என்னுள் எப்படி வந்தாயடா... பாகம் 2..

Advertisement

Hemapreetha

New Member
images (55) (9).jpeg






உங்களுக்கு ஏன் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல அர்ஜுன்.....
நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன் ஆனா அவ இப்போ உயிரோட இல்ல ஒரு ஆக்சிடெண்டில் இறந்து விட்ட என்னால அவள மறந்து இன்னொரு பொண்ணோட கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ முடியாது இந்த கல்யாணதா நிறுத்திடுங்க...
நீங்க பேசி முடிச்சிட்டீங்களா நான் கொஞ்சம் பேசலாமா
உம்....... பேசுங்க..
எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு நான் இந்த கல்யாணத்தை பண்ணனும்னு நினைக்கிறேன் கல்யாணத்துக்கு அப்புறம் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு நான் உங்களை காதலிப்பேன் ஒருநாள் என் காதல நீங்க ஏத்துப்பீங்க காலம் உங்களை மாத்துங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு..... ஒருவேளை நீங்க இந்தக் கல்யாணத்தை வேணாம்னு சொன்னாலும் எனக்கு அப்புறம் வேறு ஒரு பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி தான் வைப்பாங்க அந்த பொண்ணு ஏன் அளவுக்கு உங்களை புரிஞ்சிப்பானு என்ன நிச்சயம்.....
வாழ்நாள் முழுக்க நீங்க இப்படியே இருக்க முடியாதுலா ஒருவேளை என்னால இப்படியே இருக்க முடியும்னு நீங்க சொன்னாலும் பிராக்டிகலா அது முடியாது....
ஒரு கட்டம் வரைக்கும் தனிமை உங்களுக்கு நிம்மதி தரலாம் ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல தனிமை உங்களுக்கு கொடுமையா மாறத் தொடங்கிவிடும் உங்க வாழ்க்கையில நீங்க என்ன ஏத்துக்குற வரைக்கும் நல்ல ப்ரண்ட்டாவும் நல்ல காதலியாகவும் உங்க கூட நான் டிராவல் பண்ண தயாரா இருக்கேன்....
இதுக்கு மேல அவனால் எதுவும் பேச முடியவில்லை...
அவள் பேசிய அனைத்தும் சாரி என்றே தோன்றியது அவனுக்கு...
அவளின் இந்த தெளிவான பேச்சும் தெளிவான சிந்தனையும் அவனுக்கு பிடித்தது தான் போனது அவளின் வெளிப்படையான பேச்சும் கூட தான்...
இந்த திருமணத்திற்கு அர்ஜுன் சம்மதித்தான்...
திருமண தேதி முடிவு செய்து அதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருந்தது அர்ஜுன் ஆக இதுவரை சாராவுக்கு போன் செய்தது இல்லை ஆனால் சாரா அடிக்கடி போன் செய்து பேசுவாள் அவன் எதுவும் பேச விட்டாலும் அவன் எதையாவது பேசிக்கொண்டே இருப்பாள் முடிந்தால் நேரில் பார்க்கும் முயற்சி செய்வாள் சில நேரம் அவன் பதில் மௌனமாகவே தான் இருக்கும் எப்பவாவது தான் அவன் பேசுவான் அதுவும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்வான் ஆனால் இவள் மட்டும் பேசிக் கொண்டேதான் வருவாள் ஆரம்பத்தில் இவைகளை எல்லாம் பிடிக்கவில்லை என்றாலும் கொஞ்ச நாளில் அவளின் பேச்சுக்களும் அவனுக்கு பழகி விட்டது...
இப்படியே நாட்கள் செல்ல திருமண நாளும் வந்தது செல்வி சாரா திருமதி சாரா அர்ஜுன் ஆக மாறினால் அவள் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டினான் தன் மனைவி என்ற அங்கீகாரத்தை கொடுத்தான் பின் சில சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் நடந்தது எல்லோரும் சந்தோஷத்தில் இருந்தன ஆனால் அர்ஜுன் மட்டும் இருக்கமாகவேதான் இருந்தான் அர்ஜுன் தனிமையை மட்டுமே விரும்பினான்....
அர்ஜுன் தனிமையில் இருப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டால் சாரா எல்லா சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் முடித்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றனர் அன்று இரவு அவள் அத்தை அவளை அழகாக அலங்காரம் செய்து அர்ஜுன் ரூமுக்கு அனுப்பி வைத்தால்....
அர்ஜுன் எப்படி அவளிடம் இதைப் பற்றி பேசுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்....
என்ன அர்ஜுன் யோசிக்கிறீங்க நீங்க ஏன் இவ்வளவு டென்ஷன் இருக்கீங்க....
என்னால உனக்கு ஒரு நல்லா புருஷன நடந்துக்க முடியாது சாரா....
இட்ஸ் ஓகே அர்ஜுன்...
இதுல டென்ஷன் ஆகிற அளவுக்கு எதுவும் இல்ல அர்ஜுன் ரெண்டு உடம்பு ஒன்னும் சேர்றதுக்கு பேரு தாம்பத்தியம் இல்ல அர்ஜுன் ரெண்டு மனசு ஒன்னுக்கொன்னு புரிஞ்சு மனசலயும் உடம்பாலயும் ஒன்னு சேர்த்து பேர்தான் தாம்பத்தியம் ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்காமல் கட்டாயத்தால் இந்த தாம்பத்திய வாழ்க்கைய தொடங்கினா அந்த வாழ்க்கை அர்த்தம் இல்லாத வாழ்க்கையதன் இருக்கும் அது நிலையான வாழ்க்கையாவும் இருக்காது..... என் மனசு உங்களை முழுமையாக கணவன ஏத்துக்கிச்சு....
ஆனா உங்க மனசு என்ன உங்க மனைவியை ஏத்துக்கள....எப்போ நீங்க என்ன முழுமையாக உங்க மனைவியா ஏத்துக்குறிங்களோ அப்பதான் நம்ம தாம்பத்திய வாழ்க்கை தொடங்கும் அது வரைக்கும் முன்னாடியே நான் உங்க கிட்ட சொன்ன மாதிரி உங்களுக்கு ஒரு நல்ல பிரண்டாவும் ஒரு நல்ல காதலியாவும் இருப்பேன்.... உங்களுக்கு எல்லா விதத்திலும் நான் சப்போட்டா இருப்பேன்......
தேங்க்யூ சாரா.......
என்ன இந்த அளவுக்கு புரிஞ்சுக்கிடதுக்கு......
பொறுங்க அர்ஜுன் ஒரு கண்டிஷன் இருக்கு.....
என்ன கண்டிஷன்....
நான் உங்களை காதலிக்கிறேன் அதனால சில நேரம் நான் உங்கள ஹூக் பண்ணுவேன் கிஸ் பண்ணுவேன் ஆனால் இதையே உங்ககிட்ட எதிர்பார்க்க மாட்டேன் என்னோட தொல்லையா மட்டும் நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்.....
அவன் மௌனமாய் இருக்க அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவன் நெற்றியில் முத்தமிட்டு குட்நைட் சொல்லிவிட்டு போய் படுத்துக்கொண்டாள் மறுநாள் அவன் ஆபீஸ்க்கு கிளம்புவான் என்று அவனுக்காக பார்த்து பார்த்து சமைத்தால் அவனுக்கு தேவையான அனைத்தையும் ஒன்றுவிடாமல் செய்தால் அது அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை சில நேரம் அவளுடைய சீண்டல்கள் அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அதையும் சகித்துக் கொண்டான்...
அர்ஜுனுடைய காதலியின் நினைவு அவனுக்கு வராமல் இருக்க வேண்டும் என்று அர்ஜுனுக்காக சாரா ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கவனமாக செய்தால் செய்தால் முடிந்தவரை அவனைத் தனிமையில் இருந்து விலக்க வேண்டுமென்று நினைத்தாள்.... அதனால் மாலை நேரங்களில் அவனுடன் வெளியில் செல்ல வேண்டும் என்று நினைத்தால் அவன் ஆபிசில் இருந்து வந்தவுடன் அர்ஜுன் எனக்கு வீட்டிலேயே இருக்கிறது போரடிக்குது எங்கேயாவது என்ன வெளிய கூட்டிட்டு போங்க என கேட்டால் சரியான அவனும் சம்மதித்தான் பைக்கில் இருவரும் கிளம்பினர் அவன் பைக் ஒட்டிக்கொண்டு இருந்தாலும் அவன் எண்ணம் முழுவதும் அவனுடைய காதலியின் மேல்தான் இருக்கிறது என்பதை அவன் இருக்கியா முகமே காட்டியது இதை அறிந்த சாரா அவன் எண்ணத்தை திசை திருப்ப அவனை அணைத்துக் கொண்டாள் அவன் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அமைதியாகவே வந்தான் பொதுவாக சில இடங்களுக்கு போய் விட்டு வீட்டுக்கு வந்தனர் ...... அன்று இரவு உணவை முடித்துக் கொண்டு அர்ஜுன் உறங்கச் சென்று சென்றுவிட்டான்.... சாரா அவளுடைய
வேலைகளை எல்லாம் முடித்து விட்டு உறங்கச் சென்றாள் அவனுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவனை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும் என கேட்பாள் அவனும் அழைத்துக் கொண்டு போவான்....... இதுவே வழக்கமானது இப்படி நாட்கள் செல்ல
ஒரு நாள் அவன் ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்தான் அர்ஜுன் பயங்கர டென்ஷன் ஆகவே இருந்தான் சாராவுக்கு என்ன காரணம் என்று புரியவில்லை ஒருவேளை அவன் காதில் நினைத்துதான் இப்படி இருக்கிறானோ என நினைத்துக் கொண்டால் அவன் எங்கேயாவது வெளியே சென்றால் அவன் மனதில் மாற்றம் ஏற்படும் என நினைத்தால் அவன் அருகில் வந்து அவன் மேல் சாய்ந்து கொண்டாள் அர்ஜுன் நம்ம எங்கேயாவது வெளியே போயிட்டு வரலாமா என்று கேட்க....
நான் எங்கயும் வரல நீ வேணா போ என்ன கொஞ்சம் தனியா விடு ...
அதெல்லாம் முடியாது நீங்களும் என்கூட வந்துதான் ஆகணும்....
நான்தான் வரலைன்னு சொல்றேன்ல என் உயிர வாங்காம இங்கிருந்து போய் தொலை.....
என் அர்ஜுன் இப்படி எல்லாம் பேசுரிங்க நான் உங்களை வெளியே தான் வர சொல்லிக் கூப்பிட்டேன் அதுக்கு என் இப்படி கத்துறீங்க நான் அப்படி என்ன பண்ண நீங்க இவ்ளோ கோவா படுற அளவுக்கு.......
நீ என்ன பண்ணல.....
சாராவிற்கு நம் அறியாமலே எதாவது தவறு செய்து விட்டோமா என் நினைக்க.... என்ன தவறு செய்தொம் என யோசிக்க இது நேரமில்லை... அர்ஜுன் கோவத்தை குறைக்க எதாவது செய்தக்க வேண்டும் என்று ...... அவனை பின்னிருந்து அணைத்துக்கொண்டு அர்ஜுன் நான் என்னை அறியாமல் எதாவது தவறு செய்து உங்களை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னிச்சிடுங்க .....
அவள் தன்னை அணைத்துக் கொண்டு நிற்பது அவனுக்கு எரிச்சலை தந்தது அவளுடைய வார்த்தைகள் எதுவும் அவன் காதில் வாங்கவில்லை....
பின்னால் இருந்து அணைத்துக் கொண்டு நின்ற சாராவை முன்னாள் இழுத்து பலர் என்று அறைந்தான்.....
அவள் கண்கள் கலங்கி விட்டது உன் எண்ணம் எப்பவுமே என் உடம்பு மேலே தான் இருக்குமா அன்னைக்கு என்னவோ வாய் கிழிய பேசுன ஆனா எப்ப பார்த்தாலும் கட்டிப்பிடிகுறதும் முத்தம் கொடுக்குறதும் ச்சா.... எனக்கே அருவருப்பா இருக்கு...... என் கண் முன்னாடி நிக்காத போய்த்தொலை......
அவள் உணர்வற்று சிலையாய் இருந்தால் அங்கிருந்து வெளியே வந்து வேறு அறையில் கதவை தாழ் இட்டுக்கொண்டால் வெடித்து கொண்டு வந்தது அழுகை அடக்க முடியாமல் அழுது தீர்த்தல்.....
நான் அவன் உடம்புக்கு ஆசைப் பட்டுத்தான் இப்படிலாம் செஞ்சதா நினைக்குறானே..... என்ன அந்த அளவுக்கு கீழ்த்தனமா நெனச்சிட்டனே என வந்த அழுகையை காட்டு படுத்த முடியவில்லை அவளால் ..... தன்னை பார்ப்பதற்கே அருவருப்பாய் இருந்தது அவளுக்கு..... தனிமையில் இருந்து அவன் மனம் காயப்படுவைதை தவிர்க்க தானே ஒவ்வொரு முறையும் இப்படி எல்லாம் நடந்து கொண்டேன் அதை அவன் கொஞ்சம் கூட புரிஞ்சிக்கலையே... என இரவு முழுவதும் அழுது தீர்த்ததில்.....
அர்ஜுன் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் இரவு சாரா வந்ததற்கான அறிகுறி என்றுமே இல்லை.... அவள் இரவு இங்கு வரவில்லை என தெரிந்தது..... அதற்கு மேல் அதை பற்றி சிந்திக்கவில்லை ஆபிஸ் கிளம்ப தயாரானான்... ஆபீஸ் கிளம்பி கீழே வந்தான் சாரா அங்கு இல்லை அவன் அம்மா தான் சமையல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான்...
அன்று முழுவதும் அறையை விட்டு வெளியே வரவில்லை சாரா...
சாராவை அவள் அத்தை வந்து அழைத்த போதும் கூட உடம்பு சரி இல்லை அதனால் ரெஸ்ட் எடுத்துக்கொள்கிறேன் நானாக வெளியே வர வரைக்கும் என்னை யாரும் தொல்லை பண்ண வேணாம் என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.....
அர்ஜுன் மாலை வீட்டிற்கு வரும்போது கூட அவள் அங்கு இல்லை அவன் அம்மா தான் இருந்தாள் அம்மா சாரா எங்கே அவ இன்னைக்கு முழுக்க வெளியாவே வரலை அர்ஜுன்... என்னனு போய் கேட்டேன் உடம்பு முடியல யாரும் தொல்லை பண்ணாவேணாம்னு சொன்னாபா....
சாரா சாப்டலாமா இல்ல அர்ஜுன் இன்னும் சாப்பிடவே இல்லை....
சரிமா நான் என் ரூமுக்கு போறேன்....
சரிப்பா....
அவனுடைய சிந்தனைகள் அனைத்தும் சாராவின் மேல்தான் இருந்தது நான் அவ்வளவு மோசமாக பேசி இருக்கக் கூடாது... அவளை ரொம்ப காயப்படுத்திட்டேன் பாவம் சாரா ......எப்போதும் அர்ஜுன் ஆபிசில் இருந்து வந்தவுடன் அவனிடம் எதையாவது பேசிக் கொண்டே இருப்பள். சாரா அவனைத் தனிமையில் விடவேமாட்டாள் இப்போது அவள் பேச்சு சத்தம் இல்லாமல் அவளின் சீண்டல்கள் இல்லாமல் அந்த அறையே வெறுமையாக இருந்தது.....
இந்த தனிமை அவனுக்குப் பிடிக்கவில்லை எப்போதும் தனிமையை விரும்பும் மனம் இன்று தனிமையை வெறுக்கிறது அவன் தனிமையைப் போக்க அவன் அறையில் இருந்த அவளுடைய பொருட்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டுருந்தான் அப்போதுதான் அவள் அலமாரியில் ஒரு டைரி இருப்பதை பார்த்தான்...



❤️❤️❤️❤️❤️டைரில் அர்ஜுனுக்கு என்ன அதிர்ச்சி காத்திருக்கிறது?? என்பதை அடுத்த பாகத்தில் காணலாம் வருகிறேன் கண்மணிகளே... ❤️❤️❤️❤️❤️❤️


தொடரும்.....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஹேமாப்ரீதா டியர்
 
Last edited:

Saroja

Well-Known Member
ஏன் இப்படி அவகிட்ட கோபம்
அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top