ஊஞ்சலாடும் தனிமைகள் - இறுதி பதிவு

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் மக்களே...

இதோ கடைசி பதிவு.. ஊஞ்சலாடும் தனிமைகள் கதைக்கு... நான் நிஜமா எதிர்பார்க்கவே இல்லை இவ்வளோ பெரிய அதரவு கிடைக்கும்னு... சரயு ஹேப்பியோ ஹேப்பி... ஹேப்பிக்கெல்லாம் ஹேப்பி...!! ரொம்ப ரொம்ப நன்றி எல்லாருக்கும்...

உங்க எல்லார் கம்மென்ட்சும் பார்த்து அவ்வளோ சந்தோசம் நானு...!!!!

இந்த கதைக்கு அழகா கவிதை எழுதிக் கொடுத்தது நம்ம @fathima.ar Fathi thaaannn

Sarayu's Oonjalaadum Thanimaikal - Final
 

Kavyajaya

Well-Known Member
தனிமையில் ஊஞ்சலாடிய உள்ளங்கள் நிரஞ்சனன் ராதிகா இருவரின் கதைதான் இது. இவங்களுக்கு இடையில நம்ம மாட்டுனது போதாதுன்னு அவங்க பையன் அத்துவும் மாட்டுனதுதான் அவன் மட்டும் இல்லைனா இவங்க கதை கந்தல் ஆகிருக்கும்.

சரயுக்கா நாவல்ல ஆனந்த பூந்தோராணத்திற்கு பிறகு பெண்ணோட நுண்ணிய உணர்வுகள் பேசியது ஊஞ்சலாடும் தனிமைகள்ல தான்

மற்ற கதையை விட இது ரெண்டிலும் லட்சு, ராதிகா உணர்வுகள் தான் கதையை நகர்துற பீலிங்.

எப்படித்தான் இப்படி எழுத்துறீங்களோ நான் கூட உங்களை தெரிஞ்சிக்குறதுக்கு முன்னாடி ரொம்ப பெரியவங்கன்னு நினைச்சேன் இந்த வயசுலயே இவ்ளோ maturity எதிர்பார்க்கலை

அழுது அழுது கதை படிக்க வச்சது நீங்களா தான் இருப்பீங்க... ராதிகா எண்ணங்கள் எல்லாம் எனக்கு கண் கலங்க வைத்தது. அம்மாக்கு தெரியாம வேற அழுது குஷ்டம்டா சாமி ஏன் அழுறன்னு கேட்டு கதை படிச்சின்னு விளக்கம் சொன்னா விளக்குமாத்தால அடி வாங்குறது உறுதி

(லட்சுமி ஈஸ் மாமா கூட கடைக்கு போயிக்குறேன்னு சொல்லும் போதும் இதே அழுகை தான்... அது ஆச்சு படிச்சி மூணு வருஷம் ஆனாலும் )

ஒன்னு கண்டிப்பா தோணிச்சு ஒரு கை மட்டும் தட்டிக்கிட்டே இருந்தா என்னைக்கும் ஓசை வராது அதுவும் திருமண வாழ்க்கையில் சுத்தமா வராது

ராதிகா மன்னிச்ச அளவு பெரிய மனசு எனக்கு இல்லை என்னா பேச்சு பேசுனான் அடிச்சி முகரைய உடைக்குற அளவு வந்துச்சு எனக்கு காதல் இருந்தா மன்னிக்க வைக்கும் வாழ வைக்கும் போல அது புருஷன் பாடு பொண்டாட்டி பாடு தனி department நமக்கென்ன இன்னும் அந்த department எனக்கு புரியாத புதிராதான் இருக்கு
அதுவும் டிவோர்ஸ் வாங்குனதை பெருமையா சொல்லுற ஹீரோவை ஒன்னும் சொல்றதுக்கில்லை ஹாஹா.

அட்லாஸ்ட் எனக்கு இந்த கதை ரொம்ப பிடிச்சிருக்குக்கா.. இதை படிச்ச உடனே ஆனந்த பூந்தோராணம் திரும்ப படிக்க ஆசை வந்துருச்சு ச்ச ஈஸ் மாமாவைப் போய் திட்டி திட்டி படிச்சேன்னே அவன் எவ்வளவோ பரவால்லையே

மேன்மேலும் பெண்களின் உணர்வுகளை பேச வாழ்த்துகள்க்கா phd தாண்டி அதுல பட்டம் இருந்தா வாங்குங்க வாங்கி எழுதுங்க நாங்க படிக்குறோம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவே அருமையான நாவல் இந்த "ஊஞ்சாலாடும் தனிமைகள்" நாவல்,
சரயு டியர்
ரொம்ப சின்ன வயதிலேயே சுகர் நோய் வரும் இந்தக் காலத்தில் பொண்டாட்டி காபியில சர்க்கரை கம்மியா போட்டதுக்கு டைவர்ஸ் கேட்கிற புருஷனும்
கேட்ட கலரில் புருஷன் நெய்ல் பாலிஷ் வாங்கித் தரலைன்னு டைவர்ஸ் கேட்கிற மனைவியும்
இந்த அழகிய நாவலை ஒரு முறை படித்தால் நாட்டில் டைவர்ஸ்ங்கிற பேச்சே இருக்காது
அதுவும் கல்யாணம் செஞ்சு குழந்தை or குழந்தைகள் இருக்கும் தம்பதிகள் கண்டிப்பாக இந்த நாவலைப் படித்தால் அவங்க வாழ்வு முக்கியமா அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் ராதிகா நிரஞ்சனன் வாழ்வு ஜெய்ச்ச மாதிரி சூப்பரா ஜெகஜோதியாகிடும்
குடும்ப நல கோர்ட் நீதிபதிகளுக்கும் கொஞ்சம் ரிலீஃப் கிடைக்கும்
"ஆனந்தத் தோரணத்தை" விட இந்த நாவல் அதிக ஆனந்தம் கொடுக்குதுப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top