எங்கே எனது கவிதை? பாகம் 5

எங்கே எனது கவிதை?
பாகம் 5

அவன் விழியோரம் கண்ணீர் கசிந்து தரையில் பட்டு தெறித்த அந்த கணத்தில் ,வேகமாக மூச்சை உள்ளிளுக்கும் சத்தமும் அதை தொடர்ந்து.."கார்த்திக் "என்று அலறும் குரலும் அவன் செவியை எட்டியது ,நொடிக்குள் அவன் கண்களை உயர்த்தி பார்த்தான் ,தன்முன் கண்ட காட்சியைப் பார்த்து திகைத்துப்போனான் ...
பயங்கர அதிர்ச்சி அடைந்த முகத்துடன் ராஜி ,தன் இருகையாலும் வாயை மூடிக்கொண்டு வீட்டைச் சுற்றி ,தன் அகன்ற விழிகளை ஓட்டிக்கொண்டிருந்தாள்..வீடு முழுவதும் சுழன்ற விழிகள் கடைசியாக கார்த்திக்கின் முகத்தில் வந்து நிலைத்தது.

"கார்த்திக் நீ என்ன பைத்தியமா ?ஒரு அரை நாள் நான் வீட்ல இல்லை,அதுக்குள்ள வீட்டை என்ன கதி பண்ணிவச்சிருக்க ,வீடு ஏன் இப்படி ஹனுமான் அழிக்க அசோகவனம் மாதிரி இருக்கு ?"
ராஜி தொடர்ந்து அர்ச்சனை செய்துகொண்டே போக ,அது எதுவுமே காதில் விழாதவன் போல் ,இமைத்தட்டி விழிக்க கூட மறந்து அவளை பார்த்துக்கொண்டே இருந்தான் ,ஒரு வேளைக் கண் மூடி திறக்கும் நேரத்தில் அவள் மறைந்து விட்டால் ?இதுஎல்லாம் அவன் கற்பனையாக இருந்தால் ?விரித்த கண்கள் மூடாமல் அவளை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்... அவள் இடைவிடாது திட்டும் சத்தம் கூட அவனுடைய ஏங்கியிருந்த காதுகளுக்கு இனிய நாதமாக கேட்டது ..
அவ்வளவு நேரமும் அவன் அனுபவித்த மனஅழுத்தமும் வேந்தனையும் , இந்த எதிர்பாராத நிகழ்விற்கு உடனடியாக செயல்பட முடியாதபடி அவனைகட்டிப்போட்டிருந்தது , செய்வதறியாது மலைத்துப்போய் அமர்ந்திருந்தான் .
உண்மை அவன் மூளையில் உரைக்க சிறிது நேரம் பிடித்தது , தன்னை வாட்டிய துன்பச்சுழலிலிருந்து மீண்டு ,இன்ப வெள்ளத்தில் சிக்கிக்கொண்டான் ,மெல்ல சுயஉணர்வு பெரும் போதே ,எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த உணர்ச்சி மாறுதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் உடலின் ரசாயன மாற்றத்தினால் அவனது உடல் நடுங்க தொடங்கியது...
மெல்ல உணர்ச்சி வெள்ளத்திலிருந்து விடுபட்டு ,உணர்வுகள் வேலை செய்யத்தொடங்கும்போது தான் ,ராஜி நிறுத்தாமல் பேசிக்கொண்டிருப்பது மூளையில் உறைத்தது,வீட்டின் நிலையை பற்று குறைகூறி கொண்டிருந்தாள் என்றும் புரிந்தது...

"அவனவனுக்கு இங்க உயிர் போய் உயிர் வந்திருக்கு ,இவளுக்கு வீடு குப்பை ஆனது தான் இப்ப முக்கியமா போச்சி ..."

மெதுவாக அவனது கோபம் எட்டி பார்த்தது ,அதுவரை அவன் உள்ளுக்குள் அரித்துஎடுத்த நரக வேதனை ,வடிகால் தேடியது,இனிமேல் அவளோடு சண்டை போடமாட்டேன் என்று எடுத்த உறுதிமொழி எல்லாம் காற்றில்பறந்தது ,

"எங்க போன ?"அதட்டும் குரலில் கேட்டான் ..

"எங்க போனேனா ?என்ன இப்படி கேக்குற நான் தான் ஏற்கனவே சொல்லி இருந்தேன்ல ,எங்க அத்தைக்கு உடம்பு சரி இல்லை அவங்கள பார்க்க போறேன்னு..."

"ஐயோ... ராஜியோட அத்தை, அவங்கள எப்படி மறந்தேன் ..?அவங்க வீட்ல இருந்து தானே ராஜி கல்யாணத்துக்கு முன்னாடி ஆபீஸ்கு வருவா...எவ்ளோ பெரிய முட்டாள் நான்..?"

மானசீகமாக அவன் தலையில் அவனே அடித்துக்கொண்டான் ...அவனையே உற்றுப்பார்த்து கொண்டிருந்த ராஜிக்கு அவன் நடவடிக்கை வினோதமாக இருந்தது ...
சட்டென்று அவன் அருகில் அமர்ந்து நெற்றியைத் தொட்டு பார்த்தாள்,

"என்ன ஆச்சு கார்த்திக்?ஏன் ஒருமாதிரி இருக்க ?முகமே சரியில்லையே ஏதாவது சாப்பிட்டியா இல்லையா ?
அதே சமயத்தில் அவன் காலி வயிறு சத்தமிட்டது ,காலையிலிருந்து அவன் வாயில் பச்சைத் தண்ணீர் கூட படவில்லை என்பது நினைவு வந்தத..,'எங்கே அவன் புலன்கள் அனைத்திலும் ராஜியை தேடுவது ஒன்று மட்டும் தான் நிறைந்திருந்தது ,அவனுடைய புறத் தேவைகளை நினைவில் இருந்தால்தானே ..'அவன் பதில் பேசாமல் விழிப்பதை பார்த்து விட்டு..

"சாப்பிடலையா ,நான் தான் ஹாட் பேக் ல டிபன் வச்சிருந்தேனே?

"அது எப்படி எனக்கு தெரியும் ?அவன் குழந்தையை போல் குறைகூறினான் ..

"என்னடா உளறுற ?நான் தான் நோட் எழுதி வச்சிருந்தேன் ல ,அத்தை வீட்டுக்கு போறேன் ,வர லேட்டா ஆகும் ,ஹாட்பாக் ல இருக்கற டிபின சாப்பிடுன்னு "

அவனுக்கு தூக்கிவாரி போட்டது ,"ராஜி நோட் வச்சிருந்தாளா ?"

"எங்க வச்சிருந்த ?"குழப்பத்துடன் கேட்டான் ,அவன்தான் வீடு முழுக்க தேடினானே..

"உன்னோட ஷர்ட் பாக்கெட் ல ,"அவள் சொல்லிமுடிக்கும் முன் ,அவன் கண்கள் தானாக அவன் ,வெறுப்புடன் கழற்றி வீசியெறிந்த சட்டையை நோக்கி திரும்பியது ,அவனுடைய முட்டாள் தனத்தை எண்ணி உள்ளூர நகைத்துக்கொண்டான் நொடிக்கொரு முறை மாறிய அவனது முக பாவனையை கவனிக்காமல் அவள் தொடர்ந்து பேசினாள் ...

"உன்னை எழுப்பி எழுப்பி பார்த்தேன் ,நீ அசையவே இல்லை,கும்பகர்ணன் மாதிரி அப்படி ஒரு தூக்கம் ,அதான் நோட் எழுதி வச்சிட்டு போனேன் ..நீ முழிக்கறத பார்த்தா அதை பார்க்கவே இல்லை போல "

இல்லை இன்னும் ஏதோ ஒன்று அவன் மனதை முரண்டியது ...

"உன்னோட ஃபோன் எதுக்கு சுவிட்ச் ஆப் ஆவே இருந்தது ?"அவளை நேராக பார்த்து கேட்டான் ..அவனுடைய குரல் குற்றம் சாட்டியது .

சிறு தயக்கத்திற்கு பிறகு ,"அது வந்து...சார்ஜ் போடா மறந்துட்டேன் ,அத்தையோட போன்ல இருந்து கூட,பேசியிருக்கலாம் பட் உன்மேல கோபமா இருந்ததால பண்ணலை .. "குற்றஉணர்வால் அவள் அவனை நேராக பார்ப்பதை தவிர்த்தாள்..

அந்த வினாடியில் ,இவ்வளவு நேரமும் அவன் அனுபவித்த வலி,வேதனை,தவிப்பு எல்லாமே அர்த்தமிழந்தது போல உணர்ந்தான்.. அவன் எவ்வளவு தான் சொதப்பினாலும் அவனுடைய ராஜி அவனை விட்டு போகமாட்டாள்,நேற்று எந்த சண்டையும் நடக்காதது போல அவள் அவனிடம் சாதாரணமாக பேசியவிதம் ,அவனுக்கு ஆச்சரியத்தையும் ,ஆனந்தத்தையும் ஒருங்கே அளித்தது ராஜி கிடைக்க நான் எவ்ளோ குடுத்துவச்சிருக்கணும் ?அவளது அன்பில் நெகிழ்தவன் அவளை இறுகஅணைத்துக்கொண்டான் ,
அவனது தவித்த மனதிற்கு இந்த அரவணைப்பு தேவை பட்டது ,அவனது சொர்க்கம் எங்கும் போகவில்லை அவனது கைகளுக்குள் பாதுகாப்பாக இருக்கிறது என்ற எண்ணமே பெரும் நிம்மதியை கொடுத்தது...

அவனுடைய இந்த வினோதமான செயலுக்கு காரணம் புரியாமல் வியந்தாலும் ,அவளும் அவனுடைய அணைப்பில் அனந்தமாக ஐக்கியம் ஆனாள்,அவளுடைய அலைபாந்த மனதிற்கும் அந்த அணைப்பு அருமருந்தாத இருந்தது...

"என்ன ஆச்சு கார்த்திக் ?அவள் கரிசனமாகேட்டாள்...பதிலாக அவளைமேலும் இறுக அணைத்தபடி ,ஒன்றும் இல்லை என்பது போல தலையை மட்டும் அசைத்தான்..
மெதுவாக அவன் கையணைப்பில் இருந்து விலகி,

"என்னடா ,நான் கோவிச்சிக்கிட்டு உன்னை விட்டுட்டு போய்ட்டேன்னு நெனைச்சிட்டியா ?"அவன் முகம் லேசாக கன்றுவதை ஆச்சர்யமாக பார்த்தவளின் விழிகள் விரிந்தது...

"ஹேய் நெஜமாவே அப்படி தான் நினைச்சியா ?அதேப்படி அவ்ளோ ஈஸியா உன்னை விட்டு போய்டுவேனா ?நூறு வயசுவரைக்கும் ,கூடவே இருந்து சண்டை போய்ட்டுட்டே தான் இருப்பேன் ,அப்படிலாம் ஏன் கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிடலாம் னு கனவுல கூட நெனைச்சிடாத ..."அவள் விளையாட்டாக பேசி நிலைமையை லேசாக்க முயன்றாள்.

"சொல்லப் போனா ,நீ அந்தளவுக்கு பேசினதுக்கு நான் உன்கூட பேசவே கூடாது ,ஆனா என்ன பண்றது ,எவ்ளோ ட்ரை பண்ணினாலும் உன்மேல கோபம் வரமாட்டேங்குதே ?"
அவள் அலுத்துக்கொண்டாள்

அவனோ உதடு காதுவரை விரிய சிரித்து அசடுவழிந்தான் ...

"நானும் ,கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டேன் ,சாரி கார்த்..."

சொல்லி முடிக்கும்முன் அவள் உதட்டின் மீது விரல் வைத்து தடுத்தான் ,

"இல்லை ராஜி நான் தான் தப்பு சாரி ..."

"கார்த்திக் ஒன்னு பண்ணலாமா நாம இனிமேல் இந்த விஷயத்தை பத்தி எதுவும் பேச வேண்டாமே.." கெஞ்சுதலாக கேட்டாள்.

"ஓகே பேசவேண்டாம் ,வேற ஏதாவது பேசலாமா ?" அவன் வேடிக்கையாக கேட்டான் .

"என்ன பேசலாம் ?" அவளும் அதே குரலில் பதில் கேள்வி கேட்டாள்...

"இந்த மஞ்சள் சுடிதார் ல நீ எவ்ளோ அழகா இருக்கேன்னு ..."

"ச்சி போடா...",வெட்கத்தால் சிவந்த முகத்தை மறைப்பதற்காக அந்தப்பக்கமாக திருப்பினாள் ராஜி ...

"நான் பார்த்துட்டேனே...."அவன் அவளை விளையாட்டாக சீண்டினான் .

"போடா..சரி அதை விடு ,சாந்தியம்மா வந்தார்களா?

"சாந்தியம்மா யாரு?" புரியாமல் கேட்டான்

"என்னடா இப்படி கேக்குற ?அவங்க நம்ம வீட்டு சர்வன்ட் மெய்ட் ..."

"ஒஹ் அவங்களா ...?வந்தாங்க ,நான் தான் லீவு குடுத்து அனுப்பிட்டேன் ..".அடுத்துவரப்போகும் பூகம்பத்தை அறியாமல் சாதாரணமாக பதிலளித்தான் ...

"வாட் ? "அதிர்ச்சியாக கேட்டாள்...

"நீ என்ன பைத்தியமா ?வாரத்துல ரெண்டு நாள் தான் அவங்க வேலைக்கு வராங்க ,அதுக்கும் நீ லீவு குடுத்து அனுப்பிட்டு ,ரொம்ப சாதாரணமா சொல்ற..?,எல்லாத்துக்கும் மேல வீட்டை வேற இந்த கதி பண்ணி வச்சிருக்க ,இதையெல்லாம் கிளீன் பண்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா ?உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா ?
அவள் பட்டாசாக பொறியத் தொடங்கினாள் ...

அவளுடைய வசைமொழிகூட அவனுக்கு தேவகானமாக கேட்டது ,இந்த குரலை கேட்கத்தானே நான் அவ்வளவு ஏங்கினேன் ,அடக்கமுடியாமல் பல்வரிசை தெரிய ஈ என்று சிரித்தான் ...

"நான் இங்க பொலம்பிட்டு இருக்கேன் ,நீ சிரிக்கிறியா ?"அவள் கோபமாக அவனை அடிக்க கைஓங்கினாள் ...அடி தன் மீது விழுமுன் அவள் கையை பற்றி தன் புறமாக இழுத்து ,இடைவிடாமல் பேசிய அவள் மென்மையான இதழ்களைத் தன் உதட்டினால்சிறை செய்தான் ...
............................................................
இப்படித்தான் வாழ்க்கையில் நாம் பெரிய பிரச்சனையில் முடியும் என்று நினைக்கும் பல விஷயங்கள் ,அப்படி இல்லாமல் ரொம்ப சாதாரணமாக சரி ஆகிவிடும் ,இதற்காகவா நாம் இவ்ளோ கஷ்டப்பட்டு மனஉளைச்சலுக்கு ஆளானோம் என்று பின்னர் நினைத்து பார்த்து சிரிப்போம் ,அப்படி ஒரு நிகழ்வு தான் கார்த்திக் ராஜி வாழ்க்கையிலும் நடந்தது .
இதற்கு மேல் அவர்கள் சண்டைபோடமாட்டார்களா என்று கேட்டால் ,நிச்சயம் போடுவார்கள் என்று தான் சொல்ல முடியும் ,ஆனால் இப்போது தவித்தது போல் கார்த்திக் தவிக்க மாட்டான் ,ஏன் என்றால் அவனுக்கு தெரியும் அவனுடைய ராஜி அவனை விட்டு பிரியமாட்டாள் என்று ,அதேபோல் ராஜிக்கும் கார்த்திக் அவள் மேல்எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்று புரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்தது ...
இதற்குமேல் அவர்கள் தனிமையில் குறுக்கிடாமல் நாம் விடைபெறுவோம் .
நன்றி
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கலா பாஸ்கர் டியர்
 
Last edited:
thought of updating tomorrow ,but have some work tom so updating today itself.
thank you so much for giving your support to this story ,it means a lot to me.as this my first ever try in story writing .your encouragement motivates me to write further , hope I will try writing another story ,pls give your one last feedback for this story ,and let me know about what you have liked and what are all the improvements points I should follow for the betterment .
feel free to share your thoughts in personal message as well.thank you once again :)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement