உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 9

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: ரொம்ப லேட்டா இந்த யூடிய போஸ்ட் பண்ணுறேன்... சாரி...:confused::confused::confused: ஆனா இதுவும் கொஞ்சம் பெரிய யூடி தான்...:giggle::giggle::giggle: இதுல ஹீரோயின் காலேஜ்க்கு டாட்டா சொல்றது, நேஹா-ரித்தீஷ் பிரேக்-அப்னு நெறையா இருக்கு;););)...

1573996259239.jpg

ஈர்ப்பு 9

நாட்கள் அதுபாட்டில் நகர்ந்தது. தேர்வு சமயமானதால்அதுவும் கடைசி செமெஸ்டர் என்பதால் எல்லாரும் மும்முரமாக படித்துக் கொண்டிருந்தனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், சிலர் ‘என்ன தான் நடக்கட்டும் நடக்கட்டுமே’ என்ற ரீதியிலேயே சுற்றிக்கொண்டிருந்தனர்.

இவர்ளிடையே என்னை அதிகம் எரிச்சல் படுத்துவது ரித்தீஷ் – நேஹா ஜோடி தான். அதிலும் ரித்தீஷ் வேண்டுமென்றே என்னையும் சாண்டியையும் வெறுப்பேற்ற எங்கள் கண் முன்னே அவளுடன் நடமாடிக்கொண்டிருப்பான். இது தெரியாத நேஹாவோ அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் சென்று கொண்டிருந்தாள். அவளைக் கண்டு வருத்தப்படுவதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை என்னால்.

ஒரு வழியாக எங்கள் தேர்வுகள் முடிந்தன. கல்லூரியில் மாணவர்களாக அது தான் எங்களின் கடைசி நாள் என்பதாலும் மீண்டும் இது போல் சேர்ந்து இருக்கும் நாட்கள் கிடைப்பதற்கடியது என்பதாலும் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆர்வமாக பேசி மகிழ்ந்தனர். பேசி முடித்ததும் நாங்கள் எங்கள் வகுப்பறை, கேண்டீன் என்று நாங்கள் இதுவரைக்கும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்த இடங்களுக்கு சென்று எங்கள் 4 வருட கல்லூரி காலத்தை மீண்டும் வாழ்ந்து பார்க்க முயன்றோம்.

ஒவ்வொருவருக்கும் அவர்களின் கல்லூரி வாழ்க்கை என்பது பொன்னான காலம் தான். இன்பமும் துன்பமும் சண்டைகளும் சமாதானங்களும் வெற்றிகளும் சருக்கல்களும் காதலும் நட்பும் என எல்லாம் கலந்த கலவை தான் கல்லூரி காலம். அது அங்கு வாழ்ந்து பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

என்ன தான் படிக்கும்போது கல்லூரியைப் பற்றி குறை கூறினாலும், இனி இங்கு வரப்போவதில்லை என்று யோசிக்கும்போது மனதினுள் சிறு வேதனை எழத்தான் செய்கிறது. ஒருவாறு அந்த உணர்வுகளிலிருந்து வெளிவந்தோம்.

அப்போது அங்கு ஒரு வகுப்பறை முன் கூட்டமாக இருந்தது. பக்கத்தில் போகும்போதே தெரிந்தது அது நேஹாவின் வகுப்பறை என்று.
நானும் சாண்டியும் அங்கிருந்து வதந்திகளை பரப்புகிறவர்களை முதலில் வெளியேற்றினோம்.


உள்ளே சென்று பார்த்தபோது நேஹா அழுது கொண்டிருந்தாள். அன்றொரு நாள் கண்களில் கண்ணீருடன் சாண்டியை பார்த்தது போலவே இருந்தது எனக்கு. நானும் சாண்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். பின்பு அவள் அருகில் சென்று மெதுவாக அவளின் தலையைக் தடவினேன்.

நிமிர்ந்து எங்களை பார்த்தவளின் கண்களிலிருந்து மீண்டும் அருவியென கொட்டியது கண்ணீர். நான் அவளை மெதுவாக என் தோளில் சாய்ந்து ஆறுதல் அளிக்க முயன்றேன். அவளிடம் வேறெதுவும் கேட்கவில்லை நாங்கள். ஏனெனில் என்ன நடந்திருக்கும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரிந்தது.

இன்னும் அங்கிருந்தால் அவளைப் பற்றி தங்களுக்குள் கிசுகிசுக்கும் கும்பலால் அவள் மேலும் பாதிக்கப்படுவாள் என்பதால் அவளை அங்கிருந்து வெளியே கூட்டி வந்தோம்.

அங்கிருந்து நேராக கேண்டீன் வந்து சூடாக காபி வாங்கி அவளைப் பருகச் செய்த பின்பே அவளிடம் நடந்ததைக் கேட்டேன். அவளோ மனதிற்குள் வைத்ததையெல்லாம் மடை திறந்த வெள்ளம் போல் கூற ஆரம்பித்தாள்.

“அன்னிக்கு உங்ககிட்ட ரித்தீஷைப் பத்தி கேட்டதும் நீங்க சரியாக பதில் சொல்லாததால்அவனப் பத்தி தெரிஞ்சுக்க ஆர்வம் அதிகமாச்சு. அப்பறம் ரெண்டு நாள்ல அவனே வந்து என்கிட்ட பேசினான். நான் அவன தேடுனதா அவன் பிரெண்ட்ஸ் சொன்னாங்கனு சொன்னான். என்கிட்டே நல்லா பேசுனான். என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேக்க சொன்னான்.

அதக் கேட்டதும் அவன் மேல பெரிய மரியாதையே வந்துச்சு. இப்போ தான் அதெல்லாம் அவனோட நடிப்புன்னு தெரியுது. என்ன நல்லா ஏமாத்திருக்கான்” என்று அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

பின் அவளே தொடர்ந்தாள். "ஒவ்வொரு நாளும் டான்ஸ் கிளாஸ் முடிஞ்சதுக்கப்பறம் பேச ஆரம்பிச்சோம். கொஞ்ச நாள்ல போன்லயும் மணிக்கணக்கா பேசுனோம். இப்படி தான் ஆரம்பிச்சது எங்க பழக்கம்.

ஒரு நாள் அவன் காலேஜ்ஜுக்கு வரல. நான் போன் பண்ணாலும் எடுக்கல. எனக்கு ரொம்ப கவலையா இருந்துச்சு. அவன் வீட்டுக்கு போகலாமா வேணாமானு யோசிச்சுட்டு இருந்தேன். அன்னிக்கி அவன் வீட்டுக்கு போயிருந்தா இன்னிக்கு இந்த நிலைமை எனக்கு வந்திருக்காது.

அடுத்த நாள் என்ன பாக்க கேண்டீன் வந்தான். எனக்கு அவன திரும்ப பாத்ததுல ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஆனா எதுக்காக அவன பாத்தா சந்தோஷமா இருக்குனு நான் யோசிக்கல. அதோட அவன பாத்ததுல எதுக்கு அவன் காலேஜ் வரலனு கேக்க மறந்துட்டேன். ஆனா இப்போ யோசிச்சா நான் ரீசன் கேக்க கூடாதுனு அவன் தான் அந்த டாபிக்க மாத்திட்டானு தோணுது.

இப்படியே நாட்களும் நகர்ந்துச்சு. எங்க பிரெண்ட்ஷிப்பும் அடுத்த லெவெல்லுக்கு போச்சு. நடந்து போறப்போ தோள் உரசி நடக்கறது, கை கோர்த்து நடக்கறதுனு நாங்க இன்னும் நெருங்கினோம். அவன்கிட்ட இருந்த ஏதோ ஒன்னு என் மூளையை மழுங்க வச்சுடுச்சு. யாரோட அட்வைஸையும் காது கொடுத்து கேக்கல. இதுல அவனும் உங்கள பத்தி தப்பு தப்பா சொன்னான்.” என்று கூறி குற்றஉணர்ச்சியுடன் எங்களை நோக்கினாள்.

நான் எதுவும் கூறாமல் அவளைத் தொடர்ந்து சொல்லச் சொன்னேன். ஆனால் எனக்குள் அப்படி என்ன தான் சொல்லியிருப்பான் என்று யோசித்தேன்.

“உங்க பிரென்ட் சந்தியா அவன லவ் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணதாகவும் அவன் ஒத்துக்காததால் நீங்க அவனப் பத்தி தப்பு தப்பா வதந்திய பரப்பி விட்டதாகவும் சொன்னான்.”

இதைக் கேட்டதும் அளவில்லாத கோபம் என்னுள்ளே. ‘அந்த பொறுக்கி தான நாய் மாதிரி இவ பின்னாடி சுத்திட்டு இருந்தான். இல்லாத தப்பெல்லாம் பண்ணிட்டு என்னமோ எங்களால தான் அவன் பேரு கெட்டுப்போன மாதிரி சொல்லிருக்கான். பாஸ்டர்ட்…’ இன்னும் எனக்கு தெரிந்த கேட்ட வார்த்தைகளிலெல்லாம் திட்டிவிட்டு சாண்டியைப் பார்த்தால் அவளது முகமும் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது.

நேஹாவோ எங்கள் முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்து கொண்டே தொடர்ந்து கூற ஆரம்பித்தாள்… “சாரி அன்னிக்கு நீங்க வந்து பேசுனப்போ நான் உங்கள கண்டுக்கக்கூட இல்ல. அன்னிக்கு தான் அவன் என்ன ப்ரொபோஸ் பண்ணான். அந்த சந்தோசத்துல இருந்ததால நீங்க சொன்னத சீரியஸா எடுத்துக்கல.

எல்லாரும் எங்கள பாத்து அவங்களுக்குள்ள பேசிக்கும்போதெல்லாம் எனக்கு பெருமையா இருக்கும். அவங்கெல்லாம் எங்கள பாத்து பொறாமை படுறாங்கன்னு நெனச்சேன். ஆனா இப்போ தான் அவங்க என்ன பரிதாபமா பாத்திருக்காங்கன்னு தெரியுது.

வாரத்துல ஒரு நாள் மட்டும் சொல்லாம கொள்ளலாம எஸ்கேப் ஆகிடுவான்.அதப் பத்தி கேக்கும்போதெல்லாம் ஏதோ சொல்லி சமாளிச்சுடுவான்.

அப்பறம் ஒரு நாள் அவன் வீட்டுக்கு வர சொன்னான். ஒரு அரை மணி நேரம் கழிச்சு ஒரு போன் கால் வந்துச்சு. அதுக்கப்பறம் அவன் ரொம்ப பதட்டமா இருந்தான். என்கிட்ட அவன் அம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல வரப்போறதாகவும் அப்போ நான் அங்க இருக்கிறது சரி இல்லன்னு சொல்லி என்ன தொரத்திவிடாத குறையா அனுப்புனான்.

நானும் ஒரு ஆட்டோவ பிடிச்சு வந்துட்டு இருக்குறப்போ தான் என் பர்ஸ்ஸ அங்கயே விட்டுட்டு வந்துட்டேன்னு தெரிஞ்சுது. அதுல தான் ஆட்டோக்கு கொடுக்குற பணமும் இருந்துச்சு. அத எடுக்க உடனே அவங்க வீட்டுக்கு போனேன். அங்க திரும்பி போனதால் தான் அவனப் பத்தின எல்லா விஷயங்களும் தெரிய வந்தது.
அங்க போனப்போ வெளிய ஹீல்ஸ் செருப்பு இருந்துச்சு. நானும் அவங்க அம்மா வந்துட்டாங்கன்னு நெனச்சு வெளியவே இருந்தேன். அப்போ அங்க திறந்திருந்த ஜன்னல் வழியா பாத்தப்போ அவன் ஒரு பொண்ண ஹக் பண்ணிட்டு இருந்தது தெரிஞ்சுச்சு.


அதப் பாத்ததும் எனக்கு செம ஷாக்காகிடுச்சு. அப்போ கூட அவனோட பிரெண்டா இருக்கும்னு அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுச்சு என்னோட மானம்கெட்ட மனசு. அவன் ஏதோ பேசுறது தெரிஞ்சு பக்கத்தில போனேன்.

“டார்லிங் மிஸ்ஸ்ட் யூ சோ மச். ஹொவ் வாஸ் யுவர் ஜர்னி?”

“வெளிய போன பொண்ண பாத்தா நீ என்ன மிஸ் பண்ண மாதிரி தெரியலையே…”

“அது சும்மா டைம்பாஸுக்கு பேபி.”

“நீ யாரவேணா என்னவேணா பண்ணிட்டு போ… ஆனா கல்யாணம் என்கூட தான். உங்க அப்பா சொல்லிருப்பாருனு நெனைக்கிறேன். நம்ம ரெண்டு பேரு கல்யாணத்துக்கு பின்னாடி பெரிய பிசினஸ் டீலிங்கே இருக்கு. அத டேமேஜ் பண்ற மாதிரி நீ ஏதாவது பண்ணனு தெரிஞ்சுச்சு உங்க அப்பாவ விடு நானே உன்ன போட்டு தள்ளிடுவேன்.”

“ஓகே பேபி.. எனக்கு எல்லாம் தெரியும்… கூல் பேப்ஸ்…எங்க அப்பா அதான் உன் மாமா நான் உன்னை ஏமாத்திடுவேன்னு தான நான் காலேஜ் போறதுக்கு முன்னாடியே நம்ம எங்கேஜ்மெண்ட்ட முடுச்சுட்டாரே. அப்பறம் ஏன் கவலப்படுற. நம்ம கல்யாணம் நிச்சயமா நடக்கும்…”

இதக் கேட்டவொடனே எனக்கு அங்க நிக்கவே அருவருப்பா இருந்துச்சு. இப்படி ஒருத்தனயா நான் விழுந்து விழுந்து லவ் பண்ணேன்னு எனக்கே என்ன நெனச்சு அவமானமா இருந்துச்சு. திரும்ப வீட்டுக்கு எப்படி வந்தேனே தெரியல” என்று அழுதுக்கொண்டே கூறினால்.

எனக்கும் சாண்டிக்குமே இந்த விஷயம் அதிர்ச்சியாக தான் இருந்தது. அவன் எத்தனையோ பெண்களை காதலித்து (!!!) ஏமாற்றி இருந்தாலும், அவனிற்கு வீட்டில் கல்யாணம் நிச்சயமாகி இருப்பது சிறிதளவு கூட வெளியே கசியவில்லை… இல்லை கசிந்துவிடுமளவிற்கு அவன் வைத்துக்கொள்ளவில்லை.

“அடுத்த நாள் எதுவுமே நடக்காதமாதிரி என்கிட்டே வந்து என் பர்ஸ்ஸ கொடுத்துட்டு பேசுனான். அப்போ நேத்து நடந்ததை பத்தி கேட்டப்போ அவன் கூல்லா சிரிச்சுட்டேபேசுனான்.

’உனக்கு விஷயம் தெரிஞ்சுருச்சா… பரவால்ல இதுவும் நல்லதுக்கு தான்… நானே உன்ன பிரேக்-அப் பண்ண என்ன ரீசன் சொல்லலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன்… நீயே அதுக்கு சொல்யூஷன் கொடுத்துட்ட. தேங்க்ஸ் பேபி இந்த 4 மாசம் நல்லா கம்பெனி கொடுத்த. பேபி அப்பறம் நீ ரொம்ப லக்கி. ஏன்னா இதுவரைக்கும் ஒரு மாசத்துலயே நான் பொண்ணுங்கள கழட்டிவிட்டுடுவேன். ஆனா உன்கூட தான் 4 மாசமா சுத்திருக்கேன்’ என்று கண்ணடித்தான்.

எனக்கு வந்த ஆத்திரத்துல அவன அடிச்சு, ‘ஏன்டா இப்படி பண்ணுன? உனக்கு நான் என்ன பண்ணுனேன்.’ என்று கேட்டேன்

அதுக்கு அவன் கன்னத்தை தடவிக்கொண்டே , ‘நீ என்கூட 4 மாசம் ஸ்பெண்டபண்ணதுனால இந்த அடிய மன்னிச்சு விடுறேன். இல்ல நீ அடிச்ச அடிக்கு உன்ன கேவலப்படுத்திருப்பேன். அப்பறம் என்ன கேட்ட… நீ என்ன பண்ணனு தான கேட்ட… உன் அழகு தான் பேபி உன்ன திரும்பி பாக்க வச்சுது. உன்ன நான் வச்ச கண்ணு எடுக்காம பாத்துட்டு இருந்தா அந்த திமிரு பிடிச்சவகிட்ட போய் பேசிட்டு இருந்த…அதான் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா…

ஹாஹா… நான் உன்கூட பழகுறத பாத்து அவ பயந்து போய் உங்கிட்ட வந்து சொல்ல அத நீ கண்டுக்காம இருக்கனு ஒரே காமெடி தான். போறதுக்கு முன்னாடி ஒரு அட்வைஸ் பேபி… நல்லவன் மாதிரி யாரு என்ன சொன்னாலும் நம்பிதாட பேபி… குட் பை’

அங்க இருந்து எப்படி கிளாஸ் வந்தேன்னே தெரியல. அந்த ‘பிரேக்-அப்’ விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சு துக்கம் விசாரிக்குற மாதிரி வந்து வந்த் கேட்டுட்டு போறாங்க. எனக்கு அங்க இருக்கவே பிடிக்கல. அப்போ தான் நீங்க வந்து என்ன கூட்டிட்டு போனீங்க. நான் உங்கள இதுவரைக்கும் மதிச்சு பேசுனதே இல்ல. ஆனா நீங்க எனக்கு ஒரு பிரோப்ளேம் வரும்போது ரொம்ப ஹெல்ப் பண்ணிருக்கீங்க. ரொம்ப தேங்க்ஸ் அக்கா…” என்று கூறி என்னை அணைத்தாள்.

“என்னாது அக்காவா:eek::oops::oops:… ஏற்கனவே ஏரியா பசங்க எல்லாம் எனக்கு வயசாகிடுச்சுன்னு ஓட்டுறாங்க… இதுல நீ வேற அக்கான்னு கூப்பிட்டு என் குட்டி ஹார்ட்ட ஹர்ட் பண்ணாதமா:confused::(:confused:…”

நான் பேசியதைக் கேட்டு சிரித்துவிட்டு சற்று சகஜ நிலைக்குத் திரும்பினாள். பின் அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்து பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து வந்தோம்.

“அந்த ‘ரோக்’க ஏதாவது பண்ணனும் டி. இப்போவே அப்பாட்ட சொல்லுறேன்.”

“ஹே லூஸி அப்பா பிசினஸ் விஷயமா ஃபாரின் போயிருக்காங்க. இப்போ இதை சொன்ன உடனே கெளம்பி வருவாங்க. இதெல்லாம் தேவையா… அப்பா பிசினஸ் ட்ரிப் முடிஞ்சு வந்தோடனே அவன பாத்துக்கலாம். எங்க போயிட போறான். மெதுவா வச்சு செய்யலாம்.”

அன்று இரவு க்ரிஷிடம் நேஹாவைப் பற்றி கூறினேன். இதுவரையிலும் அவனிடம் நேஹா – ரித்தீஷ் காதலைப் பற்றி பேசியதில்லை. அடுத்தவர் விஷயத்தை பிறரிடம் பேசுவதில் எனக்கு ஈடுபாடு இல்லை. ஆனால் இன்று எனக்கு அவனிடம் இதை கூற வேண்டும் என தோன்றியது.

ஆனால் அதற்கு அவனிடம் சிறிது நேரமாகியும் ‘ரிப்ளை’ இல்லை. ‘என்னடா இது இன்னும் ரிப்ளை பண்ணல… ஒரு வேல ரொம்ப நேரம் டைப் பண்ணுறேன்னு காண்டாகி ஆப்லைன் போயிருப்பானோ…:unsure::unsure::unsure:

சிறிது நேரத்திலேயே அவனிடமிருந்து ரிப்ளை வந்தது.

க்ரிஷ் : ம்ம்ம்… நீயும் எதுக்கும் கவனமா இரு அவன்கிட்ட…

நான் : ஓகே… பை குட் நைட்..:sleep::sleep::sleep:

க்ரிஷ் : ம்ம்ம்… குட் நைட்…

‘என்னடா இது அதிசயமா என்ன எதுவுமே கிண்டல் பண்ணாம தூங்க போறான்… சம்திங் பிஷி... என்னன்னு நாளைக்கு கண்டுபிடிப்போம்… இன்னிக்கு ரொம்ப டையர்ட்டா இருக்கு…. அதனால தூங்குவோம்’ என்று கொட்டாவி விட்டப்படியே தூங்கிப் போனேன்.

ஈர்ப்பான்(ள்)...


ஹீரோயின் - சாண்டி ரித்தீஷுக்கு என்ன தண்டனை கொடுத்தாங்க ரித்தீஷ் கூட இருந்த அந்த பொண்ணு யாருன்னு என்னோட அடுத்த கதைல பார்க்கலாம்...
 
Advertisement

New Episodes