உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 14

Advertisement

உள்ளம் கொள்ளை போகுதடா
வைத்தியநாதன் இல்லத்தில்

காமாட்சி பாட்டி : அம்மாடி ஷக்தி வீட்டுக்கு மூத்த மருமகளா போய் விளக்கு ஏத்து மா. அஸ்வினி நீ இன்னொரு விளக்க ஏத்து சரியா.ஷக்தி மற்றும் அஸ்வினி இருவரும் விளக்கு ஏற்றி தங்கள் வாழ்க்கை நலமோடு இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டனர்.

தம்பதியருக்கு பாலும் பழமும் வழங்கினர் பெரியோர். வசந்த் குடித்த பாலை அஸ்வினி வெட்கத்தோடு குடித்துக்கொண்டிருந்தாள். ஷக்திக்கு மிகவும் தர்ம சங்கடமாக இருந்தது எப்படி ஷிவா உண்டதை எடுத்து கொள்வது என்று யோசிக்கும் வேளை.

ஷிவா : ஷக்தி முதல்ல நீங்க குடிச்சிட்டு எனக்கு தரீங்களா

ஷக்தி : ஆச்சரியமாக ஷிவாவை பார்த்துக்கொண்டு இருக்கும் போது

ஷிவாவின் உறவுக்கார பெண்கள் : அது எப்படி தம்பி நீங்க குடிச்சிட்டு தான் ஷக்திக்கு குடுக்கணும் அதுதான் முறையும் கூட

ஷிவா : இதுல என்னக்கா இருக்கு நான் வேற ஷக்தி வேற இல்லையே. எனக்கு ஷக்தி குடிச்சத குடிக்கணும் போல இருக்கு இதுல என்ன தப்பிருக்கு.
அனைவரும் ஷிவாவை கேலி செய்து சிரித்துக்கொண்டிருந்தனர். ஷக்தி விழியெடுக்காமல் ஷிவாவை பார்த்து கொண்டிருந்தாள்

வினோத் இல்லத்தில்

அம்பிகா : டேய் வினோத் ஷர்மி எங்க ஆள காணும்

வினோத் : ரொம்ப தலை வலிக்குது னு தூங்க போய்ட்டா மா

அம்பிகா : எது தூங்குறாளா ஏன்டா இங்க நம்ப சொந்தம் எல்லாம் வந்திருக்காங்க இவ தூங்கறாளா . போய் கீழ கூட்டிட்டு வாடா

வினோத் : ஷர்மி எந்திரி மா . அம்மா நம்ம ரெண்டு பேரையும் கீழ கூப்பிட்டாங்க சீக்கிரம் வா

ஷர்மி : வினு ப்ளீஸ் எனக்கு தூக்கமா வருது. உங்க அம்மாகிட்ட ஏதாவது சொல்லி சமாளியென்

வினோத் : விளையாடாத ஷர்மி எந்திரி .

வினோத் அசந்த நேரம் அவனையும் இழுத்து கொண்டு

ஷர்மி : என்ன வினு நான் இங்க இவ்வளவு அழகா படித்திருக்கன் நீ என்னடா நா கல்லையும் மண்ணையும் பாக்குற மாதிரி பாக்குற

வினோத் : அவள் அழகில் மயங்கி ஏன் செல்ல ஷர்மி , இன்னைக்கு ராத்திரி மாமனோட வித்தைய பாரு . இப்போ கீழ கூப்பிடறாங்க வா

ஷர்மி : வினு எனக்கு சீக்கிரமா குழந்தை பெத்துக்கணும்.

வினோத் : என் ஷர்மிகுட்டிக்கு அவ்வளவு ஆசையா. நீ இப்போதான மா காலேஜ் போற ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு நாம குழந்தை பெத்துக்கலாம் சரியா. அதுவரைக்கும் என்ன நல்ல கவனி.

ஷர்மி : இல்ல வினு நான் அந்த ஷக்தி அப்புறம் அஸ்வினிக்கு முன்னாடி குழந்தை பெத்துக்கணும். அப்போ தான் அப்பா, ஷிவா, வசந்த் எல்லாருக்கும் நான் முக்கியமா இருப்பன்.

வினோத்திற்கு ஷர்மியின் இந்த நினைப்பு சுத்தமாக பிடிக்கவில்லை இருந்தாலும் இதை பேசவேண்டிய நேரம் இது இல்லை என யோசித்து

வினோத் : இப்போ இதை பேசவேண்டாம் ஷர்மி . அம்மா கீழ கூப்பிடறாங்க வா போகலாம்

ஆதவன் மறைந்து நிலவு மங்கை உதிக்கும் நேரம் அலங்கரிக்க பட்ட அறையினுள் வினோத் ஷர்மிக்காக காத்துக்கொண்டிருந்தான். அழகான கருநீல வண்ண சேலையில் ஒப்பனைகள் மேலோங்க ஷர்மி வந்தாள். வினோத் அவளின் கரம்பிடிக்க அதில் கொஞ்சம் நடுக்கம் தெரிந்தது.

வினோத் : யாரோ சீக்கிரம் பிள்ளை வேணும்னு கேட்டாங்க இப்போ கை காலெல்லாம் உதறுது போல

ஷர்மி : (வெட்கம் மேலோங்க) வினு ப்ளீஸ், எனக்கு வெட்கமா இருக்குது

வினோத் : பட பட பட்டாசுக்கு வெட்கம் கூட வருமா
.
வினோத் ஷார்மியை நெருங்கி அணைத்து தான் அவள் மேல் கொண்ட காதலை தன் முத்தங்களால் புரிய வைத்துக்கொண்டிருந்தான்.

ஷிவாவின் இல்லத்தில்

ஷக்தியும் அஸ்வினியும் வந்திருந்த சொந்தங்களோடு அரட்டை அடித்து கொண்டிருந்தனர் . வசந்த் தன் அறையிலிருந்து வெளியே வந்து அஸ்வினியின் அரட்டையை காதில் புகை வரும் அளவிற்கு பார்த்து கொண்டிருந்தான் இதை கவனித்த காமாட்சி பாட்டி அவ்விடம் விரைந்து

காமாட்சி பாட்டி : அடியே குமரிகளா இங்க என்னடி அரட்டை அடிக்குறீங்க சீக்கிரமா அவ அவ அறைக்கு போய் எனக்கு கொள்ளு பேரனை பெத்து குடுக்குற வழிய பாருங்க சரியா
அஸ்வினியின் முகம் குங்குமமாய் செவந்து விட்டது. ஷக்தி இதை காதில் வாங்காதவாறு அமர்ந்திருந்தாள். உறவுக்கார பெண்கள் சிலர் அஸ்வினியை வசந்த் இருக்கும் அறைக்கு அழைத்து சென்று விட்டனர்.

ஷக்தி இன்னும் அந்த இடத்தை விட்டு அகலாமல் இருக்க காமாட்சி பாட்டி அவள் அருகினில் வந்து

காமாட்சி பாட்டி: ஷக்தி உனக்கு மட்டும் தனியா வெத்தலை பாக்கு வெச்ச்சு சொல்லனுமா சீக்கிரம் ஏன் பேரன் அறைக்கு போற வழிய பாரு
ஷக்தி அவரை முறைத்துக்கொண்டு ஷிவாவின் அறைக்கு சென்றாள்

காமாட்சி பாட்டி: அம்மாடி இவ என்ன இந்த மொறை மொறைக்குறா ஏன் பேரன் கதி என்னவோ

மிதமான மலர்களால் அலங்கரிக்கபட்ட அறையினில் மஞ்சள் வண்ண சேலை அணிந்து அஸ்வினி வந்த உடன் அந்த அறை கதவு வசந்த்தினால் தாழிடப்பட்டு இருந்தது. அஸ்வினி இதயம் பட படக்க மிரட்சியுடன் அவனை பார்த்து கொண்டிருந்தாள் .

வசந்த் : என்ன பாப்பா ரொம்ப பயன்படுது போல இருக்கே என்று அவளை வம்புக்கு இழுத்தான்

அஸ்வினி : ஹலோ என்ன அப்படி கூப்பிடாதீங்கன்னு உங்களுக்கு ஆயிரம் முறை
சொல்லிட்டேன் கேக்கமாடீங்களா

வசந்த் : பாப்பாக்கு கோவம் கூட வருமா

அஸ்வினி : கடவுளே அப்படி சொல்லாதீங்க

வசந்த் : (அவள் கரங்களை பற்றி கொண்டு) வேற எப்படி சொல்லணும் பாப்பா .

அஸ்வினி : எனக்கு பேர் இருக்கு அத சொல்லி கூப்பிடுங்க

வசந்த் தன் கரங்களால் அவள் கன்னம் பற்றி

வசந்த் : நான் உன்ன அப்படி கூப்பிடக்கூடாதுன்னா நான் சொல்லறதை நீ செய்யணும்

அஸ்வினி : என்ன செய்யணும்

வசந்த் : (விஷமமாக சிரித்து ) ரொம்ப சிம்பிள் நீ பாப்பா இல்லனு எனக்கு புரிய வெச்சிட்டு

அஸ்வினி : எப்படி

வசந்த் : இப்படி (அவள் இதழ்களை கொய்து கொண்டிருந்தான் மிகவும் வன்மையாகா)

முதலில் மிரண்ட அஸ்வினி பின்பு அவன் காதலில் பூரித்து போனாள்.

பட படக்கும் இதையத்தோடு ஷிவா குறுக்கும் நெடுக்குமாக அறையை அளந்து கொண்டிருந்தான். அப்பொழுது கரும்பச்சை புடவை அணிந்து கூந்தலில் மல்லிகை தவழ ஷக்தி அவன் அறைக்குள் அடி எடுத்து வைத்தாள். அவளை கண்டு ஷிவாவின் இதயம் பந்தைய குதிரையை விட வேகமாக ஓடியது.

ஷிவாவின் பார்வையின் தாக்கத்தை தங்க முடியாத ஷக்தி இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டிருந்தாள். ஷக்தியின் நிலையை அவள் கண்கள் பறைசாற்ற சன்னமாக சிரித்து கொண்டான் ஷிவா.

ஷிவா :
ஜான்சி ராணி மாதிரி இருக்குற ஷக்திக்கு பயம் கூட வருதுபோலயே

ஷக்தி : (கெத்தாக ) யாருக்கு பயம் நான் வரும்போது குறுக்கும் நெடுக்குமாக நடந்தது நீங்க. எனக்கு என்ன பயம்

ஷிவா :
(அவளை நெருங்கிய வாறு ) அப்போ பயம் இல்ல. ரொம்ப வசதியா போச்சு நான் கூட உங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்து இன்னும் கொஞ்ச நாள் ஏன் பிரம்மச்சரிய விரதத்தை கடை பிடிக்கணுமோனு நெனச்சன். நீங்களே தைரியமா இருக்கும் போது நான் ஏன் விரதத்தை கலைச்சிடவேண்டியது தான்.

ஷக்தி : (பின் நகர்ந்த வாறு ) அது அதுவந்து

ஷிவா : (தன் கரங்களை அணையாய் வைத்து அவளை சிறை பிடித்து) அதான் வந்துட்டனே . ஏன் விரதத்தை நான் கலைக்கலாமா

ஷக்தி திரு திரு என்று முழித்து கொண்டிருந்தாள். திருமணம் என்றாள் இதெல்லாம் சகஜம் என்று தெரியும் ஆனாலும் ஷிவாவிடம் பேசி கொஞ்சம் அவகாசம் வாங்க வேண்டும் என்பது அவள் எண்ணம் . ஆனால் அவனது அதிரடியில் மிரட்சியுடன் இருந்தாள். நூல் அளவு இடைவேளையில் அவளை நெருங்கி

ஷிவா : டைம் வேணுமா ஷக்தி

ஷக்தி இவ்வளவு நெருக்கத்தில் அவனை எதிர் கொள்ள முடியாமல் தலையை குனிந்த வாறு ஆமாம் என்றாள்.

அவள் ஆமாம் என்றதும் அவளை விட்டு ஷிவா விலகி விடுவான் என்று ஷக்தி எதிர் பார்க்க அவன் இன்னும் அதே போல் நின்று அவள் அழகை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

ஷக்தி : (வெட்கம் தாளாமல்) என்ன பார்வை ஒரு மாதிரி இருக்குது . கண்ணை புடிங்கிடுவன்

ஷிவா : (அட்டகாசமாக சிரித்து) ஒரு மாதிரி என்ன பல மாதிரி பாப்பேன் யார் என்ன கேக்குறது

ஷக்தி : ப்ளீஸ் அப்படி பாக்காதீங்க. எனக்கு ஒரு மாதிரி இருக்குது

ஷிவா : எப்படி இருக்குது , நான் உன்ன தொட கூட இல்ல. பாக்குரதுக்கே தடை போட்ட நியாயமா ஷக்தி. எனக்கு இப்பவே உன்ன கட்டிபுடிச்சி ஒரு kiss அடிக்கணும் போல இருக்குது நான் எவ்வளோ control ஆ இருக்குறன் தெரியுமா

ஷக்தி : நீங்க முதல்ல கொஞ்சம் தள்ளி இருங்க ப்ளீஸ்

ஷிவா : முடியாது. உனக்கு டைம் வேணும்னா நான் சொல்லறத கேப்பியா ஷக்தி

ஷக்தி : சரி கேக்குறேன் முதல்ல கொஞ்சம் தள்ளி இருங்க

ஷிவா : பேச்ச்சு மாறக்கூடாது

ஷக்தி : சரி

ஷிவா : hug and kiss me ஷக்தி

ஷக்தி : what

ஷிவா : உன்காதுல correct அ தான் விழுந்துச்ச்சு

ஷக்தி : என்ன விளையாடுறீங்களா. நான் மாட்டேன்

ஷிவா : நீயா hug and kiss பண்ணி தப்பிச்சுக்கோ ஷக்தி . நான் hug பண்ணினா நாளைக்கு யாராவது வந்து கதவை தட்டுற வர உண்ண விட மாட்டேன் . அப்புறம் உன் இஷ்டம்

ஷக்தி விழிகள் தெறித்து விடும் அளவு அகல விரித்து அவனை பார்த்துக்கொண்டிருந்தாள் .

ஷிவா : இன்னும் 2 seconds தான் உனக்கு டைம் . அப்புறம் என்னால என்ன control பண்ண முடியாது

ஷக்தி : நான் எப்படி உங்கள நம்புறதாம்

ஷிவா : உன்ன பாத்ததுல இருந்தே உன்ன நான் அணு அணுவா ரசிச்சிட்டிருக்குறன் ஆனாலும் ஏன் கைய control அ தான் வெச்சிருக்குறன். இதுக்கு மேல உன்னிஷ்டம்.

அவளை நெருங்கி அணைக்கும் நேரம் ஷக்தி ஷிவாவை அணைத்திருந்தாள் தன் கரங்கள் கொண்டு. சிறிது நேரத்தில் அவனை விட்டு விலகும் சமயம்

ஷிவா : நான் சொன்னதை முழுசா செய் ஷக்தி. you have to kiss me now.

ஷக்தி : இல்லங்க எனக்கு அதெல்லாம் வராது

ஷிவா : அப்போ சரி நான் உனக்கு சொல்லி தரேன். ஆனா உனக்கு எப்போ போதும்னு தோணுதோ என்ன நீ தான் விளக்கணும் இல்லனா இங்க நடக்குற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை.

என்று கூறி அவளின் முகத்தினில் தன் முத்த ஊர்வலங்களை தொடர்ந்தான். ஒரு எல்லைக்குமேல் ஷிவாவின் வேகத்தை தாங்க முடியாத ஷக்தி தன் கரம் கொண்டு அவனை தடுத்தாள்.

ஷிவா : சீக்கிரம் என்ன தடுத்துட்ட ஷக்தி. தினமும் இரவு இதே தான் இங்க நடக்கும். என்னைக்கு என்ன நீ தடுக்களையோ அண்ணைக்கு இந்த ஷிவா உன்மேல வெச்சிருக்குற காதல நீ முழுசா பாப்ப. அந்த நாள் சீக்கிரம் வரணும்னு வேண்டிக்கோ இல்லனா ஏன் வேகத்தை நீ தாங்க மாட்ட.

ஷக்தி : இப்போ இங்க என்ன நடந்துச்சி. புயல் அடிச்சி ஓஞ்ச மாதிரி இருக்குது.

ஷக்தியின் புலம்பலை கேட்டு மென்னகை புரிந்த ஷிவா நிம்மதியாக உறங்கினான். ஆனால் ஷக்தி தன் உறக்கத்தை தொலைத்து விழித்துக்கொண்டிருந்தாள்.

தொடரும்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஷக்தி மகிழ்வதனி டியர்

அட கண்ராவியே
காலேஜ் படிக்கிறதை விட்டுட்டு ஷர்மிக்கு குழந்தை வேணுமா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top