என்னில் நிறைந்தவளே - 23

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 23

அனிதா தேவியுடைய தந்தை அவளை பார்க்க வந்ததாக கூறி கொண்டிருக்க அப்பொழுது அறையின் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்த அங்கு வேலை செய்யும் பெண் “மேம் தேவி மேம் வந்தவுடனே சொல்ல சொன்னிங்கல்ல அவங்க வந்துவிட்டார்கள்”

அனிதா “அவங்களுடைய கேபினுக்கு போய்விட்டார்களா”

இல்லை மேம் இப்பொழுதுதான் மேம் கார் பார்க்கிங்கில் இருக்கிறதா சொன்னங்க”

அனிதா “சரி போங்க” என்று கூறிவிட்டு தருணை பார்க்க அவனோ கண்களில் கண்ணீர் துளிர்க்க முகம் முழுவதும் கோவத்தில் சிவந்திருக்க அமர்ந்திருந்தான்

அனிதா அவனுடைய தோளை தொடவும் சுயம் பெற்றவன் கண்களில் கலங்கி இருந்த நீரை துடைத்துவிட்டு அனிதாவை என்ன என்று பார்க்க

அனிதா “தேவி வந்து விட்டாளாம் தருண்”

தருண் “ம் வாங்க அனிதா நாம் முதலில் சென்று வானதியை பார்ப்போம் அவள் அவனை பார்த்ததும் என்ன மனநிலையில் இருப்பாளோ”

அனிதா மனதில் எந்த சூல்நிலையிலையும் தேவியை பற்றியே சிந்திக்கிறாரு இவர் மனம் முழுவதும் தேவியே நிறைந்து இருக்கா. இவங்க இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது என்றால் தேவி தனுடைய வாழ்க்கையில் இழந்த அன்பை முழுமையாக பெறுவாள்

இவர்கள் தேவியை சந்திக்கும் முன்பே தேவி வரவேற்பில் அமர்ந்திருந்த பிரகாசை கண்டுவிட்டாள் பார்த்தவள் முதலில் அதிர்ச்சி அடைந்து சில நிமிடங்கள் நின்றுவிட்டாள் பின் தான் இருக்கும் இடம் உணர்ந்து எதையும் வெளி காட்டிகொள்ளாமல் தன்னுடைய அறையை நோக்கி சென்றாள்

தனது இருக்கையில் அமர்ந்து ரிசப்சனுக்கு தொடர்பு கொண்டு அவன் வங்கி regional அலுவலகம் கட்டுவது தொடர்பாக வந்துள்ளான் என அறிந்து தன்னை நிலைபடுத்தி கொள்ள முயன்று அதில் வெற்றியும் கண்டாள்

அதற்குள் தேவி தன்னுடைய கேபினுக்கு சென்றுவிட்டதை அறிந்த தருணும், அனிதாவும் அவளை பார்க்க வேகமாக அவளின் அறையை அடைந்தனர்

அங்கு தேவி இயல்பாக தன்னுடைய வேலைகளை கவனித்து கொண்டுருப்பதை பார்த்த அனிதா”என்ன இவளிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை ஒருவேளை அவனை பார்க்கவில்லையோ”

தருணோ “முகத்தில் எந்த பாவத்தையும் காட்டாமல் இருக்க இவளிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும் சரியான அழுத்தகாரி. இவளுடைய வாழ்க்கையில் யாரை சந்திக்கவே கூடாது என்று நினைப்பவனை பார்த்திருக்கா ஆனா ஒண்ணுமே நடக்காத மாதிரி இருக்க பாரு என்று எண்ணினான்”

தேவி “இவர்கள் வந்ததை பார்த்தும் பார்க்காதவாரு தன்னுடைய வேலைகளை செய்துகொண்டிருக்க”

அனிதா “தேவி என அழைக்க” இப்பொழுதுதான் இவர்களை பார்ப்பது போல என்ன அனிதா என்றாள்

தருண், பாரேன் எதுவுமே தெரியாத மாதிரி என்ன அனிதாவாம் என நினைக்க

அது வந்து தேவி நீ வரும்போது ரிசப்ஷனில் பார்த்தாயா யார் வந்திருக்காங்க என்று என வினவ

தேவி “யாராவது முக்கியமானவங்க வந்திருக்காங்களா”

அனிதா “இவ தெரியாம கேட்கிறாளா இல்லை உண்மையாகவே அவன் வந்ததை இவள் பார்க்கவில்லையா. பார்க்காமல் இருக்க வாய்பே இல்லையே என குழம்பி தேவியை பார்க்க

தேவியும் அனிதாவைதான் பார்த்து கொண்டிருந்தாள்

பிரகாஷ் வந்திருக்கான் தேவி அதற்கு தான் நீ அவனை சந்தித்தாயா என்று கேட்டேன்

தேவி “அவன் வந்ததற்கு நான் என்ன செய்யணும் அனிதா அவனுடைய வேலை சம்மந்தமாக வந்திருக்கான் இதில் நான் சொல்ல என்ன இருக்கு”

அனிதா “என்ன வேலை சம்மந்தமாகவா, அப்படி என்ன வேலை இங்கு அவனுக்கு”

தேவி “xxx வங்கி அலுவலகம் கட்டுவது தொடர்பாக வங்கியின் சார்பில் வந்துள்ளான்”

அனிதா “அது உனக்கு எப்படி தெரியும்”

தேவி திரும்பி அவளை முறைக்க அமைதியாகிவிட்டாள் பின் தருணின் புறம் திரும்பிய தேவி mr.விஜய் உங்களுக்கு கொடுத்த வேலையை செய்யாமல் இங்கே என்ன செய்றிங்க

தருண் “nothing மேம் உங்களை பார்க்க பிரகாஷ் என்று ஒருத்தர் வந்திருக்காரு அதை சொல்லவே வந்தேன் என்று பிரகாசின் பெயரை அழுந்த உச்சரித்தான் அவளுடைய முகத்தில் இப்பொழுதேனும் ஏதேனும் மாறுதல் தெரிகிறதா என ஆராய”

(எங்கே நமது தேவிதான் எதையும் வெளிகாட்டவில்லையே பிறகு எங்கிருந்து அவளின் மாறுதல்களை காண்பது)

தேவி “சரி Mr.விஜய் அவரை வரசொல்லுங்க”

தேவி அவ்வாறு கூறியதும் அனிதா அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டாள். தருணும் ரிசப்ஷனனிற்கு போன் செய்து பிரகாசை அனுப்ப சொல்லிவிட்டு அங்கிருந்த சோபாவில் இவர்கள் பேசுவதை கவனிக்கும் படி அமர்ந்து கொண்டான்

தருண் அங்கிருந்த சோபாவில் அமரவும் தேவி இன்னும் தைரியம் வர பெற்றவளாய் என்ன நடந்தாலும் விஜய் தனக்கு துணை நிற்பான் என அறிந்து பிரகாசை எதிர் கொள்ள தயாரானாள்

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த பிரகாஷ் தேவியை பார்த்து “hai தேவி எப்படி இருக்க உன்னை பார்த்து நிறைய வருடங்கள் ஆகிவிட்டது. இது உன்னுடைய கம்பனியா நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது என தேவிக்கு தன்னுடைய ஏமாற்றுதனம் தெரியாது என நினைத்து பேச

தருணிற்கோ அவன் தேவியிடம் பேசுவதை கண்டு உள்ளம் கொதித்தது விட்டால் இங்கேயே அவனை அடித்துவிடுபவன் போல் அமர்ந்திருந்தான்

அனிதா மனதில் செய்வதை எல்லாம் செய்துவிட்டு எப்படித்தான் இவனால் எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல் இப்படி பேச முடிகிறதோ

தேவிக்கு தருணின் முகத்தில் தெரியும் கோவத்திலே அவனுக்கு உண்மை தெரியும் என அறிந்து அவன் பிரகாசை கொலைவெறியுடன் பார்க்கும் பார்வை கண்டு தன்னிடமும் அன்பு,பாசம்,அக்கறை காட்ட எனக்கே எனக்கு என்று ஒருவன் இருக்கிறான் என நினைத்து தன்னாலே அவளின் முகம் மலர்ந்தது

தேவியின் முகம் மலர்வதை கண்ட பிரகாஷ் தன்னை கண்டுதான் மகிழ்ச்சி கொள்கிறாள் என நினைத்து எப்படியும் இப்பொழுது இவள் இருக்கும் உயரத்திற்கு நான்,நீ என போட்டி போட்டு பெண்கேட்க வருவார்கள் எப்படியாவது பழைய படி இவளை தன் பின்னே சுற்ற வைத்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என திட்டம் தீட்டினான்

தருண் “நான் ஏதேனும் கேட்டால் அல்லது பார்த்தால் மட்டும் முகம் அப்படியே சுண்டி போய்விடும் இப்பொழுது அவனை பார்த்து முகம் எப்படி மலர்கிறது பாரு அவன் இவளுக்கு செய்தவை எல்லாம் மறந்துவிட்டால் போல அவன் இங்கிருந்து செல்லட்டும் இவளுக்கு இருக்கு இன்னைக்கு என அவளை மனதில் திட்டிகொண்டிருந்தான்”

நிறைவாள்...............

Hai friends next updateவுடன் வந்துவிட்டேன் படித்து இந்த update எப்படி இருக்கு என்று சொல்லிவிட்டு போங்க ஓகே வா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top