உறவுகள்

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#1
"உதிரத்தின் பிணைப்பில் வரவில்லை
உள்ளம் கொண்ட
உன்னத அன்பில்
கிடைத்த அரிய பொக்கிஷம்"


"அன்னையாய் அரவணைக்க
அழகான ஒரு அன்னை"


"ஆறுதல் கூறி தேற்றிட தான்
தேவதையாய் அக்கா"


"ஆசி வழங்கிட
ஆனந்தம் தந்திட
அன்பான அப்பா"


"தயக்கங்கள் ஏதும் இன்றி
தங்கையாய் ஏற்றுக்கொண்ட
தங்கமான அண்ணங்கள்"


"இவையெல்லாம் கிடைத்திட நான்
என்ன தவம் செய்தேனோ"


"முறையான அறிமுகம் இல்லை
முன் பின் பார்த்ததில்லை
பாசம் மட்டுமே பிரதானமாய்
அதில் நனைகிறேன் நான் சந்தோஷமாய்"


"இரத்தத்தில் வந்த உறவுகள் கூட
ஒதுங்கி நிற்கையிலே
தங்களின் கூட்டிற்குள்
இடம் தருகிறது
அன்பால் வந்த உறவு"


"உரிமை கோபம் கொண்டிட
செல்ல சண்டை போட்டிட
உதவிகள் பல புரிந்திட
என் உள்ளத்தையும் அறிந்திட
உறவுகள் உடனோடு
சிரித்து பேசும் பொழுதுகளில் தான்
சிறகின்றி பறக்கிறேன் நான்"


"ஜென்மம் பல வேண்டும்
உடையாத எங்கள் உறவுகள் உடன் வர வேண்டும்"


வேண்டிய வரம் அது கிடைக்குமா?
 
Advertisement

New Episodes