உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 19

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

சில அப்டேட்ஸ் மட்டும் பொருத்துக்கோங்க... எனக்கும் சோகம் பிடிக்காது தான், பட் என்ன செய்ய?

உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 19


நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரம் கடந்திருக்க, வீட்டினர் அனைவரும் இருந்த சமயம் மெல்ல பேச்செடுத்தார் பாரி.

“புகழ், உனக்கும் வயசாகிட்டே போகுது, உனக்கொரு கலியாணத்த செஞ்சு பார்க்கனும்னு எங்களுக்கு ஆசையிருக்காதா?” என்று அவர் கேட்க,

ஒரு கணம் கண்களை மூடித் திறந்தவன், அனைவரையும் பார்க்க, ஒவ்வொருவரும் எதிர்பார்ப்புடன் அவனை நோக்கிக்கொண்டிருந்தனர்.

‘பாவி! அன்னைக்கு மட்டும் நீ சரின்னு சொல்லியிருந்தா இன்னைக்கு எல்லாரிடமும் நம்மைப் பற்றி சொல்லியிருப்பேனே! என்னை வேண்டாம்னு தூக்கியெறிஞ்சுட்டு போனவளை நான் மட்டும் ஏன் நினைக்கனும்’ என்று எண்ணியவன்,

ஆழ ஒரு மூச்செடுத்து, “சரிப்பா! விரைவில் ஒரு நாள் பாருங்க, சின்னு லீவ் முடிஞ்சு போவதற்குள் இருவருக்கும் நிச்சயம் முடிச்சிடலாம்” என்றவன், அவர்கள் முகத்தில் இருந்த சந்தோஷ உணர்வுகளை படிக்க விரும்பாமல் மாடியேறினான்.

*******

“நேயர்களே! நாம் நிகழ்ச்சியோட கடைசி செக்மெண்ட்க்கு (segment) வந்துட்டோம். இன்று காலர்ஸ் அவங்களோட காதலிக்காக இரண்டு வரியாவது பாட வேண்டும். அதுதான் இன்றைய டாஸ்க். இதுவரை வந்தவர்கள் எல்லாரும் அதை செய்தும் விட்டனர். நம்ம கடைசி காலரும் அவங்களோட அந்த லக்கி லவ்வரும் யாரென்று பார்க்கலாம்… ஹலோ! வணக்கம்!”

“வணக்கம் சார்! நான் திவ்யா”

“சொல்லுங்க திவ்யா… உங்க காதலன் என்ன செய்யறார்? அவர் முதலில் லவ்-வை சொன்னாரா இல்லை நீங்களா?

“அவர் என்னோட காலேஜ் சீனியர் சார். அவர்தான் முதலில் காதல் சொன்னது” என்றாள் அந்தப் பெண் சிறு வெட்கத்துடன்.

“ஓகே சிஸ்டர்… இன்றைய டாஸ்க் என்னவென்று தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். உங்க அவருக்காக ஒரு பாடல் பாடுங்களேன்” என்று புகழ் கேட்க,

“பாடலாம் சார்! ஆனால், ஒரு மணி நேரமா எங்களையே பாட சொல்றீங்களே! நீங்க ஒரு பாட்டு பாடலாமே!” என்று திவ்யா கேட்க,

“நான் பாடி நீங்க லைன்-ஐ கட் செய்து ஓடிட்டீங்கன்னா? எதுக்குங்க இந்த விஷப்பரிட்சை?” என்று கேட்டவன் அந்தப் பெண்ணை பாடவைத்து நிகழ்ச்சியை முடித்தான்.

இதனை கேட்டுக்கொண்டிருந்த மகிழ், அவனிடம் பாட சொல்லி கேட்டிருந்தாள்.

“ப்ளீஸ் தமிழ்! ஒரு பாட்டு பாடுங்களேன்!”

“இப்போ வேண்டாமே! இன்னொரு நாள் பாடறேன் ஹனி!” என்றான் அவன். என்று அவளை காதலிப்பதை உணர்ந்தானோ அன்றில் இருந்து அனி ஹனியாகிவிட்டாள் அவனுக்கு. இந்த மாற்றத்தை அவளும் உணரவில்லை, அவனும் உணர்த்தவில்லை.

ப்ளீஸ் என்று மகிழ் பல ப்ளீஸ்களை போட, அதன்பின்னும் தாங்க முடியாத புகழ் அவனைக் கவர்ந்த ஒரு பாடலை பாடி அவளுக்கு அனுப்பி வைத்தான்.

நீயின்றி நானும் இல்லை

என் காதல் பொய்யும் இல்லை

வழி எங்கும் உந்தன் முகம்தான்

வலி கூட இங்கே சுகம்தான்

தொடு வானம் சிவந்து போகும்

தொலைதூரம் குறைந்து போகும்

கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே

இனி உன்னை பிரிய மாட்டேன்

தொலை தூரம் நகரமாட்டேன்

முகம் பார்க்க தவிக்கிறேன் என் இனிய பூங்காற்றே

ஒ ஷாந்தி ஷாந்தி ஒ ஷாந்தி

என் உயிரை உயிரை நீ ஏந்தி

ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி

நான் வந்தேன் வந்தேன் உனை தேடி


நீயின்றி நானும் இல்லை

என் காதல் பொய்யும் இல்லை

உனை காணும் நேரம் வருமா வருமா

இரு கண்கள் மோட்சம் பெறுமா

விரலோடு விழியும் வாடும்

விரைகின்ற காலும் நோகும்

இருந்தாலும் வருகிறேன்

உன் மடியில் நான் தூங்க

எனை வந்து உரசும் காற்றே

அவளோடு கனவில் நேற்றே

கை கோர்த்து நெருங்கினேன்

கண் அடித்து நீ ஏங்க

ஒ ஷாந்தி ஷாந்தி ஒ ஷாந்தி

என் உயிரை உயிரை நீ ஏந்தி

என் சென்றாய் சென்றாய் எனை நீங்கி

நான் வந்தேன் வந்தேன் உனை தேடி

ஒ ஷாந்தி ஷாந்தி ஒ ஷாந்தி

என் உயிரை உயிரை நீ ஏந்தி

ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி

நான் வந்தேன் வந்தேன் உனை தேடி


அவன் ‘முகம் பார்க்கத் தவிக்கிறேன்’ என்று கூறிய விதத்தில் அப்போதே அவனை சென்று பார்க்க வேண்டும் என்று தவித்தாள் பேதை! அவளோடு கூற முடியா காதலைத் தான் பாடலில் உரைத்தானோ?

ஆம்! காதலைத் தான் உரைத்தான். நட்புக்குள் காதல் கொள்வதைப் போல் சுகமும் வேறு இல்லை, நரகமும் வேறு இல்லை. எங்கே காதலை வெளிப்படுத்தினால் நட்பும் போய்விடுமோ என்னும் தவிப்பில் அதனை சொல்லாமலே தவிப்பவர்கள் பலர். அத்தகைய மனநிலையிலேயே அவனும் இருந்தான்.

இன்னொரு காரணம், கல்லூரிப்படிப்பையும் தாண்டாத அவனுக்கும், அப்போது தான் கல்லூரியில் காலடி எடுத்து வைத்திருந்த அவளுக்கும் (அவ்வாறு தான் கூறியிருந்தாள் மகிழ், அவனிடம்) இடையில் இருப்பது காதல் தானா அல்லது ஈர்ப்பா என்பதை கண்டறியாமல் வாழ்வை சிக்கலாக்க அவனுக்கு விருப்பமில்லை. இருந்தாலும், அவள் பாடுமாறு கேட்டபொழுது அவன் மனம் வெளிப்பட்டே விட்டது.

பாவம்! அவன் அது காதலென்று அறிந்தபோது மகிழ் அவனை விட்டும் அவன் வாழ்வை விட்டும் வெகு தூரம் சென்றிருந்தாள். அதையும் முன்பே உணர்ந்து அவன் மனம் பாடியதோ?

*******

மகிழின் நினைவை கலைத்தது அவளருகில் சிணுங்கிய கைப்பேசி, புகழின் குரலுடன். அதில் நடப்பிற்கு வந்தவள், அதனை இயக்குவதற்குள் அழைப்பு நின்று போனதும் வசதியாகிவிட, மீண்டும் அவன் நினைவுகளுள் மூழ்கிப்போனாள்.

என்று அவள் கைப்பேசி வாங்கினாளோ, அன்றில் இருந்து அவன் குரல் மட்டுமே அவளை அழைக்கும். அவன் தான் அழைக்கமாட்டான், இவ்வாறேனும் அழைக்கட்டுமே என்று வைத்தாளோ? அது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.

அவனை மறக்க வேண்டும் என்று நினைத்த போதிலும் கூட இதனை மாற்ற அவள் நினைத்ததே இல்லை. அதனாலேயே எந்நேரமும் அவள் கைப்பேசி வைப்ரேஷனில் தான் இருக்கும். காதில் கேட்காதது கருத்திலும் பதியாது என்றெண்ணினாளோ?

இன்று ஏதோ நியாபகத்தில் அவள் ஜெனரலில் போட, அழைப்பு வந்ததில் இருந்து அவன் நியாபகம்.

‘திரும்ப யாராவது கூப்பிடுங்களேன்! நான் அவன் குரல் கேட்கனும்’ என்று அரற்றிய அவள் மனதை குட்டியது மூளை.

‘அவன் தான் லவ் சொன்னப்போ வேண்டாம்னு அவனை என்னெல்லாமோ பேசிட்டு வந்தியே! இப்போ மட்டும் என்ன ரொம்ப பொங்குது?’

மனம் – ‘அவனை நான் வேண்டாம்னு ஏன் சொல்றேன்னு உனக்கு தெரியாதா?’

அவள் – ‘ஓஓஓ… நல்லா தெரியுமே! ஒரு உப்பு சப்பு இல்லாத ரீசன்’

‘அதற்கு பெயர் தன்மானம்! அதுவுமில்லாமல், என்னால் யாரும் தலை குனிய வேண்டாம்! இன்னும் சொல்லப்போனா, நான் இல்லாம யாரா இருந்தாலும் அவன் வாழ்க்கை நல்லா இருக்கும். ஏன்னா, அவன் காதலிக்கும்போது அவன் ஆத்மாவில் இருந்து தான் காதலிப்பான். அதுவே அனைத்தையும் மாற்றும். அதற்கு ஏற்றவாறு உள்ள பொண்ணு தான் அவனுக்கு சரி. அந்த பொண்ணு நானில்லை’ என்று அவள் மனம் கதற,

‘அப்படியென்றால் அவன் அன்னைக்கு உன்னிடம் சொன்னது என்ன பொய்யா?’ என்று அவள் கேட்க,

‘கண்டிப்பாக இல்லை, ஆனால் அதை மாற்றும் சக்தி சின்னுவிற்கு உண்டு. அவள் எங்க ரெண்டு பேரையும் பார்த்து எவ்வளவு வருத்தப்பட்டிருப்பாள்? அவளோடு அவன் சேர்வது தான் சரி! நான் அவனுக்கு வேண்டாம்’ என்று சொல்லிய அவள் மனதிற்கு தெரியவில்லை, அது அவனுக்குமே தண்டனைதான் என்று.

காதல் அனைத்தையும் மறக்க வைக்கும் என்பதை இவளுக்கு யார் சொல்லி புரியவைப்பது?

இவ்வாறே இரண்டு மாதங்கள் கடக்க, திருச்சிக்கு வந்திருந்தாள் மகிழ் ஆதியுடன், வார விடுமுறைக்காக.

அன்று மாலை நெருங்கிய வேளையில் “அக்கா… எனக்கு எதுவுமே புரியல… ப்ளீஸ் ஹெல்ப் மீ பேபிமா!” என்று வந்து நின்றான் ஆதி.

வகுப்பில் பாடங்கள் எடுத்த சமயம் பெரும்பாலும் தூங்கிவிடுவதால் அவன் சார்ந்திருப்பது எல்லாம் இணையவழி கல்விதான். இதற்காக எத்தனைமுறை அவனை மகிழ் திட்டினாலும் அதனை தூசியென தட்டிவிடுபவன் மீண்டும் அதையே தான் செய்வான்.

அதிலும் புதிதாக முளைத்த காதல் வேறு அவன் இரவுகளை பகல்களாக்கியிருக்க, அவன் வகுப்புக்கு போவதே குறைந்துவிட்டது.

இவை எதுவும் அறியாதவளோ அவனை மீண்டும் ஒரு முறை திட்டிவிட்டு அவனுக்கு சொல்லிக்கொடுத்தாள். என்னதான் ஆதி தானே வீடியோஸ் பார்த்து புரிந்துகொண்டாலும் அதனை யாரேனும் விளக்கினால் மட்டுமே அவனுக்கு ஒரு திருப்தி. அதற்கு அவனுக்கு வாய்த்த அடிமை தான் அவன் செல்ல அக்கா.

“இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துல படிப்பு முடியுது, நாமும் கொஞ்சம் உருப்பட்ற வேலைய பார்ப்போம்ங்கற எண்ணம் கொஞ்சமாவது இருக்கா? இன்னும் அதே அசட்டுத்தனம்! அடுத்த தடம் சித்தி உன்ன திட்டட்டும், உனக்கு வக்காலத்து வாங்காம நல்லா திட்டுங்க சித்தின்னு ஏத்தி விட்றேன்” என்று நொடித்தவாறே அவள் சமையலறைக்குள் செல்ல,

“உன் லெக்சர் கேட்டு போரடிச்சுருச்சு. அப்டியே ஒரு போன்வீட்டா எடுத்துட்டு வாடி” என்றவனை ‘அடிங்க’ என்ற குரல் மிரட்ட, அதே நேரம் வாசலில் யாரோ வந்த சத்தம் கேட்க, தன்னைக் காப்பாற்ற வந்த ஆபத்பாண்டவனை காண ஓடினான் ஆதி.

*******

கதவை திறந்தவனுக்கு ஆச்சரியம், வியப்பு எல்லாம் ஒன்றாக சேர்ந்து தாக்கியது என்றால், அவன் தமக்கையோ, ஷாக்கடித்தாற்போல் நின்றுகொண்டிருந்தாள்.

“வாங்க சார்! அக்கா, உங்க எம்.டி. வந்துருக்காரு பாரு!” என்றழைத்தவாறே புகழை சோபாவில் அமரவைக்க, அதில் கலைந்தவளோ, “வாங்க!” என்னும் வார்த்தையோடு தண்ணீர் எடுத்துத் தந்தாள்.

மனதில் தாய் தந்தையர் இல்லாத இச்சமயத்தில் இவன் எதற்கு வந்தான் என்பது ஒரு புறம் இருக்க, என்ன விடயமாக வந்திருக்கிறான் என்னும் யோசனையும் ஒரு புறம் ஓடியது.

அவள் பெற்றோர் காலையில் ஏதோ முக்கியமான வேலை என்று வெளியில் சென்றிருந்தனர்.

இப்போதெல்லாம் நான் வந்தால் கூட அவர்கள் வீட்டில் நிற்பதில்லை என்று நினைத்துக்கொண்டே அவனுக்கு ஏற்ற விதத்தில் காபியை கலக்கினாள் மகிழ். (இதிலெல்லாம் குறை சொல்ல முடியாதுதான்!)

அதனை அவனிடம் கொடுக்கவும், சுவைத்தவன் ஒரு நொடி மெச்சுதலாய் அவள் முகம் பார்த்தான். மறுநொடியே இது பொய்யோ என்பது போல் அவன் மனம் கடினமுற்றது.

ஆதியிடம் அவன் படிப்பு முதலியவற்றை கேட்டுக்கொண்டிருந்தவன், சிறிதுநேரம் பொதுப்படையாக பேசிவிட்டு அவளிடம் அவள் பெற்றோரைப் பற்றி கேட்டான், வந்த விடயத்தையும் பார்க்க வேண்டுமே!

“உங்க பேரண்ட்ஸ் எங்க மகிழ்?”

“அவங்க வெளிய போயிருக்காங்க சார். வருவதற்கு நேரமாகும்னு சொன்னாங்க” என்க,

“ஓஓஓ… கண்டிப்பா அவங்கள பார்த்தேயாக வேண்டுமே! மற்ற நேரமென்றால் அவங்களை காத்திருந்து பார்த்துட்டு போகலாம். ஆனால், இன்னைக்கு வேலை நிறைய இருக்கே!” என்றவன், “ஓகே! அவங்க வந்ததும் இந்த இன்விடேஷனை கொடுத்திருங்க. எல்லாரும் கண்டிப்பா வரனும், ஆதி நீயும் தான். அதுவும் மகிழ் கண்டிப்பா வந்தே ஆகனும்னு உங்க பெஸ்ட் ப்ரெண்ட் சொல்லி அனுப்பினா” (வார்த்தைகளில் நக்கல் தொனித்ததோ?) என்றவன் உடனே கிளம்பியும் விட்டான்.

அவன் சென்றதும் ஆதியும் சென்றுவிட, மரம்போல உணர்வற்று நின்றிருந்தாள் மகிழ்.

இருந்தாலும் அவள் இதழில் ஒரு மெல்லிய புன்னகை. கடைசியில் அவள் எண்ணம் நிறைவேறப்போகிறது. இதற்காகத் தானே அவள் புகழை அன்று அவ்வாறு பேசினாள்? அவனை எங்கு அடித்தால் எவ்வாறு இயங்குவான் என்று தெரியாதவளா அவள்? இதோ, சாட்சியாக இருக்கிறதே அவன் நிச்சயதார்த்த அழைப்பிதழ்!

தமிழுக்கு ஒரு நல்லதொரு துணை கிடைக்கப்போகிறது, ப்ரார்த்தனா அவள் காதலித்தவனையே கைபிடிக்கப் போகிறாள், பாரிவேந்தனின் வாக்குறுதி நிறைவேறப்போகிறது.

ஆனால், அவளுக்கு?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top