இதயம் இடம் மாறியதே 9

Advertisement

Indira75

Active Member
வக்கீல் திரு மூர்த்தி யை பார்த்ததும், அவரை வரவேற்று அழைத்து சென்றனர். வடிவாம்பாள் அவரை தங்கள் அறைக்கு அழைத்து சென்று தனிமையில் சிறிது நேரம் பேசிவிட்டு ராஜலிங்கம், வடிவாம்பாளுடன் ஹாலுக்குள் வந்தார்.அங்கு அமர்ந்திருந்த அத்தனை பேரும் மௌனமாக அமர்ந்திருந்தனர். வீட்டில் இருக்கும் அனைவரையும் பொதுவாக பார்த்தபடி வக்கீல் பேச ஆரம்பித்தார். உங்க அய்யாவும் அம்மாவும் உங்களுக்கான சொத்தை மூன்று பேருக்கும் பிரித்து குடுக்க முடிவு பண்ணியிருக்காங்க. எது எது யாருக்குன்னு நான் சொல்றேன்
அதை கேட் டுட்டு சரின்னு சொன்னா மத்தபடி நான் எல்லா பேப்பர் வேலையும் முடிச்சு பதிவு பண்ணிடலாம் என்றார்.

முதல்ல அவுங்க பொண்ணு பூங்கொடி க்கு அவுங்க பிறந்த வீட்டில் vadivamma வுக்கு குடுத்த நகைகள் 350 பவுன் மற்றும் அவுங்க காலத்துல அவுங்க சேர்த்த நகைகளை பூங்கொடிக்கும் மத்த ரெண்டு மருமகள் களுக்கும் குடுக்க பிரிய படராங்க. அத தவிர பூங்கொடிக்கு பக்கத்து ஊர்ல அவுங்க பேர்ல வாங்கியிருக்கிற 10 ஏக்கர் வயலும், 25 ஏக்கர் தென்னந்தோப்பும், டவுன்ல இருக்கிற ஒரு காம்ப்ளெக்ஸ் தர விரும்புறாங்க என்றவர்

அவுங்க ரெண்டு மகன் களுக்கு அவுங்க வசம் இருக்கிற 500 ஏக்கர் நன்செய், புன்செய் நிலம் மற்றும் தென்னந்தோப்பு அனைத்தையும் ரெண்டு பேருக்கும் சரி சமமாக பிரிச்சு மற்றும் ரைஸ் மில் அ பெரியவருக்கும், சுகர் ஃபேக்டரி சின்னவருக்கும் , மற்றும் பக்கத்து டவுன் ல இருக்கிற 2 காம்ப்ளெக்ஸ் ஐ ரெண்டு பேருக்கும் பிரிசிருக்காங்க. மேலும் தன் பேத்தி தேன்மொழி க்கு நகைகளும் மற்றும் அவளின் திருமண சீர்வரிசையாக 50 ஏக்கர் நிலமும், தன் பேரன்கள் நால்வருக்கும் வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் பணத்தை சமமாக பிரித்து கொடுப்பதாகவும், மற்றும் இந்த பாரம்பரிய, பரம்பரை வீட்டை தனது பெரிய மருமகள் தமிழரசிக்கும், ஊருக்குள் இருக்கும் மற்றொரு வீட்டை தன் யின்னொரு மருமகள் கோமதிக்கும் கொடுப்பதாகவும்,
ஆனால் இந்த வீட்டில் யெப்போதும் அனைவரும் இப்பொழுது போலவே கூட்டு குடும்பமாக வசிக்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்தனர் அந்த மூத்ததலைமுறையினர்.

இதில் எதாவது மாற்றம் தேவையெனில், இல்லை மாற்றுக் கருத்து இருந்தாலும் தெரிவிக்கலாம் என்று வக்கீல் தெரிவித்தார். அனைவரும் சற்று நேரம் சிலயாக அமர்ந்திருந்னர். பிறகு உலகநாதன், அய்யாவும், அம்மாவும் எடுத்த முடிவுக்கு சம்மதம் தெரிவித்தார். பூங்கொடி தன் தாய் வீட்டு சீரை மகிழ்ச்சியாகவே பெற்றுக்கொள்வதாக கூறி தன் கணவரை திரும்பி பார்க்க அவர் சற்றே சிரிப்புடன் தலையசைத்து தன் சம்ம தத்தை தெரிவித்தார்.

கோமதியும், விஸ்வநாதனும் சிறிய குரலில் தங்களுக்குள் பேசிக் கொண்டவர்கள் அம்மா என்கவும், வடிவாம்பாள் அதிர்ந்த முகத்துடன் விஸ்வநாதனை நிமிர்ந்து பார்த்தார்.அங்கிருந்த அத்தனை முகங்களிலும் சிறிது குழப்பமும், அதிர்வும் தெரிந்தது.

சொல்லு விசு, என்ற வடிவாம்பாளின் குரல் சற்று தளர்ந்து போயிருந்தது. நானும், கோமதியும் ஒரு சின்ன திருத்தம் சொல்லணும் என்க, சொல்லு விசு என்று கண்ணில் கலக்கத்துடன் சொன்னார் வடிவாம்பாள்.

அம்மா உங்க எல்லாருக்கும் தெரியும் பூங்கொடி அவுக வீட்ல ஒரே பொண்ணு. அவுக சொத்து அத்தனையும் நம்ம சரணுக்கும்
சத்தீஸ் க்கும் தான். ஆனால் அதுக்காக நான் யிப்படி சொல்றேன்னு நினைக்காதிக
நம்ம கார்த்தி நல்லா படித்திருக்கான், வெளி நாட்ல வேலை செய்றான். அவன் திரும்பி வந்தாலும் கண்டிப்பா இங்க இப்போதைக்கு இருக்க மாட்டான். எப்படியும் அவன் வாழ்க்கை சென்னை அல்லது banggalore ல தான். ஆனால் நம்ம கந்த வேலு அப்படி இல்ல. நம்ம கைகுள்ளையே இருந்துட்டான்.
அவனுக்கும் கல்யாணம் ஆகி குழந்தையும் பிறக்க போகுது.
அதனால் சுகர் ஃபேக்டரி, ricemill, அப்புறம் இப்ப புதுசா கட்டிட்டு இருக்கிற கல்யாண மண்டபம் இத நம்ம கந்தவேல் பேர் ல எழுதனும் அப்படினு பிரியப்படறேன் மா.
அவன் தான் இந்த வீட்டோட முதல் வாரிசு. அவனை என் மகனா நெனச்சு தான் இதை சொல்றேன். அப்புறம் நீங்க சொத்தை பிரிச்சு பத்திரம் பண்ணினாலும் நான் யெப்பவும் போல அண்ணன் கூட சேர்ந்தே இருக்கணும் நு நெனைக்கிறேன் மா, வரவு செலவு எல்லாம் ஏப்பவும் போல அண்ணன் பார்த்துக்க ஆசைப்படரேன். உங்க ஆசைக்கு நீங்க தர வேண்டியதை தந்துவிட்டீர்கள் ஆனால் நாங்க தனித்தனியா எல்லாம் பார்க்கணும் நு எதுவும் இல்ல மா. தங்கச்சிக்கு குடுக்க வேண்டியதை குடுதிருங்கம்மா.
இது மட்டும் இல்ல, உங்க காலத்துக்கு அப்புறம் நானும் அண்ணனும் தங்கச்சி க்கி என்ன பண்ணனுமோ அதை கடைசி வரை பண்ணுவோம்மா.அதனால் இதுக்கு அப்புறம் தங்கச்சிய விட்டுடுவோண்ணு நினைக்காதீங்க மா. யெப்பவும் போல இந்த வீடு இருக்கட்டும் மா. இதுல கோமதிக்கும் முழு சம்மதம் மா என்று கூற
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top