உறவால் உயிரானவள் teaser 4

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி டீஸர். UD Sunday தரேன்.


749f251309bac1264a1dcbe46742ddd8.jpg

"என்ன இது ரெண்டு பொம்பளைங்க மட்டும் இருக்காங்க? ஆம்பளைங்க இல்லாத வீடா?" மேனகை வேண்டுமென்றே கேக்க, ஆதித்யா பதில் சொல்ல முன் வானதியே சொல்லலானார்."என் கணவரும், கார்த்தியின் அப்பாவும் இராணுவத்தை சேர்ந்தவங்க இல்லையா? திடீரென அவங்களால வரமுடியல" அத்தோடு பேச்சை வானதி நிறுத்தி விட்டு அனைவருக்கும் அருந்த குளிர்பானம் கொடுக்க,"கார்த்தி எங்க அத்த?" ஆதித்யா தான் கேட்டான்.அவனின் "அத்த" என்ற விழிப்பிளையே முகம் மலர "ஒரு முக்கியமான கேஸ் விஷயமா கமிஷ்னரை பாக்க போய் இருக்கான். இப்போ வந்துடுவான்"வந்த நேரத்திலிருந்தே வரளி நாயகியின் கண்கள் வானதியை எடை போட்டுக் கொண்டிருந்தது. படித்த மேதாவி என்று முகத்தில் எழுதி ஒட்டி இருக்க, திமிரும், ஆணவமும் நிறைந்தவளா இருப்பாளோ!"அது சரி உங்க வீட்டு ஆளுங்க, மாப்புள வீட்டு ஆளுங்க யாராச்சும் ஆம்புளைங்க இருக்கணுமில்ல?" மேனகை தான் வாயை திறந்தாள்."எதுக்கு பாக்கு வெத்தலையை போட்டு குதப்பி இங்க இருக்குற பூச்சாடில துப்பவா?" சீனு மேனி வலிக்காமல் சொல்ல மேனகை அவனை முறைக்க ஆருத்ரா அன்னையை முறைக்கலானாள்."அம்மா வாய முடி கிட்டு அமைதியா இருக்குறதென்றா இரு. உன்னால ஏதாவது பிரச்சினை வந்து என் கல்யாணம் நின்னு போச்சு னு வை ஓடுகாலிய பெத்தவ என்ற பேருதான் உனக்கு வரும்" அன்னையை அடிக்குரலில் மிரட்டினாள் ஆருத்ரா.

"இவங்க யாரு?" ராணியை காட்டி கர்ண விஜயேந்திரன் கேக்க

TwoA.jpg

"நான் தத்தெடுத்த அம்மா" என்றவாறே வந்த கவி ராணியின் அருகில் அமர்ந்து கொள்ள அங்கே ஆதியையும் ஆருவையும் கண்டு திகைத்து நின்றாள். அடுத்த நொடி கவி ஆருவை முறைக்க, ஆரு கவியை முறைக்கலானாள்."என்ன சொல்லுறா இவ?" என்ற ஆராய்ச்சி பார்வை தான் அனைவரிடமும். ஆதி ராணியை பற்றி சுருக்கமாக தாத்தா, பாட்டியிடம் எடுத்துக் கூற, கவியை வரளி நாயகிக்கு கொஞ்சம் பிடித்துப் போனது."ஓஹ் அப்போ அன்னைக்கி கார் கீ இந்த தக்காளியை எங்கயோ பாத்திருக்கேன் என்று பிட்ட போட்டு என் கிட்ட அவளை காதலிக்கிறதா சொல்லத்தான் பார்த்தானா? நான் தான் அது தெரியாம இவளை திட்டி அவன் வாய அடச்சிட்டேனா? கவியின் எண்ணம் இவ்வாறே இருந்தது.ஊர் கதைகளையும், ஆரு, கவியின் படிப்பை பற்றியும் பேச்சாக இருந்ததே ஒழிய யாரும் கல்யாண பேச்சை ஆரம்பிப்பதற்கு தெரியவில்லை. கார்த்திக் வேறு வர தாமதமாக ஆருவின் பதட்டம் கூடிக்கொண்டே போனது.
 
#4
அம்மோ இந்த ஆருத்ரா லேசுப்பட்ட ஆளில்லை போலவே, மிலா டியர்
மேனகை அம்மாவுக்கும் இது
தேவைதான்

அந்த டொமட்டோவை லவ்ஸ்
பண்ணுறேன்னு உன்கிட்ட
வந்து போலீஸ்கார் கார் சாவி சொல்லங்காட்டியும் உனக்கென்னம்மா அவசரம், எம்மெல்லே பொண்டாட்டி
கவிலயா?
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement