என்னில் நிறைந்தவளே - 25

Advertisement

என்னில் – 25

இந்த ஒரு மாதத்தில் தருண் தேவியை தனித்திருக்க விடவே இல்லை எப்பொழுதும் நிழல் போல அவளை தொடர்ந்தான் அதுவும்மிலாமல் தனது காதலை தேவியிடம் தெரிவித்த பிறகு அவளை சீண்டி வம்பிழுக்க செய்தான்

தேவி தனியாக அமர்ந்து வேலை பார்க்கும் பொது வேண்டும் என்றே அவளை நெருங்கி வம்பிழுப்பதும் சாப்பிடும் வேளைகளில் அவளின் அருகே நெருங்கி அமர்ந்து அருகில் உள்ள பொருட்களை எடுப்பதுபோல் அவளை உரசுவது என்றிருந்தான்

தேவிக்கு அவனுடைய சீண்டல்கள் பிடித்திருந்தாலும் அவன் அவ்வாறு செய்யும் சமயங்களில் அவனை முறைப்பாள் ஆனால் அவனின் செயல்களை மனதில் ரசிக்கவும் செய்தாள்

தருணுடன் இருக்கும் நேரங்களை மிகவும் விரும்ப ஆரம்பித்து இருந்தாள் தேவி அவனுடன் இருக்கும் தருணங்களில் தான்னால் எந்த வித கவலைகளும் இன்றி நிம்மதியாக இருப்பதை உணர்ந்துகொண்டாள்

தேவியின் மனநிலை இவ்வாறு இருக்க பிரகாஷ் தேவியை சந்தித்து தான் நினைத்ததை செயல்படுத்த முடியவில்லை என்று கோவம் கொண்டான் தேவியை நெருங்க விடாமல் தடுக்கும் தருணின் மீது வன்மம் கொண்டான்

இனியும் தாமதிக்காமல் தான் நினைத்ததை செயல்படுத்த வேண்டும் என எண்ணிய பிரகாஷ் தேவியை போனில் அழைத்து “தேவி நான் உன்னை விட்டு சென்றதற்காக என்மீது கோவமாக இருப்பாய் என தெரியும் ப்ளீஸ் ஒருமுறை மட்டும் நான் சொல்வதை கேளு என்னுடைய விளக்கங்களை கேட்ட பின்பு நீ எந்த முடிவு எடுத்தாலும் நான் உடன் படுகிறேன்”

தேவி “இவனின் தொல்லை தாங்க முடியவில்லை இப்பொழுது என்ன கதை சொல்ல போறனோ பேசாமல் இவனை தவிர்த்துவிட்டால் என்ன என்று நினைக்க” அவளின் அறியோ வேண்டாம் இப்பொழுது நீ இவனை தவிர்த்தலும் பின் இவன் தொல்லை செய்வன் என கூற

என்ன சொல்ல போகிறான் என்ன கேட்டு இதற்கு முதலில் ஒரு முடிவு கட்டுவோம் என்று ஒரு உணவகத்தின் பெயரை கூறிபிட்டு அங்கு வருமாறு கூறி தானும் புறப்பட்டு சென்றாள்

தேவி உணவகத்தில் காத்திருக்க சிறிது நேரத்தில் வந்த பிரகாஷ் அவன் நினைத்ததை செயல்படுத்த தொடங்கினான்

தேவி உன்னை இத்தனை வருடங்களாக பார்க்காமல் நானும் நிம்மதியாக இல்லை எப்பொழுதும் உன்னுடைய நினைவுகள்தான் மனதில் ஓடிகொண்டிருந்தது என்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாகவே என்னால் உன்னை தொடர்பு கொள்ளமுடியவில்லை

எனக்கு தெரியும் தேவி என்ன இருந்தாலும் உன்னிடம் சொல்லாமல் இத்தனை வருடங்கள் இருந்தது தவறுதான் என்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தேன் இந்த காண்ராக்ட் உன்னுடைய கம்பனிக்கு கிடைத்துள்ளது என அறிந்து உன்னை பார்க்கவே நானாகவே கேட்டு வாங்கிவந்தேன்

தேவி “இன்னும் எவ்வளவு பொய்களை சொல்கிறான் பார்ப்போம் என்று அமைதியாக கைகளை கட்டி கொண்டு அமர்ந்திருந்தாள்” அவளின் முகமோ எந்த வித சலனமும் இன்றி அமைதியாக இருந்தது

பிரகாஷ் “இப்பவும் நான் சொல்வதை நீ நம்பவில்லையா தேவி அதுவும் சரிதான் நீ எப்படி என்னை நம்புவாய் உன்னிடமாவது என்னுடைய நிலையை நான் விளக்கி சொல்லிருக்கணும் அதை செய்யாதது என்னுடைய தவறுதான் என கண்ணீர் விட்டான்”

தேவி “நீ சொல்வதை அனைத்தும் நம்பி ஏமாற என்னை பழைய தேவி என்று நினைத்தாயா இப்பொழுது இருப்பவள் வானதிதேவி V.D கன்ஸ்ட்ரக்ஷன் MD என மனதில் நினைத்து” இவனின் பேச்சு தந்த எரிச்சலை வெளியிடாது இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் இனியும் இவன் என்னை போல் எந்த பெண்ணிடமும் நடந்து கொள்ள கூடாது

பிரகாசை பார்த்து இகழ்ச்சியாய் புன்னகைத்தாள்

தேவி புன்னகை புரிவதை பார்த்து பிரகாஷ் பரவாயில்லை நம்மை நம்பிவிட்டாள் நான் கூட இவளை சமாளிக்க நிறைய பொய்களை சொல்ல வேண்டுமோ என நினைத்தேன்.

இவள் இன்னும் கொஞ்சம் கூட மாறவேயில்லை நான் சொல்வது அனைத்தும் போய் என்று தெரியாமல் அப்படியே நம்பிவிட்டாள் நான் சொல்லவது போய் என்று கண்டு பிடிக்க தெரியவில்லை எப்படித்தான் இவ்வளவு பெரிய கம்பனியை நடத்துகின்றாலோ என்று எண்ணினான்

பிரகாஷ் “உனக்கு என்மீது இருந்த கோவம் போய்விட்டதா”

தேவி “நீ இவ்வளவு தூரம் சொல்லும்போது எப்படி உன்மேல் கோவப்பட”

பிரகாஷ் “அப்பா சரி தேவி எப்பொழுது நமது திருமணத்தை வைத்து கொள்ளலாம் ஏனெனில் இனிமேலும் என்னால் உன்னைவிட்டு பிரிந்து இருக்க முடியாது”

தேவி “திருமணத்திற்கு நீயும், நானும் மட்டும் போதுமா பிரகாஷ் உன்னுடைய குடும்பம்,என்னுடைய குடும்பம் சொந்தகள் வேண்டாமா”

பிரகாஷ் “அதற்க்கு என்ன தேவி நான் என்வீட்டில் பேசி நாளையே உன்னை பெண் கேட்டு வருகிறேன்”

தேவி “நாளை வேண்டாம் பிரகாஷ்”

“ஏன், ஏன் தேவி என பதற்றம் கொள்ள”

தேவி “எதற்கு பதறுகிறாய் நான் நாளை வேண்டாம் என்றுதானே கூறினேன் என்னுடைய திருமணம் நடக்காது என்றா சொன்னேன்”என என்னுடைய திருமணம் என்ற வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து கூறினாள்

பிரகாஷ் “அவள் சொன்னதை முழுதாக கவனிக்காது வேற எப்பொழுது வர”

தேவி “வரும் சண்டே அன்று நான் சொல்லும் விலாசத்திற்கு உன்னுடைய குடும்பத்தை அழைத்து வா பிரகாஷ் அங்கே வைத்து அனைத்தையும் தீர்மானித்து கொள்ளலாம்” தீர்க்கமாக அவனின் கண்களை பார்த்து கூறி அவளுடைய தந்தையின் விலாசத்தை கொடுத்தாள்

நாட்கள் ரெக்கை கட்டி பறக்க ஞாயிறு காலை சூரியன் உதையமாகி பனிதுளிகளுக்கு விடைகொடுக்க தேவி தன்னுடைய அறையில் தன்னை அலங்கரித்து கொண்டு வெளியே வர அவளுடைய பாட்டி “தேவி திருமணத்திற்கு செல்கிறாயா”

தேவி “இல்லை பாட்டி என்னை பெண்பார்க்க வருகிறார்கள்”

பாட்டி “தருண் தம்பியும் அவருடைய குடும்பமும் வராங்களா நான் எந்த ஏற்பாடுகளுன் செய்ய வில்லையே நீயாவது முன்பே சொல்ல கூடாதா”

தேவி “இவங்களுக்கு எப்படி தெரியும் விஜய் என்னை விரும்புவது என நினைக்க மனமோ வேற யார் அனிதா சொல்லியிருப்பா அவள் தானே விஜய்க்கு எல்லாத்தையும் கொள்கிறாள் உன்னை பற்றி என நினைத்து”

பாட்டி இப்பொழுது எதற்கு இந்த பரபரப்பு விஜய் இல்லை பாட்டி பிரகாஷ் அவனுடைய குடும்பத்தோடு என்னை பெண் கேட்டு உங்களுடைய மகனின் வீட்டிற்கு வருகிறான்

பாட்டி “பிரகாசா தேவி நீ என்ன செய்கிறாய் என தெரிந்து தான் செய்றியா அவன் வருகிறான் என உன்னை அலங்கரித்து கொண்டு நிற்கிறாய்”

அவன் பெண் பார்க்க வருகிறேன் என்றான் நானும் உங்களுடைய மகனின் விலாசம் கொடுத்து அங்கே வர சொன்னேன் என்றுவிட்டு கிளம்ப பாட்டி உடனே அனிதாவை தொடர்பு கொண்டு விசியத்தை தருணிடம் கூறுமாறு சொல்லி போனை வைத்துவிட்டு பூஜை அறையை நோக்கி சென்றார்

பாட்டி அனிதாவுடன் பேசியதை வாசலில் மறைந்து நின்று கேட்ட தேவி தன்னுடைய எண்ணப்படி அனைத்தும் சரியாக சென்று கொண்டிருப்பதை உணர்ந்து எப்படியும் தருண் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவான் என்று கிளம்பி சென்றாள்

நிறைவாள்...............

படித்து எப்படி இருக்கு என சொல்லுங்க friends
Superb story line. You are keeping us guessing.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top