உன் கண்ணில் என்னை கண்டேன் epi 01

Advertisement

Karthikpriya

Active Member
உன் கண்ணில் என்னை கண்டேன்

1

ரம்யமான மாலை பொழுது அந்த விசாலமான விளையாட்டு மைதானத்தில் வர்ணா ஒரு சிறுவனை அடித்துக்கொண்டு இருக்கிறாள். அங்கு விளையாடி கொண்டு இருந்த மற்ற பிள்ளைகள் அனைவரும் வந்து அவளை தடுக்கிறார்கள். ஆனால் யாராலும் அவளை தடுக்க முடியவில்லை. அவர்கள் அனைவரையும் தள்ளி விட்டுவிட்டு அவள் அந்த பையனைf அடிக்க போகிறாள்.

சிறிது நேரத்தில் அங்கு விளையாட வந்த சித்தார்த் அங்கு என்ன கூட்டம் என்று பார்க்க வருகிறான்.அங்கு இருந்த அனைவருuம் ஒரு பெண்ணை தடுத்து கொண்டு இருப்பதை பார்க்கிறான். ஒரு சிறுவன் ஓரமாக நின்று அழுது கொண்டு இருந்தான். யார் தடுத்தும் கேக்காமல் அவள் அவனை அடிக்க வருகிறாள். சித்தார்த் இடையில் வந்து அவனை மறைப்பது போல் நிற்கிறான்.அவளுடைய இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்து “என்ன பிரச்சனை” என்று கேட்கிறான்.

வர்ணா, “நான் கஷ்டப்பட்டு எனக்கு வந்த பால(ball ) போர்ஸ் கொடுத்து அடிச்சேன். கண்டிப்பா six போய் இருக்கும். ஆனால் நடுவில் வந்து இவன் கேட்ச் பிடிச்சிட்டான். அதுகூட பரவாயில்லை போகட்டும்னு விட்டா இவன் என்னை அவுட்னு சொல்றான் ஸ்டுபிட்.” அருகில் இருந்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். அவர்களை இவள் முறைத்ததும் அமைதி ஆகிவிட்டார்கள்

சித்தார்த், “கேட்ச் பிடிச்சா அவுட் தான் பா. “ என்று பொறுமையாக பதில் கூறுகிறான். வர்ணாவும் சிறிது நேரம் யோசித்து பார்த்துவிட்டு “அப்போ அவன் மட்டும் 10mins விளையாடி முடித்த பிறகு தானே அவுட் சொன்னாங்க. நான் விளையாடும் போது மட்டும் first ball அடிச்ச உடனே அவுட் சொல்லிவிட்டார்கள்”. என்று அவனை பார்த்து பாவமாக கேட்கிறாள்.

சித்தார்த்தும் கிரிக்கெட் ரூல்ஸ் பற்றி 5 நிமிடம் விவரிக்கிறான். இவளும் சரி சரி என்று தலையை ஆட்டுகிறாள். கூட்டத்தில் இருந்த அனைவரும் இவளை பார்த்து “இவ்வளவு நேரம் குதிச்சிட்டு இருந்தா இப்போ மட்டும் அமைதியா கேக்கறத பாரு” என்று பேசிக்கொள்கிறார்கள். சித்தார்த் சொல்லும் அனைத்தையும் அமைதியாக கவனித்த வர்ணா, “எல்லாம் ஓகே ஆனால் நானும் 10 நிமிடம் விளையாடிவிட்டு தான் பேட்டை கொடுப்பேன்.”. என்று பேட்டை (bat) தன்னுடைய முதுகிற்கு பின்னால் மறைக்க முயல்கிறாள்.
இதை கேட்ட அனைவரும் “கடவுளே காப்பாற்று” என்று வேண்ட ஆரம்பித்தார்கள். இதை கண்ட சித்தார்த்தும் சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு. “என்னிடம் புதிய பேட் ஒன்று இருக்கு நாம் இருவரும் 10 நிமிடம் தனியாக விளையாடிவிட்டு பிறகு வந்து இவர்களிடம் சேர்த்து விளையாடலாம்” என்று அழைத்தான் செல்கிறான். அங்கு இருந்த அனைவரும் அவனுக்கு நன்றி கூறுகிறார்கள். சித்தார்த்தும் சிரித்து கொண்டே செல்கிறான்.

சிறிது தூரம் சென்ற சித்தார்த் . “நீ என்ன கிளாஸ் படிக்கிறாய்? ” என்று கேட்கிறான். வர்ணா, “நான் 4th std படிக்கிறேன். நீ என்ன கிளாஸ் படிக்கிறாய்? என்று கேட்கிறான்.
“நானும் 4th தான்.எந்த ஸ்கூல் ” என்று பதிலுக்கு கேட்கிறான் சித்தார்த்.
வர்ணா “பாரத் மெட்ரிகுலேஷன் ஸ்கூல். நீ? ” என்று கேட்கிறாள். சித்தார்த் “நானும் தான் ஆனால் நான் நாளைக்கு தான் சேர போகிறேன். நேற்று தான் திருச்சியில் இருந்து வந்தோம்.” என்று கூறுகிறான்.

வர்ணாவும், “ஹே ஜாலி ஜாலி. அப்போ ரெண்டு பேரும் நாளையில் இருந்து ஒன்றாக செல்லலாம்” என்று சந்தோஷமாக கூறுகிறாள். பிறகு “நேற்று வந்த லாரி முழுக்க இருந்தது உங்க திங்ஸ் தானா?” என்று கேட்கிறாள். சித்தார்த்தும் “ஆமாம்” என்று சிரித்து கொண்டே கூறுகிறான். சிறிது தூரம் வந்ததும் சித்தார்த் வாட்சில் 10mins டைமர் செட் செய்து விட்டு பேட் கொடுக்கிறான். வர்ணாவும் சிரித்துவிட்டு விளையாடுகிறாள். அலாரம் சத்தம் கேட்டதும் வர்ணா பேட்டை கொடுக்கிறாள்.

சித்தார்த் திரும்பவும் கிரிக்கெட் ரூல்ஸ் பற்றி சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்குறான்.
வர்ணா உடனே “மொக்க போடாத டா. பொறுமையா போக போக எல்லாம் கற்றுக்கொள்ளலாம். ஒன்றும் அவசரம் இல்லை. வா போய் அவங்கள டிஸ்டர்ப் பண்ணலாம்” என்று அவனை இழுத்து கொண்டு ஓடுகிறாள். சித்துவும் சிரித்து கொண்டே அவள் பின்னால் ஓடுகிறான்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "உன் கண்ணில்
என்னைக் கண்டேன்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கார்த்திக்ப்ரியா டியர்
 
Last edited:

Karthikpriya

Active Member
:D :p :D
உங்களுடைய "உன் கண்ணில்
என்னைக் கண்டேன்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கார்த்திக்ப்ரியா டியர்
ரொம்ப நன்றி பானு mam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top