இறையைத் தொழ இலகுவான வழி

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்.

இந்த ப்ரதோஷ வேளையில் எல்லாம் வல்ல ஈஸ்வரனை துதிக்க, அவரிடமே இலகு வழி ஒன்றைக்கூறி அவர் மறுத்துப் பேச இயலாதவாறு ஒப்புக்கொள்ளவும் வைத்த ஒரு பக்தரைப் பற்றியும் அவரது அந்த பாடலைப் பற்றியும் காண்போமா?

அந்த ஆகச்சிறந்த பக்தர் பெயர் தூர்ஜதி. அவர் சுந்தர தெலுங்கில் எழுதிய காளஹஸ்தீஸ்வர சதகத்தில் (100 பாடல்கள் கொண்ட தொகுப்பு சதகம் என்று அழைக்கப்படும்) வரும் ஒரு பாடல்..

அம்ம அய்ய அடென்ச்சு நேனு எவ்வரினி அன்னா சிவா நின்னேனு சுமி.
நீ மதி தல்லி தன்றி அடென்ச்சு சூடாகாம் போகு
நா கிம்மை தல்லி தன்றியும் குருண்டு நீவே காக..
சம்சார ச்சிம்மம் சீக்கட்டி கப்பி நன் கடவு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரா!

பொருள் :

அம்மா அப்பா என்று நான் (இப்பிறவியில்) எவரையாவது அழைத்தால்.. சிவா அது நின்னை அழைப்பதுவே எனக்கொள். இந்த ஜென்மத்தில் என்னை ஈன்றெடுத்த தந்தையையோ தாயையோ விளிப்பதாகக் கருதிவிடாதே. காரணம் எனக்கு இம்மையில் அன்னை தந்தை மாத்திரமல்ல குருவென்று ஒருவர் இருந்தால் அவரும் உன் பிரதிநிதியே. அவருள் இருக்கும் ஆத்மாவும் நீயே அதனால், நான் உன்னை சதாசர்வ காலமும் துதிப்பதாகக் கருதி என்னை சிற்றின்பம் (இல்லறம்) எனும் இருள் வந்து பீடிக்காது இவ்வுலக வாழ்க்கையை கடைத்தேற்ற வா திருக்காளத்திநாதா! என்று கூறுகிறார் தூர்ஜதி.

சரி இதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? இப்பாடலின் முதல் வரி நமக்கு நினைவில் நிற்குமாயின் (இரண்டொரு நாளாவது), அப்பா (அய்யா), அம்மா என்று எங்காவது யாரையாவது அகஸ்மாத்தாக அழைக்க நேரிடினும், 'அடடே இப்படி கூப்பிட்டால் தூர்ஜதி சிவனை அழைப்பதாக அந்த பாடலில் சொன்னாரே?' என்று ஒரு கணமேனும் ஈஸ்வரனை நம் மனம் தியானிக்கும். இறையை தொழ இதைவிட சிறந்த இலகுவான வழி ஏதேனும் உங்களுக்கு தோன்றுகிறதா? அதையும் அவர் நமக்கு/நம்மிடம் கூறவில்லை. நேராக காளத்தி நாதனுக்கே சொன்ன தூர்ஜதி, ஆகச்சிறந்த பக்தர் அல்லவா?

இது இந்த ஏகலைவனின் துரோணாச்சாரியார் திரு. சாகண்டி கோடீஸ்வரராவ் அருளிசெய்த உபன்யாசத்தின் விளைவாக கேள்வி ஞானத்தில் எழுதிய அடியேனின் விளக்கம். பிழையிருந்தால் பொறுத்தருளவும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top