இரவின் மடியில்

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#1
"பௌர்ணமி
முழு நிலவு
மொட்டைமாடியில்
தென்றல் வரவு
இனிமையான இசையில்
இரம்மியமான பொழுது"


"சலசலக்கும்
மரங்களின் சத்தம்
அது சங்கீதம்
மேனி தழுவிடும்
தென்றல் அது
பரம சந்தோஷம்"


"இறக்கை கட்டி
பறந்த பகல் பொழுதின்
நினைவுகளோடு
படுத்திருந்தேன்
மொட்டை மாடியில்
இரவின் மடியில்"


"எல்லையற்ற நிம்மதி
என்னுள்
எல்லையில்லா வானத்தில்
வான்மதியதை
கண்டதினால்"


"மினுங்கிடும்
நட்சத்திரத்தில் தான்
மிளிர்ந்தது ஒரு பொன்சிரிப்பு"


"எரிச்சல்கள் எல்லாம்
இல்லாமல் ஆனது
அந்த இரவின் மடியில்"


"ஒரு வாய் உணவு
உறவுகளோடு
தென்றல் தீண்டும்
இரவின் மடியில்
குளிர் நிலவின் ஒளியில்
குதுகலம் தான் மனதில்"


"காத்திருக்கிறேன்
பௌர்ணமியின்
அடுத்தவரவில்
இரவின் மடியில்
இடம் கிடைக்க"
 
Advertisement

New Episodes