எனை எரிக்கும் ஈர நினைவுகள்! - 14 (சின்ன டீசர்)

Vishnu Priya

Well-Known Member
#1


அன்றிரவு! மீண்டும் ஒரு பௌர்ணமியை வரவேற்றுக் கொண்டிருந்தது இருள் சூழ்ந்த வானம்!

நேரமோ இரவு ஒரு மணியைத் தாண்டியிருக்க, தன் மஞ்சத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் மங்கை.

“மீண்டும் ஒரு பௌர்ணமி”!! இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாகப் பழைமையான அந்தக் கணையாழிக்கும் மீண்டும் வந்தது வேலை!!

சாளரம் தாண்டி விழுந்த சந்திரனின் ஒளிக் கற்றைகள், பேரிகையின் கண்ணாடியில் பட்டுத் தெறிப்படைந்து, அவள் அணிந்திருந்த கணையாழியை அடைய , அடுத்த விநாடி அங்கே பிறந்தது வித்தியாசமான ஒளியும், ஒலியும்!!!

அறை எங்கிலும் ஓர் மந்தகாசமான பொன் மஞ்சள் வண்ணமும், செந்நிறமும் கலந்த ஒளி பரவ, அவ்வொளியில்..

தங்கத்தாரிகை போல மிளிர்ந்தாள் மாது!

இது போதாதென்று அம்மோதிரம் வேறு, கிருஷ்ணனின் புல்லாங்குழல் நாதத்தை ஒத்த மனங்கவரும்.. கேட்பாரை ஸ்தம்பிக்க வைக்கும் ஓர் ஒலியையும் வெளியிடலாயிற்று.

யாதவனின் சுரூபினியோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாளாகையால், அந்த ஒலி தானும் எங்கேயோ கிணற்றுக்குள் இருந்து கேட்பது போலக் கேட்கவாரம்பிக்க, அவள் கண்கள் மெல்ல சுருங்கின.
***********
விரைவில்...
 
#7
அந்த மோதிரம் ரொம்பவே
அழகாக இருக்குப்பா
அதனோட சக்தியை நினைக்கும்
பொழுது ரொம்பவும் பிரமிப்பாய்
இருக்கு, விஷ்ணுபிரியா டியர்

இந்த அழகிய நாவலுக்காக
ரொம்பவும் மெனக்கெட்டு
நிறைய செய்திகள் நீங்க
சேகரிச்சிருக்கீங்க-ன்னு
தெரியுதுப்பா

இந்த அபூர்வ மோதிரத்தை
யாழினி அணிந்தால், ஒருவேளை
இவளுடைய பழைய நினைவுகள்
மீண்டு வந்திடுமோ,
விஷ்ணுபிரியா டியர்?
 

Latest profile posts

அடுத்த பதிவு போட்டு விட்டேன் நட்பூக்களே , படித்து விட்டு கருத்துச் சொல்லுங்கள் ° நன்றி
Back with a short novel makkaleee...
காதலின் கனிவான கவனத்திற்கு...!!!
Read and enjoyy
அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்

அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்

அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம் (2)

ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம் (2)

நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது
venba mam ud ilaya waiting mam....

Sponsored

Recent Updates