உன்மத்தமானேன் பெண்ணே உன்மேலே - 2

Advertisement

vinomalar

New Member
அத்தியாயம் 2


ரிஷி காரை சாலை ஓரமாய் நிறுத்தியதும் சற்று நேரம் மூவருக்குள்ளும் அமைதி நிலவியது. முற்றிலும் இறுகி போயி அமர்ந்திருந்தான் ரிஷி. அண்ணனின் நிலையை பற்றி நன்கு அறிந்த அபி என்ன சொல்லி சமாதான படுத்துவது என்று புரியாமல் தவித்தான். அப்போது பாவனா மெல்ல “ஹலோ” என்று சொல்ல. அண்ணனின் வேதனை மீண்டும் கிளறிய விட்டவள் மீது கோவம் வர அமைதியாய் இருந்தான் அபி.

லைன் கட்டாகி விட்டதோ என்று நினைத்த பாவனா மீண்டும் “ஹலோ ...... ஹலோ....” என்க, கோவம் கொண்ட அபி இணைப்பை தூண்டித்தான்.

பாவனா மீண்டும் அழைக்க, அந்த சத்ததில் நினைவுக்கு வந்த ரிஷி, அபி அழைப்பை துண்டிக்கும் முன் ஃபோனை வாங்கி அழைப்பை ஏற்றான்.

அபியின் கோவத்துக்கு பயந்து மெல்ல ஹலோ என்றாள் பாவனா.

“சாரி பவி……. நானும் உங்களை கஷ்ட படுத்திட்டேன். எனக்கு முடியல பவி, மூச்சு முற்ற மாதிரி ஆகிடுச்சு.. அதில் இருந்து தப்பிக்க தான் நான் போனேன். என்னை நானே திடபடுத்திக்க கொஞ்சம் டைம் தேவை பட்டது அவளோதான். இனிமே இங்க உங்க எல்லாரோடும் தான் இருப்பேன். ஐ பிராமிஸ்.” என்றான் உணர்ச்சி வசபட்ட குரலில்.

ரிஷி சொன்னதை கேட்ட அபி பாவனா இருவருக்குமே அவன் வேதனை புரிய கண்கள் கலங்கின. ‘ச்ச... சந்தோஷமா பேசியவனை இப்படி வேதனை பட வைச்சுட்டோமே’ என்று நினைத்த பாவனா, நிலைமையை சீராக்கும் பொருட்டு, “ஹலோ பாஸ்..... என்னமோ நீங்களா பிரியப்பட்டு என்க மேல இருக்கிற பாசத்தில் திரும்பி வந்த மாதிரி பேசறீங்க...... உங்களை நாங்க வர வைச்சிருக்கோம்..... இல்ல இல்ல நான் வர வைச்சிருக்கேன். அதுக்காக தான் உங்க லூசு தம்பியை கல்யாணம் பன்னிக்க சம்மதிச்சேன். அதை தெரிஞ்சுகொங்க.” என்று சொல்ல, ரிஷி மெல்ல சிரித்தான்.

அண்ணனின் சிரிப்பை கண்ட அபி சமாதானமாலும், தன்னை லூசு என்று பாவனா சொன்னதை கேட்டு கோவமாக, “அடி பாவி!!! எங்க அப்பா எனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்னு சொல்றார்ன்னு ஒப்பாரி வைச்ச உன் மேல பரிதாப பட்டு உன்னை கல்யாணம் பன்னிக்க ஓகே சொன்னேன் பாரு நான் லூசு தான்.” என்றான்.

“அத தான் அபி நானும் சொன்னேன். அத நீயும் இப்படி ஒபென்னா ஒத்துகிட்ட பாரு, உன்னை நான் பாராட்டுறேன்.” என்று பாவனா சொல்ல.

