உனக்காகவே நான் -26

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் – 26

Heroin.jpg
இப்போது எதுவுமே நடக்காதது போல் எப்படி இவனால் இப்படிப் பேச முடிகிறது!!’வியப்புடன் கோபமும் வந்தது.


இருந்தும் ரிஷியின் கேள்விக்கு பதிலளிக்கும்விதமாக,உணர்ச்சி துடைத்த குரலில் , “ இல்லை.எனக்கு ஓய்வெடுக்க வேண்டும்.எனக்குத் தூக்கமாக வருகிறது” என தன் அறை செல்ல நடந்தாள்.


மித்ராவின் இவ்வித முக உணர்வும்,அவளது குரலும் ரிஷியை மேலும் அவளிடம் பேச தடை செய்ய வைத்தது.அவன் மீதும் தவறு இருக்கத்தானே செய்கிறது.மேலும் அவளைத் தொந்தரவு செய்யாமல்,அவள் வழியிலேவிட்டு பிடிக்க நினைத்தான் ரிஷி.


தூக்கம் வருகிறது என்று சொன்ன போதும்,மித்ராவால் உறங்க முடியவில்லை.ரிஷியின் நினைவால் மீண்டும் அழுகை வரத் துடித்தது.இருந்தும் அதனை கடினப் பட்டு கட்டுப் படுத்தினாள்.எங்கு மீண்டும் இந்த அழுகையால் காய்ச்சல் வந்து அவனைப் பிரிய எடுத்திருக்கும் தன் பயணம் தடைபட்டுவிடுமோ என அஞ்சினாள்.அதனால் பிடிவாதமாக பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்துப் படிக்க முடிவெடுத்து அதில் சிறிது வெற்றியும் கண்டாள்.


ஆனால் சிறிது நேரத்தில் அவள் அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டது.வேறு யார் நம் கதாநாயகனே!.ரிஷி, “ மித்ரா...”என அழைத்தவிதமாக அவளது அறைக் கதவை தட்டினான்.


அவன் குரலை கேட்ட போதும்,கேட்காதவளாய் சிலையாக அமர்ந்த இடத்திலே இருந்து கொண்டு கையிலிருந்த புத்தகத்தை புரட்டினாள் மித்ரா.விடாமல் ரிஷியும் “மித்ரா...மித்ரா..”எனக் கதவை தட்டியவிதமாக இருமுறை அழைத்தான்.


அவளிடமிருந்து பதில் வரும் நிலை இல்லையென்றானதும் ரிஷியே மேலும் தொடர்ந்தான், “நீ தூங்கவில்லை என்று எனக்குத் தெரியும் மித்ரா..கதவைத் திற..”என்றான்.


இழுத்துப்பிடித்துக் கொண்டு புத்தகத்தை வைத்திருந்த அவளது கைகள் கதவை திறக்க துடித்தது.அவளது மனமும் ஒருங்கே அதற்கு ஒத்து ஊதியது.ஆனால் அவள் புத்தி மட்டும் ‘உன்னைச் சந்தேகித்த அவனை நீ நிமிர்ந்தும் பார்க்கக் கூடாது’ எனக் கடினமாக உத்தரவிட்டது.


கண நேரத்தில் அவள் புத்தி செயல்பட்டு , “எதற்கு..?நான் உறங்கவில்லையென்றால் கதவை திறக்க வேண்டுமென்று என்ன இருக்கிறது,.?”எனக் கடுமையான குரலிலே கேட்டாள் மித்ரா.


“முதலில் கதவை திற...அதன் பிறகு சொல்கிறேன்” என அவளது போக்கிலே சொன்னான் ரிஷி.


“எதுவானாலும் அங்கிருந்தே சொல்லுங்கள்.எனக்கு உங்களது குரல் தெளிவாகவே கேட்கிறது” என்று குரலில் கடுமை மாறாமல் சொன்னாள்.


“ஓ...அப்படியா சங்கதி...எனக்கு வேறு தோன்றியது.”என பீடிகை போல நிறுத்தினான்.


அன்னிச்சையாக, “என்ன?என்ன தோன்றியது” எனக் கேட்டாள் மித்ரா.


“இல்லை...தேவியாருக்கு இரண்டு காதும் கேட்காது.செய்கை மூலம்தான் புரியவைக்க வேண்டும்.அதற்குத்தான் கதவை திறக்க் கேட்டேன்” என மிகத் தீவிரமாக பேசி பின் சத்தமிட்டுச் சிரித்தான் ரிஷி.


அவனது சிரிப்பு,அழகாக வரிசைப்படுத்தி வாசித்த ஸ்வரங்களைப் போல காற்றில் பரவி அவள் காதில் விழுந்தது.அந்த சிரிப்பில் மெய் மறந்த மித்ரா,அந்த சிரிப்பின் காரணம் ‘தன்னை காட்சிப் பொருளாய் வைத்து கேலி செய்து சிரிக்கிறானா?’என்று மேலும் கோபம் மிகுந்தது.


“என்ன?என்ன சொன்னீங்க?”என்று கதவின் அருகில் எழுந்து வந்து நின்று கொண்டு சீறினாள் மித்ரா.


“உன்ன...உன்னைத்தான் சொன்னேன்.”என்று சிரித்தவிதமாக சொன்னான்.


அவனது ‘உன்னைத்தான்’ என்றதில் ‘நான் என்ன காது கேளாதவள் போலா பேசுகிறேன்.’எனக் கோபம் அதிகம் கொண்டவள்,அவனது சிரிப்பில் அதன் உச்சிக்கே சென்றுவிட்டாள்.அதன் பிறகு “என்ன சொன்னீங்க!!”என கோபமுடன் கதவின் மீது கையை வைத்தாள்.


“என்ன சொல்லவேண்டும்.?”எனக் கேட்ட ரிஷி பின் , “இங்க பாரு மித்ரா..இது என் வீடு.இந்த வீட்டில் எந்த அறை செல்லவும் எனக்கு உரிமையுண்டு.அப்படி இருக்க,இந்த அரையினுள் மட்டும் வரக்கூடாது என்று கட்டளையிட உனக்கு என்ன உரிமை இருக்கிறது?.”என வெகு அக்கறையாக வார்த்தைகளைத் தேடி பிடித்துப் பேசினான்.


அவனது வார்த்தைகள் கதவின் மிக அருகில் நின்ற மித்ராவின் மண்டை ஓட்டில் தெளிவாகவே விழுந்தது. ‘ஆமாம் உனக்கென்ன உரிமை இருக்கிறது’ என்ற அவளது குரல் காற்றிலே கரைந்தது.


மித்ராவிடம் வார்த்தைகள் வராததும் , “என்ன இப்போதாதவது கதவைத் திறக்க முடியுமா?இல்லையா?”என்று கேலி குரலில் கேட்டான் ரிஷி.


இயந்திரமாக அவளது கைகள் கதவைத் திறக்க செய்தது.அந்த அறையைத் திறந்த பின் நிமிர்ந்து ரிஷியைப் பார்த்தாள் இல்லை மித்ரா.அவன் உள்ளே வந்த பின் ,இவள் வெளியில் சென்று தோட்டத்தில் அமர நினைத்தாள்.அங்கும் அவன் வந்தால் அவளுக்கு தெரிந்த நடை பாதை வழி சென்று அன்று துறை தாத்தா அழைத்துச் சென்ற அந்த ஏரிக் கரையில் அமர்வது என்று முடிவெடுத்தாள் மித்ரா.அங்கும் வந்தால் எங்கேனும் சென்றுவிட வேண்டும்.ஆனால் அவன் முன் மட்டும் நிற்கக் கூடாது என நினைத்தாள்.


ஆனால்,ரிஷி உள்ளே வர எத்தனிக்கும் போது,மித்ரா வெளியில் செல்ல முயன்றாள்.ஆனால் ரிஷி அவளைவிட்டால்தானே!!அவளது கால்கள் நடக்க முயன்ற போதும் ரிஷி அவளது கையை அவள் புரம் இழுத்தான்.எதிர் பாராத அவனது இழுவிசையில் சுருண்டு வந்து அவனிடமே ஒட்டிக் கொண்டாள் மித்ரா.அவன் விழிகளைச் சந்தித்தாள்.


குறும்பாகச் சிரித்த அவனது கண்களை சில நிமிடங்களே இமைக்க மறந்து பார்த்தாள் மித்ரா.ஆனால் ‘தான் ரிஷியின் அணைப்பில் இருப்பது விரைவிலே உணர்ந்து, “என் கையை விடுங்கள்.எந்த உரிமையில் என் கையை பற்றி இருக்கிறீர்கள்.என்னை விடுங்கள்” என சத்திமிட்டு அரற்றினாள்.


அவள் சொல்வதை காதிலே போட்டுக் கொள்ளாமல்,புன்னகையுடனே “என்ன உரிமை வேண்டுமென்று நினைக்கிறாயோ!அதே உரிமையில்தான்!!’என அவளது பாணியிலே பதிலுரைதான் ரிஷி.இருந்தும் அவளது கையை விட்டான் இல்லை.


‘என்னை மட்டும் என்ன உரிமை இருக்கிறது என்று கேட்டுவிட்டு,தன்னிடமான உரிமையைப் பற்றி பேசுகிறானா?’என மனதினுள் கறுவினாள் மித்ரா.ஆனால் அதனைச் சொல்லாமல் , “நான் எந்த உரிமையையும் நினைக்கவில்லை.இப்போது என்கையை விடப் போகிறீர்களா இல்லையா?”எனக் கோபமான குரலிலே கேட்டாள் மித்ரா.


“அப்படியா?”எனக் கேட்டவன்,அவளது கையை விடுத்து ,ஒரு கையால் அவளது இடையை இலகுவாகப் பற்றி,மற்றொரு கையால்,அவள் கோபம் மிகுந்த கண்களை காண இடையுறாக இருந்த அவளது நெற்றி முடியை ஒதுக்கிவிட்டான் ரிஷி.


அவனது திடீரென்ற இடை தழுவலில் மித்ராவின் மூச்சு நின்றது. ‘இவன் என்ன செய்யத்தான் நினைத்திருக்கிறான்.!!?’அவளது கண்களில் கோபம் மாறி மிரட்சியுடன் ரிஷியை ஏறிட்டாள்.விரும்பிய இதயம் பலகீனமாகி,அவன் சந்தேகித்ததை மறந்து ,அவனை விசைக் கொண்டு தள்ளும் சக்தியற்று ,அவள் உடல் உறுப்புகளை செயல் இழந்து நிற்கச் செய்கிறதே!!’என அவளையே நினைத்து வெட்கினாள் மித்ரா.


மித்ராவின் கண்களை பார்த்த ரிஷி,வெற்றி புன்னகையுடன் அவள் விழியை ஊடுருவினான்.


மிரட்சியுடன் இருந்த அவள் விழிகளில் ,அவளது இயலாமையால் நீர் துளிர்த்தது.விழி நீரில் எதிர் நின்று இருந்த ரிஷியின் உருவம் மெல்ல மறைய ஆரம்பித்தது.


அவள் விழி நீரைக் கண்ட ரிஷி,திகைப்புற்று அவளை விட்டு விலகி நின்று அவளுக்கு முதுகு காட்டி நின்றான் ரிஷி.


அவன் விலகி நின்ற போதும்,அந்த இடத்தை விட்டு சில நிமிடங்கள் மித்ரா நகரவில்லை.கலங்கி இருந்த கண்ணீர் குளம் மெதுவாக அவள் கன்னங்களை கடக்க அவசரமாக அதனைத் துடைத்தாள்.இதன் பிறகு,அந்த அறையை விட்டு வெளியேறத் திரும்பி நடக்க முயன்றாள்.


அப்போது, “மித்ரா...”என்ற ரிஷியின் குரலில் அவள் கால்கள் நின்ற அதே இடத்தில் திரும்பியும் பாராமல் , “ம்ம்” என்றாள் மித்ரா.எதுவும் பேசும் எண்ணமில்லையென்றாலும், ‘பேசாமல் போனால் மீண்டும் விரட்டிப் பிடிக்க மாட்டான் என்று என்ன நிச்சயம்.இது அவன் வீடு’ என எண்ணுகையிலே கசந்த புன்னகை அரும்பியது அவள் உதட்டில்.அதனால் அப்படியே நின்றாள்.


அவன் அவள் அருகில் வரும் அரவம் அவன் நடையின் அசைவில் மித்ராவிற்கு தெரிந்தது.


“நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்.”எனச் சொல்லிய வண்ணம் அவள் முன் வந்து நின்றான் ரிஷி.


‘என்ன?’என்பது போல் கேள்வியாய் ரிஷியை நோக்கினாள் மித்ரா.


“நாம் திருமணம் செய்து கொள்ளலாம்.நான் உன்னை விரும்புவது உனக்குத் தெரியும்.நீ என்னை விரும்புவது எனக்குத் தெரியும்.அதனால்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,மித்ராவினுள் கோபம் தலைக்கேறியது.


“என்ன?...என்ன சொன்னீங்க...?நான் உங்களை விரும்புவது உங்களுக்குத் தெரியுமா?எப்படி?எனக்குத் தெரிந்து நான் யாரோ சென்னையில் இருந்த என் அத்தை மகனைத்தான் காதலிப்பதாகக் கேள்வி??!!எப்போதிருந்து உங்களை நேசிக்க ஆரம்பித்தேன்.எனக்கு அது தெரியவில்லையே!!நான் எப்போதிலிருந்து உங்களை நேசிக்க ஆரம்பித்தேன்.??எனக்குத் தெரியவில்லையே ரிஷி. ” என ஏளன குரலிலே ரிஷியைக் கேட்டு சண்டை கோழியாய் நின்றாள் மித்ரா.


இப்படி இது வரை பேசியறியாதவள் என்ற போதும்,ரிஷியின் முந்தைய வாரச் செயலால் காயப்பட்டிருந்த இதயம்,எதையும் யோசிக்கும் சக்தியற்று ,தன் கோபத்தை வார்த்தைகளால் உதிர்த்துவிட்டது.இவ்வாறு பேசிய போதும் ஆத்திரம் அடங்காதவளாய் ரிஷியை தன் கூர் விழிகளாலே கிழித்துவிடும் எண்ணம் கொண்டு நேருக்கு நேரி நோக்கினாள்.


மித்ராவின் வார்த்தைகளால் ரிஷியின் முகம் லேசாக வாடியது.மித்ராவின் விழி கூர்மை அவன் முக வாட்டம் தாங்காமல் மெதுவாக இலக ஆரம்பித்தது.ரிஷி மித்ராவின் கண்களையே பார்த்து மெதுவாக“மித்ரா வார்த்தைகளை உதிர்க்காதே!!மீண்டும் அல்ல முடியாது!!”எனச் சிறு வருத்தமுடன் கூடிய கண்டிப்பில் சொன்னான்.


“நீங்க மட்டும் வார்த்தைகளை எண்ணி எண்ணி உதிர்த்திகளா?அன்று!!?”எனக் கேள்வியாய் மீண்டும் அவன் விழியை முறைத்தே கேட்டாள் மித்ரா.


“அன்று நடந்ததற்குக் காரணம் இருக்கிறது..”என்றான் ரிஷி.அவன் முடிக்கும் முன்பே “என்ன பொல்லாத காரணம்.என் மனதை அன்றே சொன்னேனே!?கேட்டீங்களா?எப்படி நான் துடித்தேன்.அதற்கெல்லாமும் காரணம் இருக்கிறதா?”எனக் கண்கள் இடுங்கக் கேட்டாள் மித்ரா.


அவள் தவிப்பது ரிஷியாலும் தாங்க முடியவில்லை.அவள் கண்ணீரை துடைக்க அவன் ஓரடி முன் வைத்தான்.அவள் இரண்டடி பின்வைத்தாள்.அதனால் செய்வதறியாது அப்படியே நின்றான் ரிஷி.அவள் முழுதும் மனதின் கணம் முழுதும் குறைய பேசட்டும் எனப் பொறுத்தான். “தவறு செய்யாமல் தண்டனைத் தருவதே உங்களுக்கு பொழுது போக்கு போல.அன்று சுமித்தா.இன்று நான்.நாளை யார்?”என்று குரல் தழுதழுத்தாள் மித்ரா.


“ஐயா சாமி...என்னை விட்டுவிடுங்கள்.உங்கள் சந்தேக கண்களுக்குள் சிக்கி வேதனையுற நான் ஆளில்லை.அதற்கான சக்தியும் எனக்கில்லை.உங்களுக்கு ஏற்றார் போல..”என மூச்செடுத்தவளின் குரல் முழுதும் உடைந்தது.மீண்டும் “ஆங்..அதுதான்...சுரேகாவோ...சுபலாவோ...யாரையேனும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருங்க.உங்கள் வாழ்வில் நான் வர மாட்டேன்.நான் பெங்களூரில் என் தோழி பார்த்து வைத்திருக்கும் விடுதியிலும்,வேலையிலுமே சேர்ந்து கொள்கிறேன்.”என தனக்கும் வலித் தரும் வார்த்தைகளை உதிர்த்துவிட்டு,அப்படியே அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து தன் இருக்கைகளால் முகம் புதைத்து அழுதாள் மித்ரா.


அவள் விசும்பல் மிகுந்த அழுகை நிற்கும் வரை காத்திருந்த ரிஷி,பின் அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் தந்தான்.


எதுவும் சொல்லாமல் சின்னப் பிள்ளையின் விசும்பலுடன் அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் அவன் தந்த தண்ணீரை வாங்கிக் குடித்தாள்.ஒருவேளை நிமிர்ந்து பார்த்திருந்தால்,அவளுக்கு ரிஷியின் கேலி புன்னகை அப்போதே தெரிந்திருக்குமோ!


பிறகு ஒருவாறு முழு அழுகையும் நின்ற பின்,ரிஷியை நிமிர்ந்து பார்த்தாள். அவன் அழகாக கதவின் அருகில் சாய்ந்து கொண்டு அன்று போல்,கைகளை கட்டுக் கொண்டு கால்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்து கண்ணனைப் போல் நின்றான்.அதே கரு நீல கண்ணனின் புன்னகையுடன்.


சில வினாடிகள் மித்ராவின் இமைகள் செயல் இழந்தது. ‘இந்தப் புன்னகையாலே.என்னை மயக்கிவிடுக்கிறானே!இந்தப் புன்னகையை எப்படிப் பிரிவது.இந்தப் புன்னகையில் எல்லாமே மறந்துவிடுக்கிறதே!!!’என தன் இயலாமையும் அவனது வசீகர புன்னகையையும் ஒருங்கே நிந்தித்தாள் மித்ரா.இருந்தும் உள்ளிருந்த புத்தி , “ம்ம்கும்..பெங்களூர் செல்லும் வரை அவன் முகம் காணவே கூடாது’ என்று முடிவெடுத்து தலை தாழ்த்தினாள்.


மித்ராவின் இந்த அனிச்சை செயலை அந்த நிலையிலும் ரிஷி ரசிக்கத்தான் செய்தான்.தொடர்ந்து, “ஆக...நீ பெங்களூர் சென்றேதான் ஆக வேண்டும் அப்படிதானே” என நின்றிருந்த அவ்விடத்தை விட்டு நகராமல் கேட்டான் ரிஷி.


அவன் குரல் கேட்கவும் ,வார்த்தைகளால் பதில் இல்லாமல்,ஆம் என்பது போல் தலையாட்டினாள் மித்ரா.


“ம்ம்....நான் சுரேகாவையோ,இல்லை சுபலாவையோ...இல்லை இருவரையுமோ திருமணம் செய்து கொள்ளலாம்.அப்படிதானே!”என வர இருந்த கேலி புன்னகையைக் கட்டு படுத்திக் கேட்டான் ரிஷி.


‘என்ன இருவரையுமா?’எனத் தோன்றி விருட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்,அவனது கேலி புன்னகையைக் காணவும், ‘இதிலும் விளையாட்டா?’என நினைத்தவள்.அவன் வாழ்வு அவன் இஷ்டம்’ என மனதினுள் உரு போட்டு, “அது உங்களது இஷ்டம் நான் எதுவும் சொல்வதற்கில்லை” என எரிச்சல் பரவவே சொன்னாள் மித்ரா.


“சரி..உன் விருப்பம் போல செய்துவிடலாம்.உன் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்காது போதுமா?”எனச் சத்தியம் செய்யாத உறுதியாகச் சொன்னான் ரிஷி.


மித்ரா ரிஷியை விசித்திரமாகப் பார்த்தாள். ‘ரிஷி தன்னை உண்மையில் விரும்பியிருந்தாள் அவள் இப்படிச் சொன்னதற்கு அவளிடம் சண்டையிட்டு திருமணத்திற்கான அவளது சம்மதம் வாங்கி இருக்க வேண்டும்.இப்படி இலகுவாக விட்டால்,அவன் அவளை நேசிக்கவே இல்லையா? ‘ எனத் தோன்றி அதற்கு வேறு தனியாக கண் கலங்கியது.ஆனால் ஒருவாறு அனைத்தையும் ஒதுக்கி அவனுக்குப் பதில் சொல்லும் விதமாக “ம்ம்” என்றாள்.


அவன் மீதான கோபம் அனைத்தையும் கொட்டியதால்,மித்ராவின் உள்ளம் லேசாகி மீண்டும் ரிஷி இனி நிரந்தரமாக தனகில்லையே என பாரம் ஏற ஆரம்பித்தது.ஆனால் அதற்கும் தானே தான் காரணம் என்பதால் அவள் புத்தி அந்த வேதனையைச் சமன் செய்யப் போராடியது.


“சரி...அதுதான் உன் பிரட்சனை முடிந்ததே!.இப்போது சிறிது தூரம் வெளியில் காற்றில் நடந்துவிட்டு வரலாம் உடன் வருகிறாயா?”என்றான் ரிஷி.


“இல்லை.நா..நான்” என மித்ரா ஆரம்பிக்கும் போதே, “உறங்க வேண்டுமென்று பொய்யை மீண்டும் சொல்லாதே!.உன் முகமே காட்டிவிடுக்கிறது?”எனப் போலி கோபமுடன் சொல்லிவிட்டு, “தேவியார் வருக..!!”என வாயிலை நோக்கிப் படை காவலாளி போல இருக் கைகளையும் விரித்து மித்ராவை அழைத்தான் ரிஷி.


அவனது இந்தச் செய்கையிலும்,மற்ற அனைத்தும் மறந்து இலகுவான பேச்சிலும் மித்ராவினுள் புன்னகை மலர்ந்தது.அந்தப் புன்னகையுடனே அவன் அழைப்பில் கலந்து கொண்டாள் மித்ரா.


அறையைவிட்டு வெளியில் வந்ததும், “மித்ரா ஒரு நிமிடம் இதோ வந்துவிடுக்கிறேன்.நீ கீழே காத்திரு.”என்றுவிட்டு தன் ஃபோனில் ஏதோ எண்ணைக் கண்டுபிடித்து அதற்கு தொடர்பு கொண்டு காதில் பொருத்திய வண்ணம் ரிஷி அவன் அறைச் சென்றான் ரிஷி.


அவன் செல்வதை பார்த்திருந்த மித்ராவினுள்,நிம்மதியும் நிம்மதியின்மையும் ஒரு சேர தோன்றியது.பின் அவனைப் பற்றிய எண்ணத்தை ஒதுக்கினாள்.அவளும் முகம் கழுவ எண்ணி மீண்டும் உள்ளே சென்று முகம் கழுவி கலைந்திருந்த தலையை லேசாகக் கையிலே சரி செய்துவிட்டு கீழே வந்து சோஃபாவில் அமர்ந்தாள்.


பெங்களூர் சென்றால் என்ன என்ன செய்வது என மனதினுள் திட்டமிட நினைத்தாள்.ஆனால் அவளது எல்லாத் திட்டங்களும் முழுமையும் சிந்திக்குமுன்பே அவளது மனம் ரிஷியைப் பற்றி மீண்டும் என்ன தொடங்கிய படி இருந்தது.


“சே..”என எண்ணி தோட்டத்தில் நடக்கலாம் என வெளியில் சென்றால் மித்ரா.


அங்கும் அன்றலர்ந்த அந்த ரோஜாப்பூவின் அழகை ரசிக்கும்விதமாக அதன் அருகே போனவள்,முன்பு,அவளிடம் இதே போல் மலரை ரசிக்கும் போது ரிஷியும் வந்ததை நினைத்தாள் மித்ரா.


அப்படியே அந்த மலரின் மீது பார்வை இருந்த போதும் அவள் நினைவு அங்கில்லை ‘ அவள் இந்த வீடு வந்ததிலிருந்து கடந்த ஒரு மாதத்தில் ந்டந்தவைகளே அவள் எண்ண அலைகளில் ஓடியது.ரிஷியுடனான ஒவ்வொரு தருணத்தையும் நினைத்து நினைத்து பொக்கிஷமாக தன் ஆழ் நெஞ்சில் சேமித்தாள் மித்ரா.அவனைப் பிரிந்திருக்க போகும் தருணத்தில் இவையே போதும் என்று நினைத்தாள்.


இவ்வாறு அவள் யோசனையிலிருக்கும் போதே, “போகலாமா மது” என அவள் காதோரம் மெதுவாக வந்து கிசுகிசுத்தான் ரிஷி.


அவனது மென் குரலிலும்,எதிர்பாராத அவன் முக அருகாமையிலும் திடுக்கிட்டு ,தள்ளி நின்ற மித்ரா,அவனை முறைத்தாள். “என்னை மித்ரா என்றே கூப்பிடுங்கள்.என் பெயர் அதுதான்” என கராரான குரலிலே சொன்னாள் மித்ரா.மது அவளை அவனுக்கு நெருக்கமாகக் காட்டுவதாக உணர்ந்தாள் மித்ரா.


‘அதுதான் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள போகிறார் இல்லையா?இனி என்ன மது என நெருக்கம் போல் அழைப்பது’ எனக் கோபம் கொண்டாள்.அப்படிச் சொன்னதே தான் என்பதும் அவளுக்கு மறந்துவிட்டது.!!!


“அப்படியா?அப்போ சரி...நான் மித்ராவென்றே அழைக்கிறேன்..தங்களின் ஆனைப்படி” என்றுவிட்டு, “இப்போது போகலாமா தேவியாரே!!.தேவி என்று கூப்பிடலாம்தானே...இல்லை மித்ராதான் சொல்ல வேண்டுமா?”எனக் கேலி போலச் சொல்லவும் மித்ரா உடனே சிரித்துவிட்டாள்.


“ம்ம் கூப்பிடலாமே!! “ என்றுவிட்டு அவனுடன் இணைந்து நடந்தாள்.அவனுடனான இந்த நடைப் பயணம் மித்ராவையும் அறியாமல் அவளுக்குப் புத்துணர்வு தருவதாக இருந்தது.மணி மதியம் ஒன்றைக் கடந்திருந்த போதும் குன்னூரில் வெயில் தெரியவில்லை.அதிக குளிரும் இல்லாமல்,அதிக வெப்பமும் இல்லாமல் அந்த சூழ்நிலை இருவரின் மனதையும் லேசாக்கியது.


இதனோடு அளவாக வீசிய தென்றல் காற்றினால்,மித்ராவின் முகத்தில் சுருண்ட நெற்றி முடி மித்ராவின் அழகை மேலும் மெருகேற்றியது.அவள் புரம்திரும்பியே பேசிய ரிஷி,அதனை பேச்சூனூடே கள்ளத்தனத்துடன் அவளை ரசித்துக் கொண்டு அவன் கல்லூரிலிருந்து நடந்த ஓரிரு சுவாரசியமான சம்பவங்களை சொல்லிக் கொண்டிருந்தான்.


அவனைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டிருந்த காலம் கடந்த பிறகும் மித்ரா,ரிஷியின் கதையை ஆர்வுமுடன் கேட்டவண்ணம் அவனுடன் நடந்துவந்தாள்.அவளும்தான் கள்ளத்தனம் செய்யும் பூனை போல அவனது வசீகர புன்னகையை தன் கண் இமைகளில் சேகரித்தாள்.பின் அவனைப் பிரிந்து இருக்கும் தருணத்தில் இவையே போதும் என நினைத்தாள்.


இருவரும் நடந்து சென்ற போது வழியில் கண்ட சிலரின் கண்கள் மரியாதையாக ரிஷிக்குப் புன்னகைத்தது.ஒரு சிலரின் கண்கள் இவர்களை ஆர்வமுடன் பார்த்தது.அந்தப் பார்வைகளின் அர்த்தம் புரியாமல் மித்ரா இன்னும் இல்லை.அவளையும் அறியாமல் அவள் கன்னம் சிவந்து சூடேறியது. ‘இதற்குத்தான் வெளியில் அழைத்து வந்தானோ!’என ரிஷியின் மீது ஒரு சந்தேகம் வர,அவனைப் பார்த்தால் அவன் வெகு அக்கறையாக அவர்களிடம் நலம் விசாரித்து அனுப்பிக் கொண்டிருந்தான்.


‘ம்ம்கும்...இதற்கு மேல் இந்த நடைப் பயணம் கூடாது.திரும்பி நடக்கலாம்.’என நினைத்துத் திரும்ப நினைத்தவளிடம், “மித்ரா...அங்குப் பார்...இது நம் தேயிலை தோட்டம். “ என அவளது கையை ஒரு கையால் பற்றி நிறுத்தி ,மறுகையால் சுட்டிக் காட்டினான்.


அதுவரை நிமிர்ந்து பாராமலும்,அவன் முகம் மட்டும் கண்டும் வந்தவளின் கண்கள் மலைச் சரிவில் அழகாக அமைந்த தேயிலை தோட்டத்தையும் அதன் இடை இடையே கூடையுடன் கூடிய பெண்களும் பார்க்கப் பார்க்க உள்ளம் பூரித்து போனாள்.


அந்த இயற்கை தேவதையின் அழகை அனுவனுவாய் ரசித்தாள்.அதனோடு மெதுவாக வீசிய தென்றல் அவள் உள்ள புத்துணர்வுக்கு உரம் போட, “ரிஷி...ரிஷி...இவையெல்லாம் கண்டு கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறதே!. “ என அவன் கையை விட ஆர்வமுடன் தேயிலை தோட்டத்தின் இடை இடையே இருந்த பாதைகளில் இங்கும் அங்கும் ஓடினாள்.பனித் துளிகளால் நனைந்திருந்த இலைகள் அவள் உடைகளை நனைக்க அதன் சிலுசிலுப்பில் உடல் உள்ளம் ஒன்று சேர சிலிர்த்தாள்.எதை பற்றியும் நினைக்காமல் இங்கேயே தங்கிவிட தோன்றியது அவளுக்கு.சின்ன பிள்ளையாய் அவள் மாறி குதித்துக் கொண்டிருப்பதை பார்க்கத்தான் ரிஷிக்குக் கண்கள் போதவில்லை.தன்னை யார் கவனிக்கிறார்கள்.யார் கவனிக்கவில்லை என்ற எந்தக் கவலையும் இல்லாமல் ஓடித் திருந்து பின் தான் அணிந்திருந்த சுடிதார் நனைந்ததால் ஏற்பட்ட குளிரிலே சிறிது தன்னிலை உணர்ந்தாள்.


அப்போதுதான் ரிஷி என்று ஒருவனுடன் தான் இந்த இடத்திற்கு வந்தோம் என்பதே அவளுக்கு நினைவு வந்தது.ரிஷியை அவள் விழிகள் தேடியது.அவள் விட்ட இடத்தில் தேடினாள் அங்கில்லை.


‘வேறெங்கே?’என அவள் விழிகள் ஆர்வமுடன் தேடியது.அவன் இலகுவாக ஒரு மறத்தின் மீது சாய்ந்து கொண்டு ஒரு கப்பில் டீயுடன் நின்றிருந்தான்.கையில் டீ இருந்த போது,அவன் விழி மித்ராவின் மீதே இருந்தது.அவளது சிறுபிள்ளை தனமான துருதுருப்பில் அவன் மெய் மறந்துதான் போனான்.அவனையும் அறியாமல் அவன் உதட்டில் புன்னகை நீக்க மற நிறைந்திருந்தது.


அவள் விழிகள் தேடி அவனை அடைந்ததும் அந்தப் புன்னகை மேலும் விரிவடைந்து, ‘வா டீ குடிக்க’ எனச் சைகையால் அழைத்தான் ரிஷி.


‘ம்ம்கும்’ என குழந்தை போல தலையாட்டி, ‘ நீங்க வாங்க ...டீயும் வேண்டும்.ஆனால் சுடசுடதான் வேண்டும்’ செய்கையால் ரிஷிக்குப் புரியும் விதமாக சொன்னாள் மித்ரா.


‘இல்லை..இல்லை அங்கு வந்தால் அதற்குள் டீயின் சூடு போய்விடும் ..அதனால் நீ கீழே இறங்கி வா’ என்றான் ரிஷி.


‘இல்லை எனக்கு இங்கு நின்றுதான் டீக் குடிக்க வேண்டும்’ என அடம்பிடித்துக் கொண்டு முறைத்துத் திரும்பினாள் மித்ரா.


மீண்டும் ஓரக்கண்ணால் திரும்பி பார்த்த போது,ரிஷி ஒரு பிளாஸ்கை டீக்கடைகாரரிமிருந்து வாங்குவதும் உடன் ஒரு கப் வாங்குவதும் தெரிய உற்சாக துள்ளலுடன் அவன் வருகையை எதிர் நோக்கி அவனையே பார்த்திருந்தாள் மித்ரா.


மித்ரா நின்றிருந்தது,சரிவாக அமைந்திருந்த தேயிலை தோட்டம்.அந்த நீண்ட தோட்டத்தின் சரிவில் மித்ரா நடுவில் நின்றிருந்தாள்.அந்தச் சரிவின் கீழ் இறுதியில் குறுக்காக ஒரு சாலை இருந்தது.அந்தச் சாலையிலே மித்ராவை ரிஷி அழைத்து வந்திருந்தான்.அந்தச் சாலையின் மறுபுறம் ஒரு சின்ன டீக்கடைப் போன்ற அமைப்பும் அதனோடு அதிக உயரம் வளர்ந்த யுக்களிப்ப்டஸ் மரங்கள் சீரான இடை வெளிவிட்டும் இருந்தது.அந்த மரங்களில் ஒன்றில்தான் ரிஷி இலகுவாகச் சாய்ந்திருந்தது.


இப்போது மித்ரா அழைத்ததும் அவளையே பார்த்த வண்ணம் புன்னகையுடன் டீயை எடுத்துக் கொண்டு வந்தான்.வந்தவன் மித்ராவின் மகிழ்வைக் காணும் பூரிப்பில் சாலைவிதிகளை மறந்தானோ!..அந்த விபத்து நடந்தேறியது.


சாலையின் இருபுறம் பார்க்காமல் அதனைக் கடக்க எத்தனித்தான்.ஆனால் அந்தச் சாலையில் வேகமாக வந்திருந்த கார் ஒன்றை அவன் கண்டான் இல்லை.ரிஷி உற்சாக துள்ளலுடன் நடந்து வர,வேகமாக வந்த காரை மித்ராதான் முதலில் பார்த்தாள்.


அதனைக் கண்டதும் ரிஷியை எச்சரிக்க அன்னிச்சையாய் “ரிஷி..... “ என வீரிட்டுக் கத்தினாள்.அவள் குரலில் அங்கு இருந்த அனைவரும் நிமிர்ந்து அவளையும் ரிஷியையும் பார்க்க,அந்த காரின் வேகம் குறைந்தார் போல இருந்தது.ஆனால் அதற்குள் ரிஷி கடக்க,கார் கட்டுக்கடங்காமல் வேகமுடன் இருந்ததோ என்னமோ ?அவன் மீது மோத என எல்லாம் முடிந்திருக்க வேண்டும்.


தேயிலைகளின் சரிவில் உயரத்தில் இருந்ததால் அந்தச் சாலையில் கார் மோதிய பின் ரிஷியின் நிலை மித்ராவிற்கு என்னவென்று மேலிருந்து தேயிலை செடிகளின் மறைவில் தெரியவில்லை.மித்ராவின் கண்களில் கண்ணீர் எடுக்க,ஓட்டமாக “ரிஷி ..ரிஷி “ என அரற்றிய வண்ணம் கீழே ஓடினாள்.அவளுடன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களும் வேகமெடுத்து அவள் பின் ஓடினர்.



 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top