எங்கே எனது கவிதை?பாகம் 2

Advertisement

எங்கே எனது கவிதை?
பாகம் 2

முதல்நாள் இரவு ..12:00 மணி

கார்த்திக் அரவம் இல்லாமல் தன்னிடம் இருந்த உபரிசாவியைக் கொண்டு மெல்ல தன் வீட்டின் கதவை திறந்தான் .."தெய்வமே ராஜி முழிச்சிருக்க கூடாது "என்று ஒரு அவசர பிரார்த்தனையோடு உள்ளே நுழைந்தான் ...கடவுள் "டூ லேட்.. பக்தா .." என்று அவனைப் பார்த்து சிரிப்பது போல் ராஜி கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் ..ஏதோ ஒரு பழைய பாடல் ஓடிக்கொண்டிருக்க அவள் டிவி திரையை வெறித்துக்கொண்டிருந்தாள் ..அவள் மனம் டிவியில் இல்லை என்பது கண் கூடாகத் தெரிந்தது .. அவளுடைய சட்டென்றுவிரைத்த உடல் அவனது வரவை அவள் அறிவாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது ...

கார்த்திக் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர் அவனும் ராஜியும் ஒரே ஆபீஸ்இல் தான் வேலை பார்த்தார்கள் ..ஆனால் வேறுவேறு டீம் ..இன்று ஒரு ப்ராஜெக்ட் ப்ரெசென்ட்டேஷன் முடித்துவிட்டு டின்னர் முடிந்து வீடு திரும்ப கொஞ்சம், இல்லை ரொம்பவே நேரம் ஆகிவிட்டது ..அதனால் அவன் மனைவி ராஜி கோபத்துடன் அவனுக்காக காத்திருந்தாள் ..

கார்த்திக்கின் களைத்த உடல் ஓய்வுக்கு கெஞ்சியது,எப்பொழுது பெட்டில் விழுவோம் என்றிந்தது ..ஆனால் அவ்வளவு எளிதாக அவன் தப்பித்து போக முடியாததே ...
அவனுடைய ஆசை மனைவியை அவன் சமாதானம் செய்ய வேண்டும்
ஆம் ,அவன் உயிராக காதலித்து பல தடைகளை தாண்டித் கரம் பிடித்த அவனது காதல் மனைவி இப்போது அவன் மீது கோபமாக இருக்கிறாள்.. வேறொரு நாளாக இருந்தால் அவன் அவளுடைய கோபத்தை கூட ரசித்திருப்பான் ஆனால் இன்று அவனோ மிகவும் களைத்திருந்தான்...சண்டை போடாவோ சமாதானம் செய்யவோ வேண்டிய மனநிலையில் அவன் இல்லை ...ஆனால் அப்படி ஒதுக்கி விட்டு ஓடமுடியாதே...நிஜவாழ்க்கையில் ,சினிமாவில் வருவது போல் காதலர்கள் ஒன்று சேர்ந்தவுடன் சுபம் என்று முடித்துவிட முடியாதே ..அதற்கு பின்னால் வரும் பிரச்சனைகள் வாழ்ந்து பார்த்தல் தானே தெரிகிறது..காதலித்த பெண்ணை கல்யாணம் செய்ய போராடுவதை விட அவளுடன் நல்லபடியாக வாழ அதிகமாக போராட வேண்டி இருக்கிறது ...ஒரு பெருமூச்சுடன் ..கழுத்தை நெரித்த டை யைத் தளர்த்தி கொண்டு அவள் அருகில் சென்று அமர்ந்தான்...
வலிய வரவழைத்துக்கொண்ட உற்சாகமான குரலில் பேச ஆரம்பித்தான்

"ஹே ராஜி ...யூ நோ வாட் ..வி காட் தி ப்ராஜெக்ட் ...கிளைண்ட்ஸ் ரொம்ப ஹாப்பி ஆகிட்டாங்க அவ்ளோ சூப்பரா ப்ரெசென்ட்டேஷன் ரெடி பண்ணி இருந்தோம்...அஞ்சலி கூட செமையா ப்ரெசென்ட் பண்ணினா தெரி...?" வேகமாக சொல்லி கொண்டே வந்தவன் கடைசி வாக்கியத்தை நாக்கை கடித்து நிறுத்தினான்..

மெதுவாக உடல் தளர்ந்து அவனுடைய பேச்சில் கவனம் செலுத்திய ராஜி மீண்டும் வில்லென விறைத்தாள்...அவளது முகம் மீண்டும் கடுத்தது..

"மகனே ..உன் கிரைம் ரேட்டை நீயே அதிக படுத்தாத டா .."அவனே அவனை கடிந்து கொண்டான் ..

"நான் என்ன சொல்ல வந்தேன்னா நாங்க எல்லாரும் டீம் ஆ ஒர்க் பண்ணதால இந்த ப்ராஜெக்ட் எங்களுக்கு கிடைச்சது... இது எல்லாமே டீம் ஒர்க்கு கிடைச்ச வெற்றி .."ஒரு வாறு பூசி மொழுகினான் ..

"ஏன் லேட்டு ..?"அவள் குரலில் கோபம் மறைந்திருந்தது .

"என்ன ராஜி ...அதான் நான் ஏற்கனவே மெசேஜ் பண்ணினேனே ...வர லேட் ஆகும் கிளைண்ட்ஸ் ஓட டின்னர் பார்ட்டிக்கு போறேன்னு..."

"ஓ...உங்க அந்த உலகமகா பிசினஸ் பார்ட்டி ராத்திரி 12 மணி வரைக்கும் போகுமா?" ஏளனத்தில் அவள் புருவங்கள் உயர்ந்தது ...

"ஹேவி.. டிராபிக் ராஜி...மவுண்ட் ரோடுல இருந்து ஓ எம் ஆர் வர்றதுக்குள்ள 2 ஹவர்ஸ் ஆச்சு தெரியுமா ?.

"நீ ,மௌண்ட்ரோடுல இருந்து நேரா ஓ எம்ஆர் கு வந்திருந்தா இவ்ளோ நேரம் ஆகியிருக்காது..ஆனா நீ தான் இங்க வரதுக்கு அண்ணா நகர் வரைக்கும் போய் யூடர்ன்எடுத்துட்டு வந்திருக்கியே அதான் லேட் ஆகிடுச்சு இல்லையா கார்த்திக்.?ஏளனமாக தலை சரித்து கேட்டாள்.

"இவளுக்கு எப்படி தெரியும்? அதிர்ந்து விழித்தவன் சந்தேகமாக அவளைப்பார்த்தான் .

"என்னை வேவு பார்க்கறியா நீ ..?அவனது குரல் குற்றம்சாட்டியது ...

"லூசு மாதிரி பேசாத கார்த்திக்...இதை தெரிஞ்சிக்க காமன்சென்ஸ் இருந்தா போதும்..எனக்கு அந்த அஞ்சலிய பத்தி நல்லா தெரியும் ..அதை விட உன்னோட சோசியல் சர்வீஸ் நேச்சர் பத்தி ரொம்ப நல்ல தெரியும்.. "உள்ளத்தின் கொதிப்பை மறைத்து நக்கலாக பதிலளித்தாள் .

"உன்னோட பிரச்னை தான் என்ன?இந்த நடுராத்திரில அவளை தனியா விட்டுட்டு வர சொல்றியா ..? அவன் பொறுமை இழந்த குரலில் கேட்டான்..

"ஏன் அவ டாக்ஸில இல்லை வேற யாரு கூடவாது போகவேண்டியது தானே.."

"ராஜி ..புரிஞ்சிக்கோ...அவ என்னோட டீம் மேட் ஒரு சின்ன ஹெல்ப் கேட்கும் போது எப்படி நோன்னு சொல்ல முடியும்..அதுவும் இந்த நைட் டைம்ல தனியா டாக்ஸில போறது அவ்ளோ பாதுகாப்பு இல்லை ..."பொறுமையை இழுத்து பிடித்து அவன் பதில் அளித்தான் ..

"ஆமா ..எந்த பொண்ணு கேட்டாலும் உன்னால நோ சொல்ல முடியாது ..இந்த உலகத்துலயே ஏன் கிட்ட மட்டும் தான் நீ நோ சொல்லுவ.."

"இது ஒரு சின்ன விஷயம் இதை தேவை இல்லாம ஊதி பெரிசு பண்ணாத ராஜி .."
"நான் தான் ஊதி பெருசாக்குறேன் இல்ல ..சரி நான் எதுவும் பேசல போதுமா..?

அவள் கோபத்தில் முகம் திருப்பினாள்..

பிரச்னை ஆபத்தான பாதையை நோக்கி செல்வதை உணர்ந்தவன்,அது பூதாகரமாக வெடிப்பதற்குள் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடிவெடுத்தான் ..
"சாரி பேபி ,என் செல்லம் ..தங்கம் ..இனிமேல் லேட் ஆ வர மாட்டேன் ப்ரோமிஸ் ..அதுமட்டும் இல்லை ..இனிமேல் யாருக்கும் லிப்ட் கொடுக்கமாட்டேன் ..வயசான பாட்டியா கூட வண்டில ஏத்தமாட்டேன் ..போதுமா ..என்ன நம்பு மா .."
அவனுடைய கொஞ்சலில் அவளது கோபம் சற்று தணிந்தது..கிடைத்த வாய்ப்பை விடாது ..அவளை மெதுவாக அவன் புறம் திருப்பி லேசாக அணைத்தான் ...
அவனது மனம் வெற்றி களிப்பில் துள்ளியது .."எனக்கு தெரியாதா ஏன் ராஜியை எப்படி சமாதானம் செய்வது என்று.."
ஒரு கணம் உடல் தளர்ந்து அவனுடைய அணைப்பில் நெகிழ்ந்த ராஜி மறுகணம் அவனை உதறி தள்ளி விட்டு எழுந்து அவனை உருத்து விழித்தாள் ..
கார்த்திக் திகைத்து போனான் ..சில வினாடிகளுக்கு முன்னாள் எல்லாம் சரியாக இருந்தது இப்போது திடீரென்று என்ன ஆயிற்று .?

"என்ன ஆச்சு ராஜி .?ஒன்றும் புரியாமல் அவன் அவளை மீண்டும் அணுகினான்
அவள் கையை நீட்டி அவனை எட்ட நிறுத்தினான்..

"ஏன் கிட்ட வராத..."

ராஜி ...?குழப்பத்துடன் அவன் அவள் கையை பிடித்தான்..பிடித்த கையை உதறிவிட்டு ..
"சொன்னா புரியாது ?என்னை தொடாத ...உன்னோட மாய்மாலத்தை காட்டி என்னை ஏமாத்தலாம்னு கனவு கூட காணாத .."


"என்ன உளறுற ..ஏன் இப்படி நடந்துக்கற..?

அவள் கண்களில் தீப்பொறியுடன் அவனது சட்டையைச் சுட்டி காட்டினாள்
"என்னது இது ..?"
அவளது குற்றம் சாட்டும் பார்வையை தொடர்ந்து அவனும் தன் சட்டையை பார்த்தான்...அவனுடைய வெள்ளை நிறச் சட்டையில் லேசான சிவப்பு நிற உதட்டு சாயம் அவனை பார்த்து சிரித்தது ...

ஒரு வினாடி புரியாமல் விழித்தவன் ,மறுகணமே ராஜியை ஏறெடுத்து பார்க்க முடியாமல் கழிவிரக்கம் தந்த வேதனையில் கண்ணை மூடி பெருமூச்செறிந்தான் ..
தொடரும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top