banumathi jayaraman
Well-Known Member
கவிதை சூப்பர், கவிப்ரீதா டியர்
Nice one Kaviprithaஇன்றும் ஒரு மழை நாள்...
இன்றும் ஒரு மழை நாள்...
நானும் அவனும்...
அவன் கையில் டீயுடன்...
சிலசமயம் அத்துடன் நானும் உண்டு...
எனையா... அதையா.... எதை
பருகினான் என தெரியாமலே
கழிந்த காலமும் உண்டு...
சின்ன தீண்டலில்...
மெல்லிய வார்த்தை போரில்...
காட்டமான சண்டை பொழுதில்...
உணவை தவிர்த்தானா..
எனையா.. என தெரியாத...
ஊடல் பொழுதும் உண்டு...
எல்லாம்...
இந்த மழை வரும்வரையே....
பின் நானும் அவனும் மட்டுமே...
பாவம், ஆடை மூடிய
பார்வையாளராக டீயும்...
இப்போதும்.. ஓர் மழைநாள்...
தூரமாய் அவன்...
தொலைதூரமாய்...
வேறு கண்டத்தில்...
இன்றும் ஓர் மழைநாள்...