உன்னை உனக்கே அறிமுகம் செய்வேன்-அத்தியாயம் 2

bavi1308

Well-Known Member
#1
உன்னை உனக்கே அறிமுகம் செய்வேன்-அத்தியாயம் 2

அன்பு நட்புகளே !

உங்களுக்காக இதோ இரண்டாம் அத்தியாயம்.

உங்களின் ஒவ்வொரு கருத்துகளும் எனது எழுத்துகளின் தரத்தை மேம்படுத்தும்.

உங்களின் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

-
அன்புடன்,
பவித்ரா
அறிமுகம் 2:

கை குலுக்கியதும்,"உங்கள மீட் பண்ணினத்துல ரொம்ப சந்தோசம் மேடம்! உங்கள பற்றி நியூஸ் ல தான் போடுறாங்களே !" என்று இனிலன் ஆதினிடம் சொன்னான்.

"ஓ! அப்படியா..",ஓகே, அந்த பையன் எப்போ கண்ணு முழிப்பான் டாக்டர், ..நான் ரௌண்ட்ஸ் ல இருக்கும் போது, வேணும்னே இந்த பையன் மேல கார் விட்டு ஏத்தினது மாதிரி இருந்துச்சு, என்ன பாத்தவுடனே அவங்க எஸ்கேப் ஆகிட்டாங்க , அதுமட்டுமில்ல, அவங்க கார் நம்பர் மேல ஸ்டிக்கர் ஒட்டி இருந்துச்சு, சோ, அந்த பையன் கிட்ட கேட்டா என்னனு தெரியும்" என்று நீளமாக பேசி முடித்தாள் ஆதினி.

இனிலன், "சின்ன ஆப்பேரஷன் தான் ! சோ, இன்னும் 2 - 3 அவர்ஸ் ல அவன்கிட்ட பேச முடியும் உங்களால, பட் ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண கூடாது" என்று ஆதினி கேட்ட தகவலை அளித்துவிட்டு, " அப்புறம் இன்னொரு ரெக்கெயூஸ்ட் , நான் டாக்டர் தான் , அதுக்காக, என்ன, டாக்டர் னு கூப்பிட வேணாம்..அபி- னு கூப்பிடுங்க..தட் வில் பி பெட்டெர்.." என்று சிரிக்க கொண்டே சொன்னான் இனிலன்.

"ம்..ஓகே ..பட் நீங்களும் என்ன மலர் - னு கூப்பிடுங்க" என்று அவனின் கூற்றுக்கு மறுமொழி விடுத்தாள் ஆதினி.

இதுவரையிலும், இனிலன் என்று எல்லோராலும் அழைக்கப்பெற்ற இனிலன், அபி என்று ஆதினி அழைத்திட விரும்பிய இனிலனின் நெஞ்சம் , மலர் என்று இனிலன் அழைக்க விரும்பிய ஆதினியின் நெஞ்சத்தோடு உறவாடியதை இருவருமே உணரவில்லை.

"மலர்... வாங்க..என்னோட கேபின் ல உக்காருங்க ..." என்று அவனது அறைக்கு அழைத்து சென்றான். ஆதினியும் அவன் கூடவே சென்றாள்.

" என்னடா இது, டாக்டர் சார் ..எப்பவும் , அவங்களோட ரூம்க்கு யாரையும் வெயிட் பண்ண கூட்டிட்டு போக மாட்டாரே !" என்று செவிலி நினைத்ததை யாரும் அறியவில்லை.

அதே போல், "இந்த மேடம், யார் கூப்பிட்டாலும், வெயிட் பண்ண போக மாட்டங்களே! " என்று உடனிருந்த காவலர் நினைத்ததையும் யாரும் உணரவில்லை.

எது எப்படியோ, இருவரும் வாழ்க்கையில் சேர, ஒரு பிள்ளையார் சுழியை விதி போட்டு விட்டது.

இனிலனின் அறையில்...

" வாங்க மலர்...உக்காருங்க ! என்று அவனது இருக்கைக்கு எதிர் இருக்கையைக் காண்பித்தான் இனிலன்.

"தேங்க்ஸ் அபி...உங்க ரூம் ரொம்ப நீட்- ஆ இருக்கு " என்று பாராட்டு பத்திரம் வாசித்தாள் ஆதினி.

"ஓ...தேங்க்ஸ் ..இந்தாங்க ..காபி எடுத்துக்கோங்க ! நீங்க ரொம்ப டையர்டு -ஆ இருக்கீங்க !" என்று ஏற்கனவே பிளாஸ்க்-ல் போட்டு வைத்திருந்த காபியைக் கொடுத்தான்.

ஆதினியின் மனம்..அவளது அம்மாவை, நினைவுபடுத்தியது. அவரும், அவளது பணிச்சுமையை பார்த்து, அடிக்கடி சாப்பிட கொடுத்து கொண்டே இருப்பார்கள். அவளது அன்னை தமிழ்ச்செல்வி தற்போது உயிரோடு இல்லை. இருவருடங்களுக்கு முன்பு, உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்து விட்டார். தந்தை கதிரவன் கனரக வாகனங்களுக்குகான உதிரி பாகங்கள் செய்யும் தொழிற்சாலை வைத்துள்ளார். அவரது பணிச்சுமையால் ,யாரிடமும் நேரத்தை செலவிட முடியவில்லை. ஏனோ, இன்று, அவளது அன்னையின் நினைவு வெகுவாக வாட்டியது.கலங்கிய கண்களை இனிலனிடம் காட்ட விருப்பப்படமால், நாசுக்காகத் துடைத்து கொண்டாள்.

அதை இனிலன் பார்த்து விட்டான்.அவளை தன் நெஞ்சதோடு அணைத்து, "உனக்கு எல்லாமுமாக நான் இருக்கிறேன்" என்று அவனது மனம் கூற விளம்பியது. அவன் மனம் போகும் திசை அறிந்து, திடுக்கிட்டு எழுந்தான்.

என்ன இது, பார்த்து சில மணி நேரங்களேயான, ஒரு பெண்ணிடம், தன் மீதி வாழ்க்கையைப் பகிர எப்படி ஆசை வந்தது என்று யோசித்தான் இனிலன்.

விளையிடம் தேடினேன்...உன் மனம் கிடைத்தது...
என் காதல் பயிரை விளைவிக்க...!

யார் என்ன பேசுதுவென்று இருவருக்கும் தெரியவில்லை. மௌனமொழி பேசுகிறது இருவரின் விழிகள்.

மௌனம் கூட அழகுதான் ..

என் விழி வீச்சின் அருகில் நீ இருந்தால்.

அந்த அழகான மௌனத்தை இனிலனே உடைத்தான்." அப்புறம் மலர்..இந்த ஜாப் ல ரெஸ்ட்- யே கிடையாதே...எப்படி மேனேஜ் பண்றீங்க !".

"என்னோட தனிமைக்கு இந்த ஜாப் இல்லனா என்ன ஆகியிருப்பேன்-னு எனக்கே தெரியல" என்று தனது மனதை திறந்தாள் ஆதினி.

"என்ன சொல்றீங்க !" என்று கவலையோடு இனிலன் கேட்க, "ஒண்ணுமில்ல..." என்று அந்த பேச்சை முடித்து கொண்டாள் ஆதினி.

சில நிமிடத்துளிகள் அப்படியே கழிய, ஒரு செவிலி வந்து, கதவை தட்டும் சாதத்தில் இருவரும் தன் நிலையிலிருந்து வெளியில் வந்தார்கள்.

"டாக்டர், அந்த பையன் கண்ணு முழிச்சிட்டான் " என்று அவள் சொல்ல, "ஓகே சிஸ்டர்! நாங்க வரோம்! மலர்..போலாமா ? " என்று கேட்டுக்கொண்டே இனிலன் தன் இருக்கையிலிருந்து எழுந்தான். ஆதினியும் எழுந்து விட, தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்றார்கள்.இனிலனையும் கூடவே ஆதினியைக் காவலர் உடையில் பார்த்தவுடன் அந்த பையனின் முகம் வெளுத்துவிட்டது. அதை இருவருமே கவனித்துவிட்டார்கள்.

நிலைமையைக் கையில் எடுத்துக்கொண்ட இனிலன் , "ஹலோ, கவிவேந்தன்! ஆர் யு ஓகே நொவ் ? " என்று கேட்க, "கொஞ்ச வலி இருக்கு டாக்டர் " என்று பதிலளித்தான் கவிவேந்தன்.

"ஓகே..நான் கொஞ்சம் டெஸ்ட் பண்ணிக்கிறேன் " என்று இரத்த அழுத்தம் , இதயத்துடிப்பு எல்லாவற்றையும் சரி பார்த்து விட்டு, செவிலியிடம் ஒரு ஊசியை போட பணித்தான்.

"அப்புறம் கவிவேந்தன்.! இவங்க கொஞ்சம் என்கொயிரி பன்ணனுமாம்!" என்று ஆதினியைக் கை காட்டிவிட்டு அறையை விட்டு வெளியேறினான் இனிலன்.

ஆதினி இப்போது ACP -யாக மாறிருந்தாள். "சொல்லு தம்பி..நீ என்ன படிச்சிட்டு இருக்கிறியா? இல்ல வேலை பாக்குறியா? விபத்து நடந்த டைம் , மிட் நையிட், சோ, அந்த டைம் ல என்ன பண்ணிட்டு இருந்த..என்று தன் பாணியில் விசாரிக்க தொடங்கினாள்.

திரு..திரு வென முழித்து கொண்டே இருந்தான் வேந்தன். "என்ன தம்பி..சீக்கிரம் சொல்லு.., "திருச்செல்வன் சார், இந்த பையன் சொல்லுறத நோட் பண்ணிக்கோங்க " என்று ஒரு காவலரை அழைத்தாள். அவரும் அருகே வந்து நின்றார் ஆதினியின் உத்தரவை நிறைவேற்றும் பொருட்டு...

"அது வந்து மேடம்.." என்று இழுத்தான் கவிவேந்தன். "அதான்,..வந்தாச்சுல ...சொல்லுப்பா சீக்கிரம் " என்று ஊக்கினாள் ஆதினி.

வேறு வழி இலலாததால் அனைத்தையும் சொல்ல முடிவு செய்து விட்டு சொல்ல ஆரம்பித்தான் கவிவேந்தன்."மேடம்...என்னோட சொந்த ஊரு மதுரை..இங்க தான் காலேஜ் ல இன்ஜினியரிங் 2 -ம் வருஷம் படிக்கிறேன்..என்னோட பிரெண்ட்ஸ்- யோட வீடு எடுத்து தங்கி இருக்கேன். நாங்க லீவு டேஸ் ல, பைக் ரேஸ் வைப்போம் அந்த ஸ்ட்ரீட் பசங்க கூட. இந்த டைம் நாங்க வின் பண்ணிட்டோம், அத பொறுத்துக்க முடியாம, "உன் கால முறிச்சு காட்டுறேன்னு "அந்த பசங்க சொன்னாங்க .அதான், இப்படி நடந்துடுச்சு" என்று நீளமாக பேசி முடித்தான்.

ஆதினிக்கு என்ன சொல்லவதென்றே தெரியவில்லை.

"என்னிடம் நூறு இளைஞர்களைக் கொடுங்கள்..இந்த இந்தியாவையை மாற்றி காட்டுகிறேன் " என்று சொன்ன விவேகானந்தரின் வார்த்தைகள் எங்கே போய் கொண்டிருக்கிறது.

"நாளைய இந்தியா இளைஞர்களின் கையில்" என்ற அப்துல்கலாமின் பொன்மொழிகள் எங்கே சிதைந்து கொண்டிருக்கிறது.

நல்ல திறமைகளை ஆக்கப்பாதைக்கு செலுத்தாமல், இப்படி ரேஸ் என்று உயிருக்கே உலைவைத்துக்கொண்டிருக்கும் பழக்க வழக்கங்களை என்ன வென்று சொல்வது...

ஆதினி நிதானமாக, "உங்க அம்மா, அப்பா போன் நம்பர் சொல்லு , அவங்களுக்கு இன்போர்ம் பண்ணிட்றேன் " என்ற கேட்க, கவிவேந்தன் அவசரமாக "இல்ல மேடம்..வேணாம் ! எங்க அப்பா கூலி வேலை பாக்குறவங்க ! அம்மாக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்த படுவாங்க! " என்று சொன்னான்.

ஆதினி உடனே, "உங்க அம்மா, அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு, நம்ம தான் படிக்கல, நம்ம பையனாவது நல்லா படிக்கட்டும்னு உன்ன படிக்க அனுப்பினா, நீ என்ன வேலை பாக்குற !" என்று வெளுத்து வாங்கினாள்.

கவிவேந்தனும், "சாரி மேடம் ! இனி இந்த மாதிரி பண்ண மாட்டேன்" என்று தன் தவறை உணர்ந்து சொன்னான்.

அவன் முகத்தைப் பார்த்தே அவனது எண்ணவோட்டத்தைப் புரிந்து கொண்ட ஆதினி, "ஓகே...உனக்கு என்ன ஹெல்ப்- னாலும், என்னை காண்டாக்ட் பண்ணு,என்று யாருக்கும் பகிராத தனது அலைப்பேசி எண்ணைக் கொடுத்தாள்.சரி என்று, அவளது அலைப்பேசி எண் கவிவேந்தனின் அலைப்பேசியில் மட்டும் பதியப்பட வில்லை. வெளியே, இவர்களது உரையாடலை எதேச்சையாக கேட்க நேரிட்ட இனிலனின் மனப்பேசியிலும் பதிந்தது.

அருகில் இருந்த காவலர் திருச்செல்வனிடம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு, இந்த விபத்துக்கு காரணமான அந்த மாணவர்களையும், தன்னை வந்து சந்திக்குமாறு சொல்லிவிட்டு, கவிவேந்தனிடம் , மறுபடியும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாதென்று அறிவுறுத்திவிட்டு விடைப்பெற்றாள் ஆதினி.

வெளியில், இனிலன் மருந்துகளை மாற்றி கொடுப்பதற்க்காக காத்துக்கொண்டிருந்தான்."தேங்க்ஸ் போர் எவேர்ய்திங், இனிலன் " என்று விடைப்பெற்றாள்.இனிலனால் தலையை மட்டுமே அசைக்க முடிந்தது.

இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே

கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே

இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது
என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே

இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே

கனவுகள் நனவாகும் நாளுக்காக காத்திருக்க தொடங்கினான் இனிலன் அபிமன்யு.

-- இன்னும் அறிமுகம் செய்வேன்....

உன்னை என் தேவதை என்று நினைத்துதான்
வழிபட ஆரம்பித்திருக்கிறேன் .
ஒரு வேளை
நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும்
என் வழிபாடுகள்
உன்னை தேவதை ஆக்கிவிடும் !

--தபு ஷங்கர்
 
Akila

Well-Known Member
#10

Hi
Nice update
Now a days the students didn't care about their parents sufferings and pains. Very pity and sad
Waiting for further interesting episode.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement