என்னுள் எப்படி வந்தாயடா...

Advertisement

Hemapreetha

New Member
images (55) (7).jpeg



அதிக வெளிச்சமும் இல்லாமல் இருளும் இல்லாமல் மெல்லிய இருள் சூழ்ந்த அந்தப் புலர்ந்தும் புலராத காலை பொழுதில் குயில்கள் குயில் பாட்டு பாடிட கிளிகள் அதற்கேற்ப அதன் ஜோடியோடு காதல் பேசிட உனக்கு நான் எதிலும் சளைத்தவள் இல்லை என்று குருவிகளும் அதன் மொழியில் காதல் பேசிட மற்ற பறவையினங்களும் அதனோடு சேர்ந்து கொள்ள மெல்லிய குளிர் காற்று உடலை வருடிச் செல்ல..... இதை எதையுமே உணராமல் நம் நாயகி நன்கு உறங்கி கொண்டு இருந்தால் அந்த வீடே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க இதற்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அவள் உறங்கிக்கொண்டிருந்தாள்....
ஏய்... சாரா எழுந்துருடி.... எவ்ளோ நேரம்தான் இப்படி தூங்கிட்டே இருப்ப.... எவ்வளவு கத்துறான் கொஞ்சமாவது ஆசைரால பாரு இப்போ நீ எழுந்துக்குரிய இல்லையா என ராதா கத்த அம்மா ஏன்மா காலங்காத்தால இப்படி ஊரையே ரெண்டாகுறமாறி கத்துற ஏண்டி சொல்ல மாட்ட ...
நேத்து என்ன சொன்ன நான்..
என்னம்மா சொன்ன..
இன்னைக்கு உன்ன பொண்ணு பாக்க வரங்கனுதானே சொன்ன மாப்பிள்ளை வீட்டுக்காரங்களே வந்துருவாங்க போலருக்கு ஆனா நீ இன்னும் பெட்லேருந்தே எழுந்துகாம இருக்க போய் சீக்கிரம் குளிச்சுட்டு புடவை கட்டிகிட்டு பொண்ண லட்சணமா இருடி...
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துரப் போறாங்க சீக்கிரம் போ....என ராதா பரபரத்து கொண்டிருக்க....
என்னம்மா வரவனை மாப்பிள்ளைனே நீ முடிவு பண்ணிட்டியா...
ஆமாடி நாங்க முடிவு பண்ணியாச்சு தான்...அம்மா அத நான் முடிவு பண்ணனும் நாங்க மாப்பிள்ளை பார்த்தாச்சு எங்களுக்கு மாப்பிள்ளை ரொம்ப புடிச்சிருக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு உன்ன புடிச்சு போச்சு அடுத்து முகூர்த்தத்தில் கல்யாணத்தை முடிச்சுடலாம்னு இருக்கோம்..... அம்மா இதல்லாம் ரொம்ப ஓவர் மாப்பிள்ளை முகத்தை நான் இதுவரைக்கும் ஒரு டைம் கூட பாக்கல அதுக்குள்ள முகுர்த்தத்தையே முடிவு பண்ணிட்டீங்க இவ்ளோ பாஸ்டா போறது நல்லதுக்குள்ள சொல்லிட்டேன்.... இதை விட ஸ்லொவ் வா போன உனக்கு அறுபதாம் கல்யாணம்தான் பண்ணனும் டி.... அம்மா நீ என்ன ரொம்ப இன்சல்ட் பண்ற...எனக்கென்ன அவ்ளோ வயசா ஆயிடுச்சி ஜஸ்ட் டுவெண்ட்டி த்ரீ தனமா ஆகுது இதுக்கே எப்படி பண்ற ஏன்டி சொல்ல மாட்ட உன் வயசுல ல நான் புள்ள குட்டியலாம் பெத்தே முடிச்சிட்டேன் நீ என்னனா கல்யாணம் பண்ணிக்கறதுக்கே இவ்ளோ ஆடுற ...
இன்னைக்கு நீ சும்மா வந்து நின்னா மட்டும் போதும் மத்த எல்லாத்தையும் நாங்க பத்துப்போம்...
அம்மா நான் இன்னும் மாப்பிள்ளை பாக்கவே இல்ல....
நீங்க பார்த்துட்டா போதுமா நான் பார்க்க வேண்டாமா எனக்கு இந்த மாப்பிள்ளை பிடிக்கலாமா....
இங்கே யாரும் உன் அபிப்பிராயத்தை கேட்கலையே....
அம்ம்ம்ம்மா ......
என்கிட்ட கத்தி ஒரு பிரயோஜனமும் இல்ல நாங்களும் எவ்ளோ நாள் தான் நீ கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவானு வைட் பண்றது அதான் நாங்களே முடிவு பண்ணிட்டோம்... இதுக்கு மேல ஏதாவது நீ கேக்கணுன உங்க அப்பா கிட்ட போய் கேட்டுக்கோ...
அடியே சீக்கிரமா போய் ரெடியாகு.....
எனக்கு நிறைய வேலை இருக்கு நான் போய் வேலைய பாக்குறான்...
மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட ராதா அவர்களை வரவேற்றார் வாங்க சம்பந்தி வந்து உட்காருங்க இரு குடும்பத்தினரும் நலம் விசாரித்துவிட்டு பின் முகூர்த்த தேதிகளை பற்றி பேசிக் கொண்டிருந்தனர் என் மருமகளை கூப்பிடுங்கள் என ராதாவிடம் சுமதி சொல்ல கையில் காபி கப்புடான் வந்து நின்றாள் சாரா யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை குனிந்தபடியே அனைவருக்கும் காபி கொடுத்துவிட்டு அமைதியாய் நின்றால் இப்படி குனிஞ்சிகிட்டே இருந்தா எப்படி கொஞ்சம் நிமிர்ந்து மாப்பிள்ளையை பாரும்மா என்ன சுமதி சொல்லு இதற்கு மேலும் குனிந்து கொண்டே இருந்தால் சரியாக வராது என்று நிமிர்ந்து மாப்பிள்ளை பார்த்தால் அங்கு மாபெரும் அதிர்ச்சி அவளுக்கு ஆம் முழுவதுமாக அதிர்ச்சியில் உறைந்து போனாள்.....
இது......... இது....... இது...........
அவன் தான் அவனே தான் என மனம் உறுதிப்படுத்திக் கொண்டது.....
இது கனவா இல்லை நிஜமா என்று நம்ப முடியவில்லை அவளால்....
என்னமா மாப்பிள்ளை பிடிச்சிருக்கா டா கண்ணா என்ன சுமதி கேட்க வெட்கத்தில் குனிந்து கொண்டு தலையை மட்டும் அசைத்தாள்....
சாராவுக்கு வெட்கம் கூட வர ஆரம்பிச்சுடுச்சு என்ன எல்லாரும் அவளை கிண்டல் செய்து கொண்டு அனைவரும் சந்தோஷத்தில் இருக்க அர்ஜுன் மட்டும் இறுக்கமான முகத்துடனே இருந்தான் நான் உங்க பொண்ணுகிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என அர்ஜுன் கூற சரிங்க மாப்பிள்ளை சாரா மாப்பிள்ளை மடிக்கு கூட்டிட்டு போ சரிமா அர்ஜுன் சாரா மாடிக்குச் சென்றனர் இருவரும் அமைதியாக இருந்தனர் முதலில் பேசியது அர்ஜுன் தான் என் பெயர் அர்ஜுன் முதல்ல நான் ஒரு விஷயத்தை உன் கிட்ட சொல்லனும் இந்த கல்யாணத்தில் எனக்கு இஷ்டமில்லை நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன் எங்க வீட்ல இருக்கவங்க யாரும் என் பேச்சைக் கேட்கவே இல்லை பிடிவாதமா இந்த கல்யாணத்தை பண்ணி ஆகணும்னு இருக்காங்க நீங்க உங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனு சொல்லுங்க அவங்க இந்த கல்யாணத்த ஸ்டாப் பண்ணிடுவாங்க....
நான் ஒரு விஷயம் கேட்கலாமா..
கேளுங்க சாரா.....



தொடரும்....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "என்னுள் எப்படி
வந்தாயடா"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ஹேமாப்ரீதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஹேமாப்ரீதா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top