இருளில் ஒரு ஒளியாய் -2

Advertisement

Chandrika krishnan

Writers Team
Tamil Novel Writer
இருளில் ஒரு ஒளியாய் -2

'மாட்டிக்கிச்சே.... மாட்டிக்கிச்சே.. ' உள்ளுக்குள் உதறல் எடுத்த என் மனம், அசம்பாவிதமாக பாடலை முணுமுணுத்துத்தொலைய,

"கார் சக்கரத்துல என்னமா ஆராய்ச்சி?" என்றபடி அருகே வந்த தீனா, விழுந்து விழுந்து சிரித்தான்.

"சார்.! நா ஜோசப் சார்.. இப்போகூட உங்களபத்தி பேசி தான் சார் விழுந்தோம் " என்று ஜோ அவசரமாக அளக்கவும் எனக்கு கோவம் வந்துவிட்டது.

"லூசு.. அந்த மனுஷனே நாம விழுந்துருக்கறத பாத்து சிரிச்சுட்டு நிக்க, நீ என்னடா பெருசா பல்ல காட்டற?" என்று நான் எரிந்து விழுக,

அதுவும் அந்த தீனாவிற்கு சிரிப்பாக இருந்தது போல, நக்கலாக உரக்கவே சிரித்தான்.

"சார் மியூசிக் டைரக்டர்ல ஜோ.. அதான் சிரிப்பு கூட சரீரம்னு நெனப்பு.. " கடுப்புடன் நான் காட்டமாக சொல்லவும்,

வாய்விட்டு நகைத்தவன் "அட தமிழ் வாழக்கா, அது சரீரம் இல்ல சாரீரம்.. சங்கீதத்துக்கும் டெட் பாடிக்கும் வித்யாசம் தெரியாத மங்குனியா நீ.. "

அவன் எனக்கு தந்த பல்பில், என் முகம் டொமட்டோ சாஸ் போல சிவந்து விட்டது.

"சரி சரி, எழுந்துருங்க.." என்று அவன் வெள்ளைக்கொடி பறக்கவிட்ட பின்பு தான், அலங்கோலமாக விழுந்து கிடப்பது உரைத்தது.

கீழே விழுந்ததில் என் பவர் கிளாஸ் சற்று தொலைவில் சென்று விழுந்துருக்க, பார்வை கொஞ்சம் மங்கலாக தெரிந்தது.

"ஜோ என் கண்ணாடி எங்கன்னு பாருடா " என்று நான் கெஞ்சலாக கேட்கவும், அந்த தீனா,

"இதுதானா... இதுதானா .. நீ எதிர்பார்க்கும் கண்ணாடி இதுதானா "

என்று கையில் அதை சுழற்றியபடி என்னை கடுப்பேற்றினான்.

அது கொஞ்சம் போக்குவரத்து அதிகம் இல்லாத நெடுஞ்சாலையின் கிளை பகுதி.
எனவே தான் சாவகாசமாக அவன் நின்று பாடி என்னை கிண்டல் செய்கிறான் என்று புரிந்தது.

"உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்? "

எழுந்துகொண்டே பாடியபடி அவனை கேள்வியாய் நான் நோக்க..

"லூசு பெண்ணே.. லூசு பெண்ணே.. லூசு பெண்ணே.. உன் லூசு கேள்வி என்னனு தான் சொல்லி தொலையேன்.. "

அவன் பாடலாகவே பதில் கேள்வி கேட்க,
எனக்குள் தூங்கிக்கொண்டிருந்த மாரியாத்தா அருள் பெற்றாள்.

"போடா போடா.. புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு.. "

என்று கர்ண கொடூர குரலில் நான் கர்ஜிக்க,

"உனக்கு குடுப்பேன் டி அப்பு " என்று இடைபுகுந்தான் ஜோ.

என் தீ பார்வை அவன்பக்கம் திரும்ப,
"நீங்க சட் அப் பண்ணுங்க ஜோ " என்றவிட்டு, தீனாவை பார்த்தால், அவன் குறுநகையுடன் என்னைத்தான் ரசித்துக்கொண்டிருந்தான்.

என்ன தான் நான் அழகி என்று எனக்கே தெரிந்திருந்தாலும், அவன் பார்வை இன்னும் கொஞ்சம் கர்வத்தை கூட்ட,

"கண்ணுக்குள் நூறு நிலவா? இது என்ன கனவா? "
என்று எகத்தாளமாக பாடினேன்..

"வாயாடி வாழக்கா, நீ ஒரு கூல்லிங் கிரிஸ்டல் எனக்கு.. மனசு சரியில்லாம லாங் டிரைவ் வந்தேன்.. பட் உன்கூட பேசுனதுலையே லேசா ஆகிருச்சு.. " என்று விளையாட்டை கைவிட்டு மென்மையாக சொன்னான் தீனா.

எனக்கு சிரிப்பு வந்தது.

அதனுடவே "அய்யா.. சாமி இது செண்டிமெண்ட் சீன் இல்லைங்கோ.. அக்ஸிடண்டு சீன்..சோ.. " என்று நான் முடிக்கும் முன்,

"சோ? பேசக்கூடாது.. உன் ஊர்ல ஆக்ஸிடென்ட் ஆனா பேசமாட்டாங்க? பாடமட்டும் தான் செய்வாங்க.. இல்லையா மிஸ்..? " என்று பெயரை அறிந்துகொள்ள முடிக்காமல் அவன் இழுக்க,

"அவ பேரு லதாமங்கேஸ்கர் சார் " என்றான் முந்திரிக்கொட்டை ஜோ.

நான் முகத்தை உர் என வைத்துக்கொண்டு, கோபமாக அவனை முறைக்க "வாட்? லதா மங்கேஷ்கரா? அதான் பாட்டா பாடி தள்ளுறியா அம்மா? " என்று சிரிப்புடன் கேட்டான் தீனா.

"நான் ஒன்னும் அம்மா இல்ல? " அதே உர் குரலில் நான் குறைப(பா)ட..

"ஓ.. ஆமால.. சாரி லதா டார்லிங் " என்றான் குறும்புடன் தீனா.

"என்னது? டார்லிங்கா? யூ.. யூ.. ஒனிடா" என்றேன் ரத்தக்கொதிப்பில் நான்.

"ஓய்.. இது குலதெய்வத்துக்கு போட்ட மொட்டை.. அதவா கிண்டல் பண்ற.. நைட் அம்மன் உன் கண்ண குத்தும் பாரு.. " என்றான் மிரட்டலாக.

அவனோடு சரிக்கு சரியாக வாயடித்ததில் எனக்கு சிரிப்பு ஒருபுறம்.,
புதிதாக கண்ட அதுவும் நான் ரசிக்கும் ஒரு இசை அமைப்பாளன்.. தலைக்கனம் சிறிதும் இல்லாமல் என்னோடு சரிக்கு சரியாக அதுவும் கேலியாக பேசுகிறானே என்ற பிரமிப்பு ஒருபுறமாக ஆவென வாய்பிளந்து நின்றேன் நான்.

என்னை மீண்டும் ரசித்து நோக்கியவன் "ஓகே லதா அண்ட் ஜோ.. உங்கள மீட் பண்ணத்துல நான் ரொம்ப ஹாப்பி.. அண்ட் ஜோ..நீ ரொம்ப லக்கி மேன்.. " என்றவன், கையசைத்தபடி சென்று காரில் ஏறிக்கொண்டான்.

எப்போதோ ஒருமுறை செய்தி தாளில், அவன் சிறுவயதில் விபத்தில் பெற்றோரை இழந்ததும், அதனால் அவனுக்கு கார் ஓட்டுதல் என்றால் பயம் என்றும் படித்த ஞாபகம் எனக்கு மின்னலாக புத்தியில் வந்து சென்றது.

அவன் சென்றபிறகு, ஜோவை வண்டி ஓட்ட சொல்லி பின் அமர்ந்த எனக்கு, மனம் அவனோடான உரையாடலிலேயே உழன்றது.

மீண்டும் கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லாமல், வகுப்பிற்கு மட்டம் போட்டுவிட்டு, நானும் ஜோவும் படத்திற்கு சென்றோம்.

அது தீனா இசை அமைத்த படம். கதாநாயகி தேஜு.

திரையில் அவளை பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது.

நானே "வாவ் " என்று வியக்கும்படி அழகாக இருந்தாள்.

'உன்ன மிஞ்சிருவா போல இருக்கே லது பேபி.. கூடாதே ' என்று என் மனம் எச்சரிக்க,
அவசரமாக போனில் கவிழ்ந்தேன்.

கஷ்டப்பட்ட பலநிமிட தேடலுக்கு பின் தேஜுவின் மேக் அப் இல்லாத புகைப்படம் எனக்கு நெட்டில் சிக்க, வாய்பிளந்து படம் பார்த்து கொண்டிருந்த ஜோவை உலுக்கினேன்.

"பாருடா... நல்லா பாரு.. இது தான் அவ.. நல்லா பாரு ராசா.. இனியாச்சு ஜொள்ள கொறைங்க ஜோ " என்றுநான் நக்கலடிக்க,

"போடி.. உனக்கு பொறாமை.. " என்றுவிட்டு என்னை கண்டுகொள்ளாமல் படம் பார்க்க திரும்பிக்கொண்டான் ஜோ.

நான் கோபமாக முகத்தை சுளித்துக்கொண்டு, எழுந்து செல்ல எத்தனிக்க, கைபிடித்து "சரிடி.. நீதான் அழகு போதுமா.. " என்றான் என் ஆருயிர் நண்பன்.

"ஈஈஈ... " என பல்லை காட்டிவிட்டு சீட்டில் அமர்ந்துகொண்டேன்.

அன்று வீடு திரும்பி உறங்க செல்லும்வரை எப்பொழுதும் போல இருந்தாலும், படுத்த பின் உறக்கம் பிடிக்கவில்லை.

தீனாவுடனான பாடல் வாக்குவாதமே நினைவில் வந்து வந்து சென்றது.

'என்னை போல் அவனுக்கும் இருக்குமா? ' என்று என் மனதின் பாதி வினவ,

'லூசு.. நீலாம் அவனுக்கு எம்மாத்திரம்.. அவன் அந்த தேஜு பத்தி நெனச்சுட்டு இருப்பான் ' என்று மற்றொரு பாதி மக்கர் செய்தது.

"சீ போ.. நான் யாரையும் நெனைக்க மாட்டேன்.. " என்று எனக்கு நானே புத்தி சொல்லிக்கொண்டு, போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டேன்.

முந்தைய நாள் கனவே அன்றும் வந்தது.
'என்னடா இது லதுக்கு வந்த சோதனை?' என்ற நினைப்போடு நான் எழும்போதே, அம்மா யாருடனோ ஆர்வ மிகுதியில் உரக்க பேசுவது கேட்டது.

கண்ணை கசக்கிவிட்டு கொண்டு, நேராக கண்ணாடி முன் சென்று நின்றேன்.

'ஹ்ம்ம்.. மேக்கப் இல்லாத தேஜுவை விட அழகாக தான் இருக்கிறேன்.. " நினைத்துக்கொண்டே நான் தலையை ஒதுக்கிக்கொண்டிருக்க,

"லது குட்டி " என்ற செல்ல அழைப்போடு வந்தான் என் மாமன் மகன் அகிலன்.

ஒரே கொண்டாட்டம் ஆகிவிட "அகி.. எப்போடா வந்த படவா? " என்று கேட்டுக்கொண்டே நான் திரும்ப, குறும்புடன் என்னை மேலும் கீழுமாய் ஆராய்ந்தான் அகி.

"பயங்கரமா வளந்துட்ட டி.. அப்பா.. செம அழகு போ.. அப்படியே என் கண்ணு ரெண்டும் கழண்டு காசிக்கு போயிரும் போலருக்கே " என்றவன் என்னை கலாய்க்க,

உரிமையாக "போடா.. பப்ளிமாஸ் " என்று அவனை கொட்டிவிட்டு ஓடினேன் நான்.
 

banumathi jayaraman

Well-Known Member
நம்ம லது பேபி பேரு லதாமங்கேஷ்கரா?
உனக்கு சூப்பர் பேர், லது பேபி
ஹா ஹா ஹா
லது செம சேட்டைக்காரியா இருக்காளே
தீன்தனக்குதீன் தில்லானா தீனா இருக்கும் பொழுது இதாரு புதுசா மாமன் மவன்
மங்கி மவன்?
அகிலன்னு பேர் இருந்தால் அயித்தை
மவ மயங்கிடுவாளாடா, மிஸ்டர் அகி?
"கண்ணு ரெண்டும் கழண்டு காசிக்கு போகுதா?
ஹா ஹா ஹா
சூப்பர், சந்திரிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top