உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 13

Advertisement

உள்ளம் கொள்ளை போகுதடா
வைத்தியநாதன் பரமேஸ்வரி தம்பதியர் தன் மூன்று பிள்ளைகளின் திருமணத்தை கண்குளிர கண்டு பூரித்துஇருந்தனர். திருமண ஜோடிகள் தத்தம் துணையோடு புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர் வசந்த் புகைப்படம் எடுக்கும் சாக்கில் அஸ்வினியை ஒரு வழி செய்து கொண்டிருந்தான் இதை பார்த்துக்கொண்டிருந்த பரமேஸ்வரி அவர்களிடம் சென்று

பரமேஸ்வரி : இது என்ன பழக்கம் ஒரு தர ஒருத்தர் உரசிகிட்டு நின்னுகிட்டு எல்லாருக்கும் காட்டிச்சி பொருளாக்கணுமா , என்ன அஸ்வினி நீயாவது அவன்கிட்ட சொல்லக்கூடாது . கொஞ்சம் கூட கூச்சநாச்சமே இல்லாம ஏன் இப்படி நடக்கறீங்க. எங்க வீட்டு ஆளுங்க எல்லாம் என்ன நினைப்பாங்க. ஒழுங்கா கொஞ்சம் இடைவேளை விட்டு நில்லுங்க , என்ன புள்ளைங்களோ.

பரமவ்ஸ்வரி கூறியதை கேட்டு அஸ்வினிக்கு கண்கள் கலங்கி விட்டது அதுவும் அவர் கொஞ்சம் சத்தமாக பேசவும் அனைவருக்கும் தாங்கள் காட்சிப்பொருளாக ஆனது அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அஸ்வினினி கலங்கிய கண்களை பார்த்த ஷக்தி அவள் அருகினில் வர இன்னும் பரமேஸ்வரி முணுமுணுத்துக் கொண்டிருந்தார் . அதற்க்கு மேல் பொறுக்க முடியாத ஷக்தி

ஷக்தி : (உரத்த குரலில்) என்ன அச்சு அத்தை சொல்லறது கரெக்ட் தான நாம எப்பவும் மத்தவங்களுக்கு காட்சி பொருளா இருக்க கூடாது, கொஞ்சம் தலையை நிமிர்த்தி பாரு ஷர்மி எவ்வளவு அடக்கமா புகைப்படத்துக்கு போஸ் குடுக்கறா நீயும் அப்படிதான் இருக்கணும் புரியுதா.

ஷக்தியின் கூற்றை கேட்டு அஸ்வினி தலையை நிமிர்த்திய நேரம் ஷர்மி வினோத்தின் கன்னத்தில் முத்தமிட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தாள். அஸ்வினி வந்த சிரிப்பினை அடக்க முடியமால் கலகல வென சிரித்துவிட்டாள்.

பரமேஸ்வரிக்கு தலை இறக்கமாக போயிற்று. வந்த கோவத்தை எப்படி காட்டுவது என்று தெரியாமல் ஷக்தியை நோக்கி

பரமேஸ்வரி : என்ன ஷக்தி இன்னைக்கு தான உனக்கும் கல்யாணம் ஆகியிருக்கு ஏன் புள்ள கூட இல்லாம இங்க வந்திருக்க , போய் ஷிவா கூட நின்னு புகைப்படம் எடுத்துக்கோ. எல்லாம் நாந்தான் சொல்லனுமா

இவர்களின் சம்பாஷணைகளை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த ஷிவா அருகினில் வந்து என்ன என்று கேட்க

ஷக்தி : அது ஒன்னும் இல்லங்க அத்தை நம்ம ரெண்டு பேரையும் புகைப்படம் எடுத்துக்க சொல்லறாங்க

ஷிவா : அவ்ளோதானே வா போகலாம்

ஷக்தி : அதில்லங்க அத்தை புருஷன் பொண்டாட்டி உரசிகிட்டு போஸ் குடுக்கக்கூடாது னு சொன்னாங்க ஏன்னா உங்க அது உங்க குடும்ப பழக்கமில்லையாம் அதான் உங்க குடும்ப வழக்கப்படி ஷர்மி போஸ் குடுக்குற மாதிரி குடுக்கணுமா னு அத்தை கிட்ட கேட்டுட்டு இருந்தேன்.

ஷிவா இது என்னடா போட்டோ க்கு குடும்ப வழக்கமான்னு யோசிச்சு ஷார்மியை பார்த்தபொழுது முகம் சுழித்து குனிந்து கொண்டான்.

ஷிவா : என்னம்மா இதெல்லலம் ஷர்மி ஏன் இப்படி பண்ணறா. சம்மந்தி வீட்ல என்ன நெனப்பாங்க. கொஞ்சம் போய் அவகிட்ட சொல்லுங்க மா

பரமேஸ்வரி: நான் எப்படி டா அதெல்லாம் போய் சொல்லறது. மாப்பிள்ளை தப்பா நெனச்சிக்க போறாங்க

வசந்த் : எப்படி நா இப்போ எங்க கிட்ட வந்து எப்படி சொன்னீங்களோ அப்படிதான், சீக்கிரம் போங்க மா இல்லனா ஷர்மி மாமியாரும் உங்கள போல அவகிட்ட போய் சொல்லிட போறாங்க

பரமேஸ்வரி ஷர்மி அருகினில் சென்று

பரமேஸ்வரி : ஏண்டி ஏன் மானத்தை வாங்குற கொஞ்சம் அடக்கமா தான் இரேன் உங்க மாமியார் ஏதாவது நெனைக்க போறாங்க

ஷர்மி : ஏன் புருஷன் கிட்ட எப்படி நடக்கணும் னு நீ எனக்கு சொல்லாத மா . நானே அவரை எப்படி மலை இரக்கன்னு யோசிச்சிட்டு இருக்கேன். சின்னவாங்க நா அப்படிதான் இருப்போம் உனக்கு புடிக்கலைனா பாக்காத. இப்போ இடத்தை காலி பண்ணு.

மகளின் பேச்சில் சுருக்கென இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் சென்று வைத்தியநாதன் அருகில் உட்கார்ந்து கொண்டார். அவரின் கலங்கிய முகத்தை கண்ட வைத்தியநாதன் என்ன நினைத்தாரோ பரமேஸ்வரியின் கரத்தினை ஆதரவாக பிடித்து கொண்டார்.

பரமேஸ்வரி ஷர்மிஇடம் பேசும் சமயம் வினோத் விட்டால் போதும் என அந்த இடத்தை விட்டு ஓடி விட்டான். அவனுக்கு ஷர்மி இப்படி செய்வது சுத்தமாக பிடிக்கவில்லை சொன்னாலும் அவள் கேட்க வில்லை என்ன செய்வது என்று நினைத்திருந்த சமயம் அவனை காக்கும் ரட்சகனாக பரமேஸ்வரி வந்ததும் கும்பிடு போட்டு ஓடி விட்டான்.

ஷிவாவும் ஷக்தியும் அருகினில் நிற்கக்கூட தயங்கிய வாறு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர் அப்பொழுது விஷ்ணு மேடை ஏறி அனைவருக்கும் பார்க்குமாறு வாழ்த்துக்கள் ஷிவா போன மாசம் நீ எழுதின Bank Exam கு இன்னைக்கு ரிசல்ட் வந்திடுச்சி நீ பாஸ் பனிட்ட. இப்போதான் மெயில் வந்துச்சி. இனிமே நீங்க Bank officer ஷிவா. இன்னும் 10 நாள்ல சேந்துக்க சொல்லி ஆர்டர் வந்திருக்கு.

ஷக்தி : வாழ்த்துக்கள்

ஷிவா : Thanks ஷக்தி, டேய் விஷ்ணு இப்படி தான் எல்லார் முன்னாடியும் சத்தமா சொல்லுவியா தனியா சொல்லறதுக்கென்ன

அம்பிகா : அது ஏன் தம்பி தனியா சொல்லிக்கிட்டு . சந்தோஷமான விஷயத்தை எல்லார் முன்னாடியும் சொல்லறதுல்ல என்ன இருக்கு. ஷக்தி வந்த நேரம் உனக்கு யோகமான நேரம் தான் இனிமே உனக்கு எல்லாமே நல்லது தான் நடக்கும். ரொம்ப சந்தோஷம் பா. அம்மாடி ஷக்தி எங்க ஷிவா ரொம்ப நல்லவன் கொஞ்சம் கூட சூதுவாதே தெரியாது ஆயுசுக்கும் அவன் கையபுடிச்சி அவனை பாதரமா பாத்துக்கோமா

ஷிவா ஷக்தியின் கரம் பிடித்து இருவரின் பெற்றோர்களையும் ஒன்றாக நிற்க வைத்து ஆசீர்வாதம் வாங்க பெற்றவர்கள் பூரித்து போனர். அதன் பிறகு அனைவரும் ஷிவா விற்கு வாழ்த்து தெரிவிக்க வினோத்திற்கு தான் இன்னும் ஒரு வேளையில் சென்று அமர வில்லையே என்னும் எண்ணம் ஆழமாக மனதை தைத்தது.

அனைவரும் ஷக்தி வந்த நேரம் ஷிவா வாழ்க்கையில் உயரத்திற்கு சென்று விடுவான் என்று கூற. பரமேஸ்வரி கூட என் மகன் நல்ல நிலைமைக்கு போனால் எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் என்று பூரிப்போடு சொல்லிக்கொண்டார். இதெல்லாம் பார்த்த ஷர்மிக்கு அனைவரும் தன்னை விடுத்து ஷக்தியை புகழ்வது பிடிக்கவில்லை. வேகமாக ஷிவா அருகில் வந்து.

ஷர்மி : எங்க அண்ணன் கஷ்டப்பட்டு படிச்சதுக்கு பாஸ் ஆகியிருக்கு இதுக்கு ஏன் எல்லாரும் அவங்கள புகழுறீங்க .

ஷக்தி : அவங்க சொல்லறது சரி தான் இவங்க இந்த எக்ஸாம் எழுதினது கூட எனக்கு தெரியாது. இப்போ நல்லது நாடாததுனு எல்லாரும் என்ன கை காமிக்குறீங்க இதே தப்பா ஏதாகிச்சும் வந்தாலும் என்னைய காமிப்பீங்களா . ஆள விடுங்க பா எனக்கு ஒன்னும் தெரியாது.

ஷக்தி கூறியதில் அனைவருக்கும் சிரிப்பு வந்து விட பரமேஸ்வரி கூட சிரித்துவிட்டார். கூட்டம் கலைந்து அனைவரும் அவர்கள் இடத்திற்கு போக ஷக்தி ஷிவாவிடம்

ஷக்தி : நீங்க bank job join பண்ணினதுக்கப்புறம் இப்போ இருக்குற job vacant ஆகும்ல

ஷிவா : ஆமாம் , எதுக்கு கேக்குற

ஷக்தி : இல்ல தப்பா நெனச்சிக்காதீங்க உங்க தங்கச்சி வீட்டுக்காரருக்கு அந்த வேலைய வாங்கித்தறீங்களா. இந்த மண்டபத்திலே எல்லாரும் அவங்கள கேலி பேசுறாங்க. வினோத் சார் முகமே சரி இல்ல . ரொம்ப feel பண்ணற மாதிரி இருக்கு . உங்க மேலதிகரிக்கிட்ட நானே பேசிடுவேன் எனக்கு அவரை நல்லா தெரியும். இருந்தாலும் உங்க தங்கச்சிக்கு என்ன புடிக்கல போல இருக்கு அதான் நீங்க செஞ்சா தப்பா தெரியாதுல்ல

ஷக்தி தன் குடும்பத்தை பற்றி யோசித்தது ஷிவாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஷிவா : நான் முதலில் bank ல join பண்ணிக்குறன் ஷக்தி அப்புறம் இதை பத்தி எங்க மேலதிகரிக்கிட்ட பேசறேன்

அதன் பிறகு ஷிவா வினோத்தை அழைத்து ஷக்தி கூறியதை சொல்லி இந்த ஏற்பாட்டில் வினோத்திற்கு ஏதாவது மாற்றுக்கருத்து இருக்கா என்று கேட்க . வினோத் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்ன இருந்தாலும் அவனும் ஷார்மியை விரும்பி இந்த திருமணத்திற்கு சம்மதித்தான், வேலையில்லாதது ஒன்றே அவனுக்கு பெரிய குறையாக இருந்தது இப்பொழுது அதுவும் இல்லாமல் போக அவன் திருமண தருணங்களை ஷர்மியோடு அனுபவிக்க போனான். ஷக்தியிடம் நன்றியுரைக்கவும் மறக்கவில்லை.

தொடரும்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஷக்திமகிழ்வதனி டியர்

ஏன்மா பரமேஸ்வரியம்மா
எத்தனை தடவை அசிங்கப்பட்டாலும் நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களா?
வினோத்தின் நிலைமை அறிந்து ஷிவாவின் வேலையை இவனுக்கு வாங்கித் தர சொல்லும் ஷக்தி சூப்பர்
பட்டுத் திருந்த வேண்டியது ஷர்மிக்கு இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top