ஊஞ்சலாடும் தனிமைகள் - 17

SINDHU NARAYANAN

Well-Known Member
#5
Nice update...

டேய் நிரஞ்சன் உனக்கு எல்லாம் கல்யாணம் எதுக்கு??? பொண்டாட்டி புள்ளை எதுக்கு??? ராதிகாவே பிரசவம் முடிஞ்சு அவங்க வீட்டுக்கு கூட போகாம, நேரா இங்கதான் வந்துருக்கா.. அவளை கையில வச்சு தாங்கலையினாலும் இப்படியா பண்ணுவாங்க... உன்னோட அப்பா இறந்தது எல்லாருக்கும் துக்கம்தான்.. அதுக்காக அவளை இப்படியா வார்த்தையால குதறுவ..
ஒரு வார்த்தை வெல்லும்.. ஒரு வார்த்தை கொல்லும்னு சொல்லுவாங்க.. உன்னோட வார்த்தை ரொம்பவே அதிகம் தான்.. போட போ உன் பொண்டாட்டி தூக்க மாத்திரையை விழுங்கிட்டா.. என்ன பண்ண. போற???
 
Last edited:

Joher

Well-Known Member
#7
:love::love::love:

இவன் எல்லை மீறி பேசுறான்....... ஒரு husband மாதிரியே பேச்சு இல்லை.........
எல்லார்கிட்டயும் சொன்னால் மட்டும் என்ன செய்துட்டு போறாங்க சம்பந்தப்பட்டவனாக உணர்ந்துகொள்ளாதவரை........இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அட்வைஸ் கிடைக்கும்........ இன்னும் ஸ்ட்ரெஸ் தான் ஏறும்........

பொண்ணு இப்படி அழுறப்போ அம்மாக்கு எப்படி இருக்கும்........ அதுவும் குழந்தை பெற்ற கையேடு கூட்டிகிட்டு வந்துட்டாங்க........
ரெண்டு பேருக்கும் நடந்த பேச்செல்லாம் எல்லோர் முன்னாடியும் சொல்லமுடியுமா???

உன்னோட பேச்சு உதாசீனம் அவளை எங்கே கொண்டு போய் நிறுத்தியிருக்குனு பார்.........
எல்லை மீறி போயாச்சு......... இனி என்ன பண்ண போற???
 
Last edited:
#8
கூமுட்டைப் பயல் நிரஞ்சனன்
இவனெல்லாம் எப்படி ஆடிட்டரானான்?
இவனே வந்துட்டு.......
எனக்கு நல்லா வருது வாயிலே
வாய் இருக்குன்னு பொண்டாட்டிக்கிட்ட என்ன வேணுமானாலும் பேசுவானா?
வெளியே இப்படி பேசிப் பார்க்கட்டும்
திருப்பி எப்படி கிடைக்குதுன்னு பாரு,
தம்பி
வெளியே வேண்டாம்
அம்மா or தங்கை இவங்கக்கிட்ட இப்படி குண்டக்க மண்டக்க பேச வேண்டியதுதானே
இப்படி டார்ச்சர் செஞ்சால் அப்புறம் தற்கொலைதான் ஒரே வழி
அதை ராதிகா செஞ்சதில் தப்பேயில்லை
டெலிவரி டிப்ரஷன் தீராத பெண்ணை பச்சை உடம்புக்காரியை என்ன பாடுபடுத்துறான்?
அம்மா கூப்பிட்டப்பவே ராதிகா போயிருக்கலாம்
 
Last edited: