உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 4

Advertisement

உள்ளம் கொள்ளை போகுதடா
அனைவரும் எதிர்பார்த்த ஞாயிற்றுக்கிழமை அழகாக விடிந்தது

ஷக்தியின் இல்லதில்
ஷக்தியின் மாமா, அத்தை, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி ,மற்றும் அவர்களின் பசங்க என ஒரு படையே இருந்தது.

ஷண்முகதிற்கு உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணண் ஒரு தம்பி
லக்ஷ்மியின் உடன் பிறந்தவர் ஒரு அண்ணண் மட்டும்

ஷண்முகம் : லக்ஷ்மி மாப்பிள்ளை வீட்டுல எத்தனை பேர் வருவாங்க னு தெரியல அதனால பலகாரம் லாம் கொஞ்சம் நெறைய செஞ்சிடு மா , பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடிச்சிடுகிச்சுனா இன்னைக்கே பூ வெச்சிட்டு கை நனைச்சிடுவாங்க அதனால மதியம் சாப்பாட்டுக்கு தேவையான பொருளாம் இருக்கானு இப்பவே பாத்துட்டு சொல்லிடு மா . உன்னால சமாளிக்க முடியும் ல இல்லனா இப்பவே சொல்லிடு நாம வெளிய வாங்கிக்கலாம்

லக்ஷ்மி : எங்க இவ்வளவு பதட்டமா இருக்கீங்க ஒன்னும் பிரச்சனை இல்ல நாம வீட்டுலையே சமைச்சிடலாம் , நாங்க இவளோ பேர் இருக்கோமே அப்பறம் என்ன.

ஷண்முகம் : எனக்கு ஒரே படபடப்பா இருக்கு மா

அப்பொழுது அங்கு வந்த ஆனந்தி ஷண்முகத்திடம்

ஆனந்தி : ஏன் சித்தப்பா இவளோ படபடப்பு கொஞ்சம் ஸ்ருதியை பாத்துக்கோங்க உங்க டென்ஷன் அவ குறைச்சிடுவா

ஷண்முகம் : அது என்னவோ கரெக்ட் தான் மா . ஆமா எங்க மாப்பிளைய காணோம்

ஆனந்தி : பூ வாங்க கடைக்கு அனுப்பிருக்கன்

ஷண்முகம் : சரி மா ஷக்தி ரெடி ஆகிட்டாளா

ஆனந்தி : அந்த எருமைய இப்போதான் எழுப்பிட்டு வந்திருக்கன் குளிச்சிட்டு இருக்கா

குளித்து முடித்து வந்த ஷக்தி ஆனந்தியிடம் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள் அப்பொழுது அங்கே வந்த ஷண்முகம் என்ன என்று கேட்க அவரிடம்

ஷக்தி : அப்பா ப்ளீஸ் பா எனக்கு ஏதோ டென்ஷன் ஆ இருக்கு நான் கொஞ்சம் நெல்லையப்பர பாத்துட்டு வரவா

ஷண்முகம் : இப்போவா மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்துட்டா தேவையில்லாத டென்ஷன் மா

ஷக்தி : அப்பா ப்ளீஸ் பா இப்போ மணி 7 தான ஆகுது நான் 8 கெல்லாம் வந்திடுவேன் பா.

ஷண்முகம் : சரிம்மா உன் அஸ்வினி யா (ஷக்தியின் சித்தப்பா மகள் ) கூட கூட்டிட்டு போடா

ஷக்தி : Thank you pa
ஷிவாவின் இல்லத்தில்
ஷிவாவின் அத்தை, மாமா,பெரியப்பா, பெரியம்மா மற்றும் அவர்களின் பசங்க எனமற்றொரு படை இருந்தது

வைத்தியநாதனின் உடன் பிறந்தவர் ஒரு அக்கா

பரமேஸ்வரியின் உடன் பிறந்தவர் ஒரு அக்கா

வைத்தியநாதனின் தாய் காமாட்சி பாட்டி தன செல்ல பேரனின் பெண் பார்க்கும் படலத்திற்கு முதல் ஆளாக கிளம்பி அனைவரையும் விரட்டி கொண்டிருந்தார்

ஷிவா : டேய் வசந்த் இந்த ஷர்ட் எனக்கு நல்லா இருக்கா சொல்லுடா என்று 23 வது தடவையா வசந்தத்தை போட்டு படுத்திட்டு இருந்தான்

அப்பொழுது அங்கு வந்த ஷிவாவின் நண்பன் விஷ்ணுவிடம் ஷிவாவை ஒப்படைத்துவிட்டு வசந்த் ஓடிட்டான்

விஷ்ணு: ஏன் ஷிவா இவ்வளவு அலம்பல் பண்ணற, ஒரு ஷர்ட் வாங்கணும் நாலே அவ்வளோ தேடி பாப்பே ஆனா கட்டிக்க போற பொண்ண உடனே எப்படி டா முடிவு பண்ணின

ஷிவா: தெரியலையே அவங்கள பாத்ததும் புடிசிடுசிச்சு, எனக்கே ஆச்சரியமா தான் இருக்கு

விஷ்ணு: என்னவோ போடா உன் முகத்துல ஒரு தனி களையே வந்திருச்சு
அனைவரும் ஒரு பெரிய வேன் பிடித்து கிளம்ப ஷிவா , விஷ்ணு மற்றும் வசந்த் காரில் புறப்பட்டனர்

ஷிவா : டேய் விஷ்ணு போகும்போது நெல்லையப்பர பாத்துட்டு போலாமா

விஷ்ணு : சரி டா
நெல்லையப்பர் கோவிலில்
அஸ்வினி : ஏ ஷக்தி மணி 9 டி சீக்கிரம் வாடி ஏன் இப்படி உக்காந்து இருக்க , அம்மா போன் பண்ணி என்ன காச்சி எடுக்குறாங்க நீ என்ன நா இங்க உக்காந்து நெல்லையப்பர சைட் அடிச்சிட்டு இருக்குற

ஷக்தி : இருடீ போகலாம் அங்க போய் என்ன பண்ண போறோம்

அஸ்வினி : என்ன பண்ண போறோமா , டி ஷக்தி இன்னிக்கு உன்ன பொண்ணு பாக்க வராங்க கொஞ்சமாவது பயம் இருக்கா உனக்கு

ஷக்தி : பயமா எதுக்குடி , காலேஜ்ல எத்தனை பேற சைட் அடிச்சிருப்போம் இப்ப பெருசுங்க முன்னாடி சைட் அடிக்கிறோம்னு அவ்வளவுதான்

அஸ்வினி: நீ இருக்கியே , சரி அந்த சைட் அடிக்க வாவது சீக்கிரம் போலாம் டி மாப்பிள்ளைக்கு ஒரு தம்பி இருக்குதாம் நானும் கொஞ்சம் சைட் அடிப்பன்ல .

இவர்கள் சம்பாஷனைகளை தூணிற்கு பின்னால் இருந்து கேட்ட ஷிவா வாயடைத்து நின்றான் . முதலில் யாரோ பேசுகிறார்கள் என்றுதான் கடந்து போக நினைத்தான் அனால் ஷக்தி என்ற அழைப்பில் ஆர்வமிகுந்தோட நின்று கேட்டவனுக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை .

கோவிலை விட்டு வெளியே வந்த ஷக்தி தனது பைக்கை எடுக்க வரும்போது ஒரு கார் அதுல இடிச்சிடுச்ச்சி அதை பார்த்த அஸ்வினி செத்தான் டா சேக்கர்னு சொல்லிட்டு ஷக்தியை பாத்தா அவ வேகமா அந்த கார் கிட்ட போயிட்டு இருக்கா

ஷக்தி : யோவ் கண்ணு என்ன பொடதீலையா இருக்கு , கீழ இரங்குயா
அப்போது கார் ஐ விட்டு கீழே இறங்கிய விஷ்ணு

விஷ்ணு : சாரி மேடம் தெரியாம இடிச்சிடிச்சி

ஷக்தி: தெரியாம இடிச்சிடுச்சா, கார் ஓட்ட தெரியாதவனெல்லாம் ஏன்யா வண்டிய எடுக்குற அறிவு வேணாம்

விஷ்ணு : ஹலோ என்ன ரொம்ப பேசறீங்க நான்தான் தெரியாம இடிசிடுசிச்சுன்னு சொல்லறன்ல

அப்போது அங்கு வந்த ஷிவா ஷக்தியையே பார்த்து நிற்க வசந்த் அவன் கையை கிள்ளி டேய் அவங்க சண்டை போடறாங்க நீ ஈ னு நிக்குற.

அஸ்வினி : ஷக்தி வீட்டுல இருந்து போன் வருது நாம சீக்கிரம் போகணும் சண்டை வேண்டாம்

ஷக்தி : இவன்லாம் ஒரு ஆளுன்னு இவன் கூட சண்டை போட நான் என்ன லூசா , இது டம்மி டி கொஞ்சம் டைம் பாஸ் பண்ணலாம் னு பாத்தன் , நமக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்ல . நீ பேசாம இரு இந்த லூசுகிட்ட இருந்து காசு வாங்கி நான் உனக்கு Magnum ice cream வாங்கித்தரன்

அஸ்வினி : ஷக்திஇஇஇ ஒரு ஆணியும் வேணாம் வாடி போலாம்

இவர்கள் சம்பாஷணைககள் துல்லியமாக ஷிவாவின் காதில் கேட்டன ஒரு மெல்லிய நகையோடு அவர்கள் அருகில் சென்று 500 ரூபாய் குடுத்து சாரிங்க என் நண்பன் தெரியாம இடிச்சிட்டான் பிரச்சனையா பெரிசு பண்ண வேண்டாம்.

ஷக்தி இருந்த அவசரத்தில் அவன் முகத்தை கூட பார்க்காது அவன் குடுத்த பணத்தை வாங்கி கொண்டு செல்லும் பொது ஷிவாவை நோக்கி

ஷக்தி : ஹலோ நீல சட்டை பாத்து போங்க பாஸ் உங்க நண்பர் மறுபடியும் எங்கயாவது வண்டிய விட்டுறப்போறார்.

தொடரும்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஷக்திமகிழ்வதனி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top