உறவால் உயிரானவள் P27

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
images (13).jpg

"ஐயோ... முடியலடா சாமி... இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல, வர சொன்னாலும் வர சொன்னான் பகல்ல வர சொல்லி இருக்கக் கூடாது" சீனு ஆலமரத்தடியில் கார்த்திக்கோடு பதுங்கி அமர்ந்தவாறு அவனை கடிக்கும் கொசுக்களை அடித்தவாறே புலம்ப,



"டேய் கத்தாதேடா... உன் சவுண்டால அந்தாளு வராம போய்ட போறான்"



"நா வேணா ஒரு கொசுவாத்திய பத்த வைக்கட்டுமா?" ஆரு அன்பாக கேட்க


images (46).jpg
"ஏன் நாங்க இங்க இருக்குறத நெருப்பு வச்சி காட்டி கொடுக்க போறியா? பாசமலர் படம் ஓட்டாம அண்ணனும் தங்கச்சியும் வாய்மூடிக்கிட்டு இருக்கணும்" கார்த்திக் அதட்ட சீனு புலம்ப ஆரு அந்த இருளிலும் கார்த்திக்கை முறைத்தாள்.

images (3).jpg

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது உள்ளே வந்த வாசு ஆதியிடம் ஒரு கவரை கொடுக்க "என்னடா இது யாரு அனுப்பினாங்கனு எந்த டீடைலும் இல்ல மொட்டை கடுதாசியா?" என்றவாறே அதை பிரிக்க குமரகுருவிடமிருந்து வந்திருந்தது அந்தக் கடிதம்.



வந்திருந்தது என்பதை விட அவரே நேரில் வந்து ஜமீன் தபால் பெட்டியில் போட்டுவிட்டு சென்றிருந்தார்.



வணக்கம்



என் பெயர் குமரகுரு. நீங்கள் சுபாஷ் சந்திரனுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதாக கேள்விப்பட்டேன். உங்களை சந்திக்க வேண்டும், இன்றிரவு பத்து மணியளவில் நெடுஞசாலையிலுள்ள ஆலமரத்துக்கு அருகில் இருக்கும் டீக் கடைக்கு தனியாக வரவும்.



குமரகுரு

images (11).jpg

"என்னடா இது? சின்னபுள்ளத்தனமா இருக்கு? யாரவது உன்ன போட்டுத்தள்ள பிளான் பண்ணிட்டாங்களோ? லெட்டரை கொண்டு வந்தவன் உள்ளேயே வந்து பேசிட்டு போய் இருக்கலாம். அத விட்டுட்டு டி கடைக்குவா பஜ்ஜி சாப்பிடலாம்னு. எனக்கென்னமோ சரியா படல"கடிதத்தை பறித்து படித்த சீனு தாடையில் கை வைத்தான்.


images (10).jpg

ஆதியின் போன் அடிக்கவே எடுத்துக் பார்த்தவன் புது நம்பராக இருக்கவும் ஒருவேளை குமரகுரு புது எண்ணிலிருந்து அழைப்பதாக எண்ணியவன் இயக்கி காதில் வைக்க



"ஹலோ மிஸ்டர் ஆதித்ய விஜயேந்திரனா பேசுறது?" என்றது அந்த குரல்



"ஆமா நீங்க?"



"சுபாஷ் சந்திரன்"



ஒருகணம் திகைத்தாலும் மறுகணம் சாதாரணமான குரலில் "சொல்லுங்க மிஸ்டர் சுபாஷ்"



"கார்த்திக் சார் பக்கத்துல தானே வண்டி ஒட்டிக்கிட்டு வராரு? போன ஸ்பீக்கர்ல போடுங்க"



ஆதியும் ஸ்பீக்கரில் போட்டவாறு கார்த்திக்கு வண்டியை நிறுத்த சொல்ல கார்த்திக்கும் வண்டியை நிறுத்தினான்.



"என்ன மிஸ்டர் ஆதித்யா என்ன ரொம்ப நோண்டுறீங்க போல, இப்போ உங்க ஊர்ல உங்க ஜமீனுக்கு காலேஜுக்கு போற வழில புதுசா ஒருத்தன் தள்ளுவண்டில ஜூஸ் பார் திறந்திருக்கிறானே அவனை பத்தி விசாரிச்சீங்களா?"



கார்த்திக்கும், ஆதியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள சுபாஷ் தொடர்ந்தான்.



"உங்க பி. ஏ. சீனிவாசன் வண்டிய நிறுத்தி ஜூஸ் வாங்கிகிட்டு நிக்கிறாரு, உங்க பாட்டியும், உங்க மனைவி, கார்த்திக் மனைவி மூணு பேருமே வண்டில இருக்காங்க, ஜூஸ் விக்கிறவன் சீனு வயித்துல கத்திய சொறுவுவானோ! இல்ல பெரிய வண்டி ஏதாவது வந்து உங்க குடும்பம் உக்காந்து இருக்கும் வண்டிய மோதுமோ! தெரியல பாத்துக்கோங்க, சொல்லிட்டேன்" என்றவன் அலைபேசியை துண்டித்திருக்க ஆதிக்கு பதட்டம் கூடியது.



"ப்ரோ ரிலாக்ஸ் குரைக்கிற நாய் கடிக்காது" கார்த்திக் ஆதியை சமாதானப்படுத்த முனைய,



"முதல்ல வண்டிய எடு" கத்தினான் ஆதி.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
செம செம செமயான டுவிஸ்ட்டு,
டுவிஸ்ட்டு மிலா ராணி
சுபாஷ் சந்திரனை குறைவாக எடை போட்டுட்டியே, கார்த்திக் போலீஸு
இப்போ ஆதி குமரகுருவைப் பார்க்கப் போவானா?
இல்லை புள்ளைத்தாய்ச்சி பொஞ்சாதியைக் காப்பாற்றப் போவானா?
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
செம செம செமயான டுவிஸ்ட்டு,
டுவிஸ்ட்டு மிலா ராணி
சுபாஷ் சந்திரனை குறைவாக எடை போட்டுட்டியே, கார்த்திக் போலீஸு
இப்போ ஆதி குமரகுருவைப் பார்க்கப் போவானா?
இல்லை புள்ளைத்தாய்ச்சி பொஞ்சாதியைக் காப்பாற்றப் போவானா?
மூன்று பகுதிகளாக பிரித்து பதிவிட்டேன் அதான் மூன்று நிறம். அப்படியாயின் ஆதி குமரகுருவை சந்தித்து விட்டான். அதை அறிந்த சுபாஷ் கொதித்து விட்டான்.:p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top