உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 7

#1
உள்ளம் கொள்ளை போகுதடா

அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நிச்சயதார்த்த நாளும் அழகாக விடிந்தது

திருநெல்வேலியில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்துகொண்டிருந்தது. இரு வீட்டு பெரியவர்களும் விருந்தினரை வரவேற்று கொண்டிருந்தனர்.

பரமேஸ்வரி அவர் எடுத்த பஞ்சு மிட்டாய் கலர் புடவையில் பளிச்சென்று இருந்தார் அவர் அருகில் ஷர்மி கடனே என்று உட்கார்ந்திருந்தாள். சபையில் இரு வீட்டு பெரியவர்களும் மணமகன்களை சபைக்கு அழைத்து நிச்சய உடையை அவர்களுக்கு கொடுத்து மாற்றி வருமாறு அனுப்பி வைக்கப்பட்டனர் பின்னர் மணமகள்கள் அழைத்து நிச்சயதார்த்த புடவை வழங்கபட்டு மாற்றி வருமாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஷிவா மற்றும் வசந்த் நிச்சய மேடை ஏறி தங்கள் துணைகளுக்காக காத்துக்கொண்டிருந்தனர் அப்பொழுது அழகு மங்கைகளாக ஷக்தியும் அஸ்வினியும் வந்து தங்கள் இணைகள் பக்கத்தில் நிற்கவைக்கப்பட்டனர். அஸ்வினி வசந்தின் அருகினில் நின்று அவனை காண நாணம் கொண்டு தலை குனிந்து கொண்டு இருந்தாள். இந்த பக்கம் ஷிவாவோ ஷக்தியை காண ஆவல் கொண்டு அவளை பார்க்க நிமிர்ந்த நேரம்

ஷக்தி : என்ன பாஸ் ரொம்ப நேரமா தரையில ஏதோ தேடுறீங்க போல என்னனு சொன்னீங்க நா நானும் தேடுவேன்

என்று கூறி அவனை வம்பிழுத்து கொண்டிருந்தாள் . அவளின் வம்பில் ஷிவாவின் முகத்தில் அழகாக வெட்க புன்னகை அதை பார்த்த ஷக்தி

ஷக்தி : பாஸ் நீங்க ரொம்ப அழகா வெட்க படறீங்க

ஷிவா: நீங்க தான் பாடல உங்களுக்கும் சேத்து நானே வெட்க பட்டுக்கிறன், எங்க உங்களுக்கு இந்த பரபரப்பாவே இல்லையா, எனக்கு நேத்து இரவிலிருந்து ஒரே பரபரப்பாவே இருந்துது நீங்க என்ன நா ரொம்ப சாவகாசமா இருக்கீங்க

ஷக்தி: நான் ஏங்க பரபப்பா இருக்கணும் இன்னைக்கு நிச்சயம் தான இது முடிஞ்சதும் எப்பவும் போல நான் எங்க வீட்டுக்கு தான போகப்போறன் இதுவே கல்யாணம் நா நான் எங்க அப்பா அம்மாவை விட்டுட்டு வரணும் அது கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.

ஷிவா : கல்யாணத்துக்கும் நீங்க tension ஆகாதீங்க எப்பவுமே இப்படி சிரிச்சிட்டே இருங்க மத்ததெல்லாம் நான் பாத்துக்கறேன்

இரண்டு ஜோடிகளுக்கும் நிச்சய மோதிரம் வழங்கப்பட்டிருந்தது , வசந்த் அஸ்வினியின் கைகளில் அவன் அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கிய மோதிரத்தை அணிவித்து அவள் கரங்களை இறுக்கமாக பற்றிக்கொண்டான் . இந்த பக்கம் ஷிவாவோ ஷக்தியின் கரங்களில் மோதிரம் அணிவிக்கும் வேலையில் அவள் கைகளின் நடுக்கத்தை உணர்ந்து அவள் அருகில் சென்று

ஷிவா : Madam ku building strong but basement weak pola என்று கூறி அவளின் முறைப்பை பெற்றிருந்தான்

