷ்.. சொன்னாத்தானே எனக்கு தெரியும்..” அமைதியே பதிலாக வரவும்,

“ச்சு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்டி, என்ன காரணம்ன்னு சொன்னாத்தானே என்னால அதை தீர்க்க முடியும்..” என்று கேட்பவனிடம்

“நீ போராடி ஜெயிச்ச உன் தொழில், டான்ஸ் தான் காரணம்..” என்று சொல்ல முடியாமல்.. சொல்லவும் மாட்டாமல் அமைதியாக இருந்தவளை கண்ட ஜெய்க்கு பொறுமை போய் கொண்டிருந்தது,

“ஏய் என்னை கோவப்படுத்தாம பேசுடி.. அமைதியாவே இருந்த பிச்சிடுவேன் பாத்துக்க.. நான் எவ்வளவு முக்கியமான விஷயம் கேட்டுட்டு இருக்கேன், நீ பதில் சொல்லாம எனக்கெனன்னு இருக்க.. சொல்லுடி..?” என்று அதட்ட,

“அதை விடுங்க, நாம இதை பத்தி இன்னொரு நாள் பேசலாம்..” என்று வரும் பிரச்சனையை ஹர்ஷினி தவிர்க்க பார்க்க,

“முடியாது.. இன்னைக்கே பேசுறோம்.. பதில் சொல்லு.. ஏன் உங்க வீட்ல ஒத்துக்கமாட்டாங்க..?” என்று உறுதியாக ஜெய் நிற்க, முயன்ற வரை சமாளிக்க பார்த்த ஹர்ஷினி அவன் விடாமல் பிடிவாதமாக கேட்கவும்,

“நான் கிளம்புறேன்..” என்று எழவும், ஆத்திரமடைந்த ஜெய் அவளை பிடித்து இழுத்து பக்கத்தில் உட்காரவைத்தவன், “எனக்கு என் கேள்விக்கு பதில் சொல்லாம இங்கிருந்து நீ போகவே முடியாது..?”

“ப்ளீஸ் ஜெய்.. நாம இன்னொரு நாள் இதை பத்தி கண்டிப்பா பேசலாம்..”என்று ஹர்ஷினி நயமாக பேச, “வளைக்க முடியாத இரும்பாக நின்ற ஜெய்”, “இன்னிக்கே.. இப்பவே பேசலாம்.. சொல்லு” என்று விடாமல் கேட்க, ஏற்கனவே உள்ளுக்குள் கொதித்து கொண்டு.. வெளியே முடிந்த வரை பொறுமையாக பேசிக்கொண்டிருந்த ஹர்ஷினி அவனின் பிடிவாதத்தில்,

“சொல்லு.. சொல்லுன்னு என்ன சொல்ல..? அதெல்லம் சொல்ல முடியாது போங்க..” என்று வெடிக்க,

“ஓஹ்.. சொல்ல முடியாதோ..? அப்போ போகவும் முடியாது..”

“நானே போய்க்குவேன்..”

நீயேயும் போகமுடியாது.. கந்தன், பொன்னமாவும் அப்பவே தோட்டத்துக்கு போயாச்சு.. இனி நான் கூப்பிட்டா மட்டும் தான் வருவாங்க.. இங்க வேற யாரும் இல்லை உனக்கு ஹெல்ப் செய்ய என்று அலட்சியமாக சொல்லவும்,

“யாரோட உதவியும் எனக்கு தேவையில்ல.. நானே போய்க்குவேன்” என்றவள் விறுவிறுவென நடக்கவும், வேகமாக எட்டி அவளை பிடித்தவன், அவளை கூர்மையாக பார்த்தவாறே..

“இப்போ நீ என்ன காரணம்ன்னு சொல்லியே ஆகணும்.. இது என்மேல சத்தியம்..” என்றுவிட, அவனை அதிர்ச்சியாக வெறித்த ஹர்ஷினி, அவனின் பிடியிலிருந்து விலகி சில நிமிடம் கண்மூடி நின்றவள்,

“ஓகே நான் சொல்லிடறேன்.. ஆனா அதுக்கு முன்னாடி நீங்க எனக்கு ஒரு சத்தியம் செஞ்சி கொடுக்கணும்..” என்று சொல்ல.. புரியாமல் பார்த்தவனை,

“நீங்க எப்பவும், யாருக்காகவும் டான்ஸை விட்டு கொடுக்க மாட்டேங்கன்னு சத்தியம் பண்ணுங்க..” என்று தன் கையை நீட்டவும், “பிரச்சனையின் நுனியை எளிதாக பிடித்துவிட்ட ஜெய்க்கு”,

அப்பொழுது தான் ஒரு விஷயம்.. “நடு மண்டையில் ஆணி அடித்தது போல் நச்சென இறங்கியது..”

“ஆச்சார்யா ஹர்ஷினியை டான்ஸ் ஆடக்கூடாதென்று சத்தியம் வாங்கியது..” புரிந்தவுடன் நம்பமுடியாமல் ஹர்ஷினியை பார்த்தவனிடம்.. இதுக்கு மேல் மறைக்க எதுவும் இல்ல என்று..

“உங்க டான்ஸ்.. நீங்க இருக்க சினிபீல்ட் ரெண்டும் தான் காரணம்” என்று கண்களில் இருந்து கண்ணீர் வழிய சொன்னவளை, இப்பொழுது அதிர்ச்சியாக பார்த்தான் ஜெய்,

சில பல நிமிடங்கள் இருவரிடமும் மிகவும் கனமான அமைதி நிலவியது, அந்த அமைதியை கலைத்தது ஜெயின் குரல், “இதுல என்ன இருக்கு, அவங்களுக்கு பிடிக்கலைன்னா விட்டுடவேண்டியது தான்.. இதுக்கா இவ்வளவு யோசிச்ச..?” என்று சொன்னவாறே ஹர்ஷினியை அணைத்து கொண்டவனின் கைகளில் கண்ணீரோடு சரணடைந்த ஹர்ஷினிக்கு.,

“முதல்லே அவன் இந்த முடிவை தான் எடுப்பான் என்று தெரியத்தான் செய்தது”.

அவனை விட்டு விலகியவள்.. தன் கையை நீட்டி “சத்தியம் பண்ணுங்க” என்று மறுபடியும் கேட்க,

“ஏய் ஹர்ஷ்.. என்னடி இது..?” என்று மறுப்பவனை, விடாமல் மறுபடியும் கேட்க, “அதெல்லாம் முடியாது. எனக்கு நீ தான் முக்கியம்.. டான்ஸ்ல எனக்குன்னு ஒரு அங்கீகாரம் கிடைச்சிடுச்சு அதே போதும்.. சோ.. விட்டுட்டு நாம நம்ம கல்யாணத்தை பத்தி ரெண்டு வீட்லயும் பேசலாம்” என்றவனின்

“கண்களில் தெரிந்த ஆழ்கடலளவு துயரத்தை” புரிந்து வைத்திருந்த ஹர்ஷினி,

“ம்ஹூம்.. முடியாது எங்க தாத்தாவோட பயத்துக்காக எல்லாம் நீங்க விடணும்ன்னு எந்த அவசியமும் இல்ல.. இத்தனை வருஷம் இவ்வளவு கஷ்டப்பட்டு இப்போ போய் விடறது எல்லாம்..”

“ம்ஹூம் கண்டிப்பாவே முடியாது, சத்தியம் பண்ணுங்க” என்று கேட்டவளிடம் ஜெய், “பண்ண முடியாது.. எனக்கு நீ தான் முக்கியம்..” என்று உறுதியாக மறுத்துவிடவும், தாங்க முடியாத ஹர்ஷினி, வேகமாக வெளியே நடக்க தொடங்கவும்,

“ஏய்.. இருடி., நானே உன்னை ட்ராப் பன்றேன்” என்று கத்திய படி சாவியை எடுத்து வண்டியை எடுத்து கொண்டு வரவும், அவள் கிளை ரோடில் இருந்து ஹைவேஸில் வெறி வந்தவள் போல் வேகமாக நடந்து கொண்டிருந்தாள்,

“எது நடக்க கூடாதென்று அவள் நினைத்தாளோ..? அதுதான் நடக்க போகிறது என்பதை தாங்க முடியாத கோவம், ஆத்திரம், ஏமாற்றம், ஆங்காரம் என்று எல்லாம் கலந்த கலவையாக நடந்து கொண்டிருந்தவளின் முன் வண்டியை நிறுத்திய ஜெய்,

“ஏறு ஹர்ஷினி..” என்று கூப்பிட, முடியாது என்று தலையை அசைத்தவள், தன் கையை நீட்டவும், ஆத்திரமடைந்த ஜெய், “ஒழுங்கா வண்டியில் ஏறு..” என்று எச்சரிக்க,

நிதானித்திலே இல்லாமல் இருந்த ஹர்ஷினியோ, அவன் வண்டியை சுற்றி நடக்க பார்க்க, அவளின் கையை பிடித்த ஜெய், “ஹர்ஷினி என்னை வெறியேத்தாமா ஒழுங்கா வண்டியில ஏறிடு” என்று கடுமையாக எச்சரிக்கை, அவனின் கையை உதறிய ஹர்ஷினி அப்படியே பின்னால் நடக்க,

“ஏய் என்னடி பண்ற.. இது ஹைவேஸ், பாரு வண்டியெல்லாம் எவ்வளவு வேகமா வருது..” என்று வண்டியை போட்டுவிட்டு அவளிடம் ஓட, ஒரு லாரி வேகமாக அவளை இடிக்க வரவும், நொடியில் அவள் கையை பற்றி இழுத்தவனால் பேலன்ஸ் செய்ய முடியாமல் நடு ரோடிலே உருள..

நல்ல வேலை வேறு எந்த வண்டியும் வராமல் உயிர் தப்பினர், “அதிர்ச்சியிலே ஹர்ஷினி மயக்கமாகிவிட வேகமாக அவளை பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு மற்றவரகளின் உதவியோடு கொண்டு சென்றவன், அவளுக்கு ஒன்றும் இல்லை..” என்றபிறகே உயிர் பிழைத்தான்.

...................................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போட்டுட்டேன்.. ரொம்ப பெரிய எபி.. இந்த எபி புல்லா ஒரே எபியா படிச்சாதான் நல்லருக்கும்ன்னு கஷ்டப்பட்டு டைப் செய்துஇருக்கேன்.. அதுக்காகவாது ஒரு ரெண்டு வரி உங்க கருத்தை சொல்லிட்டு போங்க ப்ரண்ட்ஸ்.. இதோட பிளாஷ் பேக் முடிஞ்சதுப்பா.. thank you
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top