(இறுதி) விடை காண்போம் வா

#1
மொழி,மகிழின் அருகிலேயே இருப்பதால் தன் மனம் அவனுக்கு புரியவில்லையோ என்று யோசித்தவள். இரண்டு நாள் அவனை விட்டு விலகி இருந்தால் என்ன செய்வான் என்று பார்க்கத்தான் இந்த கூத்து.

தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு திரவ்யா வீட்டில் டேரா போட்டாள். அதோடு தான் இங்கு இருப்பதை யாரிடமாவது சொன்னால் "கத்திய எடுத்து சொருகிருவேன் பாத்துக்க!" என்று மிரட்டி தான் தங்கியிருந்தாள்.

அதோடு விடாமல் ஆபிஸில் வேலை செய்யும் போது அவன் என்ன செய்கிறான் என்பதை அவளுக்கு அழைத்து விசாரிப்பதும் வீட்டிற்கு அவள் வந்து பையை வைக்க முன் மீண்டும் அதே விசாரணையை தொடங்குவதுமாக இருந்தாள்.

மகிழ்,திரவ்யாவிடமும் மொழியைப் பற்றி விசாரிக்கும் போது தான் மொழியின் அழைப்பு "ஃபோன் எடுத்தா நச்சு நச்சுன்றானுங்க" ரிங்டோனோடுடன் ஒலித்தது. அதை மகிழ் பார்க்கும் முன் ஒளித்த கதை அவளுக்கு தான் தெரியும்.

மகிழும் அவள் பிரெண்ட் வீட்டிற்கு சென்றாள் என்பதை தாண்டி யார் வீட்டிற்கு சென்றிருப்பாள் என்பதை கோபத்தில் இருந்ததால் யோசிக்கவில்லை.

அவன் சரியாக சாப்பிட்டானா என்பதை ஷாஷ்வதியிடம் பேச்சுவாக்கில் போட்டு வாங்குவாள்.

அடுத்த நாள் மகிழ் வீட்டிற்கு வந்து விசாரித்து பின் கத்தி விட்டு சென்றதை ஏதோ அவார்ட் வாங்கிய மனநிலையில் கேட்டுக் கொண்டிருந்தாள். இதற்கு மேல் தன்னை கட்டுப் படுத்த முடியாது என்று திரவ்யாவையும் லீவ் போட சொல்லி அவளையும் ஸ்கூட்டியில் ஏற்றி மாய உலகத்தில் சஞ்சரித்தவாறு வண்டியை ஓட்டும் போது தான் நிகழ்ந்தது இந்த ஆக்சிடன்ட்.

மகிழ், ஹாஸ்பிட்டலில் இருந்து அவளுக்கு ஆக்சிடன்ட் என்பதை கேட்டவுடனே உறை நிலைக்குச் சென்று விட்டான். கைகளும் நடுங்கத் தொடங்கியது.

இரண்டு நாள் அவளின் அருகாமை கிடைக்காமலே வாழ்க்கையில் எதையோ இழந்தது போல் தவித்தவன் அவள் தன் வாழ்நாள் முழுதும் இல்லையெனில் அவன் நிலை என்ன என்பதை கூட அவனால் கற்பனை செய்ய முடியவில்லை. அவன் காதலையும் உணர்ந்தான். அவளின் இந்த நிலையிலா தன் காதலை உணர வேண்டும் என்று தன்னையே திட்டிக்கொண்டான்.

முடியாமல் "மொழி!!!" என்று அவன் அலறும் போது தான் கொண்டாட்டத்தில் இருந்த நண்பர்கள் அதிர்ந்து அவனை நோக்கி ஓடினர்.

நரேஷ்,"என்னாச்சு டா?"என்று பதட்டத்துடன் கேட்க

"அவ...அவ..."திணறியவன் கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது.

"மச்சான் ஒன்னு இல்ல ரிலாக்ஸ்" என்று சொல்லியவனுக்கும் பதட்டம் குறையவில்லை. ஏனெனில் ஆபத்தில் மாட்டியது அவனின் உயிர் தோழி அல்லவா.

"மொத ரிலாக்ஸாகு. யாரு ஃபோன்ல? மொ..மொழிக்கு என்னாச்சு?"

"அவளுக்கு ஆக்சிடன்ட் ஆச்சுன்னு சொல்றாங்கடா....என..எனக்கு இப்போ அவள உடனே பார்க்கனும். ஐ கான்ட் லிவ் வித்வுட் ஹர். அவ..அவ வலி தாங்க மாட்டா டா " என்று தன் பாட்டில் புலம்பியவனை ஒருவாறு வழிப்படுத்தி ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றனர். காரில் ஹுசைன் ஓட்ட நரேஷும் அப்போது தான் ஆபிஸிற்குள் நுழைந்த ஜஸ்டின்னும் ஏறிக்கொண்டனர்.

நரேஷிற்கு உயிர் நண்பனை தேற்றுவதா
இல்லை உயிர் நண்பியை நினைத்து வருந்துவதா என்று புரியாமல் தவித்தான்.

ஒருவாறு ஹாஸ்பிட்டலை அடைந்தவர்கள் அவள் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டினை கேட்டு விசாரித்து அங்கே விரைந்தனர். அவள் அறையை கண்டுபிடித்து திறந்தவர்கள் அத்தனை பேர் முகமும் கோபத்தில் எரிந்தது.

தலையிலும் காலிலும் சிறிய அளவிலான ஸ்டிச் போட்டு பெட்டில் அமர்ந்திருந்தவள். முடிந்த சேலைன் போத்தலை வீசி எறிந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது கதவு திறப்பட்டது. அந்தோ பரிதாபம் வீசிய போத்தல் நரேஷின் தலையில் பட்டு கீழே விழுந்தது. இவளுக்கு என்னாச்சோ ஏதாச்சோ என்று பதறி வந்தவர்களுக்கு இவளின் விளையாட்டு கோபத்தை வர வைக்காமல் இருந்தால் தான் அதிசயம்.

மகிழிற்கு ஏக்கம்,தவிப்பு, ஏமாற்றம் என்ற அத்தனை உணர்வும் அவனை வெறியாக்க, இவர்களை, அறியா பிள்ளை போல் பார்த்துக் கொண்டிருந்தவள் கன்னத்தில் விட்டான் ஒரு அறை! அவளது டோட்டல் ஆட்டமும் குளோஸ்!

"இனிமே இப்பிடி ஏதாவது பண்ண.....நானே உன்னை கொன்னுடுவேன். " என்று கோபத்தில் கத்தி விட்டு அறையை விட்டு வெளியேறினான்.

போன வேகத்திலேயே திரும்பி வந்தவன் அவளை இறுக அணைத்திருந்தான்.

முதலில் அதிர்ந்தவள்,பின் அவனது தவிப்பை உணர்ந்து அவன் முதுகை தட்டிக் கொடுத்தாள்.

இதைப் பார்த்த அனைவர் வாயிலும் வாட்டர்ஃபால்ஸ் வராத குறை தான்.

சிறிது நேரத்தின் பின் "டேய்!!!! அவளால ரொம்ப பாதிக்கப்பட்டது நான் டா. மொதல்ல என்னைப் பாருங்கடா!!!"என்று எரிச்சலில் வந்த குரலின் பக்கம் திரும்ப அங்கே ஒரு அரைவாசி மினி மம்மி போல் திரவ்யா பக்கத்து பெட்டில் படுத்திருந்தாள். பார்த்தவர்களுக்கு அவளை நினைத்து சிரிப்பு தான் காடாற்று வெள்ளம் போல் பொத்துக் கொண்டு வந்தது. இவர்களில் விதிவிலக்காக ஜஸ்டின் வேகமாக அவளை நெருங்கினான்.

ஒருவாறு அலப்பறைகள் எல்லாம் முடிய வீட்டிற்கு அழைத்து வந்தனர். திரவ்யாவை அவள் வீட்டில் இறக்கி விட ஜஸ்டின்னும் இறங்கிக் கொண்டான்.

மொழியை தூக்கிக் கொண்டு சென்று அவள் வீட்டு ஹாலில் அமர வைத்து இவர்களை ரௌன்டு கட்டி கேள்வி கேட்டு முடிக்கும் வரையும் பின் மொழியை எல்லோரும் டன் டன்னாக திட்டி முடிக்கும் வரையும் மகிழ் அவளை விட்டு விலகவில்லை. எதுவும் பேசா விட்டாலும் அவள் அருகாமையே போதும் என்பது போல அருகேயே அமர்ந்திருந்தான்.
எல்லோரும் சென்றதும் ஷாஷ்வதியும், பாரதியும் இவர்களுக்கு தனிமை கொடுத்து விலகினர்.

இப்போதாவது தான் எதிர்பார்ப்பதை அவன் சொல்ல மாட்டானா என்று ஏங்கி போய் பார்க்க அவனோ "நீ ரெஸ்ட் எடு. நான் வரேன்" என்று அவசரமாக அவள் நெற்றியில் முத்தமிட்டு விலகி வீட்டிற்கு சென்றான். அவளும் அயர்ந்து தூங்கினாள்.

சில நாட்களுக்கு பிறகு.....

"ஏன் பெண்ணென்று பிறந்தாய்"

குறும்படத்திற்கு 'இந்த வருடத்தின் சிறந்த குறும்படம்'என்று விருது கிடைத்தது. கூடவே இதில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் அவரவர் துறைக் கேட்ப விருது கிடைத்தது.

இப்போது குழுவினர் அனைவரும் மேடையில் நின்றிருந்தனர்.

தொகுப்பாளினி மகிழிடம்,"உங்க ஷார்ட் பிலிம் ஆறு மில்லியன் தாண்டி போயிருக்கு. சோ... எப்பிடி ஃபீல் பண்ணிறிங்க?"

"நோ வர்ட்ஸ்....ஆளாலுக்கு ஒவ்வொரு பீல்ட்ல படிச்சோம். வேலை செஞ்சோம் நானும் நரேஷ் அப்பறம் ஹுசைன் மூணு பேரும் சாஃப்ட்வெயார் இஞ்சினியர்ஸ், ஜஸ்டின் பிஏ மியூசிக், திரவ்யா மல்டிமீடியா, மென்மோழி பி.எஸ்.சி. மார்க்கெட்டிங் மெனேஜ்மன்ட். நான், நரேஷ்,மொழி, ஹுசைன் நாலு பேரும் ஸ்கூல் படிக்கிறப்போ இருந்து இப்பிடி ஸ்டார்ட் பண்ணனும் பேசிட்டே இருப்போம். அப்பறம் என்னோட ஒரு பர்சனல் இஷுல இருந்து வெளிய வர ஜாலியா ஸ்டார்ட் பண்ணது, போக போக எங்களோட முழு நேர வேலையாச்சு. ஆரம்பத்தில பெருசா ஆர்டர்ஸ் இருக்காது. போக போக நிறைய வந்து எங்களை என்கரேஜ் பண்ணிச்சு. அப்பறம் லாக்டவுன் முடிஞ்சு வந்த டைம் ல பெருசா ஆர்டர்ஸ் இல்லை. அப்போ ஸ்டார்ட் பண்ணது தான் இந்த வெர்க் எல்லாம். அதுக்கு பிறகு மக்களுக்கு ஒரு நல்ல மெஸேஜ் கொடுக்கனும் னு தான் இந்த பிலிம் பண்ணோம். காஸ்டிங் ஃபுல் என்ட் ஃபுல் எங்களோட பிரெண்ட்ஸ் சர்கிள்ள இல்லாதவுங்க தான். அவங்க திறமைக்கு ஒரு ஆப்பர்சுனிட்டி குடுத்தோம். அதை அவங்க சரியா பயன்படுத்திக்கிட்டாங்க. இதுக்கெல்லாம் மக்கள் குடுத்த சப்போர்ட் தான் எங்களை இங்க நிக்க வச்சிருக்கு. தேங்க்யூ அன்ட் லவ் யூ ஆல்!"

"இதுக்கு பிறகு சினி ஃபீல்ட் போற ஆசை இருக்கா?"

"இல்லைங்க. இந்த ஃபீல்ட்ல எவ்ளோ தூரம் அடையனும் னு எங்க மனசுக்கு தோனுதோ அதுவரைக்கும் வெர்க் பண்ணுவோம். அதுக்கு பிறகு பார்க்கலாம்"

"ஓகே...மை விஷஸ் டூ ஆல்! இந்த கன்டென் ஏன் சூஸ் பண்ணிங்க? அதுக்கேதாவது இன்ஸ்பிரேஷன் இருக்கா?ஏன் னா இதை பேஸ்ட் ஆன் ட்ரூ இவன்ட்ஸ் னு போட்டிங்க"

"இதைப்பத்தி எங்க ஸ்கிரிப்ட் ரைடர் சொல்வாங்க."என்று மைக்கை அவளிடம் கொடுத்தான்.

"இதுக்கு இன்சிபிரேஷன் என்னோட அம்மா தான்." என்று நிறுத்த மகிழை தவிர அனைவரும் அவளை கேள்வியாக பார்த்தனர்.

"இது முழுக்க முழுக்க அவங்களுக்கு நடந்தது தான். அந்த இன்டர்விவ் வ தவிர.
இப்போ அவங்க ஒரு சக்ஸஸ் புல் பிஸ்னஸ் வுமன். அவங்க டைரி ஒன்னு கிடைச்சப்போ தான் இது ... தெரியும்." என்ற போதே அவள் கண்கள் கலங்க மகிழ் அவள் வலக்கரத்தை ஆறுதலாக பிடித்துக் கொண்டான். அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

"நானும் என் அக்காவும் வளர்ப்பு பிள்ளைகள் தான். ஆனா எங்களை அப்பிடி ஃபீல் பண்ண வச்சதே இல்லை."

"தப்பு பண்ண அவங்களுக்கு தண்டனை குடுக்க பணம் ஒரு தடையா இருந்துச்சு. பணமும் அதிகாரமும் துணையா கிடைச்சப்போ அவங்க யாரும் உயிரோட இல்லை. இதே மாதிரி இன்னும் நடந்துட்டு தான் இருக்கு. ஆனா இதுக்கு தீர்வு தான் கிடைக்கல." என்று அதற்கு மேல் அவளுக்கு பேச முடியாமல் அழுகை வரப் பார்க்க மகிழ் மைக்கை வாங்கி "இந்த படம் ஒரு சின்ன சேன்ஜாவது ஏற்படுத்தாதா னு தான் பண்ணோம். ஆணோ பெண்ணோ முதல்ல அவங்களை சக மனுஷனா மதிங்க" என்க அந்த அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.

"வன் மோர் திங். இந்த அவார்ட்ஸ நாங்க எங்க பேரெண்ட்ஸ் கு டெடிகேட் பண்றோம்‌." என்க குழுவினர் அனைவரும் விருதை மேலே தூக்கி காட்டி சந்தோஷப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியை லைவ்வாக தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோருக்கும் நிறைவான புன்னகை.

மேடையை விட்டு கீழிறங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்க மொழி தனியாக வேறு இடத்திற்கு சென்றாள்.

மகிழ் அவளை காணவில்லை என்றவுடன் நண்பர்களிடம் சொல்லி விட்டு தேடிச் சென்றவனுக்கு அவள் யாருமில்லா இடத்தில் நின்று அழுவது தெரிந்தது.
அவள் பின்னால் போய் நின்றவனுக்கு அவளது வேதனை புரிய அவள் மனதை மாற்ற எண்ணினான்.

"ஏன் க்ரையிங் இப்போ?"

அழுது கொண்டிருந்தவளுக்கும் அவன் முயற்சி புரிய ," வை உனக்கு டோன்ட் நோ?" என்றாள்.

"ப்ச். ஐ நோ....இப்போ உன் ஃபேஸ லுக்கு விட்டா சகிக்கமுடியாம இருக்கு"

"போடா கோணமூக்கா" என்று சிரித்தாள்.

"உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும். அது என்னனு கேட்க மாட்டியா?"என்க

அவளும் என்ன என்று ஒற்றைப் புருவத்தை தூக்கி கேள்வியாகப் பார்த்தாள்.

அதில் ஒரு நிமிடம் தடுமாறியவன்.
பின் நிதானமாக "இத்தனை நாள் என்னோட வாழ்க்கைல கேள்வி குறியா இருந்த எல்லாத்துக்கும் விடையா இருந்த. ஆனா நீ வாய்விட்டு கேட்க முடியாம இருக்க கேள்விக்கு நான் பதில் சொல்ல வேணாமா?" என்க

அவள் அவன் கண்களை சந்தித்தாள்.
"ஐ லவ் யூ மொழி!" என்று சொன்ன அடுத்த நொடி அவனை தாவி அணைத்திருந்தாள்.

அவனும் அவளை அணைத்தவாறு "எனக்கு இந்த படத்தில வர்ற மாதிரி பிரபோஸ் பண்ண வராது. ஆனா யாரும் எந்த குறையும் சொல்லாத மாதிரி உனக்கு எல்லாமாவும் இருந்து வாழ்ந்து காட்டுவேன்" என்க அவள் அணைப்பு இன்னும் இறுகியது‌.

"அடியேய்! நீ இவ்ளோ டைட்டா ஹக் பண்ண, உனக்கு நச்சுனு ஒரு இச்சு குடுக்குனும் போல இருக்கு. குடுக்கட்டா?" என்று ஹஸ்கி வாய்சில் கேட்க

அவளின் இயல்பான குணம் தலைதூக்க அணைப்பை விலக்காது தலையை மட்டும் விலக்கி,"வே...ணாம். உன் கோண மூக்கு மூஞ்சில அழுத்தும்" என்றாள்.

"அப்பிடியா....அது எப்பிடி அழுத்துது னு பாக்குறேன்" என்று அவள் இதழ்களை வசப்படுத்தினான்.


முற்றும்.....
-----------------------------------------------------------------------------
ஹாய் சகோஸ்!
பர்ஸ்ட் டைம் கொஞ்சம் பெரிய லவ் ஸ்டோரி எழுதியிருக்கேன். அதோட சில விஷயம் நான் கன்வே பண்ணனும் நினைச்ச விஷயங்களும் இதுல எழுதியிருக்கேன். நான் எக்ஸ்பெக்ட் பண்ணாத அளவுக்கு உங்க சப்போர்ட் எனக்கு கிடைச்சுது. தேங்க்யூ சோ....மச்....சகோஸ்!

தேங்க்யூ ! தேங்க்யூ! தேங்க்யூ!!!!!!


மறக்காம உங்க கமெண்ட்ஸ் ஷேர் பண்ணுங்க சகோஸ்!
 
Ivna

Active Member
#2
Nice sis...
Ending super...
Twist laam ethirparkala sis...
Keep rocking...
Seekirama next story (min15epis) oda vanga...waiting sis....
 
SriMalar

Well-Known Member
#8
கதை நல்லா இருந்தது.திரவ்யாக்குத் தான் கொஞ்சம் பெரிய அடியா இருக்கும் மொழிக்கு ஜூஜூபின்னு நினைச்சேன்.அதே மாதிரிதான் எழுதியிருக்கீங்க.
 
#10
கதை நல்லா இருந்தது.திரவ்யாக்குத் தான் கொஞ்சம் பெரிய அடியா இருக்கும் மொழிக்கு ஜூஜூபின்னு நினைச்சேன்.அதே மாதிரிதான் எழுதியிருக்கீங்க.
:D:Dheroine la adhan. Story romba serious ah venaame nu yosichen. Thank you sis :love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes