உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 9

#1
ஷிவா மற்றும் ஷக்தி, வசந்த் - அஸ்வினி அருகினில் சென்று

ஷக்தி: என்ன கொழுந்து அல்வா கடையில கடலை வருக்குறீங்க போல

திருத்திருத்த வசந்த் என்ன சொல்வது என்று யோசிக்கும் நேரம்

அஸ்வினி: அதுவா எங்க அத்தானும் அக்காவும் வறுத்த கடலை கொஞ்சம் மீதம் இருக்கு னு கடை காரர் சொன்னார் அத பாக்க வந்தோம்

2 ஜோடிகளும் சிறிது நேரம் உரையாடி விட்டு கிளம்பும் நேரம்

வசந்த் : வா அஸ்வினி நான் உன்ன வீட்ல விட்டுடறேன்
ஷக்தி : கொழுந்து உங்க ஆள பாத்திரமா நான் வீட்ல விட்டுடறேன் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப துராம் போகணும் சீக்கிரம் கிளம்புங்க

அஸ்வினி : ஆமாங்க நான் ஷக்தி கூடயே பொய்க்குறன்

வசந்த் : சரி

ஷிவா கண்களாலே ஷக்தியிடம் விடை பெற்று தங்கள் இல்லம் நோக்கி சென்றான்

மறுநாள் விடியல் ஷிவாவிற்கு மிகவும் உற்சாகமாக இருந்தது காரணம் இன்றும் அவன் ஷக்தியை சந்திக்க நேரிடும், சீக்கிரமாக தயாராகி தன் வேலைக்கு சென்றான். 1/2 மணி நேரம் முன்னதாக வந்த ஷிவாவை காவலாளி புதிதாக பார்த்தார். தன் இருப்பிடத்திற்கு சென்று ஷக்திக்காக காத்திருக்க தொடங்கினான்.

சரியாக 1 மணி நேரம் கழித்து ஷக்தி வந்தாள். ஷக்தி நேராக தான் இருப்பிடத்திற்கு சென்று தன் வேளைகளில் கவனமானாள். ஷக்தி தன்னை தேடுவாள் என்று எதிர் பார்த்து இருந்த ஷிவாவிற்கு அவள் தன் வேளைகளில் மூழ்கியது சற்று வருத்தமாக இருந்தது பின் மனதை சமன் செய்து தன் வேளைகளை பார்த்துக்கொண்டிருந்தான்.

மதியம் உணவு இடை வேளையில் ஷக்தி ஷிவாவின் இருப்பிடத்துக்கு வந்து

ஷக்தி : ஹலோ பாஸ் இன்னைக்கு என்ன லஞ்ச் கொண்டுவந்தீங்க

ஷிவா : நான் இன்னைக்கு எதுவும் எடுத்துட்டு வரல வெளிய போய் தான் சாப்பிடணும்

ஷக்தி : நானும் கொண்டுவரல நாம வெளிய சாப்பிடலாமா

ஷிவா : (மனதினுள் ஆஹா இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா) சரி ஷக்தி

அப்பொழுது ஷிவா இடத்திற்கு வந்த விஷ்ணு

விஷ்ணு : டேய் மச்சான் வாடா ரொம்ப பசிக்குது இன்னைக்கு வெளிய பொய் சாப்பிடலாம்

ஷிவா : ஷக்தியின் முகம் பார்த்து நின்றான் ஷிவா

அப்பொழுது தான் விஷ்ணு ஷக்தி அங்கிருப்பதை பார்த்து

விஷ்ணு : சாரி நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க நான் இங்கயே பாத்துக்கறேன்

ஷிவா : நீயும் வாடா

ஷக்தி : ஆமாங்க நீங்களும் வாங்க எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல

மூவரும் அருகிலுள்ள உணவகத்திற்கு சென்றனர். விஷ்ணு அவர்களுக்கு தனிமை குடுக்க வேண்டி அவசரமாக உண்டுவிட்டு சென்று விட்டான்

ஷக்தி : உங்க நண்பருக்கு என்ன கண்டா பயம் அதான் சாப்பிட்டு இப்படி ஓடுறார்

ஷிவா : இல்லங்க அவன் நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கணும்னு யோசிக்கறான்

ஷக்தி : நம்ம ரெண்டு பேரும் தனியா என்ன ராணுவ ரகசியமா பேச போறோம் ஏன் இப்படி தலை தெறிக்க ஓடுறாரு

ஷிவா : இல்ல நாம வசந்த் அஸ்வினி போல இன்னும் சகஜமா பேசலனு அவன் கிட்ட சொன்னானா அதான் இப்போவாவது பேசட்டுமே னு போறான்

ஷக்தி : என்ன நான் உங்க கிட்ட சகஜமா பேசலாய என்னங்க நீங்க நான் உங்க கிட்ட நல்ல friend மாதிரி தான இருக்கன்.

