இது அவன் ஆட்டம்

Advertisement

KP JAY

Well-Known Member
ஆட்டத்தை முடித்துவிட்டேன். மனம் இன்னும் படபடத்துக்கொண்டிருக்கிறது. சரியாக ஆடினேனா தெரியவில்லை. தவறாக ஆடாமல் இருந்தேனா என்பதும் தெரியவில்லை. ஆனால் இன்னும் சிறப்பாக ஆடி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. பதில் அவனிடத்தில்.

ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார். ஒரு பெரிய மரத்தின் அடியில் ஒரு பாறையின் மேல் மான் தோல் விரித்து அமர்ந்திருக்கிறார். மூன்று கண்களும் மூடி இருக்கிறது. அவர் அவருக்குள்ளேயே காணாமல் போய்விட்டது போல் தோன்றுகிறது. கழுத்தில் இருக்கும் பாம்பு ஊர்வதும் பின்பு நின்று படம் எடுப்பதுமாகவும் இருக்கிறது.

அவன் சிவன்.

அமைதியாக சென்று அவரின் எதிரில் இருந்த மரத்தின் பெரிய வேரில் அமர்ந்தேன். அவர் கண் திறக்க காத்திருந்தேன். நீண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு கண் திறந்தார். என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“ஆடி முடித்து விட்டாயா?” என்று கேட்டார்.

ஆம் என்று தலையசைத்தேன்.

போகலாம் வா என்று கிளம்பினார். அவரை பின்தொடர்ந்து சென்றேன் அவரே பேசத் தொடங்கினார்.

“ உன் மனதில் இருக்கும் கேள்விகளைக் கேள் “ என்றார்.

“என் ஆட்டம் எப்படி இருந்தது ?”.

“போன முறையை விட வேறு மாதிரி இருந்தது.”

“எனக்கு அங்கு கட்டுப்பாடுகள் அதிகம் இருந்தது. நான் நினைக்கும் அனைத்தையும் செய்யும் சுதந்திரம் எனக்கு இல்லை. நான் தனி ஒருவனாக இருந்து என்னால் எதையும் சரி செய்ய இயலவில்லை.”

“ உன்னை யார் தனியாக போராட சொன்னது. நீ என்ன தனித் தீவில் தனியாகவா மாட்டிக் கொண்டாய்?”.

(உரைத்தது. என்னை போல் சிந்திக்கும் மனிதர்களை நான் கூட்டு சேர்த்திருக்க வேண்டும். )
“குடும்ப பாரம் என்னை அழுத்தியது. குடும்பத்திற்காக எதிர்க்க வேண்டிய இடத்திலும் அமைதியாக நின்றேன்.”

“அழுத்தும் அளவுக்கு ஏன் குடும்பத்தை பாரமாக்கிக்கொண்டாய்? உன் குடும்பத்தில் உள்ளவர்கள் உன்னுடைய குறிக்கோளுக்கு உதவ மாட்டார்களா ?”

(இங்கும் தவறிவிட்டேன். எதிர்க்க ஏதோ சில மக்களை கூட்டு சேர்ப்பதை யோசிக்கிறேன். என் குடும்பம் என் பக்கம் நிற்கும் என்று கூட யோசிக்காமல் விட்டுவிட்டேன்.)

“ அடுத்தவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலையே என்னை நான் விரும்பாத செயல்களை செய்ய வைத்தது. விரும்பும் செயல்களை செய்யாமல் தடுத்தது.”

“இந்த இரண்டு குற்றச்சாட்டிலும் குற்றம் செய்தவன் யார்? வெளியில் இருப்பவனா?”

(இல்லை. என் மனம். மற்றவர்கள் என்னை புகழ வேண்டும். என்னை ஒரு வெற்றியாளனாக பார்க்கவேண்டும். அவர்களை என்னை ஆச்சரியமாக பார்க்க வைப்பதே வாழ்க்கையின் வெற்றி என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த வெற்றியையும் என்னால் அடைய இயலவில்லை.)

“ தவறு செய்தது எல்லாம் நான்தான். ஆனால் நீங்கள் எந்த தவறுமே
செய்யவில்லையா?”
“நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று நினைக்கிறாய்?.”
“அங்கு என் மனம் ஏற்றுக் கொள்ள முடியாத எத்தனையோ கொலை பாதகம் நிகழ்ந்தது. எனக்கு நிறைய இடத்தில் கண்ணீர் வந்தது. நீங்கள் ஏன் அங்கு வந்து அதை எல்லாம் நடக்காமல் தடுக்க வில்லை? எல்லாவற்றையும் விடவும் பச்சிளம் குழந்தைகளும் இப்பொழுது வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அப்பொழுதும் கூட நீங்கள் வரவில்லை என்றால் எதற்காக தான் நீங்கள் இருக்கிறீர்கள்? நீங்கள் வரவில்லை என்றால் நடக்கும் கொடுமைகள் உங்களுக்கும் சம்மதம் என்று எடுத்துக் கொள்ளலாமா ?”

சிவனிடம் சிறிது அமைதி. பிறகு பேசத் தொடங்கினார்.

“அது நான் உருவாக்கிய உலகம். ஆனால் அதை உங்களுக்கு கொடுத்துவிட்டேன். உங்களை ஒவ்வொரு நிமிடமும் அருகில் இருந்து நெறிப்படுத்துவது என் எண்ணம் இல்லை. நடக்கும் தவறுகளில் இருந்து பாடம் கற்று அது போல் திரும்பவும் எப்பொழுதும் நடக்காமல் நீங்கள் உங்களை சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். நான் யுகம் யுகமாக காத்திருக்கிறேன். மனிதன் நான் படைத்த கொடுத்த உலகத்தை அழகாக மாற்றிக் கொடுப்பான் என்று. ஆனால் நீ நான் வந்து உங்கள் உலகத்தை அழகாக்க வேண்டும் என்கிறாய். இது, ஒரு அம்மா அப்பா தன் பிள்ளைகளின் இறுதி காலம் வரை கூடவே இருந்து அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நீ கேட்பது போல் உள்ளது. உன் பெற்றோர் உன் இறுதி வரை உன் கூடவே வரமுடியாது. பாதியில் விட்டு பிரிவர். அப்பொழுது நீ அவர்கள் காட்டிய வழியில் உன் மீதி வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க வேண்டும். அவர்கள் உனக்கு காட்டிய வழியை நீ உன் பிள்ளைகளுக்கு காட்ட வேண்டும். இதுவே தொடர்ந்தால் கூட நீ கூறிய கொலை பாதகங்கள் நடக்காமல் தவிர்க்கப்பட்டிருக்கும். நீ உன் பிள்ளைகளுக்கு உன் பெற்றோர் போதித்த நெறி முறைகளை கற்று கொடுத்துவிட்டு வந்திருக்கிறாயா?”

( ஐயோ இங்கும் தவறி விட்டேனே. என் பெற்றோர் ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். தவறினால் திட்டியும் சில சமயம் அடித்தும் கூட என்னை நெறிபடுத்தினார்கள். நான் என் பிள்ளைகளை அடித்ததே இல்லையே. என் பெற்றோர் எனக்கு விவரம் தெரிந்து என்னை கொஞ்சியது போல் எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் நான் அவர்களின் திருமணம் வரைக்குமே என் பிள்ளைகள் என்று செல்லம் கொடுத்திருந்தேன். அவர்கள் தவறு செய்த போது கூட என் பிள்ளைகள் என்று அவர்கள் பக்கமே நின்றேன். நியாயமாக நடக்கவில்லை. அவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தும் பிள்ளைப் பாசத்தால் கண்டிக்காமல் விட்டேன்.)

மனம் என் தவறுகளை பட்டியலிட்டுக் கொண்டே இருக்கிறது. சிவனும் என் எண்ணங்களை உள்வாங்கிக் கொண்டிருந்தார். நாளை என் பிள்ளைகளும் நான் கூறிய கொலை பாதகங்களை செய்யலாம். ஏனென்றால் அவ்வாறு செய்யக் கூடாது அது தவறு என்று நான் பிள்ளைகளுக்கு போதிக்காமல் வந்துவிட்டேன். இப்பொழுது எனக்கு இன்னும் பதட்டம் அதிகமாகிறது. திரும்பி சென்று என் பிள்ளைகளை நெறிப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. பரிதாபமாக சிவனை பார்த்தேன். சிவன் என்னை விட பரிதாபமாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“ திருப்பி அனுப்ப வேண்டுமென்றால் இந்த புது நூற்றாண்டில் இங்கு வந்து சேர்ந்த அனைத்து பெற்றோரையும் நான் திருப்பி அனுப்பவேண்டும். உலகம் கொள்ளாது.”

“ அது ஏன் இந்த நூற்றாண்டில் வந்தவர்கள் மட்டும்?”

“இந்த நூற்றாண்டில் தான் மனித சமூகம் நிறைய மாற்றங்களை வெகு குறுகிய காலத்தில் சந்தித்தது. அந்த மயக்கத்தில் பெற்றோர் அனைவரும் பிள்ளைகளை கவனிக்க தவறி மாற்றங்களை ஆர்வமுடன் உள்வாங்க தொடங்கிவிட்டனர். இதனால் நேர்ந்ததே நீ கூறிய அனைத்து பாகங்களும்.”

“ அது என்னென்ன மாற்றங்கள் ?”

“டிவி
பிரைவேட் சேனல்
சீரியல்ஸ்
பிரைவேட் நீயூஸ் சேனல்
ரியாலிட்டி ஷோ
சினிமா
ஐடி கம்பெனி
குறைந்த வயதில் அதிக ஊதியம்
மொபைல் போன்
இன்டர்நெட்
2ஜி
3ஜி
4ஜி
இன்னும் 5ஜி”.

“இப்பொழுது என்ன செய்வது ? இதையெல்லாம் தடுத்து நிறுத்த வழி இல்லையா ?”

“இதை தடுக்கவே ஒரு பெரும்படையை பூமியில் இறக்கி இருக்கிறேன். பார்க்கலாம். ஏதேனும் மாற்றம் நிகழ்கிறதா என்று.”

“அது என்ன படை?”

கொ . ரோ . னா .
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Deviharisha

Well-Known Member
Nice epi. வாழ்க்கையின் நிதர்சனத்தை கூறியுள்ளீர்கள். ஒவ்வொரு நூற்றாண்டிலிலும் இது (கொரோனா) போன்ற நோய்கள் வந்துதான், மனிதநேயத்தை நம்மிடையே விதைக்கின்றன.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top