உயிரே உன் உயிரென நான் இருப்பேன் teaser 12

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ்

28வது அத்தியாயத்திலிருந்து....

download (8).jpgScreenshot_20190329-234214_Instagram.jpg

"எந்திரி டி"



"நாளைல இருந்து கத்துக்கிறேன் டா. இன்னைக்கி மட்டும் தூங்குறேன்"



"கும்பகர்ணன் கூடவே பொறந்த மாதிரி தூங்குறாளே! இவள"



"போலீஸ்காரன் பொண்டாட்டி மாதிரி பேசுடி. ஆபத்து எப்பொவேனா வரலாம். கடவுள் புண்ணியத்தால ஒரு தடவ தப்பிச்ச. அவரு ரொம்ப பிஸி எந்த நேரமும் உன்னையே பாத்து கிட்டு இருக்க முடியுமா?"

"அவர் எவ்வளவு பிசி என்றாலும் எனக்காக வருவாரு. இல்லையா உன்ன அனுப்புவாரு" சாதாரணமாக கூறியவள் திரும்பி படுத்துக்க கொள்ள, அவளை அள்ளி அணைத்து அலேக்காக தூக்கிகைகளில் ஏந்தி இருந்தான் தீரமுகுந்தன். பொறுமையை இழந்தவன் அவளிடம் பேசிப்பார்க்க, தக்க பதிலை சொல்லி விட்டு தூங்குபவளை என்ன செய்ய



அவளும் அவனின் கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டவள் நெஞ்சில் புதைந்துக் கொண்டு கண்மூடி தூங்கலானாள்.



தீரன் பிங்கியை தூக்கியவாறே கீழே வர ஆயிஷா என்னமோ ஏதோ என்று பதற கண்களாலேயே சத்தம் செய்ய வேண்டாம் என்று சொன்னவன் அவளை தூக்கிக் கொண்டு வெளியே செல்ல அஜய்யும் விஜய்யும் ஸ்கூபியோடு விளையாடிக் கொண்டிருக்க அவர்களை தண்டி சென்று பின்னாடி கட்டி இருந்த சிமெண்ட்டிலான தண்ணீர்தொட்டி நீர் நிறைந்த்து வழிந்து கொண்டிருக்க பிங்கியை அதில் தூக்கி போட்டான்.



திடீரென விழவும் "ஐயோ அம்மா" என்று கத்தியவாறே தொட்டியின் அடியில் மூழ்கி வெளியே வந்தவள் தண்ணீரும் குடிபட்டு வாயாலும், மூக்காலும் வர திணறியவாறே தொப்பலாக நனைந்திருக்க, ஒருபுறம் அதிர்ச்சியும் மறுபுறம் கோபமும் போட்டி போட முகத்தை அழுத்தித் துடைத்தவள் தீரமுகுந்தனை முறைக்கலானாள்.


"அழகா இருக்க அப்படியே இரு ஒரு செல்பி எடுத்துக்கலாம்" வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கியவன் கிண்டலாக சொல்ல



நனைந்த கூந்தலை ஒதுக்கியவள் செல்பி என்றதும் புன்னகைத்தவாறே தொட்டியின் விளிம்பில் வந்து அமர்ந்து கொண்டவளின் எண்ணமெல்லாம் அவனை இழுத்து தொட்டியில் விழ வைப்பதே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top