ஷிவா : ஆமாங்க ஆனா நாம friends மட்டும் இல்லையே

ஷக்தி : ஒரு நல்ல கணவன் மனைவி தான் உலகத்துலயே Best friends அப்படிங்கறது என்னோட கருத்து

ஷிவா : நான் சொன்னத நீங்க சரியா கவனிக்கல நாம friends தான் but we share a beautiful bond beyond friendship.

ஷக்தி : நீங்க என்னங்க இப்படி பொசுக்குன்னு English la பேசிட்டீங்க

ஷிவா : ஷக்தி நீங்க என்ன விரும்பி தான இந்த கல்யாணத்துக்கு சம்மதிசீங்க

ஷக்தி : என்னங்க இப்படி திடீர்னு கேக்குறீங்க நான் கல்யாணத்துக்கு என்ன கலர் புடவை எடுக்கணும்னு யோசிச்சிட்டுஇருக்குறான்

ஷிவா : ஷக்தி be serious

ஷக்தி : (ஷிவாவின் கண்களை கூர்மையாக பார்த்து) நீங்க என்கிட்ட என்ன எதிர்பாக்குறீங்கனு எனக்கு புரியுது, உங்கள பாக்கும் போது நான் வெட்க படனும், உங்க கிட்ட பேச எங்கணும், எப்பவுமே உங்கள பத்தி மட்டும் யோசிச்சிகிட்டே இருக்கணும், நைட் உங்கள நெனைச்சி கனவு காணனும் இதெல்லாம் தான

ஷிவா : ஏன் எதிர்பார்ப்பு ஒன்னும் தப்பிலேயே ஷக்தி நான் உங்க கிட்ட எந்த தாக்கத்தை ஏற்படுதலையோ னு எனக்கு தோணுது . நீங்க உங்க மத்த நண்பர்கள் போல ஏன் கிட்ட பேசறீங்க அது எனக்கு பத்தலை நான் மத்தவங்கள விட உங்களுக்கு முக்கியமா இருக்கணும் னு நெனைக்கிறேன் இது தப்பா

ஷக்தி : தப்பே இல்ல ஆனா இதெல்லாம் உடனே நடக்கணும் னு நினைக்கிறது தான் தப்பு

ஷிவா : எனக்கு உடனே நடக்குதே ஷக்தி, உங்கள பாத்ததும் பிடிச்சிடுச்ச்சி , உங்க நினைப்பாவே இருக்குறன், உங்க கூடவே இருக்கணும் போல இருக்கு நீங்க அப்படி இல்லங்கும் பொது ரொம்ப வருத்தமா இருக்கு ஒரு வேளை உங்களுக்கு என்ன புடிக்கலையோன்னு தோனுது.

ஷக்தி : உங்கள பிடிக்கலைனு சொல்ல என்கிட்ட எந்த காரணமும் இல்ல ஆனா நீங்க சொல்லற மாதிரி உங்க நெனப்பாவேவும் நான் இல்ல . இது தான் நான் , எனக்கு ஒரு உறவை சட்டுனு ஏத்துக்க முடியாது நீங்க எனக்காக அந்த நேரத்தை கொஞ்சம் குடுங்க . உங்கள நான் புரிஞ்சிகிட்டா நிச்சயமா நீங்க எதிர்பார்க்கிறது எனக்குள்ள இயல்பா வரும் . நான் உங்கள எதுவும் Hurt பண்ணலையே.

ஷிவாவின் உதட்டில் ஒரு மென்னகை

ஷிவா : நீங்க என்ன ஏத்துக்கிட்டிங்க ஷக்தி, யார் என்ன நெனைச்சா என்ன எனக்கு தோணுறத தான் நான் பேசுவன்னு இருக்குற ஷக்தி முதல் முறையா நான் Hurt ஆவன்னு யோசிக்கிறீங்க இப்போ இதுவே எனக்கு போதும் கூடிய சீக்கிரம் உங்கள நான் கொள்ளை அடிச்சிடுவேன் ஷக்தி .

ஷக்தி : (திகைப்பில் இருந்து மீண்டு) கொள்ளை அடிக்க நான் ஒன்னும் நகை இல்ல பாஸ். மண்டைய போட்டு உருட்டாம கல்யாணத்த நல்ல சிறப்பா எப்படி செய்யறதுன்னு யோசிங்க.

அங்கு தன் தோழிகளுடன் உணவு உன்ன வந்த ஷர்மிளா தன் அண்ணன் ஷக்தியுடன் அமர்ந்திருப்பதை கண்டு அவர்கள் அருகில் வந்து அவர்களை முறைத்து கொண்டிருந்தாள் ஷர்மிளாவை அங்கு எதிர்பார்க்காத ஷிவா திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான் அப்பொழுது ஷக்தி ஷிவாவின் காதில்

ஷக்தி : பாஸ் இன்னைக்கு உங்க வீட்ல ஒரு தரமான சம்பவம் இருக்கு என்று கூறி சிரித்தாள்

தொடரும்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement