என்னில் நிறைந்தவளே - 2

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 2

கோயம்புத்தூரில் வசதியானவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூக்கோதை மிகவும் படபடப்புடன் காணப்பட்டார்.

அதோடு ஏன் டா இப்படி செய்து வைத்துள்ளாய் என தனது இரண்டாவது மகன் அமித்தை திட்டி கொண்டிருந்தார்.

அவரின் சத்தம் கேட்டு அந்த வீட்டில் உள்ள அனைவரும் வெளியில் வந்தனர். வந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். எதற்கு அதிர்ச்சி ஆனார்கள் என்பதை பார்க்கும் முன் அவர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

அமுதா- ராசப்பன் அவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள். ராசப்பன் மகள்களை பிரிய மனம் இல்லாமல் வீட்டோடு மாப்பிள்ளை பார்த்து மகள் வனிதாவிற்கு அரசாங்க வேலை பார்க்கும் சின்னசாமி என்பவரையும் , மகள் கோமதிக்கு ஜவுளி கடை நடத்தும் நாகராஜனையும், கடைசி மகள் மீனாவிற்கு விவசாயம் பார்க்கும் கனகராஜ் என்பவரையும், தனது மகன் வெற்றி செல்வனுக்கு பூங்கோதையையும் மனம் முடித்தார்.

அனைவரும் ஒன்றாக இருக்க ஆனந்த இல்லம் என்ற பெயரில் வீட்டை கட்டி தனது மகன் மற்றும் மகள்களுடன் வாழ்த்தார்.

வெற்றிசெல்வன்- பூக்கோதைக்கு 2 மகன்கள், பெரியவன் தருண்விஜய் (அட நம்ம நாயகன்), இரண்டாவது அமித்குமார்.

வெற்றியின் தங்கைகளுக்கு அர்ச்சனா, சுமித்ரா, வான்மதி என்று மூன்று மகள்கள். அவரின் தங்கைகளுக்கு இவர்களில் இருவரை தருண், அமித்திற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணி அதற்கான முயற்சிகளை செய்து வருபவர்கள்.

தருண் விஜய் ஆறடி உயரமும் கட்டுகோப்பான உடலும் பார்வையில் எதிரில் இருப்பவரை எடைபோடும் தன்மையும் கொண்டவன். M.B.A முடித்து விட்டு சொந்த முயற்சியில் மாநிலம் முழுவதும் உள்ள கடைகளுக்கு மருத்து விநியோகம் செய்துவருபவன். அதன் கூடவே தனது தந்தை தொழிலான மாளிகை பொருட்கள் கொள்முதல் செய்து பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதை மேம்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பும் படி உயர்த்தி அதை தனது தம்பி அமித்தின் முலம் பார்த்து கொள்கிறான். (அட வாங்க நம்ம பூங்கோதை அம்மா எதுக்கு அமித்தை திட்டி கொண்டிருந்தாங்க பார்க்கலாம்)

அனைவரும் வீட்டின் வாயலில் வந்து அதிர்ச்சி அடைய காரணம் அமித் தான் காதலித்த பெண் சரண்யாவை திருமணம் செய்துகொண்டு வந்திருந்தான்.

வனிதா “என்ன அண்ணி இது உங்க பையன் அமித் இப்படி செய்து வைத்திருக்கிறான்”

மீனா “எங்க பொண்ணுங்க தான இந்த வீட்டு மருமகளா வந்திருக்கணும், எங்க அண்ணா இருந்திருந்தா இப்படி நடக்க விட்டு இருப்பாங்களா என்று நீலி கண்ணீர் வடித்தார்”

இவர்கள் இப்படி பேசி கொண்டிருக்கும் போதே அந்த வீட்டில் வேலை செய்யும் செல்வி அம்மாள் தருணுக்கு போன் செய்து விவரத்தை தெரிவித்தார்.

தருண் விரைந்து வீட்டிற்கு வந்தான். அவனுடைய அத்தைகள் அவனை கண்டதும் பேச்சை நிறுத்தினர். அவனின்முன் பேசிவிட்டால் பணம் தேவைப்படும் படும்போது எவ்வாறு கேட்டு அவனின் முன் நிற்பது. தனது அன்னை,தம்பியை பற்றி ஏதேனும் அவன் முன் கூறிவிட்டால் அவனிடம் இருந்து ஒரு பைசாகூட வங்க முடியாது அதுவும்மின்றி அவவர்களுடைய கணவன்மார்களை நம்பி எதுவும் செய்ய இயலாது

தருண் அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு தனது அன்னையின் புறம் திரும்பி, அம்மா முதலில் உள்ள போங்க எல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம் என்றான்.

பூங்கோதை, செல்வி என்று குரல் கொடுக்க அவர் முன் வந்து ஆர்த்தி தட்டை கொடுத்தார்.

நீங்க கேப்பிங்கன்னு தெரியும் மா அதான் முதலிலே எடுத்து வைத்துவிட்டேன் என்று செல்வி சொன்னார். அதை வாங்கி ஆரத்தி எடுத்து அமித்- சரண்யாவை உள்ளே அழைத்து சென்றார்.

பூங்கோதை “ அமித் அவளை பூஜை அறைக்கு அழைத்துவா”

அவர்கள் பூஜை அறைக்கு வந்ததும் சரண்யாவை பார்த்து விளக்கு ஏற்ற சொன்னார். அது முடிந்ததும் செல்வி கொண்டு வந்த பால்,பழத்தை இருவருக்கும் கொடுத்தார்.

இவர் செய்வதை வேண்டா வெறுப்புடன் தருணுடைய அத்தைகள் பார்த்து கொண்டிருந்தனர்.

தருண் இருக்கும் போது அவர்களால் ஒன்றும் சொல்லவோ செய்யவோ முடியாதே. அவர்கள் அனுபவிக்கும் சொத்து, அவர்கள் கணவன்மார்களின் தொழில் எல்லாம் இவன் ஏற்படுத்தி கொடுத்தது. ஏதாவது எதிர்த்து பேசினால் உடனே வீட்டை விட்டு வெளியேற்ற கூட தயங்க மாட்டான்.

நிறைவாள்..........

படித்துவிட்டு எப்படி இருக்கு என்று இரண்டு வரத்தை சொல்லிவிட்டு போங்க friends. it's good or bad or need a improvement that like friends
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top