உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 8

#1
உள்ளம் கொள்ளை போகுதடா
நிச்சயதார்த்தத்தில் இன்னும் 1 மாதத்தில் ஒரே நாளில் அடுத்து அடுத்த முகுர்த்ததில் ஷிவா - ஷக்தி மற்றும் வசந்த் - அஸ்வினி யின் திருமண தேதி உறுதி செய்ய பட்டது. வசந்த் அஸ்வினி இருவரும் தங்கள் வாழ்வியலை பற்றி தொலைபேசியில் கலந்துரையாட ஆரம்பித்து விட்டனர் (அதாங்க கடலை போட ஆரம்பிச்சிட்டாங்க). ஷக்திக்கு Auditing வேலை இருந்ததால் அவளால் ஷிவா உடன் பேச இயலவில்லை. அதை ஷிவாவும் புரிந்து கொண்டு தன்மையாக நடந்து கொண்டான்.

இந்த நிலையில் ஷிவாவின் office க்கு ஷக்தி Auditing சம்மந்தமாக வந்திருந்தாள் அவளுக்கு அங்கு தான் ஷிவா வேலை செய்வது ஞாபகத்தில் இல்லை , 1 வாரம் அவளுக்கு அங்கு வேலை இருந்தது, உணவு இடைவேளையில் அவளை கண்டு கொண்ட ஷிவாவிற்கு தன் கண்களை நம்பவே முடிய வில்லை. அங்கு ஒரு ஓரத்தில் உள்ள ரூமில் அமர்ந்து கொண்டு ஷக்தி ஏதோ தீவிரமாக எழுதி கொண்டிருந்தாள். ஷக்தியை தேடி ஷிவா அங்கு சென்று அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான் அப்பொழுது எதேர்ச்சியாக திரும்பிய ஷக்தி அங்கு நின்று தன்னை விழியெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த ஷிவாவை பார்த்து

ஷக்தி : ஹலோ பாஸ் நீங்க இங்க தான வேலை பாக்கறீங்க , எனக்கு மறந்தே போச்சு , எப்படி இருக்கீங்க வீட்ல எல்லாரும் நல்ல இருக்காங்களா

ஷிவா : (மனதினுள் என்னடா இவங்க நம்மள பாத்து வெட்க படுவாங்கனு பாத்த இவளோ சகஜமா பேசறாங்க) எல்லோரும் நலம் உங்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க

ஷக்தி : எல்லாரும் சூப்பர் இருக்கோம், இங்க ஒரு வேலையா வந்தன இன்னும் ஒரு வாரம் இங்க தான் வேலை

ஷிவா : அப்படியா , என்ன லஞ்ச் டைம் ல சாப்பிட போகலையா

ஷக்தி : இல்லங்க இந்த மாதிரி auditing வரும்போது நான் வீட்டுக்கு பொய் தான் சாப்பிடுவேன் ஏன்னா அங்க யாரையும் நமக்கு தெரியாதுள்ள அப்புறம் தனியா சாப்பிட கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கும் அதான்

ஷிவா : இங்க தான் நான் இருக்கன்ல இந்த ஒரு வாரமும் நீங்க ஏன் கூட தான் சாப்பிடணும் நான் மாமாக்கும் அத்தைக்கும் தகவல் சொல்லிடறேன் நீங்க வாங்க சாப்பிட்டுட்டு அப்புறம் வேலை செய்யலாம்

ஷக்தி மறுக்காமல் அவனுடன் சென்றாள் அங்கு விஷ்ணு ஷிவாவிற்க்காக காத்திருந்தான் அவன் ஷக்தியுடன் வருவதை பார்த்து

விஷ்ணு : என்ன ஷிவா உன் வருங்காலத்தை ஆபீஸ் கே கூட்டிட்டு வந்துட்ட

ஷிவா : டேய் விஷ்ணு நம்ம ஆபீஸ் ஷக்தியோட client da அவங்க auditing காக வந்திருக்காங்க இன்னும் ஒரு வாரம் இங்க தான்

விஷ்ணு : ஓ அதான் உன் முகத்துல ஒரு ஒளி வட்டம் தெரியுதா

தன் சக நண்பர்களை அழைத்து Friends இவங்க தான் ஷக்தி நம்ம ஷிவாவோட வருங்காலம் அதாவது அவனோட வருங்கால மனைவி. அனைவரும் வந்து அவர்களுக்கு வாழ்த்து சொல்லி ஷிவாவை பற்றி புகழ்ந்து தள்ளி விட்டு சென்றனர்.

அப்பொழுது ஷிவாவின் முதலாளி நேரடியாக வந்து ஷக்தியிடம் நீங்க ரொம்ப குடுத்துவெச்சவங்க ஷிவா ரொம்ப பொறுமை சாலி எதையும் அழகா கையாளுவான், உங்களுக்கு ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறி சென்றார். பின்னர் அனைவரும் இருவரையும் கலாட்டா செய்து விட்டு உணவை முடித்து விட்டு தங்கள் வேலையை தொடர சென்றனர்.

ஷிவாவிற்கு இருப்பெ கொள்ளவில்லை ஆனால் ஷக்தியோ தன் வேலையில் மிக்கவும் மும்முரமாக இருந்தாள். ஷிவா தன் வேலை முடித்து கிளம்பும்பொழுது இன்னும் ஷக்தி அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருப்பது பார்த்து அவளிடம் சென்று

ஷிவா : என்ன ஷக்தி இன்னும் கிளம்பலையா

ஷக்தி : இல்லங்க இன்னும் கொஞ்சம் வேலை இருக்குது ஒரு 1 மணி நேரம் ஆகும்

ஷிவா : அத நாளைக்கு பாதுகாலமே ஷக்தி இப்பவே மணி 6 இன்னும் 1 மணி நேரம் நா 7 ஆகிடும்

ஷக்தி : இல்லங்க இன்னைக்கு வேலைய முடிச்சிட்டான்னா நாளைக்கு கொஞ்சம் சுலபமா இருக்கும் அதான் , நான் பாத்துக்குறேன் நீங்க கிளம்புங்க நீங்க தான் ரொம்ப தூரம் போகணும்

ஷிவா : அது எப்படிங்க உங்கள தனியா விட்டுட்டு போவன் நான் இங்கயே இருக்கன் நீங்க முடிச்சிட்டு வாங்க

ஷக்தி தன் வேலைகளை முடித்து விட்டு நிமிர மணி 6.45

ஷக்தி : நான் முடிச்சிட்டாங்க நாம போகலாம்

ஷிவா : சரிங்க , அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள் நாம ரெண்டு பெரும் நெல்லையப்பர் கோவிலுக்கு போயிட்டு போகலாமா

ஷக்தி : இல்ல அப்பா அம்மா கிட்ட சொல்லணும்

ஷிவா : நான் அப்பவே மாமா கிட்டயும் அத்தை கிட்டயும் கேட்டுத்தான் உங்க கிட்ட கேக்கறேன்

ஷக்தி : சரிங்க

இருவரும் தங்கள் வண்டியில் ஏறி நெல்லையப்பரை தரிசிக்க சென்றனர் . மனதார நெல்லையப்பரை வேண்டி மண்டபத்தில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்து பேசிச்செல்லலாம் என்று தோன்றி அங்கு உட்கார்ந்திருந்தனர்.

ஷிவா : இந்த கோவில தாங்க நம்ம முதல் முதல்ல சந்திச்சது

ஷக்தி : ஆமா உங்க நண்பர் என்கிட்ட நல்லா வாங்கி கட்டிகிட்டாரே

ஷிவா : நான் உங்கள எப்போ பாத்தேன்னு தெரியுமா

ஷக்தி : அதான் உங்க நண்பர் கிட்ட சண்டை போடும்போது

ஷிவா : இல்லை

ஷக்தி : பின்ன

ஷிவா : அன்னைக்கு இந்த தூண் கிட்ட இருந்து உங்க தங்கச்சி கிட்ட பொண்ணு பாக்குறத பத்தி ஒரு விளக்கம் குடுத்தீங்களே அப்பவே உங்கள பாத்தேன் உங்க விளக்கத்த கேட்டு மெய் சிலிர்த்து போச்சு

ஷக்தியின் உதட்டில் ஒரு மென்னகை

இருவரும் சிறிது நேரம் உரையாடிவிட்டு கிளம்பும் வேலை அங்கு இருந்த இருட்டு கடையில் திருட்டு தன மாக நின்றிருந்த வசந்த் - அஸ்வினி இருவரையும் கண்டுகொண்டனர்.

தொடரும்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement