எங்கே எனது கவிதை?பாகம் 4

#1
எங்கே எனது கவிதை?
பாகம் 4

இன்று

ஒரு கணமும் யோசியாமல் அந்த கொடுமையான வார்த்தைகளைக் கொட்டியதற்காக நூற்றியோராவது முறையாக அவன் தன்னையே சபித்துக்கொண்டிருந்தான்..எப்படி நான் இப்படி கேவலமான வார்த்தையை பேசினேன் ? ராஜியின் பொசெசிவ் குணம் தெரிந்தும் அவளின் அனிச்சம் பூப்போன்ற மனது புரிந்தும் என்னால் எப்படி இப்படி பேச முடிந்தது ?நான் அப்படி பேசி இருக்க கூடாது அவள் மனசு எவ்வளவு பாடு பட்டிருக்கும்?அவளை வறுத்த வேண்டும் என்ற வெறி அவனை ஆட்டிப்படைத்து..இப்படி அவன் கனவிலும் நினைக்காத வார்த்தைகளைப் பேசவைத்துவிட்டது...

"இப்படி சொதப்பிவச்சிட்டனே இனிமேல் எப்படி ராஜியை எதிர் கொள்ளப்போறேன் ...?"என்கிற ரீதியில் எண்ணம் போடும்போதே ...

"மொதல்ல ராஜி எங்க ...?"..என்று பதறியது அவன் மனது.

"ஒருவேளை கோபத்துல ஏதாவது தப்பான முடிவு எடுத்திருப்பாளோ ?" அந்த எண்ணமே அவனை நிலைகுலைய செய்தது ...."ச்ச.. ச்ச ..அந்த மாதிரி நெனைச்சிக்கூட பார்க்க கூடாது...ராஜிக்கு எதுவும் ஆகி இருக்காது மொதல்ல அடுத்து என்ன செய்றதுன்னு யோசிக்கணும் சும்மா இருந்தா கண்டதையும் யோசிக்க தோணும்....

"டிங் டிங் டிங் .."

சுவர் கடிகாரம் சத்தமிட்டது சட்டெனத் தலை நிமிர்த்தி பார்த்தான்,அது பன்னிரெண்டு முறை ஒலியெழுப்பி நின்றது ....
" 12 மணியா ?ராஜி கிட்ட அவ்ளோ பெரிய சண்டை போட்டிருக்கேன் எப்படி என்னால இவ்ளோ நேரம் தூங்க முடிஞ்சுது?அவ்வளவு பொறுப்பு இல்லாதவனா நான் ?"குற்றவுணர்வு ஊசியாக குத்தியது ..

"போதும் நீ பீல் பண்ணது மொதல்ல ராஜி எங்க இருக்கான்னு கண்டு புடிக்கற வழிய பாரு .."அவன் மனம் அவனுக்கு நினைவூட்டியது ...

"அவளா தானே போனா ,அவளே வரட்டும்.." அறிவு அவனுக்காக வாதாடியது.

உள்ளுக்குள் அவனது மனமும் அறிவும் இருகூறுகளாக பிரிந்து எதிரெதிர் துருவங்களில் நின்று வாதிடத் தொடங்கியது...

மனம்: நீ வாய மூடிட்டு சும்மா இருந்திருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது...நீ ஏன் அவ கிட்ட அவ்ளோ கடுமையா பேசணும் ?
அறிவு:மனுஷன... சும்மா கேள்வி கேட்டுத் தொணைச்சிகிட்டே இருந்தா கோபம் வராத ?அதான் ஒரு வேகத்துல அப்படி பேசிட்டேன் ..அவ மேல தான் தப்பு ..இந்த சின்ன விஷயத்துக்கு ஓவர்ஆ ரியாக்ட் பண்ணியிருக்கத் தேவை இல்லை..."

மனம்:அவ ஓவரா ரியாக்ட் பண்ணாளா..? அப்போ நீ அஞ்சலியை டீம் மாத்த முடியாதுன்னு சொல்லி ஆடம் புடிச்சியே அதுக்கு பேர் என்ன ?

அறிவு:என்மேல நம்பிக்கை இல்லாம அவ ரொம்ப பிடிவாதம் பிடிச்சா ...

மனம்:அவ என்ன கேட்டா ?அஞ்சலியை டீம் மாத்த சொன்னா அவ்ளோதானே ,அதுக்கு ஏன் நீ அவ்ளோ பெரிய சீன் போட்ட ?சரிம்மான்னு சொல்லி, விட்டு கொடுத்திருந்தா எந்த பிரச்னையும் இல்லை ...

அறிவு:ஏன் அவ விட்டு கொடுக்க கூடாதா ...?

மனம் "உனக்கு உன் லவ்வ விட உன்னோட ஈகோ தான் பெருசா போச்சா ..?எல்லா பிரச்சனைக்கும் உன் ஈகோ தான் காரணம் ...

அறிவு:இல்லை என்னை அந்த எல்லைக்கு தள்ளியதே அவளோட நச்சரிப்பு தான் ...

மனம்:இல்லை நீ தான் ...

அறிவு:இல்லை நீ தான்...

கார்த்திக் மனதிற்குள் நடந்த போராட்டம் தாங்க முடியாமல் ,அந்த விரட்டும் குரல்களிடமிருந்து தப்புவதற்காகக் காதுகளைக் கைகளால் அடைத்துக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டான்...
இது அனாவசியமாக வீணாக்க வேண்டிய நேரம் இல்லை ..செயல்படுவதற்கான நேரம் ..என்பதை உணர்ந்து ,வேகமாக தான் கோபத்தில் தூக்கி எறிந்த மொபைல் போனைத் தேடிப்பிடித்தான்...ராஜி போயிருக்க கூடும் என்று அவனுக்கு தோன்றிய இடங்களை மனதில் வரிசைப் படுத்தினான்.

ராஜிக்கு சென்னையில் யாரையும் தெரியாது...அவளுக்கு இருக்கும் ஒரே பிரண்ட் ,கூட வேலை பார்க்கும் உமா மட்டுமே.. வேகமாக உமாவின் எண்னைத்தேடி டயல் செய்தான்
முறுமுனையில் உமாவின் உற்சாக குரல் கேட்டது...

"ஹேய் என்ன கார்த்திக் அதிசயமா எனக்கு போன் பண்ணி இருக்க ,?ராஜி என்ன பண்ணுறா ?ஈவினிங் மூவி பிளான் நியாபகம் இருக்கு தானே ?உமா வழக்கம் போல வழவழக்கதொடங்கினாள்..

கார்த்திக்கின் மனம் ராஜி அங்கு இல்லை என்பதை மட்டும் பதிவு செய்தது....

"இல்லைனா உமா இவ்ளோ சாதாரணமா மூவி பத்தி பேச மாட்டா .."

அப்போ அடுத்து ராஜி அப்பாவுக்குத் தான் கால் பண்ணனும், அவருக்கு சும்மாவே அவனை பிடிக்காது ஏதோ ராஜிக்காக சகித்துக்கொள்வார் அவ்வளவே, இவனும் அவரிடம் எப்போதுமே தேவைக்கு மேல் பேசமாட்டான் , கல்யாணம் ஆகி இந்த ஆறு மாதத்தில் ஒரு முறைகூட அவரிடம் போனில் பேசியது இல்லை..

ஆனாலும் என்னதான் கோபம் என்றாலும் ராஜி ஊருக்கு அப்பா வீட்டுக்கு போய் இருப்பாளா ?அவனால் நம்ப முடியவில்லை

ஒரு வேளை போய் இருந்தால் ?அவனுக்கு தான் இப்போது வேறுவழி இல்லையே"ராஜிக்காக பண்ணி தான் ஆகணும்"

ஒரு பெருமூச்சுடன் மனதைத் திடப் படுத்திகொண்டு ராஜி அப்பாவுக்கு டயல் செய்தான்.

மறுமுனையில் "ஹலோ யாரு...."என்ற கரகர குரல் கேட்டது.

'யாரா..?என்ன இந்த ஆளு நம்ம நம்பர் ஐ கூட சேவ் பண்ணிவைக்கலையா ?கஷ்டம் டா சாமி ..."அவனுக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது ...

"ஹலோ நான் கார்த்திக் பேசுறேன் "

"ஓ... நீங்களா ,சொல்லுங்க என்ன விஷயம் ?போன் பண்ணாதவங்க பண்ணி இருக்கீங்க ?ராஜிமா எப்படி இருக்கா ?"

"நல்லவேளை எந்த கார்த்திக்னு கேக்காம போனாரு.."
மனதிற்குள் ஏளனமாக நினைத்துக்கொண்டான் .மறுமுனையில் ராஜி அப்பா தொடந்து பேசினார் ...

"என்ன ஏதாவது பிரச்சனையா ?நீ மட்டும் ஏதாவது பிரச்சனை பண்ண ,அவ்ளோ தான் ,நான் பேசுற விதமே வேறையா இருக்கும்...." அவனோடஅருமை மாமனார் மிரட்டல் தொனியில் பேசினார்

"இவரு வேற நேரம் காலம் தெரியாம ,இந்த ஆளுக்கு போய் ராஜி பொண்ணாபொறந்துட்டாளே .."

"சாரி அங்கிள் ,..நான் ஏன் பிரண்டுக்கு கால் பண்ணினேன் அது நம்பர் மிஸ் ஆகி உங்களுக்கு போயிடுச்சி..."

ஒருவழியாக சமாளித்து போனை வைத்தான்,.

"ஸ்ஸப்பா....நல்லவேளை எதுவும் உளறல ,இல்லாட்டி அந்த மீசைக்காரரு அய்யனார் அருவாளோட என்ட்ரி ஆகி இருப்பாரு ..."

"சோ ராஜி ஊருக்கும் போகலை...வேற எங்க தான் போய் இருப்பா ?"

அவன் குழப்பத்துடன் யோசிக்கும் போதே வீட்டின் அழைப்பு மணி அடித்தது...வேகமாக துடிக்கும் இதயத்துடன் பரபரப்பாக வாசலை நோக்கி ஓடினான் 'ராஜியா தான் இருக்கும்' என்ற எதிர்பார்ப்புடன் கதவை திறந்தால்,வெளியே நடுத்தர வயது பெண்மணி ஒருத்தி நின்று கொண்டிருந்தாள், நொடியில் உற்சாகமெல்லாம் வடிய மூளை செயல் படாமல் மரத்துப்போய்பேந்த விழித்தபடி பார்த்துக்கொண்டு இருந்தான்.
அந்த பெண்மணி இவனை ஆச்சர்யமாக பார்த்து,

"என்ன தம்பி நீங்க கதவை தொறக்கறீங்க ராஜி கண்ணு இல்லையா ?"

"ஓ ...இவங்கநம்ம வீட்ல வேலை செய்யறவங்கல்ல .
.. ஒருவழியாக அவன் மூளை வேலை செய்ய தொடங்கியது...

அவன் பதில் பேசாமல் விழிப்பதை வினோதமாக பார்த்தவள் "என்ன தம்பி யோசிக்கிறீங்க..?"என்று கேட்டாள்...

சட்டென்று யோசித்து "இல்லை, ராஜி வெளிய போய் இருக்கா, நீங்க இன்னிக்கு லீவு எடுத்துக்கோங்க நாளைக்கு வாங்க ..."என்று சொல்லி அனுப்பிவிட்டு திரும்பியவனை ,ராஜி இல்லாத வெறுமை முழுவதுமாகத் தாக்கியது ...

"இல்லை இது சரி வராது இப்படி வீட்லயே உக்காந்து யோசிச்சிட்டு அவ வர வரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருந்தா பைத்தியம் புடிச்சிடும்..." முடிவெடுத்தவுடன் மின்னல் வேகத்தில் குளியலை போட்டு விட்டு ராஜியை தேட கிளம்பினான் ...

பக்கத்தில் இருந்த பூங்கா ,அவர்கள் வழக்கமாக செல்லும் பீச் ,ஹோட்டல்,ஆபீஸ்,எல்ல இடத்திலும் தேடினான் ..கடைசியாக ராஜி எப்போதும் போகும் கோவிலுக்குள் நுழைந்தான் ...

"கடவுளே ...ராஜிய என் கண்ணுல காட்டிடுங்க அது போதும் எனக்கு ,வேற எதுவும் வேணாம் ...,இனிமேல் அவ கூட சண்டை போடா மாட்டேன் ,அவ நல்லபடியா திரும்பி வந்தா அதுமட்டும் போதும் ,நான் உங்கள தான் நம்பிஇருக்கேன் .."மனமாற வேண்டினான் ...
கடைசியாக முழுவதுமாக தோற்றுப்போன உணர்வுடன் வீடு திரும்பினான் ,'ஒருவேளை ராஜி திரும்பியிருந்தா ..?'ஒரு சிறிய நம்பிக்கை துளிர்த்தது,அதை முளையிலேயே கிள்ளுவது போல பூட்டிய வீடு அவனைத்பார்த்து நகைத்து ...
ராஜி இன்னும் வீட்டுக்கு வரலை என்ற நிஜம் அவன் முகத்தில் அறைந்தது ...
இதற்குமேல் அந்த மனஅழுத்தத்தைத் தாள முடியாமல் அவன் இதயம் வெடித்துவிடும் போல வலித்தது, ஒரே இரவில் அவனது சந்தேஷம் முதுவதையும் யாரோ பறித்தது போன்ற உணர்வு உள்ளே அழுத்த தொடங்கியது , இலக்கில்லாமல் வெறித்து நோக்கிய பார்வை வட்டத்தில் டயனிங் டேபிள் மேல் இருந்த ஒரு காகிதம் பட்டதுமே உணர்வு மெதுவாக திரும்ப துடிக்கும் இதயத்துடன் அடிமேல் அடிவைத்து டேபிளை அணுகினான் ,நடுங்கும் கையால் அதை எடுத்து பார்த்தான் ,வெறும் காகிதம் எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை ஆசுவாச பெருமூச்செறியும் போதுதான் அதுவரை அவன் மூச்சுவிட கூட மறந்திருந்தான் என்பதை உணர்தான்,அவனுக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை ,கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்ற இந்த நிலை அவனை மிரட்டியது ..

இந்த அத்துவான காட்டில் இருந்து தப்பித்தே ஆகா வேண்டும் என்ற வேகத்துடன் வீடு முழுவதும் வேகமாக தேட தொடங்கினான் ,ராஜி ஏதாவது ஒரு செய்தி அவனுக்காக விட்டு போயிருப்பாள் என்று அவன் முழுதாக நம்பினான் ,வீட்டின் மூளை முடுக்கு ,இண்டு இடுக்கில் இருந்த ஒரு பேப்பரை கூட விடவில்லை சல்லடையாக சலித்தான்..
என்ன தேடுகிறோம் என்றே தெரியாமல் தேடினான் ,ஒன்றும் கிடைக்காமல் ஓய்ந்துபோய் சோபாவின் தொப்பென்று விழுந்தான் ,வீடு முழுக்க பொருட்கள் சிதறி கிடைக்க ,தன்னந்தனியே விண்ணென்று வலித்த தலையை கைகளால் தாங்கியபடி அமர்ந்திருந்தான் ..

அடுத்து என்ன செய்வதென்று ஒன்றும் புரியாமல் உலகமே இருண்டது போல் ஆனது ,வீட்டின் மயான அமைதி அச்சுறுத்தியது

எப்போதும் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருக்கும் ராஜியின் பேச்சுக்குரல் இல்லாத இந்த நிசப்தம் ,வெறுமை... பித்தம்பிடிக்க செய்தது..."ஏன் ராஜி ...வாயே மூடாம பேசிக்கிட்டே இருக்க,..?"என்று குறை கூறும் அவன் இன்று அவளின் ஒரு வார்த்தையை கேட்டு விடமாட்டோமா என்று ஏங்கினான்...
அந்த நொடி ராஜி அவன் வாழ்வில் எவ்வளவு முக்கிய இடம் பிடித்திருக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது ... ராஜியை விட வேற எதுவும் பெரிதில்லை என்று தோன்றியது அவள் நல்லபடியாக திரும்பி வந்தால் போதும் அவ்வளவுதான்,வேறு எதுவும் தேவை இல்லை...
"இந்த அளவுக்கா ராஜியை நான் லவ் பண்றேன் ..?அவள் மீது வைத்த அன்பின் தீவிரம் புரிய அவனுக்கே அது ஆச்சிரியமாக இருந்தது...கூடவே இருக்கும் போது அவளோட அருமை தெரியலை இப்ப இல்லாத போது அவளை நெனைச்சி இங்க உயிர் போகுது எனக்கு ..."
"ராஜி இனிமேல் உன் கூட சண்டை போடா மாட்டேன் ,நீ என்ன சொன்னாலும் கேக்குறேன் ...ப்ளஸ் கண்மணி... திரும்பி வந்துடு ..என்னால முடியலை .."

விழியோரம் கண்ணீர் கசிந்து தரையில் பட்டு தெறித்தது.....
தொடரும்
 
eanandhi

Well-Known Member
#5

"நல்லவேளை எந்த கார்த்திக்னு கேக்காம போனாரு.." மனதிற்குள் ஏளனமாக நினைத்துக்கொண்டான் .மறுமுனையில் ராஜி அப்பா தொடந்து பேசினார் ...

"என்ன ஏதாவது பிரச்சனையா ?நீ மட்டும் ஏதாவது பிரச்சனை பண்ண ,அவ்ளோ தான் ,நான் பேசுற விதமே வேறையா இருக்கும்...." அவனோடஅருமை மாமனார் மிரட்டல் தொனியில் பேசினார்

"இவரு வேற நேரம் காலம் தெரியாம ,இந்த ஆளுக்கு போய் ராஜி பொண்ணாபொறந்துட்டாளே .."

"சாரி அங்கிள் ,..நான் ஏன் பிரண்டுக்கு கால் பண்ணினேன் அது நம்பர் மிஸ் ஆகி உங்களுக்கு போயிடுச்சி..."
ஒருவழியாக சமாளித்து போனை வைத்தான்,.

"ஸ்ஸப்பா....நல்லவேளை எதுவும் உளறல ,இல்லாட்டி அந்த மீசைக்காரரு அய்யனார் அருவாளோட என்ட்ரி ஆகி இருப்பாரு ..."

"சோ ராஜி ஊருக்கும் போகலை...வேற எங்க தான் போய் இருப்பா ?"
அவன் குழப்பத்துடன் யோசிக்கும் போதே வீட்டின் அழைப்பு மணி அடித்தது...வேகமாக துடிக்கும் இதயத்துடன் பரபரப்பாக வாசலை நோக்கி ஓடினான் 'ராஜியா தான் இருக்கும்' என்ற எதிர்பார்ப்புடன் கதவை திறந்தால்,வெளியே நடுத்தர வயது பெண்மணி ஒருத்தி நின்று கொண்டிருந்தாள், நொடியில் உற்சாகமெல்லாம் வடிய மூளை செயல் படாமல் மரத்துப்போய்பேந்த விழித்தபடி பார்த்துக்கொண்டு இருந்தான்.
அந்த பெண்மணி இவனை ஆச்சர்யமாக பார்த்து,

"என்ன தம்பி நீங்க கதவை தொறக்கறீங்க ராஜி கண்ணு இல்லையா ?"

"ஓ ...இவங்கநம்ம வீட்ல வேலை செய்யறவங்கல்ல ... ஒருவழியாக அவன் மூளை வேலை செய்ய தொடங்கியது...

அவன் பதில் பேசாமல் விழிப்பதை வினோதமாக பார்த்தவள் "என்ன தம்பி யோசிக்கிறீங்க..?"என்று கேட்டாள்...

சட்டென்று யோசித்து "இல்லை, ராஜி வெளிய போய் இருக்கா, நீங்க இன்னிக்கு லீவு எடுத்துக்கோங்க நாளைக்கு வாங்க ..."என்று சொல்லி அனுப்பிவிட்டு திரும்பியவனை ,ராஜி இல்லாத வெறுமை முழுவதுமாகத் தாக்கியது ...

"இல்லை இது சரி வராது இப்படி வீட்லயே உக்காந்து யோசிச்சிட்டு அவ வர வரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருந்தா பைத்தியம் புடிச்சிடும்..." முடிவெடுத்தவுடன் மின்னல் வேகத்தில் குளியலை போட்டு விட்டு ராஜியை தேட கிளம்பினான் ...

பக்கத்தில் இருந்த பூங்கா ,அவர்கள் வழக்கமாக செல்லும் பீச் ,ஹோட்டல்,ஆபீஸ்,எல்ல இடத்திலும் தேடினான் ..கடைசியாக ராஜி எப்போதும் போகும் கோவிலுக்குள் நுழைந்தான் ...

"கடவுளே ...ராஜிய என் கண்ணுல காட்டிடுங்க அது போதும் எனக்கு ,வேற எதுவும் வேணாம் ...,இனிமேல் அவ கூட சண்டை போடா மாட்டேன் ,அவ நல்லபடியா திரும்பி வந்தா அதுமட்டும் போதும் ,நான் உங்கள தான் நம்பிஇருக்கேன் .."மனமாற வேண்டினான் ...
கடைசியாக முழுவதுமாக தோற்றுப்போன உணர்வுடன் வீடு திரும்பினான் ,'ஒருவேளை ராஜி திரும்பியிருந்தா ..?'ஒரு சிறிய நம்பிக்கை துளிர்த்தது,அதை முளையிலேயே கிள்ளுவது போல பூட்டிய வீடு அவனைத்பார்த்து நகைத்து ...
ராஜி இன்னும் வீட்டுக்கு வரலை என்ற நிஜம் அவன் முகத்தில் அறைந்தது ...
இதற்குமேல் அந்த மனஅழுத்தத்தைத் தாள முடியாமல் அவன் இதயம் வெடித்துவிடும் போல வலித்தது, ஒரே இரவில் அவனது சந்தேஷம் முதுவதையும் யாரோ பறித்தது போன்ற உணர்வு உள்ளே அழுத்த தொடங்கியது , இலக்கில்லாமல் வெறித்து நோக்கிய பார்வை வட்டத்தில் டயனிங் டேபிள் மேல் இருந்த ஒரு காகிதம் பட்டதுமே உணர்வு மெதுவாக திரும்ப துடிக்கும் இதயத்துடன் அடிமேல் அடிவைத்து டேபிளை அணுகினான் ,நடுங்கும் கையால் அதை எடுத்து பார்த்தான் ,வெறும் காகிதம் எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை ஆசுவாச பெருமூச்செறியும் போதுதான் அதுவரை அவன் மூச்சுவிட கூட மறந்திருந்தான் என்பதை உணர்தான்,அவனுக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை ,கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்ற இந்த நிலை அவனை மிரட்டியது ..

இந்த அத்துவான காட்டில் இருந்து தப்பித்தே ஆகா வேண்டும் என்ற வேகத்துடன் வீடு முழுவதும் வேகமாக தேட தொடங்கினான் ,ராஜி ஏதாவது ஒரு செய்தி அவனுக்காக விட்டு போயிருப்பாள் என்று அவன் முழுதாக நம்பினான் ,வீட்டின் மூளை முடுக்கு ,இண்டு இடுக்கில் இருந்த ஒரு பேப்பரை கூட விடவில்லை சல்லடையாக சலித்தான்..
என்ன தேடுகிறோம் என்றே தெரியாமல் தேடினான் ,ஒன்றும் கிடைக்காமல் ஓய்ந்துபோய் சோபாவின் தொப்பென்று விழுந்தான் ,வீடு முழுக்க பொருட்கள் சிதறி கிடைக்க ,தன்னந்தனியே விண்ணென்று வலித்த தலையை கைகளால் தாங்கியபடி அமர்ந்திருந்தான் ..

அடுத்து என்ன செய்வதென்று ஒன்றும் புரியாமல் உலகமே இருண்டது போல் ஆனது ,வீட்டின் மயான அமைதி அச்சுறுத்தியது

எப்போதும் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருக்கும் ராஜியின் பேச்சுக்குரல் இல்லாத இந்த நிசப்தம் ,வெறுமை... பித்தம்பிடிக்க செய்தது..."ஏன் ராஜி ...வாயே மூடாம பேசிக்கிட்டே இருக்க,..?"என்று குறை கூறும் அவன் இன்று அவளின் ஒரு வார்த்தையை கேட்டு விடமாட்டோமா என்று ஏங்கினான்...
அந்த நொடி ராஜி அவன் வாழ்வில் எவ்வளவு முக்கிய இடம் பிடித்திருக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது ... ராஜியை விட வேற எதுவும் பெரிதில்லை என்று தோன்றியது அவள் நல்லபடியாக திரும்பி வந்தால் போதும் அவ்வளவுதான்,வேறு எதுவும் தேவை இல்லை...
"இந்த அளவுக்கா ராஜியை நான் லவ் பண்றேன் ..?அவள் மீது வைத்த அன்பின் தீவிரம் புரிய அவனுக்கே அது ஆச்சிரியமாக இருந்தது...கூடவே இருக்கும் போது அவளோட அருமை தெரியலை இப்ப இல்லாத போது அவளை நெனைச்சி இங்க உயிர் போகுது எனக்கு ..."
"ராஜி இனிமேல் உன் கூட சண்டை போடா மாட்டேன் ,நீ என்ன சொன்னாலும் கேக்குறேன் ...ப்ளஸ் கண்மணி... திரும்பி வந்துடு ..என்னால முடியலை .."

விழியோரம் கண்ணீர் கசிந்து தரையில் பட்டு தெறித்தது.....
தொடரும்
good episode sis
 
#7
பாவம் கார்த்திக்
அவசரத்துல வார்த்தைகளைக் கொட்டிட்டு இப்போ ராஜியைக் காணோம்ன்னு அவஸ்தைப்படுறான்
ராஜி எங்கே போனாள், கலா டியர்?
 
#8

Next part is the last part , you will come to know tomorrow
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement