எங்கே எனது கவிதை?பாகம் 3

#1
எங்கே எனது கவிதை?
பாகம் 3

இன்று

கார்த்திக் தன் சட்டை மேல் இருந்த அந்த லிப்ஸ்டிக் கரையை பார்த்தான் ..தன் மீதே கோபமும் வெறுப்பும் பொங்கியது , செய்வதறியாது வேதனையில் தன் அடர்ந்த கேசத்தில் கையை ஓட்டினான் ...இந்த கரையை பார்த்து ராஜி எவ்வளவு வேதனை அடைந்திருப்பாள் என்று அவனால் புரிந்து கொள்ள முடிந்தது..அந்த வேதனையை அவளுக்கு தந்ததற்காக அவனுக்கே அவனை நினைத்து அவமானமாக இருந்தது ..
அந்த சட்டையை போட்டிருப்பது கூட பாவம் என்று தோன்றி விட ..வேகமாக அதை கழட்டி ஒரு மூலையில் வீசினான்...

இரவு நடந்த மீதி நிகழ்வுகள் அனைத்தும் மீண்டும் நடப்பது போல் பேரலையாக நினைவலையில் எழுந்து அவனைத் தாக்கியது..
அதுவரை நிகழ்ந்தது சேதாரம் என்றால் அதற்கு மேல் நடந்தது பேரழிவு ..
அவன் அனுமதி இல்லாமலேயே அடுத்து நடந்த வாக்குவாதம் அனைத்தும் அவன் கண் முன் தோன்றி அவனது வேதனையை இன்னும் பன்மடங்காக பெருக்கியது

முதல் நாள் இரவு..

"சாரி ராஜி..இது வெறும் நட்பு ரீதியிலான ஹக் தான் வேற ஒன்னும் இல்லை..சும்மா தேங்க்ஸ் சொல்றதுக்காக பண்ணது . இதுல தப்பா நினைக்கறதுக்கு ஒன்னும் இல்லை .."அவன் அவளுக்கு புரிய வைக்கும் முனைப்புடன் கூறினான்.

"யாரு?"அவளது கேள்வி கூறிய அம்பாக பாய்ந்தது

"ராஜி நான் தான் சொல்றேன்ல மா..இது ஒன்னும் இல்லைனு ...

"நான் யாருன்னு கேட்டேன் .."பிடிவாதம் விடாத குரலில் கேட்டாள்.

"அஞ்சலி "கம்மியா குரலில் பதிலளித்தான் ..

"எனக்கு தெரியும்டா ..எப்படி எப்படி... பிரிஎண்ட்லி ஹக் ஆ... ?பிரிஎண்ட்லி ஹக்ல தான் இப்படி அவளோட லிப்ஸ்டிக்... பர்ஃபியும் எல்லாத்தையும் மேல பூசிக்கிட்டு வருவியா ?"
அவள் கோபமாக படபடக்கும் போதே அவன் குறுக்கிட்டான்...

"ராஜி ப்ளஸ் ..ரொம்ப கற்பனை பண்ணாத ..ஒரு முறைகூட என்னை நம்ப மாட்டியா .. நான் அயோக்கியன்னு ஒரேடியா முடிவு பண்ணிட்டியா?

அவனது பொறுமை வேகமாக தீர்ந்து கொண்டிருந்தது ..அவனுடைய ராஜி அவனை சந்தேகப்படுவதை அவனால் தாங்க முடியவில்லை ..அவனுடைய வலி கோபமாக ரத்த நாளங்களில் பாய்ந்தது ..

"அவ ஏன் என்னை நம்பாம குற்றவாளி மாதிரி நிக்க வச்சி கேள்வி கேக்குறா.?"ஆணின் ஈகோ தலை தூக்கியது ..

"போதும் நிறுத்து கார்த்திக்...என்ன கேட்ட ..ஒரு முறையாவது உன்னை நம்பக்கூடாதான்னா ..?இது நம்பிக்கை சம்பந்த பட்ட விஷயம் இல்லை... என்மேல நீ வெச்சிருக்கற அக்கறை சம்பந்தப்பட்ட விஷயம்..நீ எப்பவுமே என்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கறது இல்லை.. அதுதான் இங்க பிரச்சனை புரியுதா..?எனக்கு அந்த அஞ்சலியா பிடிக்காதுன்னு உனக்கு நல்லா தெரியும் ..ஆனா அதை பத்தி உனக்கு கவலை இல்லை நீ உன் இஷ்டத்துக்கு அவ கூட பைக்ல போவ ,ட்ராப் பண்ணுவ..போதாகுறைக்கு அவளோட லிஸ்ப்ஸ்டிக் ,பர்ஃபியும் எல்லாத்தையும் மேல அப்பிட்டு வருவா நான் கேட்டா சந்தேக படுறியான்னு என்னையே திருப்பி கேக்க வேண்டியது ...சொல்லு கார்த்திக் உண்மையிலயே நீ என் பீலிங்ஸ் ஐ மதிக்கறவனா இருந்தாஇப்படிபண்ணுவியா?
அவள் தனது மனக்குமுறலை கொட்டினாள்..

"அவ என்னோட டீம் ...அவளை ஓரேடியா என்னால அவொய்ட் பண்ணா முடியாது...அது உனக்கும் தெரியும்..தெரிஞ்சும் நீ ஒவ்வொரு விஷயத்துக்கும் இப்படி சண்டை பிடிச்சா நான் ஒன்னும் பண்ணா முடியாது ..

"மொதல்ல அவளை நீ எதுக்கு உன்னோட டீம் ல எடுத்த ?

"போதும் ராஜி திரும்ப மொதல்ல இருந்து ஆரம்பிக்காத ..உன்னோட ராமாயணத்தை கேட்டு கேட்டு அலுத்து போச்சு .."

"ஓ ..அந்த அளவுக்கு ஆகிடுச்சா...இப்போ நான் உனக்கு அலுத்து போய்ட்டேன் ..இதுக்கு தான் நீ என்னை கல்யாணம் பண்ணியா கார்த்திக்..?

"ஏன் தான் கல்யாணம் பண்ணோம்னு நெனைக்க வச்சிடாத ராஜி..."

"இப்போ அந்த அஞ்சலி தான் உனக்கு முக்கியமா போய்ட்டாளா ..அடுத்தவ புருஷனுக்கு அலையறா ...ச்சை..."

"இப்ப எதுக்கு தேவை இல்லாம அவளை இழுக்குற ..."

"அவளை சொன்னா உனக்கு வலிக்குதா ..."

"ஷி இஸ் நத்திங் டு மீ ..அது உனக்கே தெரியும் ..சும்மா சண்டை போடணும்னு எதுவேணா பேசாத .."அவனுக்கு இந்த சண்டை முடிந்தால் போதும் என்று இருந்தது..

"ஷி இஸ் நத்திங் ஆ ?அது எப்படி முடியும் ..?அவதானே உன்னோட ஃபஸ்ட் லவ் அந்த பாசம் இல்லாம போகுமா..?"

"கடவுளே ..யூ ஆர் இம்பாசிபிள் ராஜி...இப்ப உனக்கு என்ன தான் பிரச்சனை ..?

அவன் பொறுமையை முற்றிலுமாக இழந்தான் ..

"நீ அந்த அஞ்சலி ஓட பேசறது பழகறது எதுவுமே எனக்கு பிடிக்கலை.."

அவளுடைய பிடித்தமின்மையை வெளிப்படுத்தினாள்..

கார்த்திக்கு அவளுடைய உணர்வு புரியவே இல்லை..

அஞ்சலி அவனோட முன்னாள் காதலி கல்லூரி காலத்தில் அறியா பருவத்தில் வந்த கவர்ச்சி மட்டுமே ..அதுவும் கூட ரொம்ப காலம் நிலைக்க வில்லை ..இது எல்லாமே ராஜிக்கு தெரியும் ..ராஜியை நான் எவ்ளோ லவ் பண்ணறேன்னும் தெரியும் ..எல்லாம் தெரிஞ்சி அவள் இப்படி பேசுவது அவனுக்கு எரிச்சலை மூட்டியது...

'ஒருவேளை என்னுடைய மனதை அவளுக்கு சரியாக புரிய வைக்க தவறி விட்டேனோ ?என்ற சந்தேகத்தில் அவளுக்கு புரியவைத்து விடும் வேகத்தோடு பேசினான்..

"ஒரே டீம் ல இருந்துகிட்டு ..அப்படி ஒரேடியா யாரையும் அவாய்ட் பண்ணா முடியாது ராஜி..."

"அப்போ அவளை வேற டீம்க்கு மாத்து .." பதில் தயாராக இருத்தது அவளிடம் ...

"ராஜி கொஞ்சமாவது புரிஞ்சிக்க ட்ரை பண்ணு...வேலை வேற, வாழ்க்கை வேற ...எனக்கு அஞ்சலியோட இருக்கறது வெறும் ப்ரோபேசனல் ரிலேஷன்ஷிப் மட்டும் தான் ...அதை தவிர எங்களுக்கு நடுவுல வேற எதுவும் இல்லை ..நீ தான் எனக்கு எல்லாம் புரிஞ்சிக்கோ ராஜி.."

"நீதான் எல்லாம்னு.. சும்மா வாயி மட்டும் தான் சொல்லுது..ஆனா நீ பண்ற எதுவும் அதை நிரூபிக்கிறமாதிரி இல்லையே ..

"இப்போ என்னதான் வேணும் உனக்கு ?"

"அந்த அஞ்சலியா வேற டீம்கு மாத்தணும்

"இப்படி சொல்லி நீ என்னை அவமானப்படுத்துற ராஜி...உனக்கு என் மேல
நம்பிக்கை இல்லையா?"


"நம்பிக்கை இல்லாம தான் உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணினேனா ?நான் உன்னை சந்தேகபடல ..அந்த அஞ்சலி கூட நீ பேசறது எனக்கு பிடிக்கலை அவ்ளோ தான் .."

"ஏன் பிடிக்கலை ..?"பிடிவாதமாக விடாமல் கேட்டான் ..

"ஏன் இப்படி அடம் பிடிக்கற கார்த்திக்..?அவ உன்னோட எக்ஸ் ..அப்படி இருக்கும் போது நீங்க பேசுறத என்னால எப்படி சாதாரணமா எடுத்துக்க முடியும் ?
கடைசியாக அவள் ஆழ் மனதில் இதுநாள் வரை உறுத்திக்கொண்டிருந்தகேள்வியை கேட்டுவிட்டாள்..

ஆனால் கார்திக்கினால் ராஜியின் தன் கணவன் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற பொசெசிவ்தன்மையையும் ..ஒரு மூலையில் ஒட்டி கிடந்த அவளது சிறிய பாதுகாப்பின்மையும் புரிந்து கொள்ளமுடியவில்லை.

"அவளை டீமை விட்டு மாத்துறதுக்கு இதை ஒரு ரீசன் ஆ சொல்ல முடியாது..."

"மத்தவங்களுக்கு வேற ஏதாவது ரீசன் சொல்லு ..எனக்கு கவலைஇல்லை ...ஆனாஎனக்கு பிடிக்கலைங்கற ஒருரீசன் போதாதா உனக்கு.."?"

"பாரு ராஜி ..அஞ்சலியை டீம் சேஞ்சு பண்ணினா எனக்கே ஏன் மேல நம்பிக்கை இல்லாத மாதிரி ஆகிடும் ..அவ எந்தவிதத்துலையும் என்னை பாதிக்கலை ..போதுமா ?
"உன்னோட ஒரே டீம் ல இருந்தா அவ உனக்கு ரூட் போட்டுட்டே தான் இருப்பா ..அதனால டீம் மாத்த சொன்னா இப்படி ஒரேடியா அடம் பிடிக்கிறியே .."


ராஜிக்கு தெரியும் அந்த அஞ்சலி இன்னும் கார்த்திகைக் காதலிக்கிறாள் ..அதுவும் வேண்டுமென்றே ராஜி முன்னாடியே கார்த்திகைத் தொட்டுத் தொட்டு பேசுவதும் ,ஏதோ உடையவள் போல் நடந்து கொள்வதும் எதுவும் அவளுக்குப் பிடிப்பதில்லை..இதை சொன்னால் கார்த்திக் காதிலே போட்டுகொள்வதில்லை ..அவளும் எவ்ளவு நாள்தான் பொறுத்துப் போவது..?இந்த கார்த்திக் ஏன் என் மனசை புரிஞ்சிக்கவே மாட்டேன் என்கிறான் என்று அவள் மனம் தவித்தது.. அதேபோல் மறுபுறம் அஞ்சலி விஷயத்தில் விட்டுக் கொடுப்பது தன்னுடைய கௌரவத்திற்கும் ,சுயஒழுக்கத்திற்கும் இழுக்கு என்று கார்த்திக் நினைப்பது ராஜிக்குப் புரிய வில்லை,..

அவள் நம்பிக்கை நிறைந்த விழிகளுடன் அவனை நோக்கினால் அவன் சிறிதும் அசைவதாகத் தெரியவில்லை ..
அவளுக்கு ஆத்திரம் தலைக்கேறியது..

"நான் இவ்ளோ சொல்லியும் நீ இப்படி அடம் பிடிக்கறதை பார்த்தா எனக்கு வேற ஒண்ணு தோணுது..முதல் காதலை மறக்க முடியாதுன்னு சொல்லுவாங்க ..அது சரி தான் போல..நீ இன்னும் அஞ்சலியை மறக்கலை...அவமேல உனக்கு இன்னும் ஒரு சாப்ட் கார்னெர் இருக்கு அப்படித்தானே ..?

யோசியாமல் வார்தையைவிட்டாள் ராஜி ..அந்த கணத்தில் அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த பொறுமை எங்கோ பறந்து காற்றில் கரைய ..அவளை உருத்துவிழித்தான்

"நானும் கிளிப் பிள்ளைக்கு சொல்ற மாதிரி படிச்சிப் படிச்சி சொல்லிட்டு இருக்கேன் ..உன் மரமண்டையில் ஒண்ணுமே ஏறாதா ?இப்போ என்ன வேணும் உனக்கு ..ஆமாம் நான் இன்னும் அஞ்சலியை தான் நினைச்சிட்டு இருக்கேன் போதுமா ..?அவளை என்னால மறக்க முடியலை இந்த ஜென்மத்துல மறக்கவும் மாட்டேன் ..இப்ப சந்தோஷமா ?
இதை கேட்டனும் னு தானே இவ்வளவு நேரம் ஆவலா காத்துட்டு இருந்த..?
நல்லா கேட்டுக்கோ ..நான் அஞ்சலியா தான் லவ் பண்றேன் ..அதனால தான் அவளை என் டீம்ல வச்சிருக்கேன் .போதுமா ..இப்ப திருப்தியா உனக்கு..?


கண்மூடித்தனமான கோபத்தில் அவளை காயப்படுத்தும் நோக்கத்தில் யோசியாமல் வார்த்தைகளைத் தீயாக கொட்டிவிட்டான் ..

அந்த மனநிலையிலும் கடைசி வாக்கியத்தை கூறிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டான் ..ச்ச... என்ன வார்த்தை சொல்லிவிட்டோம் என்றுகுற்றவுணர்ச்சி மேலோங்க ..ராஜியை சமாதான படுத்துவதற்காக விழியுயர்த்தி பார்த்தான் ..அந்த முகத்தை பார்த்ததும் வார்த்தை அவன் தொண்டை குழியில் சிக்கியது ..

சொல்லவொண்ணா துயரத்தையும் அருவருப்பையும் தாங்கி நின்றது அவள் முகம்..

தொண்டையில் அடைத்த உணர்வை விழுங்கிக்கொண்டு ..அவன் பேச முயன்றான் ..
அந்த முயற்சியை அவள் கை உயர்த்தி நிறுத்தினாள்.

"போதும் ..இதுக்குமேல நீஎந்த வாக்குமூலமும் தர வேண்டாம்..இதுவே மூச்சு முட்டுது..."அவள் குரல் என்னேரமும் உடைந்து அழுவாள் என்பதை உணர்த்தியது ..

"தேங்க்ஸ் அட்லீஸ்ட் இப்பாவது உண்மையா ஒத்துக்கிட்டியே .."

கடைசி வார்த்தை காற்றில் கரையும் முன்பே அவள் விசும்பலோடு அவர்களது அறையை நோக்கி விரைந்தாள் ..அவன் அவசரமாக அவளை பின்தொடந்து பிடிப்பதற்குள் அறை கதவு அவன் முகத்தில் அறைந்தாற்போல் சாத்திக்கொண்டது...

பலமுறைக் கதவைத் தட்டிப்பார்த்தும் அவள் பெயரை அழைத்தும் பதில் இல்லாமல் போகவே ..கடைசியாக அறைக்கதவை ஓங்கி ஒரு முறை உதைத்து விட்டு ..சோபாவில் அயர்ந்து விழுந்தான் ...
தொடரும்
 
#5
அஞ்சலியை வேற டீமுக்கு மாத்துன்னா மாத்திட்டு போக வேண்டியதுதானே
வேலியில போற ஓணானை
தேவையில்லாமல் எடுத்து
கார்த்திக் வேட்டிக்குள்ள விட்டுக்கிட்டான்
 
#7
அஞ்சலியை வேற டீமுக்கு மாத்துன்னா மாத்திட்டு போக வேண்டியதுதானே
வேலியில போற ஓணானை
தேவையில்லாமல் எடுத்து
கார்த்திக் வேட்டிக்குள்ள விட்டுக்கிட்டான்
Mens’ brain work different than that of womens’s.. they can not take it when their ego is touched ..Karthi Ku idhu oru ego problem .. Raji Ku emotional problem
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement