உன் கண்ணில் என்னை கண்டேன் final epi (26)

Advertisement

Karthikpriya

Active Member
உன் கண்ணில் என்னை கண்டேன்
26


சிறிது நேரம் அவர்களை காக்க வைத்த மருத்துவர் வெளியில் வந்து சுரேஷ் பிழைத்துவிட்டதாக கூறினார். இதற்காகவே காத்திருந்த வர்ணா பட்டென்று கண்ணை திறந்து வானத்தை நோக்கி ஒரு கும்பிடு போட்டாள். பின் வேகமாக வந்து சித்தார்த்தின் அருகில் நின்று அவனின் கையை சந்தோஷமாக கோர்த்துக்கொண்டாள்.

சுரேஷின் மனைவி இதை கேட்டதும் தடாலென மருத்துவரின் காலில் விழுந்து, “ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். எங்கள அனாதை ஆக்காம கப்பாத்திடீங்க. இல்லனா நாங்க நிற்கதியா தெருவில் தான் நின்றிருக்கனும்” என்று மண்டியிட்டவாறே அழுதார்.

வேகமாக அவரை எழுப்பிய மருத்துவர், “நாங்க எங்க கடமையை தான் மா செய்தோம். அப்படியே நீங்க நன்றி சொல்லனும்னு ஆசை பட்டால் இந்த எதிர்கால டாக்டர்ஸ்க்கு தான் நன்றி சொல்லணும். அவங்க தான் சரியான முறையில் முதலுதவி கொடுத்து அழைத்து வந்தார்கள்.” என்று கூறியவாறே இவர்கள் அருகில் வந்த மருத்துவர்,

“ஹாய் யங் சார்ம்ஸ், சீக்கிரம் படிப்ப முடிச்சுட்டு இவர்களுக்கு சேவை செய்ய வாங்க. இப்போ அது தான் மக்களுக்கு தேவை” என்று பாராட்டிவிட்டு சென்றார்.

சுரேஷின் மனைவியும் இவர்களிடம் நன்றி கூறிவிட்டு தன் கணவனை பார்க்க குழந்தைகளுடன் உள்ளே சென்றார்.

மன நிம்மதியோடு வெளியில் வந்த வர்ணாவும் சித்தார்த்தும் மெளனமாக சாலையில் இறங்கி நடந்தார்கள்.

“ எல்லாம் முடிந்தது வர்ணா. இப்போ நீ ஒரு உயிரை காப்பாற்றி இருக்க” என்று பெருமையாக கூறி அவளை பார்த்தான்.

“ஆமாம் நானும் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கேன்.” என்று கண்ணில் நீர் வழிய கூறிவிட்டு தன் கையை உயர்த்தி பார்த்தாள். அவளின் கை முழுவதும் சுரேஷின் ரத்தம் படர்ந்திருந்தது.

சந்தோஷமாக சித்தார்த்தை பார்த்து, “எனக்கு இப்போ எதை பார்த்தும் பயம் இல்ல சித்து. எனக்கு இப்போ இந்த ரத்தத்தை பார்த்து மயக்கம் கூட வரல!” என்று கூறி அவனின் இரு கைகளை தன் கைகளால் பிடித்துக்கொண்டு சந்தோஷமாக கூறுகிறாள்.



ஒரு மாதம் கழித்து முதல் செமெஸ்டரின் ரிசல்ட்ஸ் வந்தது. அதில் சித்தார்த் தான் கிளாஸ் டாப்பர். மொத்தம் நூறு மாணவர்களில் வர்ணா முதல் பதினைந்து பேரில் ஒருவளாக வந்தாள். அவளுக்கு இப்போது ரத்தத்தை கண்டு எந்த விதமான பயமும் இல்லை. இதை அறிந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அதிசயித்தனர். செல்லும் வழியில் அவளை பார்ப்பவர்கள் பாராட்டி சென்றனர். சிறிது நாட்கள் சென்றதும் இது மற்றவர்களுக்கு மறந்துவிட அவரவர் வேலையை தொடர்ந்தனர்.



பதினைந்து வருடங்கள் கழித்து ஒரு பிரபல மருத்துவமனையில் ஒரு கிரிட்டிகளான இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் படபடப்பாக நடந்துகொண்டிருந்தனர்.

அப்போது லண்டனில் தன் படிப்பை முடித்த சிறந்த இதய மருத்துவர் வந்து கொண்டிருந்தார். மற்ற மருத்துவர்கள் விரைந்து சென்று அந்த கைராசியான மருத்துவரை வரவேற்று சிகிச்சை நடக்கும் அறைக்குள் தகுந்த உடையுடன் அழைத்து சென்றனர்.

சிறிது நேர காத்திருப்புக்கு பின் அறுவை சிகிச்சை முடிந்து வெளியில் வந்த வர்ணா, “பேஷண்ட் இஸ் சேப்” என்று நிம்மதியோடு கூறினாள்.


பதினைந்து வருடங்களுக்கு முன் வர்ணாவும் சித்தார்த்தும் மீதம் இருந்த ஐந்து வருட படிப்பை முடித்தனர். அந்த நேரத்தில் விஜயாவுக்கு லண்டனில் வேலை விஷயமாக செல்ல வேண்டி இருந்தது அதனால் வர்ணாவையும் அவளின் மேல் படிப்பிற்கு லண்டன் அழைத்து செல்ல விரும்பினார். சித்தார்த்தும் உடன் வருவதாக ஒரு மனதுடன் முடிவாக விமர்சையாக அவர்களின் திருமணத்தையும் முடித்து மற்ற முறைகளையும் முடித்து மூவரையும் லண்டன் அனுப்பி வைத்தார்கள்.

அங்கு சென்றவர்கள் இதய அறுவை சிகிச்சை நிபுணராக விருப்பி மூன்று வருட படிப்பான MD இன் ஜெனரல் மெடிசின் முடித்து பின் மூன்று வருடம் DM இன் கார்டியோலஜி முடித்தனர்.
இங்கு ரம்யா பீடியாட்ரிஷன் ஆக விரும்பி MD இன் பீடியாட்ரிக்ஸ் முடித்து வேலையில் இருந்தாள். நிலா மகப்பேறு மருத்துவராக விரும்பி அதில் MD இன் ஆப்ஷ்டட்ரிக்ஸ் அண்ட் கைனகாலஜி படித்து முடித்து தனியாக கிளினிக் தொடங்கி நடத்திவருகிறாள்.

தற்போது இருவரும் திருமணம் முடிந்து ஆளுக்கொரு குழந்தையுடன் இருக்கிறார்கள். ரம்யா தான் ஆசை பட்டது போல் ராகுலை தங்கள் பெற்றோரின் அனுமதியோடு திருமணம் செய்துகொண்டாள்.

நிலா தங்கள் சீனியரான ராஜேஷை குடும்ப விருப்பத்தின் கட்டாயத்தில் திருமணம் முடித்து இப்போது இருவரும் இயல்பை புரிந்து சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார்கள்.

லண்டனில் வர்ணாவும் சித்தார்த்தும் நல்ல மருத்துவமனையில் வேலை கிடைக்கவே இருவரும் தாங்கள் விரும்பியது போல் ஒன்றாக வேலையில் சேர்ந்தனர். அதன் பிறகே குழந்தை பிறப்பை பற்றி யோசிக்க தொடங்கினர்.

அடுத்த வருடம் யாஷ்வின் என்னும் அழகான ஆண் குழந்தை பிறந்தான். இரு வருட அனுபவத்திற்கு பிறகு தங்களின் கனவு மருத்துவமனையை இந்தியாவில் திறக்க விரும்பினர்.

அதே நேரம் வர்ணா திரும்பவும் தாய்மை அடையவே அவளை விஜயாவின் பொறுப்பில் விட்டுவிட்டு அடிக்கடி இந்தியா வந்து தங்கள் கனவு மருத்துவமனையை ஆரம்பிக்கும் பணியை தொடர்ந்தான் சித்தார்த்.

அடுத்த வருடம் தங்களின் இரண்டாவது மகனான நான்கு மாத டக்ஷித்துடன்(dakshith) இந்தியா செல்ல முடிவு செய்தனர். ஆனால் வர்ணாவுக்கு இந்தியாவிலிருந்து அவசரமாக ஒரு அறுவை சிகிச்சைக்கான அழைப்பு வரவே அவள் அவர்களுக்கு முன் இந்தியா வந்திருந்தாள். அதனால் இப்போது சித்தார்த் மற்ற வேலைகளை முடித்து தன் குடும்பத்தோடு இந்தியா வந்து இறங்கினான்.

வர்ணா, வெங்கட், சேகர், அமுதா, பிரேம், அவனின் மனைவி இந்து, சுபத்ரா, அவளின் கணவர் தரணி மற்றும் இரு குழந்தைகளான தருணிகா மற்றும் தேவக்ரிஷ்ணாவுடன் ஏர்போர்ட் வந்து சேர்ந்தார்கள்.

வர்ணா தன் குழந்தைகளை கண்டதும் வேகமாக அருகில் சென்றாள். இவளை நோக்கி ஓடிவரும் மூன்று வயது யாஷ்வினை தூக்கிக்கொண்டாள். அமுதா டக்ஷித்தை வாங்கி கொண்டார்.

அவர்கள் இந்தியா வந்து சேர்ந்த ஒரு வாரம் கழித்து லிங்கா கார்டியாக் கிளினிக்கை திறந்தனர்.

வர்ணா மற்றும் சித்தார்த் தாங்கள் விரும்பியது போல் வாழ்வில் பல தடைகள் வந்தும் அதனை கடந்து சாதித்து சேர்ந்து பயணிக்கிறார்கள்.
.
PSX_20201013_002233.jpg சுபம்
 

Attachments

  • PSX_20201013_002333.jpg
    PSX_20201013_002333.jpg
    176.7 KB · Views: 1

umamanoj64

Well-Known Member
கதை மிக அருமை..
நல்ல கரு.. பாஸிட்டிவ் அப்ரோச்...
Spelling mistakes
Paragraph alignment
Bold letters
இதெல்லாம் பார்த்து அப்டேட் போட்டிங்கனா இன்னும் கதை தெளிவாக இருக்கும்...
முதல் கதை போல இல்லாமல் நல்லா கொண்டு போனீங்க கார்த்திக் பிரியா.. வாழ்த்துக்கள்(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top