உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 11

Advertisement

உள்ளம் கொள்ளை போகுதடா
பரமேஸ்வரி: ஷிவா இந்த சம்மந்தம் நமக்கு வேண்டாம் பா

இவ்வளவு நேரம் இங்கு நடந்த களேபரத்தை வேலை முடித்து வந்த வைத்தியநாதன் பார்த்துக்கொண்டிருந்தார் இறுதியாக பரமேஸ்வரி கூறியதை கேட்டு

வைத்தியநாதன் : ஏன் பரமு இந்த முடிவுக்கு வந்த

பரமேஸ்வரி: ஷக்தி இப்படி வெடுக்குனு நம்ம பொண்ண பத்தி பேசினது எனக்கு புடிக்கலங்க , இப்பவே இப்படி நா இன்னும் வருங்காலத்துல எப்படியோ

வைத்தியநாதன் : ஷிவா ஷர்மி யார்கூட வந்தா னு நீ பாத்தியா

ஷிவா : அவ தோழிகள் கூட வந்ததா தான் ஏன் கிட்ட சொன்னா

வைத்தியநாதன் : ஷர்மி யாருகூட ஹோட்டல் கு போன

ஷர்மி : நான் ஏன் தோழிகள் கூட தான் போனேன் பா. அந்த ஷக்தி பொய் சொல்லறாங்க

பரமேஸ்வரி : பாத்தீங்களாங்க அந்த பொண்ணு பொய் சொல்லிருக்கு

வைத்தியநாதன்: ஷர்மி உண்மைய சொல்லு நானும் அங்க தான் இருந்தன்

இதை சற்றும் எதிர்பார்க்காத ஷர்மி ஒரு முடிவு எடுத்தவளாக

ஷர்மி : ஆமா பா நான் நம்ம வினோத் கூட தான் போனேன் அவன ஏன் தோழிகளுக்கு அறிமுகம் படுத்த தான் போனேன்.

வினோத் பரமேஸ்வரியின் ஒன்று விட்ட தம்பி மகன், படித்து முடித்து வேலை தேடி கொண்டிருப்பவன் கலகலப்பான பேர்வழி.

பரமேஸ்வரி : நம்ம வினோத் கூட தான போயிருக்கா இதுல என்ன தப்பு இருக்கு

வைத்தியநாதன்: பரமு நான் பேசி முடிக்குறவரைக்கும் நீ எதுவும் பேச கூடாது. சொல்லு ஷர்மி வினோத் எதுக்கு உன் தோழிகளுக்கு அறிமுகப்படுத்தனும், அப்படியே போனாலும் இப்போ நீ ஏன் பொய் சொன்ன

ஷர்மி : அப்பா அது ஏன் தோழிகள் நான் கட்டிக்க போறவர் யாருனு கேட்டாங்க அதான் வினோத் அறிமுகப்படுத்த கூட்டிட்டு போனன்

வைத்தியநாதன்: என்னது கட்டிக்கப்போறவரா நாங்க உனக்கு நிச்சயம் பண்ணினதா எனக்கு ஞாபகம் இல்லையே மா

ஷர்மி : நான் அவர தான் கட்டிப்பன், நீங்க சம்மதிச்சாலும் சரி இல்லனாலும் சரி

ஷிவா : ஷர்மி பாத்து பேசு நீ அப்பா கிட்ட பேசுற

ஷர்மி : நீ பேசாத ஷிவா எல்லாம் உனக்கு பாத்த அந்த ஷக்தியால தான் அப்பா என்ன குற்றவாளி போல கேள்வி கேக்குறாரு. அந்த ஷக்தி இந்த வீட்டுக்கு வேண்டாம் நான் சொல்லறது தான் முடிவு இந்த கல்யாணம் நடக்காது

பொறுமை இழந்த வைத்தியநாதன் ஷர்மி யின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்

வைத்தியநாதன்: என்ன வாய் ரொம்ப நீளுது ராஸ்கல், தப்ப உன் மேல வெச்சிக்கிட்டு ஏன் புள்ளியோட கல்யாணத்த நிறுத்த சொல்லுவியா. ஏன் புள்ள அவன் வாழ்க்கையிலே முதல் முறையா ஒரு விஷயத்துக்கு ஆசை படுறான், அம்மாவும் பொண்ணும் சேந்து அவன நோகடிக்குறீங்க வகுந்துருவன். இந்த கல்யாணம் குறிச்ச தேதியில் எந்த தடங்கலும் இல்லாம நல்ல பாடியா நடக்கணும்.

பரமேஸ்வரி : அப்போ அதுக்கு முன்னாடி ஏன் பொண்ணு கல்யாணத்த முடிக்கணும் அதுவம் ஏன் தம்பி புள்ள வினோத் தான் மாப்பிள்ளை இதுக்கு நீங்க ஒத்துக்கிட்டா ஷிவா வசந்த் கல்யாணத்துக்கு நானும் சம்மதிப்பன்

வைத்தியநாதன்: உனக்கென பைத்தியமா பரமு ஷர்மி இன்னும் காலேஜ் கூட முடிக்கல வினோத் ஒரு நல்ல வேலைக்கு கூட போகல இப்போ போய் கல்யாணம் னு சொல்லற

பரமேஸ்வரி : அதெல்லாம் எனக்கு தெரியாது அந்த ஷக்தி ஏன் பொண்ண பத்தி தப்பா பேசிட்டா அவளுக்கு முன்னாடி ஏன் பொண்ணு கௌரவம் எனக்கு ரொம்ப முக்கியம்

வைத்தியநாதன்: ஷர்மி கல்யாணத்துக்கு நான் ஒதுக்கல நா நீ என்ன பண்ணுவ

பரமேஸ்வரி : நாளைக்கே ஏன் பொண்ண கூட்டிட்டு போய் அவளுக்கு பதிவு திருமணம் செய்ய எனக்கு எவ்வளவு நேரம் ஆகும், உங்க மரியாதையை நீங்களே கெடுத்துக்காதீங்க. முறை படி ஏன் பொண்ணுக்கு கல்யாணம் செய்து வையுங்க அதுவும் அந்த ஷக்தி முகுர்த்தத்திற்கு முன்னாடி

ஷிவா : அம்மா வறட்டு பிடிவாதம் புடிக்காதீங்க மா. ஷர்மி இன்னும் சின்ன பொண்ணு வினோத் இன்னும் செட்டில் ஆகல அதுக்குள்ள அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்ச்சு தப்பு பண்ணாதீங்க

பரமேஸ்வரி : அப்படியா சரி ஷிவா , ஷர்மி கல்யாணத்த பத்தி நான் இப்போ பேசல ஆனா நீ உன் கல்யாணத்த நிறுத்துறியா

தன் தாயின் இந்த பரிணாமத்தில் ஷிவா ஸ்தம்பித்து நின்றான். அவன் பரிதவிப்பன முகத்தை கண்டு வைத்தியநாதனுக்கு வருத்தமாக இருந்தது ஒரு முடிவெடுத்தவராய்

வைத்தியநாதன்: பரமு இப்போ என்ன ஷர்மி கல்யாணம் நடக்கணும் அவ்வளவு தான நடக்கும், நீயே உன் தம்பி கிட்ட பேசிட்டு கல்யாணத்த முடிவு பண்ணிக்கோ ஆனா ஒன்னு ஷர்மி கல்யாணத்துல எந்த ஒரு விஷயத்தையும் நான் செய்ய மாட்டேன்

ஷர்மி : செய்ய மாட்டிங்களா அப்போ எனக்கு நகை சீர் இதெல்லாம் யாரு செய்யறதாம்

வசந்த் ஷர்மி யை ஒரு அற்ப புழுவைப்போல் பார்த்துவிட்டு

வசந்த் : நீ இவ்வளவு சுயநலவாதியா ஷர்மி , உன்கிட்ட இருந்து நான் இதை எதிர்பாக்கல

ஷர்மி : ஆமா நான் சுயநலவாதியாவே இருந்துட்டு போறான், நாளைக்கு உனக்கு வரப்போறவ நல்லா கழுத்து நெறைய நகையை போட்டு வருவா அப்புறம் ஷிவா கு பாத்திருக்குறவ கேக்கவே வேண்டாம் சரியான திமிர் புடிச்சவளா இருப்பா போல அவளுங்க முன்னாடி நான் ஒண்ணுமே இல்லாம நிக்க முடியுமா. எனக்கு சேர வேண்டியது எனக்கு வந்தே ஆகணும்.

பொறுமை இழந்த வைத்தியநாதன்

வைத்தியநாதன்: உனக்கு வர வேண்டிய நகை சீர் இதெல்லாம் எந்த குறையும் இல்லாம வரும் ஆனா இன்னொரு வாட்டி இந்த வீட்டுக்கு வாழ வரபோற மருமகளுங்கள பத்தி மரியாதை குறைவா நீயோ இல்ல உங்க அம்மாவோ ஏதாவது பேசினா அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.

இத்தனை களேபரங்களுக்கு இடையே மூன்று திருமணமும் ஒரே நாளில் நிச்சயிக்கப்பட்டது முதல் முகுர்த்ததில் ஷிவா - ஷக்தி அடுத்த முகுர்த்ததில் ஷர்மி - வினோத் அதன் பிறகு வசந்த் - அஸ்வினி. இதில் பரமேஸ்வரிக்கு தான் சற்று மனத்தாங்கல் முதலில் ஷர்மி - வினோத் க்கு தான் திருமணம் முடிக்க வேண்டும் என அவர் எதிர்பார்த்திருக்க ஜோதிடர் அடுத்த முகுர்த்தம் தான் அவர்கள் ஜாதகத்திற்கு உகந்தது என்று கூறி விட்டார்.

அன்றைய நாளிற்கு பிறகு ஷக்தியோ அஸ்வினியோ தங்கள் துணைகளிடம் பேசுவதே இல்லை. ஷக்தி 6 நாட்களும் ஷிவாவின் அலுவலகத்திற்கு வந்து தன் வேலையை முடித்துக்கொண்டு சென்றுவிடுவாள். ஒரு முறை ஷிவா அவளை சமாதான படுத்த முயன்ற போது திருமணம் வரை பேசாமல் இருப்பதே நல்லது என்று முடித்துக்கொண்டாள். ஷிவாவின் வாட்டமான முகத்தை பார்த்து விஷ்ணு என்ன வென்று விசாரிக்க, நடந்த அனைத்தையும் அவனிடம் கூறினான் ஷிவா.

விஷ்ணு : நீயா ஷிவா இவ்வளவு பிரச்சனைக்கு பிறகு இந்த திருமணத்தில் உறுதியா
இருக்க , இந்நேரத்திற்கு ஏன் அம்மா தான் முக்கியம் ஏன் தங்கச்சி தான் முக்கியம் னு சொல்லிருப்ப. என்னால நம்பவே முடியல டா

ஷிவா : இதே தான் அம்மாவும் ஷர்மியும் தினமும் என்ன கேக்குறாங்க எங்களை விட ஷக்தி முக்கியமானு நீயும் அதையே கேக்குற

விஷ்ணு : வருத்தப்படாத டா. நான் சும்மா விளையாட்டுக்கு தான் கேட்டான்

ஷிவா : நான் ஏன் ஷக்தியை தான் கல்யாணம் பண்ணனும் னு உறுதியோடு இருக்கன்னு எனக்கே தெரியல, ஆனா ஒன்னு அவங்கள தவிர வேற யாரையும் என்னால கல்யாணம் பண்ண முடியாது. உனக்கே என்ன பத்தி நல்லா தெரியும் ல நான் எப்பவும் எனக்காக யோசிக்குறவன் இல்ல மத்தவங்களுக்காக தான் யோசிப்பன், இதனால என்ன எல்லாரும் இளிச்சவாயன் னு சொல்லுவாங்க ஏன் நீ கூட என்ன கிண்டல் பண்ணிருக்குற. நான் ரொம்ப weak personality டா. என்ன பத்தி யோசிக்க எனக்காக தீர்க்கமான முடிவ எடுக்க ஷக்தி மாதிரி ஒரு strong personality தான் சரி. அவங்க ஏன் பக்கத்துல நின்னா கூட நான் ரொம்ப கம்பீரமா feel பண்ணுவன். இந்த ஷிவா வுக்கு ஷக்தி தான் எல்லாம் னு தோணுது. எந்த ஒரு காரணத்துக்காகவும் அவங்கள நான் தவற விடமாட்டேன்.

அதோ இதோ என்று திருமண நாளும் அழகாக விடிந்தது.

தொடரும்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஷக்திமகிழ்வதனி டியர்

அடக் கண்ராவியே
இவ்வளவு சுயநலமான பொண்ணுக்கு அம்மாவா இருக்கிற பரமேஸ்வரியெல்லாம் வாயே பேசக் கூடாது
ஒரு தப்பும் செய்யாத அடுத்த வீட்டுப் பெண்ணை இவள் பேசலாம்
தப்பு செஞ்ச இவளுடைய மகளை யாரும் ஒண்ணும் சொல்லக் கூடாதா?
என்ன நியாயம் இது?
இப்பவே இப்படின்னா கல்யாணம் ஆன பிறகு இன்னும் என்னென்ன கூத்து இருக்கோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top