எங்க ஊரு கன்னியாகுமரி........

Advertisement

Joher

Well-Known Member
கன்னியாகுமரி :love::love:

காலேஜ் டூர் அங்கதான் வந்தோம்..
சன்ரைஸ் பார்க்க ஒரு ஐந்து மணிக்கே ஆஜர் ஆகிட்டோம்.
மெல்ல ஒளி பரவி வர.. அலையோசையோடு குளிர் காத்து வீச.. கம்பீரமாய் நிற்கும் திருவள்ளுவர் சிலையோடு அந்த அதிகாலை சூர்யோதத்தை காணவே இரு கண்கள் போதாது.
அவ்வளவு அழகு.. :love::love:
கொஞ்சம் நேரம் தான் இருந்தாலும் கூட்டம் அலைமோதும்.
அங்க எடுத்த குரூப் போட்டோ என்றும் நினைவில்:love::love:

:love::love::love:
இங்கேயே இந்த அராத்து........:D:D:D
IVல கேட்கணுமா????
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஓகே ஓகே........
next month சென்னையில் கிடைக்காதுனு நினைக்கிறேன்....
ஊர்ல சில நேரம் கிடைக்கும்......
அம்மா அப்பா சென்னை based .. only relatives are in kk. சோ ஊர் பக்கம் எல்லாம் அடிகடி போரதில்ல !
சென்னை விசிட் + planning to visit some other place.. mostly தஞ்சாவூர்.. temples paarkallamnu plan..
 

pons

Active Member
பள்ளி பருவத்திலேயே விவேகானந்த கேந்திர பரிசில் மிகுந்த விருப்பம் உண்டு.. என் மகள் மூன்று முறை பரிசு பெற்ற அதன் பயனாக அங்கே தங்கியிருக்கிறோம். அதிகாலை குளிர் நீர் குளியல்...சுயவேலைன்னு நல்ல அனுபவ படிப்பும் பெற்றது உண்டு.
கன்னியாகுமரி என்றாலே சூர்ய உதயம் சிறப்புல்ல...நிலாவுடன் செல்லும் போது எப்படி சூரியன் காணமுடியும்...மூன்று முறையும் நடக்கல...நான்காம் முறை தம்பிகளோடு சென்ற போதும் அதே நிலை..:p
நிறைய மயில்கள் கேந்திரத்தில் உண்டு..தோகை விரித்து ஆடும் அழகை கண்டோம்.
 

Sundaramuma

Well-Known Member
கன்யாகுமரி மாவட்டம்.........

சிவபெருமானை அடைவதற் காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரண மாக 'கன்னி யாகுமரி' என்று அழைக்கப் பட்டது.......
அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்தியப் பெருங்கடல் என முக்கடலும் சங்கமிக்கும்........

எல்லா மாவட்டமும் atleast 2 மாவட்ட எல்லையோடு இணைந்திருக்கும்........
நாங்க மட்டும் தான் ஒரே மாவட்டதினுள் பொதிந்திருப்போம்........
திருநெல்வேலி மாவடடத்தோடு மட்டும் சேர்ந்திருப்போம்........
இன்னொரு பக்கம் கேரளா.......
மிச்சம் எல்லாமே கடல்........

View attachment 3151

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் னு நாலு வகை நிலங்களும் உண்டு........
ஒரு பக்கம் மலைகள்........
ஏராளாமான சிறுசிறு அணைகள் அன்று பசுமையாக இருந்தால்........
இன்னொரு பக்கம் கடல்........
கன்னியாகுமாரி மாவட்ட கோவளத்தில் தொடங்கி கேரளா மாநில கோவளம் வரை கடற்கரை ஊர் வழியே போகும் சுகமே தனி..........

ஊருக்குள் போனால்........

கன்னியாகுமாரி பீச்
விவேகானந்தர் சிலை வள்ளுவர் சிலை
காந்தி மண்டபம்
பகவதியம்மன் கோவில்
அலங்கார மாதா கோவில்
வட்டக்கோட்டை
கோவளம் பீச்
சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்
நாகராஜா கோவில்
சுங்கான் கடை வழியே ரோட்ல போறதே ஒரு சுகம்.......
தக்கலை ஷேக் பீர்முகமது ஸாஹிப் ஒலியுல்லா
தக்கலை குமாரசுவாமி கோயில்
பத்மனாபபுரம் அரண்மனை (வருஷம் 16) Padmanabhapuram Palace, Kanyakumari (Entry Fee, Timings, Entry Ticket Cost, Phone, Price) - Kanyakumari Tourism 2019
வில்லுக்குறி பாலம்
சிற்றாறு 1 2 அணை Tamilnadu Tourism: Chittar Dam – 1, Pechiparai, Kanyakumari Tamilnadu Tourism: Chittar Dam – 2, Pechiparai, Kanyakumari
பேச்சிப்பாறை அணை Tamilnadu Tourism: Pechiparai Reservoir, Kanyakumari
பெருஞ்சாணி அணை Tamilnadu Tourism: Perunchani Dam, Kalkulam, Kanyakumari
கோதையார் lower and upper dam
திற்பரப்பு அருவி Tamilnadu Tourism: Thirparappu Waterfalls, Kanyakumari
மாத்தூர் தொட்டிப்பாலம் Mathur Aqueduct (Kanyakumari) - 2019 What to Know Before You Go (with Photos) - TripAdvisor
வெடி சாத்தான் கோவில் Vettuvenni Sastha Temple in Nagercoil -
குழித்துறை பறளியாறு

அப்படியே கேரளா.........

நெய்யார் dam........
வேளி boating
கோவளம் beach..........

எங்க ஊரு famous.........

எங்க ஊரு கன்னியாகுமரி........
தேங்காய் எண்ணெய்........
வாழை பழங்கள்......
மரவள்ளி கிழங்கு.......
ரப்பர் தோட்டம்.......
கள் கடைகள் (toddy)
Wow ...ivalo irukka ....
naan irandu murai vandhu irukken .....
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
பத்து பக்கம் வந்தாச்சு..எனக்கு தெரிஞ்சத சொல்றேன்..

best time to visit is june..just after the southwest monsoon hits the kerala coast.

இந்த சைட்ல நம்ம ஊர்ல ஊருக்கே ஏசி போட்ட மாதிரி இருக்கும்..அப்ப அப்ப சாரல் அடிக்கு அதுல நனைஞ்சுகிட்டு இருக்கறது தனி சுகம்..இரயில் ஏறி சென்னைப் பக்கம் வந்தோமுனா வெய்யில் நம்மளை அதேபோல சுகமா வரவேற்கும்
கனியாகுமரி கோடில நின்னுகிட்டு கடலைப் பார்த்துகிட்டே இருக்கலாம்..அப்படியே ஒரு போட் பிடிச்சுபோயி தூரத்தில தெரியற horizona தொடணுமுங்கற அந்த சின்ன வயசு ஆசை இன்னும் ஆசையாவே இருக்கு..
அம்பாள் தரிசனம் வார்த்தைகள்ள சொல்ல முடியாது..again a small girl holding fort there..in that corner..
நாகர்கோவில் நாகராஜர் கோவில் பார்க்க வேண்டிய இடம்..கோவில்ல சுத்தி நாகவல்லி பூக்கள் இறைந்து கிடக்கும்..ஆவணி முதல் ஞாயிற்று கிழமை நாகராஜருக்கு விசேஷம்..fertility god..
நாங்குனேரி வானமாமலை பெருமாள் கோவில் பிரசித்தி பெற்ற இடம்..வானமாமலை ஜீயர் இங்கதான் இருக்காருன்னு நினைக்கறேன்.
சூசீந்திரம் மும்மூர்த்தி கோவிலும் பார்க்க வேண்டிய இடம்..ஒரே இடத்தில முமூர்தியையும் தரிசிக்கலாம்..இந்த கோவில தவிர ஆந்திராவில அன்னவரம் ஊர்ல சத்திய நாராயணர் கோவில் இருக்கு அங்கையும் முமூர்த்திகள தரிசிக்கலாம்..but in annavaram the dieties are at different levels..i mean basement, first floor அதுபோல.
வள்ளியூர் முருகன் கோவில்..குகையை குடைந்து உருவாக்கப்பட்டது.
தோவாளை பூ மார்கெட்.
இங்க கோவில் எல்லாத்தைலையும் ஆண்கள் வேஷ்டி கட்டிக்கணும்..no shirt..very strict..
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எனக்கும் இந்த ஊருக்கும் கூட கொஞ்சம் சம்மந்தம் இருக்கு, அப்பா பிறந்தது நாகர்கோவில் பக்கத்துல இருக்கற வடக்கன்குளம் என்னும் சிறிய கிராமம் தான்... சின்ன வயசுல அங்க அடிக்கடி போறது உண்டு... அப்படி ஒரு முறை போனப்போ தான் கன்னியாகுமரிக்கும் போயிருந்தோம்...

கன்னியாகுமரி பத்தி எனக்கு தெரிஞ்ச ஒரு சின்ன தகவல்...

கன்னியாகுமரி அம்மன் பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும், அவங்களோட மூக்குத்தி ரொம்ப பேமஸ், முன் காலத்தில எல்லாம் அந்த கோவில் கருவறையில் எந்த விளக்கும் ஏத்த மாட்டாங்களாம், அம்மனோட மூக்குத்தி வெளிச்சம் அந்த அளவுக்கு இருக்குமாம், ஆரத்தி எடுக்கும் போது அப்படி ஒரு பிரகாசம் தெரியுமாம், அந்த வெளிச்சத்துல தான் அம்மனை பார்ப்பாங்களாம்...

அதே போல கடலில் வழி தெரியாமல் போவோர்க்கு அம்மனோட மூக்குத்தி ஒளி வழிக்காட்டினதா சொல்வாங்க...

அம்மனோட திருமணம் நின்னு போனதால திருமணத்திற்கு செஞ்ச வித விதமான உணவு வகைகள் எல்லாம் மணலாகிட்டதா சொல்வாங்க... இன்னைக்கும் அங்க இருக்க மண்ணு ஒரே நிறமா இல்லாம வித விதமான நிறங்கள்ல இருக்கறதை பார்க்கலாம்... இதை நானே நேரடியா பார்த்திருக்கிறேன், மூன்று கடலும் சேரும் அந்த இடம் பார்க்கவே ரொம்பவும் அழகு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top