ஷிவா தன்னை நெருங்கி ஏதோ ஆசையாக சொல்ல போகிறான் என்று எதிர்பார்த்த ஷக்திக்கு அவன் தன்னை கலாய்க்கிறான் என்று புரிந்ததும் தன் கையை அவனிடம் இருந்து உருவ பார்க்க. அப்பொழுது ஷிவா அவளின் கைகளில் அழுத்தமாக தன் விரல்களை பதித்து

ஷிவா : நீங்க ஏன் கிட்ட மாட்டிக்கிட்டிங்க ஷக்தி இனிமே உங்க கையை நான் விடுறதா இல்ல

என்று கூறி அவள் திகைத்து இருக்கும் நேரம் அவன் பெயரிட்ட மோதிரத்தை அவள் கரங்களில் போட்டு விட்டான்

திகைப்பின் உச்சத்தில் ஷக்தி இருக்கும் வேளையில் அவன் கரங்களுக்கு அவளை மோதிரம் போடுமாறு சபையினர் கூற ஷிவாவை நிமிர்ந்தும் பார்க்காது ஷக்தி தன் முன் நீட்டிய அவன் கரங்களை தொடாத வாறு மோதிரம் அணிவிக்க வர அதை உணர்ந்த ஷிவா ஒரு மென்னகை புரிந்து கொண்டிருந்தான்.

ஷிவா : என்ன ஷக்தி உங்களுக்கு வெட்கம் வருது போல என்று அவளை சகஜமாக்க கூற

ஷக்தி : வெட்கமா அப்படினா என்ன?

என்று கேட்டு அவனை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்துகொண்டே மோதிரத்தை அவனுக்கு அணிவித்து விட்டு கைகளை விளக்கும் வேளை அதனை அழுத்தமாக பிடித்துக்கொண்ட ஷிவா

ஷிவா : நாந்தான் சொன்னனே ஷக்தி இனிமே உங்க கையை நான் விடுறதா இல்ல அப்படினு, நீங்க ஏனடா நா எஸ்கேப் ஆகறதுலே குறியா இருக்கீங்க

ஷக்தி தன் மனதினுள் : என்னடா இது புள்ளப்பூச்சி னு நெனச்சா இது இந்த புடி புடிக்குது இப்ப ஏன் கைய நான் எப்படி எடுக்கறது

என்று யோசித்து கொண்டிருக்கும் வேளை அவள் கண்ணில் பட்டார் இவர்கள் இருவரையும் முறைத்து கொண்டிருந்த பரமேஸ்வரி உடனே ஷிவாவின் அருகில் சென்று

ஷக்தி : என்ன பாஸ் ஹீரோ ஆகா ட்ரை பண்ணறீங்களா அங்க பாருங்க உங்க அம்மா உங்கள தான் பாத்துக்கிட்டு இருக்காங்க இப்ப நீங்க ஏன் கைய விடல நான் எல்லார்க்கும் முன்னாடி உங்கள கட்டிபுடிச்சி உம்மா குடுத்துடுவேன் அப்புறம் நீங்க தான் எல்லாருக்கும் பதில் சொல்லணும் எப்படி வசதி.

முதலில் திகைத்த ஷிவா பின் நிதானத்திற்கு வந்து அவள் உயரத்திற்கு குனிந்து

ஷிவா : இப்போ உங்களுக்கு வசதியா இருக்கும் குடுங்க

ஷக்தி : எது ? என்ன குடுக்கணும்

ஷிவா : ஏதோ குடுப்பன்னு சொன்னீங்கள்ள அத குடுங்க

ஷக்தி : என்ன புள்ள பபூ ச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிடுச்சு என்று சற்று சத்தமாகவே கூற

அது ஷிவாவின் காதில் தெளிவாக விழுந்தது

ஷிவா : யாரை புள்ள பூச்சினு சொல்லறீங்க இன்னும் ஒரு வருஷத்துல நான் உங்களுக்கு புள்ளைய குடுக்குறன் சவாலா.

ஷக்தி ஷிவாவின் இந்த பரிமானத்தில் ஸ்தம்பித்து நின்று விட்டாள் பின் சிலிர்த்தெழுந்து

ஷக்தி : ஹலோ என்ன ரொம்ப பேசுறீங்க பாத்து பேசுங்க இல்ல ரொம்ப வறுத்த படுவீங்க

ஷிவா உன்னால் என்ன செய்ய முடியும் என்று ஷக்தியை மிதப்பாக பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுது அங்கு சென்று கொண்டிருந்த தன் தோழியை அழைத்து ஏதோ கூற அவள் ஷிவாவை பெருமையாக ஒரு பார்வை பாத்துட்டு நேரே சென்ற இடம் பரமேஸ்வரி இடம்.

தோழியின் உபயத்தில் மேடை ஏறி வந்த பரமேஸ்வரி ஷிவாவின் அருகில் வந்து

பரமேஸ்வரி: (ஷிவாவின் காதினுள்) ஏன் ஷிவா உன்ன ரொம்ப பொறுப்பானவன்னு நான் நெனச்சிருந்தேன் எப்போ இப்படி மாறிப்போன
என்று அவனை காய்ந்து கொண்டிருந்தார்

ஷிவாவிற்கு தலையும் புரியல வாலும் புரியல ஆனால் இது ஷக்தியின் வேலை என்று மட்டும் புரிந்தது

ஷிவா : நான் என்னம்மா செஞ்சன்

பரமேஸ்வரி : (மிகவும் மெல்லிய குரலில் ) என்ன செஞ்சியா நிச்சயதார்த்திக்கு தங்கத்துல மோதிரம் போட்டுட்டன்னு வருத்தப்படாதீங்க கல்யாணத்துக்கு வைரத்துல necklace போடறன்னு நீ ஷக்தி கிட்ட சொன்னதை அந்த புள்ள அவ தோழிகிட்ட பெருமையா சொல்ல அவ தோழி ஏன் கிட்ட வந்து உங்கள மாதிரி மாமியார் ஏன் தோழிக்கு கிடைக்க அவ கொடுத்துவெச்சிருக்கணும் னு சொல்லிட்டு போறா. இன்னைக்கு நகை விக்கற விலையில இப்ப வைர necklace ரொம்ப முக்கியமா டா. வழக்கமா பொண்ணு வீட்ல தான் இந்த நகையெல்லாம் போடுவாங்க நீ என்ன வழக்கத்திற்கு மாறா ஏதோ உளறிட்டு இருக்க, உனக்கு அடுத்து ஒரு தங்கச்சி இருக்கா காச தண்டமா செலவு பண்ணாம இரு.
என்று காய்ந்து விட்டு தன் இருக்கைக்கு சென்று விட்டார்

திகைப்பின் உச்சியில் இருந்த ஷிவா, ஷக்தியின் புறம் திரும்பி ஆனா மட்டும் அவளை முறைத்துவிட்திருந்தான். நடந்த களேபரங்களை பார்த்து தன் கண்ணில் நீர் வழிய சிரித்து கொண்டிருந்தாள் ஷக்தி.

ஷிவா: ஷக்திஇஇஇஇஇ ஏன் உங்களுக்கு இந்த கொலை வெறி.

ஷக்தி : நான்தான் சொன்னன்ல ஏன் கிட்ட வெச்சிக்காதீங்க அப்புறம் ரொம்ப வருத்தப்படுவீங்கன்னு இந்த Romantic Hero அவதாரமெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது, இனிமே பாத்து பேசுங்க இல்லனா பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல.

ஷிவாவின் மனசாட்சி ஏன்டா நீயே இப்போ தான் அந்த புள்ள கிட்ட romantic அ பேசின அதுக்குள்ள இவ இப்படி ஒரு அணுகுண்டபாதவெச்சிட்டாங்களே வீட்டுக்கு போய் நான் எப்படி சமாளிப்பன்.

நடந்த இதனை களேபரத்திலும் ஷிவா ஷக்தியின் கரத்தை விடுவிக்காமல் இருந்தான்.

தொடரும்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniva[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement