என்னில் நிறைந்தவளே - 26

Advertisement

laksh14

Well-Known Member
என்னில் – 26

பிரகாஷ் தனது அப்பா,அம்மா, தங்கையுடன் தேவி கூறிய விலாசத்திற்கு வந்தான் வீட்டை அடைந்ததும் தேவியின் அப்பா விஸ்வநாதன் உள்ளே அழைத்தார்

உள்ளே வந்து அமர்ந்த பிரகாசின் குடுப்பத்தை பார்த்து யார் நீங்கள் என்ன விசியமாக வந்திருக்கிங்க என அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த பூ, பழ தட்டை பார்த்தும் கேட்டார்

பிரகாசின் அப்பாவும்,அம்மாவும் என்ன இது என்பது போல் பிரகாசை பார்க்க அவனோ அங்கிள் நாங்க தேவியை பெண்கேட்டு வந்துள்ளோம்.அவள்தான் என்னை வர சொன்னா உங்களிடம் அவள் ஏதும் சொல்லவில்லையா

இதை கேட்ட விஸ்வநாதன் திகைப்புடன் வீட்டில் உள்ள அனைவரையும் பார்க்க தேவியின் தாத்தா உடனே அங்கிருந்து வெளியேறி தேவியின் பாட்டியை தொடர்பு கொண்டு விசியத்தை அறிந்து பின் ஏதும் தெரியாதது போல் வந்து அங்கே அமர்ந்துகொண்டு நடப்பதை கவனிக்கலானார்

தேவியின் அன்னை தனது மகள் நிலாவின் அருகே சென்று என்னடி இது புது கூத்தா இருக்கு அன்னைக்கு அவளோட hospital பார்த்தோமே அவன் என்ன என்றால் நீயும்,நானும் இருக்கும்போது வீடு தேடி வந்து நான் தான் தேவியை கல்யாணம் செய்து கொள்ள போகிறேன் இனி அவளை பற்றி பேச்சு உங்கள் வாயிலிருந்து வந்தால் உங்களை சும்மா விடமாட்டேன் என மிரட்டிவிட்டு போனான்

இப்பொழுது இன்னொருத்தன் குடும்பத்தையே அழைத்து வந்து அவள்தான் பெண்கேட்டு வர சொன்னதாக வந்துள்ளான் அவளெல்லாம் திருந்தவே மாட்டாள் போல உன்னை பெற்ற வயிற்றில் தானே அவளையும் பெற்றேன் அவ மட்டும் ஏன் இப்படி இருக்கிறாள்

இவனை நீ எங்கேயாவது அவளுடன் பார்த்துள்ளாயா

எனக்கு மட்டும் என்ன தெரியும் மா இவனை பார்த்ததில்லை என வீட்டுகாரர் அவளை சில பசங்களுடன் பார்த்ததாக சொன்னார் அவரைகேட்டால் தெரியலாம்

நிலா தனது கணவரிடம் கேட்க அவனோ அவ எந்த பையன் கூட சுற்றினாள் எப்பொழுது பாரு ஆண்களை கண்டாலே முறைப்பதை தானே போழப்பாக வைத்திருந்தாள் அதை சொன்னால் தான் செய்த வேலை வெளியில் தெரிந்துவிடும் என நினைத்து இவனை பார்த்த நியாபகம் இல்லை என்றான்

அம்மாவிடம் சென்ற நிலா “அவருக்கும் தெரியலையாம் மா”

அம்மா “சரி விடு நிலா இன்னும் என்ன நடக்கிறது என பார்க்கலாம் எப்படியும் இவங்களை இங்கே வர சொன்னவ வருவாள் அப்பொழுது பார்த்து கொள்ளலாம்”

இவர்கள் இவ்வாறு அவர் அவர் பேசி கொண்டிருக்க அதே நேரம் அனிதாவும்,தருணும் அங்கு வந்தனர். பாட்டி போன் செய்து வைத்தவுடன் அனிதா தருணை தொடர்பு கொண்டு விவரத்தை சொல்லி தானும் உடனே கிளம்பி வருவதாக சொன்னாள் அதன் படியே தருணும் அந்த நிமிடமே தன்னுடைய பைக்கில் கிளம்பி வந்திருந்தான்

உள்ளே வந்த அனிதாவும்,தருணும் யாரிடமும் ஏதும் பேசாமல் அங்கே உள்ள சோபாவில் தாத்தாவின் அருகில் அமர்ந்தனர்.தாத்தா எதோ பெரிதாக நடக்க இருப்பதை உணர்ந்து தருணிடம் “உனக்கு எதாவது தெரியுமா தருண்”

தருண் “எனக்கு ஒன்றும் தெரியாது தாத்தா என்னிடம் அவள் எதும் சொல்லவில்லை எனக்கே அனிதா போன் செய்த பிறகுதான் தெரியும்”

தாத்தா “கண்டிப்பாக தேவி எதோ காரணத்தோட தான் இவர்களை இங்கு வரசொல்லிருப்பா நீ ஏதும் அவளை தவறாக நினைக்கவில்லையே”

தருண் “தாத்தா நான் வானதியை தவறாக நினைத்தால் என்னை நானே சந்தேகிப்பது போல. நீங்க எதும் கவலை கொள்ளவேண்டாம் உங்கள் பேத்திக்கும் எனக்கும் தான் திருமணம் நடக்கும்” என தாத்தாவிடம் கூறிவிட்டு அனிதாவின் புறம் திரும்பினான்

பிரகாஷ் “இப்ப இவன் எதுக்கு வந்திருக்கான்” என நினைக்க

தருண் அனிதாவிடம் “அனிதா அவள் வந்ததும் நீ எதையும் கேட்காதே எனக்கு இப்பவும் சந்தேகமாக இருக்கு வானதி இவர்களை வரசொன்னது குறித்து”

அனிதா “தருண் எனக்கு உங்க அளவுக்கெல்லாம் பொறுமை இல்லை அவ மட்டும் வந்து நான்தான் வரசொன்னேன் என சொல்லட்டும் அதன் பின் நான் சும்மா இருக்க மாட்டேன்”

தருண் “ப்ளீஸ் அனிதா , வானதி இவனை குடும்பத்தோடு வர சொல்ல காரணம் இருக்கும் அதனால் எதையும் பேசாதே நானும் நீ போன் செய்தவுடன் வேகமாக வர காரணம் இவன் முலமாக என் வானதிக்கு எந்த தொந்தரவும் வர கூடாது என்றுதான்”

அனிதா “ஆனாலும் நீங்க அவளுக்கு ரொம்பத்தான் இடம் கொடுக்குறிங்க சரி நான் ஏதும் பேசவில்லை போதுமா”

இது அனைத்திற்கும் காரணமனவளோ இன்றோடு அனைத்து முடிவடைந்து தன வாழ்வில் வசந்தம் வரபோவதை எண்ணி என்றும் இல்லாமல் இன்று கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கினாள்

தனது வாழ்வில் அந்த கடவுள் தனக்கு சந்தோசத்தை தரவே இல்லை என்று அவள் கோவிலுக்கே செல்ல மாட்டாள் இன்றுதான் சென்றுள்ளாள்

தேவி அவளுடைய அப்பாவின் வீட்டை நெருங்கி காரில் இருந்து இறங்க அங்கு தருணின் பைக் நிற்பதை பார்த்து “நம்ம ஆளு என்ன இவ்வளவு வேகமாக இருக்காரு நான் கூட வர நேரமாகும் என நினைத்தேன் பரவாயில்லை சிக்கிரம் வந்துவிட்டாரு” என குதுகலமான மனநிலமையோடு முகத்தில் ஒரு இறுக்கத்தை வர வைத்து கொண்டு உள்ளே நுழைந்தாள்

தேவி உள்ளே நுழைந்ததும் பார்த்தது சினமிகுதியில் அமர்ந்திருந்த அனிதாவையும், அனைத்தையும் ஆராயும் நோக்கத்தோடு அமர்ந்திருந்த தருணையும், அவன் அருகில் என்ன நடக்கும் என அறியும் நோக்கோடு இருந்த அவளின் தாத்தாவையும் தான்

அனிதா ,தேவியின் அலங்காரத்தைகண்டு “தருண் என்னால் இதற்கு மேல் சும்மா இருக்க முடியாது எப்படி வந்திருக்கா பாருங்கா”

தருண் “அனிதா நான் சொல்லறேன் இல்ல அமைதியா இரு அப்படி ஏதேனும் நம்மை மீறி நடந்தது என்றால் ஒரு சிறு டப்பாவை அவளிடம் காட்டி இதில் தாலி உள்ளது உடனே இதை அவளின் கழுத்தில் கட்டிவிடுவேன். அதனால் நீ நடப்பதை மட்டும் கவனி” நிலைமை கைமீறி போகும் சமயத்தில் தேவியின் மீது தனக்கு முழுவுரிமை வேண்டும் அப்பொழுதான் இதை சமாளிக்க முடியும் என்ற நோக்கோடு வாங்கி வந்த தாலியை காட்டி அனிதாவை சமாளித்தான்

அனிதா “இதை எப்பொழுது வாங்கினாய் தருண்”

தருண் “நீ போன் செய்ததும் நேராக கடைக்கு சென்று வாங்கி வந்தேன்” என அந்த டப்பாவை தனது சட்டை பையில் வைத்தான்

அதன் பின்னர் அனிதாவும் அங்கு நடப்பதை கவனிக்கலானாள்

தேவி வந்ததும் யாரும் அவளை வரவேற்கவில்லை, வா என்று கூட யாரும் அழைக்கவில்லை அதை நினைத்து தேவியும் வருந்தவில்லை

(அவளுக்குதான் மொத்த அன்பையும் பொழிய அவளுடைய விஜய் இன்ருக்கானே)

தேவி வந்ததும் தனது தாத்தாவின் அருகில் சென்று அவளின் கைகளை ஆறுதலாக பற்றினாள் அதில் உங்கள் தேவி எந்த தவறான முடிவும் எடுக்கமாட்டாள் என்ற செய்தி இருந்தது அதை உணர்ந்து கொண்ட தாத்தாவும் தேவியை பார்த்து மென்னகை புரிந்தார்

தேவி வந்தும் எல்லோரும் அமைதியாக இருக்க விஸ்வநாதனே பேச்சை ஆரம்பித்தார்.அவர் தேவியை பார்த்து “தேவி நீ தான் இவர்களை பெண்கேட்டு வர சொன்னாயா”

தேவி எல்லா பிரச்சனைகளும் உங்களால் தான் நீங்கள் என்னை பாசமாக வளர்த்திருந்தால் எனக்கு ஏன் இந்த மாதிரி பிரச்சனை வர போகிறது என நினைத்து அவரை முறைத்துவிட்டு பின் “நான் யாரையும் பெண்கேட்டு வரசொல்லவில்லை”என்றாள்

நிறைவாள்...................

Hai friends next updateவுடன் வந்துவிட்டேன் படித்து எப்படி இருக்கு என சொல்லிவிட்டு போங்க friends
eeeeee nycccc epi sisss.. romba romba suspense ahh iruku seekiram nxt epi podunga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top