இனிப்பு பணியாரம்

Advertisement

Bhuvana

Well-Known Member
இனிப்பு பணியாரம் :

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 200 கிராம்
புழுங்கல் அரிசி – 200 கிராம்
உளுந்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – ½ டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 200 கிராம்
ஏலக்காய் – 2 அல்லது 3
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

செய்முறை :

முதலில் பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை சுமார் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின் அதனை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் இட்லி மாவு பதத்தில் ஆட்டிக் கொள்ளவும். பின் அதனை சுமார் ஆறிலிருந்து ஏழு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

வெல்லத்தை தட்டி தூளாக்கிக் கொள்ளவும். ஏலக்காயை தட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு அடிக் கனமான பாத்திரத்தில் தூளாக்கி வைத்துள்ள வெல்லத்தை போட்டு சிறிதளவு நீர் விட்டு அடுப்பில் சிறு தீயில் வைக்கவும். பாகு தயாரானதும் அதனை வடிக்கட்டி அரைத்த மாவுடன், பொடித்த ஏலக்காயும் சேர்த்து கிளறவும். பணியாரம் செய்ய மாவு தயார்.

8 மணி நேரம் புளிக்கவிட்டு தயாரித்தால் நல்லது.
 

Attachments

  • 20200428_193921.jpg
    20200428_193921.jpg
    531.1 KB · Views: 12

Seethavelu

Well-Known Member
குழிப்பணியாரமா..
எண்ணெய் ல பொரிக்கனுமா.
குழிப்பணியாரம் போலத்தான் photo ல தெரியுது
மேலும் இந்த மாவு preparation குழிபணியாரத்துக்கு தானபா செய்வாங்க
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top