“ஓவரா பேசாதடி..... நீ தான் லூசு, என்னை புடிச்ச இம்சை, காட்டெரி எல்லாம் நீ தான். என்னையவ லூசுன்னு சொல்ற, இப்போ சொல்றேன் கேட்டுக்கோ, இந்த கல்யாணம் நடக்காது. நீ உங்க அப்பா பாக்கற டைட்டான மாப்பிள்ளையே கட்டிக்கோ. நானாவது தப்பிபேன்..” என்றான் அபி.

“டேய்!!! அபி..... என்ன பேசறன்னு யோசிச்சு பேசு.... இப்போ எனக்காக தானே ரெண்டு பெரும் இப்படி சண்டை போடற மாதிரி நடிக்கிறீங்க... நான் நார்மல் ஆகிட்டேன் சோ ரெண்டு பெரும் உங்க நடிப்பை கொஞ்சம் நிறுத்துங்க.” என்று ரிஷி சொல்ல.

“அப்....பா நார்மல் ஆகிட்டியா...... எவ்வளவு பெர்ஃபார்மன்ஸ் பண்ண வேண்டி இருக்கு. ஸ்‌ஸ்‌ஸ்..... ப்பா... முடியல...” என்று வடிவேலு பாணியில் அபி சொல்ல. மற்ற இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.

தம்பியை சீண்டி பார்க்க நினைத்த ரிஷி, “ஆனா அபி என்னதான் இருந்தாலும் நீ பவியை டேவில்ன்னு சொல்லி இருக்க கூடாது. அவளை பார்த்தா டேவில் மாதிரியா இருக்கு”.என்று ரிஷி சீரியசாக கேட்க.

“நான் எப்போ அப்படி சொன்னேன்.” புரியாமல் கேட்டான் அபி.

“பவி கால் பண்ணும் பொது சொன்னியே. திங்க் ஆஃப் தி டேவில் அண்ட் தி டேவில் கால்ஸ் யு ன்னு” என்று ரிஷி நமட்டு சிரிப்புடன் சொல்ல.

“என்னது நான் டேவில்லா !!!!” போனில் பாவனா கோவமாக கேட்டாள்.

பாவனாவின் கோபக் குரலில் பதறிய அபி, “டேய் நான் எங்க அப்படி சொன்னேன், திங்க் ஆஃப் தி ஏஞ்சல்ன்னு தானே சொன்னேன். வனிம்மா இவன் பொய் சொல்றான் நம்பாத ” என்றான்.

“சரி நான் பொய் சொல்றேன் ஓகே.. இப்போ கொஞ்சநேரம் முன்னாடி பவி உன்னை லூசுன்னு சொன்னதுக்கு பதில் நீயும் அவளை லூசுன்னு சொன்னதோட நிக்க வேண்டியது தானே எதுக்கு இம்சை , ரத்த காட்டெரி ன்னு எல்லாம் சொன்ன???.” கேட்டான் ரிஷி.

“அது தானே......” என்று பவி கேட்க.

“என்ன அது தானே.... நான் வெறும் கட்டெரின்னு தான் சொன்னேன்...” என்று சொல்லிய பின் தானே உலறியதை உணர்ந்து நாக்கை கடித்து கொண்டான் அபி. இதை கேட்ட ரிஷி சத்தமாக சிரிக்க..

“நான் கட்டெரியா??” பாவனா பல்லை கடிக்க.

“சச்ச..... அப்படி எல்லாம் இல்ல வனிம்மா.”

“மகனே நீ நேரில மட்டுவல்ல அப்போ இருக்குடா உனக்கு.”

“நான் சொல்லறத்தை கேளு செல்லகுட்டி” என்று அபி சொல்லிக்கொண்டிருக்கும் போதே பவி அழைப்பை தூண்டித்தாள்.

“வனிம்மா...... வனி... வ....வைச்சுட்டாளா..... அய்யோ கடவுளே!!! இப்போ என்ன பன்றது....” என்று அபி சலித்துக்கொள்ள. ரிஷி அடக்கமாட்டாமல் சிரித்தான்.

அண்ணனை முறைத்த அபி, “டேய்!!!அண்ணா!!! பன்றது எல்லாம் பண்ணிட்டு இப்போ சிரிக்கிறியா!!! இன்னும் ரெண்டு நாள்ல எனக்கு கல்யாணம். இப்போ போயி இப்படி கோத்துவிட்டு இருக்கியே இது உனக்கே நல்ல இருக்கா??. இப்போ எப்படி அவளை சமாதான படுத்த போறேன்னு தெரியல....” என்று புலம்பினான்.

“அது எல்லாம் பார்த்துக்கலாம் விடுடா.....”என்று ரிஷி சொல்ல.

“என்ன விடுடா... இப்போ நான் அவளை எப்படி மலையிறக்கறது??.”

“ரொம்ப நடிக்காதடா..... பவியை சமாளிக்க உனக்கு சொல்லியா தரணும்.” என்றான் ரிஷி.

இதை கேட்டதும் தன்னவளை சமாதான படுத்தும் விதத்தை நினைத்து அபி சிரித்துவிட, ரிஷியும் புன்னகையித்தபடி காரை எடுத்தான் ரிஷி.

இருவரும் வீட்டை அடைந்த பொது, வசுமதி, மித்ரெஷ்வரன், அமிர்தா மூவரும் வாசலிலே ரிஷிக்காக காத்திருந்தனர். முழுதாய் 3 வருடங்கள் கழித்து நேரில் காணும் தன் மகனை வாஞ்சையுடன் வரவேற்றார் வசுமதி. அன்னையை கண்டதும் அந்த ஆறு அடி ஆண்மகன் சிறு பிள்ளை போல ஓடி சென்று அணைத்துக்கொண்டான். வசுமதியும் தன் செல்ல மகனை அனைத்து உச்சி முகர்ந்தார். பின் தன் தந்தையிடம் செல்ல., மித்ரெஷ்வரன் மகனை ஆர தழுவிகொண்டார்.

“ஹலோ ப்ரதர் !!!! நானும் இங்க தான் இருக்கேன்.” என்று அமிர்தா சொல்ல. புன்னகையுடனே தன் செல்ல தங்கையை அணைத்துக்கொண்ட ரிஷி, “எப்படி இருக்க அம்மு??” என்று வினவினான்.

“நான் நல்லா இருக்கேன் அண்ணா.” என்று புன்னகையுடனே சொன்னாள் அமிர்தா.

எல்லோரையும் நலம் விசாரித்தபடி வீட்டின் உள்ளே சென்றான் ரிஷி. நீண்ட நாட்கள் கழித்து பார்ப்பதால் தன் மகனை அன்புடன் பார்த்துக்கொண்டிருந்தார் வசுமதி.

“என்ன அம்மா அப்படி பார்க்கிறீங்க??” ரிஷி கேட்க.

“ஒண்ணுமில்லை கண்ணா ரொம்ப நாள் கழிச்சி உன்னை பார்க்கிறேன்ல அதான்.” என்று வசுமதி கண்கலங்க. அவர் கண்டதும் அவரை நெருங்கி அவர் கைகளை பிடித்து கொண்ட ரிஷி , “சாரி மா.... என்னை மன்னிச்சிடுங்க. இனிமே உங்களை தனியா விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன். ஐ பிராமிஸ்.”என்று சொல்ல. வசுமதி மகனை அன்புடன் அணைத்துக்கொண்டார்.

“சரி சரி...... அம்மாவும் பையனும் கொஞ்சுனது போதும், முதல அவனை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடு வசு” என்று மித்ரெஷ்வரன் சொல்ல.

கணவரை முறைத்த வசுமதி, ரிஷியிடம் “உங்க அப்பாவுக்கு பொறாமைடா கண்ணா...” என்றார். இதை கேட்டு அபியும் அமிர்தாவும் சிரிக்க.

“எனக்கு என்ன மா பொறாமை!!!. நீ இப்படி உன் செல்ல மகனை கொஞ்சிட்டு இருந்தா அப்பறம் உன் ரெண்டாவது பையனோட கல்யாண வேலையை யார் பார்க்கரதுன்னு தான் கேட்டேன்??” கேட்டார் மித்ரெஷ்.

“அதான் நான் வந்துட்டேனில்ல இனி எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்.” என்று ரிஷி சொல்ல.

“அது எல்லாம் வேணாம் கண்ணா நீ முதல போயி ரெஸ்ட் எடு” என்றார் வசுமதி.

“ஏண்டி இத தானே நானும் சொன்னேன்.” என்று கேட்ட மித்ரெஷ், மனைவியின் முறைப்பில் அமைதியானார்.

ரிஷி ஏதோ சொல்ல வர, அவனை பேச விடாமல் ஓய்வு எடுக்க சொல்லி அனுப்பி வைத்தார் வசுமதி.

செல்லும் மகனையே பார்த்துக்கொண்டு இருத்தவருக்கு புரிந்தது அவன் சிரிப்பில் உயிர்ப்பு இல்லை என்று. சீக்கிரமே இதற்க்கு ஒரு மூடுவு எடுக்க வேண்டும் என்று நினைத்தவர், அடுத்து தான் செய்ய வேண்டியதை திட்டமிட துவங்கினார்.

“உங்க செல்ல மகனை பார்த்தது போதும். நானும் அம்முவும் இங்க தான் இருக்கோம் கொஞ்சம் எங்களையும் கவனிங்க அம்மா” என்றபடி அன்னையின் அருகில் அமர்ந்தான் அபி.

சின்ன மகனை திரும்பி பார்த்த வசுமதி, “உன்னை தானே வா கவனிக்கிறேன்... யாரை கேட்டு நீ ஏர்போர்ட்க்கு போன??” என்று கேட்க.

‘ஆஹா!!!! இப்படி வலண்டீயரா வந்து மாட்டிக்கிட்டயே அபி...... இப்போ என்ன சொல்லி சமாளிக்கறது!!!!’, என்று யோசித்தபடி அப்பாவையும் தங்கையும் பார்க்க. அவர்களோ எங்களை கட்டிக்கொடுத்துவிடாதே என்பது போல செய்கை செய்யதனர்.

வசுமதி அவர்களை பார்க்க உடனே தன் முக பாவத்தை மாற்றி கொண்ட அமிர்தா, “ நாளைக்கு ஊருக்கு போகணும் இல்ல நான் போயி என் திங்க்ஸ் எல்லாம் பேக் பன்றேன் அம்மா” என்று சொல்லிவிட்டு தன் அரைக்கு சிட்டாக பறந்தாள். மித்ரெஷும், “எனக்கு ஒரு முக்கியமான வேலை இப்போ தான் நியாபகம் வந்தது. நான் இப்போ வந்தறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

ஆளுக்கு ஒரு பக்கமாய் செல்லும் தந்தையையும் தங்கையையும் கண்ட அபி, ‘அட பாவிங்களா!!! சிவனேன்னு இருந்தவனை ஏர்போர்ட்க்கு கிளப்பி விட்டுட்டு இப்போ ஒண்ணும் தெரியாத மாதிரி என்னை கோர்த்துவிட்டுட்டு போயிட்டாங்களே. இப்போ நான் என்ன பன்றது.???’, என்று ஒரு நிமிஷம் முழித்தவன், பின் அன்னையை பார்த்து ஈஈஈ .... என்று பல்லைக் காட்டி விட்டு வேகமாக தன் பாக்கெடில் இருந்த ஃபோனை எடுத்து வராத ஃபோன் காலை பேசுவதாய் பாவ்லா பண்ணிக்கொண்டு தன் அறைக்கு ஓடினான்.

மூவரும் ஆளுக்கு ஒரு திசையில் ஓடுவதை கண்ட வசுமதி தனக்குள்ளே சிரித்துக்கொண்டார்.

கல்யாண வேளைகளில் இரண்டு நாள் விரைவாக கடந்திருக்க, திருமண நாள் அழகாக விடிந்தது. அபியின் குடும்பதில் அனைவரும் பாவனாவின் சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு வந்திருந்தனர்.

அந்த திருமண மண்டபத்தை சொந்தங்களும் நட்பும் சுற்றமும் நிறைத்திருக்க, மித்ரெஷும் வசுமதியும் புன்னகையுடனே அனைவரையும் வரவேற்று உபசரித்து கொண்டிருந்தார்கள்.

பாவனாவின் பெற்றோர் தேவகியும் நந்தகுமாரும் மற்ற வேலைகளை கவனிக்க, அபி ஐய்யர் சொல்லும் மந்திரத்தை கேட்டு அதை கவனமாக திருப்பி சொல்லிக்கொண்டு இருந்தான். அமிர்தா அண்ணனின் அருகில் நின்று இருந்தாள். ரிஷி உணவு உண்ணும் இடத்தில் அனைத்தையும் கவனித்துக்கொண்டு இருந்தான்.

முகூர்த்த நேரம் நெருங்க ஐய்யர் பொன்னை அழைத்து வர சொல்ல, அமிர்தா சென்று பாவனாவை மேடைக்கு அழைத்து வந்தாள்.

தங்க வேலைபாடுகள் நிறைந்த இளம் பச்சையும் பிங்க் வண்ணமும் கலந்த புடவையில் மனபெண்ணுக்குறிய அலங்காரத்தில் அழகு பதுமையாய் தன் அருகில் வந்து அமர்ந்தவளை கண்ட அபிக்கு எப்போதும் போல தன்னவள் மேல் காதல் பெருகியது.

கெட்டிமேள சத்தம் முழங்க, பெற்றோர், நண்பர்கள், உற்றார் ,உறவினர்கள் ஆசீர்வதிக்க, பாவனாவின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்து தன்னில் சரிபாதியாக ஏற்று கொண்டான் அபி. பின் மணமக்கள் இருவரும் தங்கள் பெற்றவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினார். தம்பியை கட்டி அனைத்து வாழ்த்து சொன்னான் ரிஷி.

பின் சொந்தங்கள் ஒருவர் பின் ஒருவாராய் வந்து மணமக்களை வாழ்த்தி பரிசு கொடுத்து சென்றார்கள்.

கல்யாணத்தில் வம்பு பேசவே வரும் சிலர் தங்களுக்கு பேசிக்கொண்டு இருந்தனர். “ஏன் அக்கா, பெரியவன் ரிஷி இருக்கும் பொது அபிக்கு எதுக்கு இவளோ சீக்கிரம் கல்யாணம் பன்றாங்க?” என்று ஒருவர் கேட்க.

“அதை தான் நானும் நினைச்சேன். ஒரு வேலை ரிஷிக்கு ஏதாவது குறை இருக்குமோ??” என்றார் இன்னொருவர்.

“இல்ல அப்படி இருக்காது... ரிஷியை பார்த்த அப்படி தெரியல. நல்லா வாட்ட சாட்டமாய் அழகா தானே இருக்கான்.” என்றார் மற்றொருவர்.

“அபி இந்த பொண்ண லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிகிட்டதா சொன்னாங்க. அப்போ ரெண்டு பெரும் கல்யாணத்துக்கு முன்னாடியே ஏதாவது தப்பு பண்ணி இருபங்களோ என்னமோ. அதான் இவளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிடாங்க.” என்றார் முதலில் பேசியவர்.

இருக்கலாம் என்று மற்றவர்களும் ஆமோத்திது தங்களுக்குள் பேசிக்கொள்ள. அப்போது அந்த பக்கம் சென்ற வசுமதி, மித்ரெஷ் காதில் இவர்கள் பேசியது அனைத்தும் விழ, இருவரும் அதிர்ந்து போனார்கள்.

அதே நேரம் தந்தையிடம் ஏதோ கேட்க வந்த ரிஷியும், அவன் உடன் வந்த பாவனாவின் அப்பா நந்தகுமாரும் அனைத்தையும் கேட்டு விட்டனர். ரிஷியின் அன்னையின் அருகில் வந்து, “அம்மா இங்க என்ன பன்றீங்க, அபி உங்கள கூபிட்டான் போயி பாருங்க??” என்று சத்தமாகவே சொன்னான். ரிஷியின் குரல் கேட்டு தங்களை மீட்டுக்கொண்ட வசுமதியும் மித்ரெஷும் “சரி ப்பா” என்றபடி அபியிடம் செல்ல.

ரிஷி அங்கே பேசிக்கொண்டிருந்தவர்களை பார்த்த பார்வையில் அன்னைவருக்கும் குலை நடுங்கி போனது. பயத்தில் ஆளுக்கு ஒரு பக்கமாய் சிதறி ஓடினார்கள்.

பின் தன் உடன் நின்று இருந்த நந்தகுமாரை கவனித்த ரிஷி, அவர்கள் பாவனாவை பற்றி தவறாக பேசியதற்க்கு தான் தானே காரணம் என்று நினைத்து நந்தகுமாரிடம் , “என்னை மன்னிச்சுடங்க மாமா.” என்றான்.

“நீங்க எதுக்கு மாப்பிள்ளை மன்னிப்பு கேட்க்றீங்க. உங்க மேல எந்த தப்பும் இல்லை. தப்பெல்லாம் என் பொண்ணு மேல தான். உங்களை சரியா புரிஞ்சுகாம அவ எடுத்த முடிவு தான் இப்போ எல்லாரும் கஷ்ட படறோம்.” என்றார் நந்தகுமார் வேதனையுடன்.

அவர் வேதனை பாடுவதை பார்க்க முடியாமல், “மத்தவங்க பேசறது எல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க மாமா. அவங்களுக்கு எல்லாம் குறை சொல்ல மட்டும் தான் தெரியும். உண்மை என்னணு நமக்கு தெரியும். நாம நம்ப மனசாட்சிக்கு உண்மையா இருந்தா அது போதும்.” என்று அவரை சமாதானம் செய்தான் ரிஷி.

“மாப்பிள்ளை நீங்க ஏன் வேற ஒரு பொன்னை கல்யாணம் பன்னிக்க கூடாது.” என்று நந்தகுமார் கேட்க.

இதை கேட்டதும் முகம் இறுக,“ இல்ல மாமா, அது என்னால முடியாது. உங்க பொண்ணு மேல எனக்கு கோவம் இருக்கு. இன்னும் சொல்ல போனா அவளை நேர்ல பார்த்தா அவளை கொன்று போடும் அளவுக்கு அவமேல எனக்கு ஆத்திரம் இருக்கு. ஆனா இந்த ஜென்மத்தல எனக்கு மனைவினா அது உங்க பொண்ணு சரயு மட்டும் தான்.” என்று சொன்ன ரிஷி அங்கிருந்து சென்றுவிட்டான்.

சற்று நேரத்தில் மணமக்களை வீட்டுக்கு அழைத்துவந்து பால் பழம் கொடுத்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க சொன்னார்கள்.

பின் இரவின் தனிமையில் அபி பவியின் வருகைக்காக காத்திருந்தான். தன் மனதில் இருப்பதை எப்படி அவள் மனம் நோகாமல் அவளிடம் சொல்வது என்று யோசித்துக்கொண்டு இறுத்தான்.

அப்போது பட்டு சேலை சரசரக்க, வெட்கத்தில் முகம் சிவக்க, உள்ளே வந்த பாவனாவை பார்த்து உறைந்து நின்றான் அபி. அவளை அள்ளிக்கொள்ள துடித்தை மனதை வெகு சிரம பட்டு அடக்கியவன், அவளை அழைத்து தன் அருகில் அமர்த்திக்கொண்டான்.

இருவருக்கும் இடையில் சிறிது நேரம் அமைதி நிலவியது.

அந்த மௌனத்தை முதலில் களைத்த அபி, “வனி நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றான்.

“நீ என்ன சொல்ல வறேன் எனக்கு தெரியும்” என்றாள் பாவனா. அபி அவளை ஆச்சரியமாய் பார்க்க. பாவனா தொடர்ந்தாள்.

“ரிஷி பாஸ் இப்படி தனியா இருக்கும் பொது நம்ப கல்யாணம் பண்ணிக்கிட்டது உனக்கு கில்டியா இருக்கு. அப்படி தானே..... எனக்கும் அப்படி தான் இருக்கு. எங்க அப்பவோட ஹெல்த் கண்டிஷன் தான் நம்ப கல்யாணம் இவளவு அவசரமாய் நடக்க காரணம். சோ ரிஷி பாஸ் பிரச்சனைக்கு ஒரு முடிவு வரும் வரை நம்ப வைட் பண்ணலாம். நமக்கு நிறைய டைம் இருக்கு அபி.” என்று சொன்னவளை பாய்ந்து அணைத்துக்கொண்டான் அபி.“தாங்க்ஸ் வனிம்மா.....தாங்க் யு சோ மச்......” என்றபடி அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

சிறிது நேரம் கணவனின் அணைப்பில் இருந்த பாவனா பின் விலகி, “தூங்கலாமா அபி. இன்னைக்கு நாள் பூரா நின்னுட்டே இருந்தது கால் ரொம்ப வலிக்குது.” என்றாள்.

அபி புன்னகையுடனே, “சரி டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து படு.” என்று சொல்ல. பாவனாவும் உடை மாற்றிக்கொண்டு வந்து படுத்தாள். அவளை தொடர்ந்து அபி தன் இரவு உடை மாற்றிக்கொண்டு வருவர்தற்குள், பாவனா நன்றாக தூங்கி இருந்தாள். புன்னகையுடன் அபியும் அவள் அருகில் படுத்து கொண்டுகொண்டான்.

இளையவர்கள் இப்படி முடிவெடுத்திருக்க, அங்கே பெரியர்களின் அறையிலோ, அழும் தன் மனைவியை சமாதான படுத்திக்கொண்டிருந்தார் மித்ரெஷ்.

“மதிம்மா .... சொன்ன கேளு. இப்போது எதுக்கு இப்படி அழறா??”

“மண்டபத்தில் அவங்க பேசினது எல்லாம் நீங்களும் கேட்டீங்க தானே மித்து. எப்படி எல்லாம் பேசினங்க.”

“ஊர்ல ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வாங்க. அதுக்கெல்லாம் நாம் ரியாக்ட் பண்ண ஆரம்பிச்சா. நம்ப நிம்மதி தான் போகும். அவங்க பேசினது எல்லாம் நீ எதுக்கு சீரியஸா எடுத்துகிற. விட்டு தள்ளு.”

“அது எப்படி விட்டு தள்ள முடியும் அவங்க பேசனுது நம்ப பிள்ளைங்களா பத்தி.”

என்ன சமாதானம் செய்தாலும் வசுமதி திரும்ப திரும்ப அதையே சொல்லி வருத்தப்பட, அதில் எரிச்சல் அடைந்த மித்ரெஷ்,

“சரி இப்போ அதுக்கு என்ன பண்ணலாம்ன்னு சொல்ற அவங்க எல்லார் கிட்டையும் தனிதனியா போயி நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல. இது தான் இந்த கல்யாணம் நடக்க காரணம்னு சொல்ல போறியா??”

“அப்படி இல்ல மித்து, ரிஷிக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணிட்டா அப்பறம் யாரும் இப்படி பேச மாட்டாங்க இல்ல...” என்று வசுமதி சொல்ல.

“நீ புரிஞ்சு தான் பேசரியா மதி. அதுக்கு ரிஷி முதல கல்யாணத்துக்கு சம்மதிக்கணுமே. அவன் சரயுவை தவிர வேறு யாரையும் கல்யாணம் பன்னிக்க மாட்டான். அவன் பிடிவாதம் தெரிஞ்சுமா நீ இப்படி பேசற.”

“அவனுக்கு மட்டும் தான் பிடிவாதம் பிடிக்க தெரியுமா. நான் அவனோட அம்மா. எனக்கும் அவனுக்கு மேலே பிடிவாதம் பிடிக்க தெரியும். நான் முடிவு பண்ணிட்டேன். நாளைக்கு நம்ப ஊருக்கு போனதும் ஸ்ரீ கிட்ட பேசி அடுத்த முகூர்த்ததிலே ரிஷிக்கும் சத்யாவுக்கும் கல்யாணம்.” என்று வசுமதி உறுதியாக சொல்ல.

“யாரோ ஏதோ பேசினாங்கன்னு நீ அவசர படறது சரி இல்ல மதி. இது நம்ப பையனோட வாழக்கை. அவசர பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. முதலில் இதை பத்தி நான் ரிஷி கிட்ட பேசுறேன். அது வரைக்கும் நீ கொஞ்சும் பொறுமையா இரு.” என்று அழுத்தமாக சொன்னார் மித்ரெஷ். ஊரார் பேச்சுக்கு அஞ்சி தன் மகனின் சந்தோஷத்தை கெடுக்க அவர் விரும்பவில்லை.

வசுமதி மீண்டும் ஏதோ சொல்ல வர, அவர் வாய் மீது விரல் வைத்து தடுத்த மித்ரெஷ், “போதும் இனிமே நீ எதுவும் சொல்ல வேண்டாம் எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன். இப்போ நீ பேசாம படு. ஏற்கனவே கல்யாண வேலையில் நீ ரொம்ப டையர்டா இருக்க.” என்று சொல்லி மனைவியின் நெற்றியில் முத்தம் வைத்தார்.

கணவரின் முத்தத்தில் முகம் சிவந்த வசுமதி, அவரை தள்ளிவிட்டு “என்ன பன்றீங்க மித்து??.” என்றார்.

திருமணமாகி இத்தனை வருடங்கள் கழித்தும் தன் முத்தத்தால் முகம் சிவக்கும் மனைவியை கண்டு சிரித்த மித்ரெஷ். “நான் ஒண்ணும் பண்ணால. நீ படு” என்று சொல்லிவிட்டு மனைவியின் பாதத்தை மெதுவாக பிடித்துவிட, அவர் கைகளை பற்றி தடுத்த வசுமதி, “நீங்களும் டையர்டா தான் இருக்கீங்க. வந்து படுங்க.” என்று சொல்ல மித்ரெஷும் புன்னகையுடனே மனைவியின் அருகில் படுத்துக்கொண்டார்.

கண்மூடி படுதிருந்த இருவர் மனதிலும் மகனை பற்றிய நினைவே முழுதாய் நிறைந்திருந்தது.

இளையவர்கள் பெரியவர்கள் என அனைவரும் அவன் ஒருவனை பற்றியே கவலை பட. அவனோ மொட்டை மாடியில் அமர்ந்து நிலவை ரசித்துக்கொண்டு இருந்தான்.

அவன் உள்ளங்கையை அந்த சிகப்பு கைக்குட்டை சுற்றி இருந்தது.



*************************​


 

Attachments

  • EPI 2.jpg
    EPI 2.jpg
    50.3 KB · Views: 0

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top