உறவும் பிரிவும் உன்னாலே P7

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
images (19).jpg

கதிர்வேலனிடம் கேட்டு அவர்கள் சென்னை செல்லுமன்றே அவனும் சென்னை செல்ல ட்ரையின் டிக்கட் போட்டவன் அவர்களோடு ரயில் ஏறி இருக்க, கௌஷிக்கு சாப்பிட அது இது என்று எல்லாவற்றையும் வாங்கிக் குவிக்கலானான்.

"இவ்வளவு எதுக்கு மாப்புள?" இந்திரா வேண்டாமே என்ற தொனியில் கேட்டிருந்தாலும் முகத்தில் சந்தோசம் அவ்வளவு பிரதிபலித்திருந்தது.

"கௌஷிக்கு மட்டும் இல்ல அத்த, உங்களுக்கு பிடிக்கும்னு தான் வாங்கிட்டு வந்தேன் சாப்பிடுங்க" மாமியாரின் தலையில் ஐஸ் வைக்கலானான் ஷக்தி.


"சாப்பிடு கௌஷி... மாப்புள எவ்வளவு ஆசையா வாங்கிட்டு வந்திருக்காரு" இந்திரா மகளிடம் ஒரு பாக்கெட்டை கொடுக்க,


"இப்ப ஒன்னும் சாப்பிட முடியாதுமா... வேணாம்" நாசுக்காக மறுத்து பார்த்தாள்.

அது சக்தியின் காதில் விழுந்ததுதான் விதி.

அவனுக்கும் தெரியுமே அவன் வாங்கிக் கொடுத்ததினால்தான் அவள் சாப்பிடாமல் இருக்கின்றாள் என்று. கதிர்வேலன் வாங்க செல்லும் பொழுது அவரை தடுத்து அவன் சென்றது எதற்காம்? இவளுக்காக தான் எல்லாம் செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே, "என்ன இப்படி பிடிவாதம் பிடிக்கிறாள். இதற்கே இப்படி என்றால்? மற்றதற்கு? கூடாதே" என்றவனின் மனம் பாடிக்கொண்டிருக்க அதை அடக்கியவாறு

"என் பொண்டாட்டிக்கு நான் ஊட்டி விட்டாதான் சாப்பிடுவாளாம் அத்த, இது உங்களுக்கு புரியல பாருங்க" என்றவாறே வந்து கௌஷியின் அருகில் அமர்ந்து கொண்டது மாட்டுமல்லாந்து வாயை திறக்கும்படி அவளை இம்சிக்கலானான்.



images (1).jpg
"இவ்வளத்தையும் சாப்பிட்டா வாமிட்தான் வரும்" கடுப்பாகி கௌஷி சொல்ல

"விட்டா அடுத்த மாசமே வாந்தி எடுக்க வச்சி இருப்பேன். எங்க என் கஷ்டத்தை யாரும் புரிஞ்சிக்கிற மாதிரி தெரியல"

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
 

MaryMadras

Well-Known Member
அருமையான pc மிலா:love::love::love:.இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மிலா:love::love::love::love:.
ஷக்தி ஐஸ் வச்சதுல இந்திரா மாப்பிள்ளை வாங்கி கொடுத்தது கௌசியு சாப்பிட சொல்லுது:unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
பஸ்மிலா டியர்

ம்க்கும்
இவன் ஊட்டி விடலைன்னுதான் கௌஷி இங்கே அழுதாளாக்கும்

கௌஷியை வாந்தி எடுக்க வைக்குற மூஞ்சி மொகரையைப் பாரு
தாலியைக் கட்டிட்டு ஓவியாவைத் தேடி ஓடின ஷக்தி பரதேசி பேசுவதைப் பாருங்கப்பா

ஏமாந்துடாதே கௌஷி ஏமாந்துடாதே
தாலி கட்டின கையோடு அம்மா லொம்மா பின்னாடி போன இவனை நம்பாதே
நம்பவே நம்பாதே

ஆறு வருஷம் கழிச்சு உன்னைத் தேடி வந்ததுக்கு என்ன காரணம்ன்னு தெளிவா தெரிஞ்சுக்கிட்டு கொஞ்சம் சுத்தல்ல விட்டுட்டு அப்புறமா ஷக்தியுடன் பேசு, கௌஷி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top