உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 10

#1
உள்ளம் கொள்ளை போகுதடா
ஷிவாவின் இல்லத்தில்

பரமேஸ்வரி : இந்த வீட்ல என்ன நடக்குதுனே எனக்கு புரியல ஏன் புள்ளைங்க ஏன் கிட்ட இருந்து எல்லா விஷயங்களையும் மறைக்கறாங்க நான் என்ன அவளோ கொடுமைகாரியா

ஷிவா வீட்டினுள் நுழைகையில் அவன் காதில் விழுந்தது இந்த வசனமே

ஷிவா மனதினுள் : என்னடா இது நாம இப்போ தான் வரோம் ஷர்மி நம்ம கூட தான் வரா அதுக்குள்ள இந்த வசனம் எப்புடி

அங்கே பரமேஸ்வரி வசந்தை முறைத்து கொண்டிருந்தார், உள்ளெ வந்த ஷிவா வசந்த் அருகில் சென்று என்ன என்று வினவ அவன் பாவமாக முழித்துக்கொண்டிருந்தான்

ஷிவா : என்ன மா ஆச்சு

பரமேஸ்வரி: இந்த வசந்த் இருக்கான்ல அவன் அந்த பொண்ண அஸ்வினியை தினமும் அவ வேலை பாக்குற காலேஜ் ல கொண்டு விட்டுட்டு வரானாம்

ஷிவா மனதினுள் : அப்பாடா நமக்கு ஒரு கம்பெனி கிடைச்சாச்சு எங்க நம்ம மட்டும் தனியா சொற்பொழிவு கேக்கணுமோ னு நெனச்சிட்டு இருந்தேன் இது தான் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் போல

ஷிவா : அதுக்கு என்னமா

பரமேஸ்வரி : அதுக்கு என்னவா டேய் கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி வெளிய சுத்தரத யாரவது பாத்தா என்ன நெனப்பாங்க , இவனுக்கு தான் அறிவு இல்ல அந்த பொண்ணுக்குமா இல்ல . என்ன பொண்ண வளத்திருக்கங்களோ.

வசந்த் : அம்மா இப்ப ஏன் மா அவளை திட்டுறீங்க அவ வரமாட்டேன்னு தான் சொன்னா நான் தான் வறுபுறுத்தினேன்.

பரமேஸ்வரி : பாத்தியா ஷிவா இப்பவே அவளுக்கு வக்காலத்து வாங்குறான்

ஷிவா: நீங்க ஏன் மா இதை பெரிசு படுத்துறீங்க

பரமேஸ்வரி: என்னடா நீயும் இப்படி சொல்லற

அப்பொழுது ஷர்மி இடை புகுந்து

ஷர்மி: நல்ல ஆள கேடீங்க மா நியாயம் சொல்ல , இன்னைக்கு ஷிவா அவனுக்கு பாத்திருக்குற பொண்ணு கூட ஹோட்டல் ல லஞ்ச் சாப்பிட்டுட்டு இருந்தான் அவன் கிட்ட போய் நீங்க நியாயம் கேக்குறீங்க

பரமேஸ்வரி : என்ன ஷிவா இதெல்லாம் ஷர்மி சொல்லறது உண்மையா

ஷிவா : அம்மா ஷக்தி எங்க ஆபீஸ்க்கு ஒரு வேலையா வந்தாங்க அப்படியே நாங்க ரெண்டு பேரும் லஞ்ச் க்கு போனோம் இதுல என்னம்மா தப்பு

பரமேஸ்வரி : இனி உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல நான் பொண்ண பெத்தவங்க கிட்டயே பேசிக்கரன்

பரமேஸ்வரி லக்ஷ்மிக்கு அழைத்து

லக்ஷ்மி: நல்லா இருக்கீங்களா அண்ணி

பரமேஸ்வரி : நல்லா இருக்கன்

லக்ஷ்மி : சொல்லுங்க அண்ணி கல்யாண விஷயமா ஏதாவது பேசணுமா

பரமேஸ்வரி : கல்யாண வேலையெல்லாம் நல்லா தான் போய்ட்டுஇருக்குது ஆனா நடக்குற மத்த எதுவும் நல்லா இல்லங்க

லக்ஷ்மி : என்ன சொல்லுறீங்க கொஞ்சம் தெளிவா சொல்லறீங்களா

பரமேஸ்வரி : உங்க பொண்ணுங்க ரெண்டு பேரும் ஏன் பசங்கள கூட்டிட்டு வெளிய சுத்திட்டு இருக்காங்க நீங்க இதெல்லாம் கேக்க மாட்டிங்களா எங்க குடும்பத்துல இந்த பழக்கமெல்லாம் இல்லங்க. கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி ஜோடியா போறது தப்புனு உங்க பொண்ணுங்களுக்கு எடுத்து சொல்லுங்க.

லக்ஷ்மி : அது வசந்த் தம்பி தான் தினமும் நான் வந்து அச்சுவ காலேஜ்ல கொண்டுவிடறன்னு சொன்னங்க நாங்க கூட வேண்டாம் னு தான் சொன்னோம் ஆனா தம்பி வலியுறுத்தி கேக்கும் போது நாங்க எப்படி மறுக்கிறது. அப்புறம் ஷக்தி, மாப்பிள்ளை வேலை பாக்குற ஆபீஸ்ல இந்த ஒரு வாரம் வேலை இருக்குனு சொல்லிட்டு இருந்தா. மாப்பிள்ளை தான் ஷக்தி அப்பாக்கு கூப்பிட்டு கோவிலுக்கும் சாப்பிடறதுக்கும் போயிட்டு வரேன்னு கேட்டாங்க, எங்க பொண்ணுங்க எங்க கிட்ட சொல்லாம எந்த ஒரு விஷயத்தையம் செய்ய மாட்டாங்க. பெத்தவங்க கிட்ட மறச்சிட்டு எந்த வேலையும் செய்யணும் னு அவங்களுக்கு அவசியம் இல்ல நாங்க அவங்கள அப்படி வளக்கவும் இல்ல.

பரமேஸ்வரி : நல்லா பேசறீங்க என்கிட்ட ஒரு வார்த்தை கேக்கணும் னு உங்களுக்கு தோணலையா

லக்ஷ்மி : எங்க பொண்ணுங்கள மாதிரி தான் உங்க பசங்க உங்க கிட்ட கேட்டுட்டு தான் எல்லாம் செய்யறாங்கனு நாங்க நெனசிச்சோம் , ஏன் உங்க கிட்ட உங்க பசங்க சொல்லலியா (என்று ஒரு கூட்டு வைத்தார்)

பரமேஸ்வரி இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தார். அவர் முழித்து கொண்டிருந்த சமயம் ஷிவா கைபேசியை வாங்கி

ஷிவா : அத்தை நல்லா இருக்கீங்களா

லக்ஷ்மி : நல்லா இருக்கோம் மாப்பிள்ளை நீங்க நல்லா இருக்கீங்களா

ஷிவா : நல்லா இருக்கோம் அத்தை, அப்புறம் அம்மா பேசினதை தப்பா எடுத்துக்காதீங்க அவங்க கொஞ்சம் பழமை வாதி இதெல்லாம் எங்க தப்புதான் நானும் வசந்தும் அம்மா கிட்ட முன்னாடியே சொல்லிருக்கனனும் . நீங்க எதுவும் சங்கட படாதீங்க

லக்ஷ்மி : ஒன்னும் பிரச்சனை இல்ல மாப்பிள்ளை, ஆனா அண்ணி எங்க வளர்ப்ப பத்தி குத்தம் சொல்லற மாதிரி பேசிட்டாங்க அதுதான் கொஞ்சம் கஷ்ட்டமா இருக்குது.

இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை வீட்டிற்கு வந்த ஷக்தி கேட்டு விட்டு

ஷக்தி : அம்மா அவங்க இன்னும் லைன்ல இருக்காங்களா

லக்ஷ்மி : ஆமாம்டா

ஷக்தி : கொஞ்சம் இப்படி குடு

லக்ஷ்மி : ஷக்தி கொஞ்சம் பாத்து பேசுடா

ஷக்தி : ஷிவா சார் கொஞ்சம் உங்க மொபைல் ல ஸ்பீக்கர் ல போடுறீங்களா

ஷிவா : ஷக்தி என்ன சார் னு சொல்லறீங்க

ஷக்தி : இல்ல சார் நமக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் நான் சார் நே கூப்பிடுறேன் அது தான் நல்லது

ஷிவா : ஷக்தி ப்ளீஸ் இப்படி பேசி ரொம்ப ஒதுக்கி நிறுத்தாதீங்க

ஷக்தி : தயவு செய்து உங்க மொபைல் ல ஸ்பீக்கர் ல போடுறீங்களா

மொபைல் ல ஸ்பீக்கர் ஆன் செய்தான் ஷிவா

ஷக்தி : அத்தை நான் பேசறது உங்களுக்கு கேக்குது னு நெனக்கிறேன், உங்க புள்ளையோட ஆபீஸ்ல எனக்கு ஒரு 6 நாள் வேலைஇருக்குது அதுக்காக நான் அங்க கண்டிப்பா போய்தான் ஆகணும் ஆனா இனிமே உங்க புள்ளைகிட்ட நான் பேசமாட்டேன் அப்புறம் நாளைல இருந்து அஸ்வினியும் அவ காலேஜ்க்கு அவளே போய்க்குவா உங்களுக்கு இப்போ சரி தான அத்தை.

பரமேஸ்வரி : சரி தான் ஷக்தி நீ இதை சரியா எடுத்துக்கிட்டது ரொம்ப சந்தோஷம் , நான் ஏன் இதை சொல்லறனா நாளை பின்ன என்ன இந்த பொண்ணுங்க கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி ஜோடி போட்டு சுத்துதுங்க னு உங்க அப்பா அம்மாவ தான் எல்லாரும் குறை சொல்லுவாங்க உங்க வீட்ல எப்படியோ ஏன் வீட்டு மருமகளுங்கள யாரும் ஒரு குறை சொல்ல கூடாதுல்ல இந்த வீட்டு கௌவரவம் இனிமே உங்க கிட்ட தான் இருக்கு புரியுதா (சற்று அதிகாரமாகவே கூறினார்)

ஷக்தி : ரொம்ப நல்லாவே புரியுது அத்தை உங்க வீட்டு கௌவரவத்தை இனிமே நாங்க பத்திரமா பாத்துக்குறோம், ஒரு மாமியாரா நீங்க எனக்கு சொன்னதை ஒரு அண்ணியா நான் ஷர்மி கிட்ட சொல்லிடுறேன்.ஷர்மி நீங்களும் அங்க தான் இருக்கீங்க னு எனக்கு தெரியும், அத்தைய பாத்தீங்களா கல்யாணம் நிச்சயம் ஆனா நாங்களே ஜோடியா எங்கயும் போக கூடாது னு சொல்லறாங்க ஆனா இன்னைக்கு நாங்க போன அந்த ஹோட்டலுக்கு நீங்க ஒரு பையனோட வந்தீங்க அது உங்க நண்பனா இருந்தாலும் இனிமே அப்படி வராதீங்க அப்புறம் அத்தை மாமா வளர்ப்பை தான் எல்லாரும் குத்தம் சொல்லுவாங்க. ஊருல இருக்குற பொண்ணுங்களுக்கெல்லாம் வக்கணையா சொற்பொழிவு ஆத்திட்டு அவங்க பொண்ண ஒழுங்கா வளர்களையே னு சொல்லுவாங்க புரியுதா ஷர்மி.

ஷக்தி இப்படி பட்டென பேசுவாளென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. என்ன பேசுவதென்று பரமேஸ்வரி திகைத்து நின்றார்.

ஷக்தி : மாமாவை கேட்டதா சொல்லிடுங்க அத்தை நான் அப்புறம் பேசறான்

வசந்த் மனதினுள் : இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே அடேங்கப்பா அண்ணி வாழ்க இவ்வளவு நேரம் இந்த அம்மா நம்மள வாட்டிட்டு இருந்தாங்க இப்போ என்ன பண்ணுவாங்க.

பரமேஸ்வரி : ஷிவா இந்த சம்மந்தம் நமக்கு வேண்டாம் பா

தொடரும்
 
#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஷக்திமகிழ்வதனி டியர்

பரமேஸ்வரிக்கு ஷக்தி நல்லா செமத்தியா பதிலடி கொடுத்தாள்
ஹா ஹா ஹா
அதானே
ஷக்தியையும் அஸ்வினியையும் பேசுற பரமு தன் பெண்ணை ஒழுங்கா வளர்க்கணுமில்லே
அச்சோ
இவளுடைய தப்பை ஷக்தி எடுத்து சொன்னதும் கல்யாணத்தையே பரமேஸ்வரி நிறுத்தப் பார்க்கிறாளே
 
Last edited:

Deephi

Active Member
#4
Nammakju vara marumagal Namma solratha ketkanum. Namma petha ponnu eppadi venalum irukkala. Intha maamiyarkalellam irukkangala athibayangaravathigal.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement