இருளில் ஒரு ஒளியாய் -7

Advertisement

Chandrika krishnan

Writers Team
Tamil Novel Writer
இருளில் ஒரு ஒளியாய் -7

சட்டென சுற்றுப்புறம் நினைவு வர, சுதாரித்து விலகி அமர்ந்தேன். தீனாவும் என்னை எதிர்க்கவில்லை.

ஆனால் அத்தை, அம்மா, அகி யாருமே என்னை கடிந்துகொள்ளவில்லையே !

அது எப்படி முடியம்?
ஒருவேளை.. ஒருவேளை இந்த தீனா.. இவனால் ஏதோ பெரிதாக என் உலகம் மாறிவிட போவதாக எனக்கு தோன்றியது.

கண்டிப்பாக இதில் ஏதோ உள்ளது.

மருத்துவர் அறையில் பேசும்போதுகூட தேஜு அருகில் தான் இருந்தாள். அவளுக்கு என்மேல் எந்த வெறுப்போ கோபமோ இல்லையே? அவள் முகத்தில் கூட ஏதோ ஒருவித இரக்கமும் கனிவும் தானே தென்பட்டது.

இப்போது தீனாவின் வரவை அகி கூட எதிர்க்கவில்லையே? ஏன் எதிர்பார்த்தார் போல எழுந்து அல்லவா நிற்கிறார்கள்?

சட்டென திரும்பி அம்மாவை பார்த்தேன்.

அந்த அழகிய முகத்தில் அத்தனை ஒளி. நிம்மதி. ஆனந்தம் எல்லாம்..

அப்படியானால், அம்மாவிற்கும் ஏன் அனைவருக்குமே தெரிந்த ஏதோ ஒன்று அவளுக்கு தெரியவில்லை.

தீனா வேற்றாளாய் நில்லாமல் தேடி தேடி வந்ததிற்கும் அர்த்தம் உள்ளதோ?

என்னையும் அறியாமல், அவன் பத்திரியாளர்களிடம் சொன்னது எனக்கு நினைவு வந்தது.

"நான் என்ன மாமனா மச்சானா என்றானே." அப்போது அவன் முகத்தில் இருந்த குறுநகை. எனக்குள் ஏதேதோ புது புது அர்த்தங்கள் பிறந்தன.

என்ன உணர்கிறேன் என்ன ஆசைப்படுகிறேன் என்று எனக்கே புரியவில்லை. ஆனால் மனம் மட்டும் துள்ளாட்டம் போட்டது என்னவோ நிஜம்.

அதற்கும் காரணம் கேட்டால், கண்டிப்பாக தெரியாது என்று தான் சொல்லுவேன்.

தீனாவை இன்று நேற்று அல்ல. எப்பொழுதுமே எனக்கு பிடிக்கும். அவன் இசை தான் எனது முதல் காதல்.

அதில் தொலையும் கணங்கள் என்னையே நான் மறப்பதும் உண்டு.

அதுவும் மழையோடு சுவை ஊட்டும் ஒரு மெல்லிசை. அதுபோக அவனும் என்னை போலவே சிறுவயதில் பெற்றோரை இழந்தவன் என்ற காரணமும் உண்டு.

தந்தை இழந்ததே எனக்கு தாங்கமுடியாத இழப்பு என்கையில், இருவரையும் ஒருசேர பறிகொடுத்தவனுக்கு எப்படி இருக்கும்.

ஹ்ம்ம்.. யோசிக்க வேண்டும்? அவனுக்கும் எங்களுக்கும் என்ன பந்தம் என்று அறிய வேண்டும்.

ஆனால் ஏனோ நானாக கேட்டு தெரிந்துக்கொள்ள எனக்கு பிடிக்கவில்லை.

அவர்களாகவே சொல்லும் போது சொல்லட்டும். எதுவாக இருந்தாலும் என்னிடம் கண்டிப்பாக கேளாமல் சொல்லாமல் இருக்கமாட்டார்கள்.

எனது ஆராய்ச்சியில் நான் அமைதியாகி அமர்ந்திருக்க,
"என்ன வாழக்கா? அமைதி அம்மையார் ஆகிட்ட? இனி அப்போ உன்ன சைலென்சர்னு கூப்பிட போறேன் " வேண்டும் என்றே வம்பிழுத்தான் தீனா.

அத்தை முகம் வாட, அகியோ முகத்தை திருப்பிக்கொண்டான். அம்மாவை ஓரக்கண்ணில் நோட்டம் விட்டேன். ஆர்வமாக என் பதிலுக்காக காத்திருந்தார்.

முகத்தில் புன்னகையை பூசிக்கொண்டேன்.

அவன் சைலென்சர் என்றதும் நண்பன் படம் ஞாபகம் வர, வந்த கடுப்பில் "ஓய் ஒனிடா.மொதல்ல உன் மேல் மாடில புல்லு முளைக்க வை.. அப்பறம் எனக்கு பேரு வை. வந்துட்டாங்கய்யா வாழக்கா பலாக்கானு " சிலிப்பிக்கொண்டே நான் சொல்ல,

"என்னடி மரியாதை இல்லாம பேசற? " அம்மா அதட்டல் குரலில் திக்கி திக்கி சொல்ல, எனக்கு அது பிடிக்கவில்லை.

ஆனால் கண்டிப்பாக இவனிற்கும் என் குடும்பத்திற்கும் ஏதோ பந்தம் என்பதை மட்டும் கவனமாக குறித்துக்கொண்டேன்.

எங்கிருந்து எப்போது தேஜு வந்தாளோ தெரியவில்லை, கலகலவென சிரித்தவள் "தீனுனா நீ எப்போ ஒனிடா ஆனா? " என்று கேட்டு நகைக்க, எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

'என்னடா பொசுக்குன்னு தீனுணானு சொல்லிட்டா? நா காண்பது மெய்யா? ஓ காட்.. சத்யசோதனை. லது என்னனு கவனி ' மூளை எச்சரித்ததும் உஷாராகி கொண்டேன்.

நேரம் அறியாமல் வழக்கம் போல் உதடுகள் வேறு
"என்னவோ நடக்குது மர்மமா இருக்குது" என்று சுதி கூட்ட,
அந்த மாயக்கண்ணன் ஒனிடா தலையன் அதை காப்பென புரிந்துகொண்டு எதிர்பாட்டு பாடினானே பார்க்கலாம்
"எனக்காக பொறந்தாயே எனதழகி
பிரியாம இருப்பேனே உனதழுவி" என்று,

கண்களாலேயே அவனை எரித்துவிட நான் முயற்சிக்க, முடியவில்லை.

கண் இருப்போர் எல்லாம் கண்ணகி ஆகிவிட முடியுமா? சோர்ந்துவிட்டது.

சரி.. இவனை பார்வையால் வெல்வதை விட பாட்டால் வீழ்த்தலாம் என்ற முடிவுடன்,

"அருவா மீச கொடுவா பார்வை
லது பேபி கைய வெச்சா தூள்.. ஒனிடா நீ தூள் " என்று நானும் என் புலமையை விக்ரம் வெர்சனில் அவிழ்த்துவிட,

"போடி போடி போடி போடி க்யூட் வாழக்கா.. நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாக்க்கா.." அவனோ சிம்பு ஸ்டைலில் சீன் போட,

என் அம்மா கண்ணீர் வர சிரித்தார்.

என் மனம் குளிர்ந்துவிட்டது. அப்பாவை போல அம்மாவிற்கும் நான் அழுதாள் பிடிக்காது.

இனி வரும் காலம் எல்லாம் அம்மாவை இதே சிரிப்புடன் வாழ வைக்க வேண்டும். அந்த சிரிப்பிற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

என் முக மாற்றத்தை அத்தை கவனித்தார்கள் போல, ஆதரவாக தலையை வருடிவிட்டார்.

அத்தையிடம் கேட்க பல கேள்விகள் என்னுள் துளிர்விட்டது. அத்தனையையும் தொண்டையிலேயே நிறுத்திக்கொண்டேன்.

சூழ்நிலையை மாற்றும் பொருட்டு "அகி சாப்பிட்டியா? " என்று நான் வினவ, அரைகுறையாக தலையை ஆட்டினான் அகி.

ஜோவும் மாமாவும் அதற்குள் எங்களுக்காக வந்துவிட, அத்தையை அழைத்துக்கொண்டு சாப்பிட கிளம்பினேன்.

அத்தையும் என்னை கைபிடித்து அழைத்து சென்றார். ஆனால் நாங்கள் கேன்டீன் பக்கம் செல்லாமல், வெளியே வரவும் கேள்வியாய் அத்தையை நோக்கினேன்.

என்னை தீனாவின் காரில் தேஜுவுடன் ஏற்றிவிட்டு அவர் உள்ளே சென்றுவிட்டார்.

நாங்கள் மூவரும் வண்டியில் செல்வதை படம் பிடித்தன கமெராக்கள்.

புதிருக்கான விடைகள் கிடைக்க போகின்றன என்று புரிந்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top